Justin Martyr, Apology I

1 ம் அத்தியாயம்

டைட்டஸ் எலியஸ் அட்ரியனஸ் அன்டோனினஸ் பியஸ் அகஸ்டஸ் சீசர் மற்றும் அவரது மகன்; தத்துவஞானியான வெரிசிமஸ்  மற்றும் சீசருக்குப் பிறந்த மகனும் தத்துவஞானியான லூசியஸ் மற்றும் கற்றலில்  ஆர்வமுடைய பியஸின் வளர்ப்பு மகன் மற்றும் புனித செனட் ஆகியோருக்கும் மற்றும் முழு உரோமைய மக்களுக்கும், பாலஸ்தீனத்தில் ஃபிளேவியா நியோபோலிஸைப் பூர்வீகமாகக் கொண்ட ப்ரிஸ்கஸின் மகனும், பேச்சியஸின் பேரனுமாகிய நான்,  இந்த கருத்தாடல்கரையும்  மனுவையும் நியாயத்துக்கு  எதிராக மற்றும் விரும்பத்தகாத முறையில் துஷ்பிரயோகம் செய்யும் அனைத்து நாடுகளின் சார்பாக முன்வைக்கிறேன். அவ்வாறான துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் நானும் ஒருவன்.

2 ம் அத்தியாயம் – நீதி கோரப்பட்டது

பக்தி மற்றும் தத்துவத்தின் அடிப்படையில் கூறப்படுபவைகள் முற்றிலும் உண்மை என்றால் மட்டுமே அவற்றை மதிக்கவும் நேசிக்கவும் காரணங்கள் உள்ளன. பயனற்றவை எனக் கருதும் பட்சத்தில் இக்காரணிகள் பாரம்பரிய கருத்துக்களைப் ஏற்க மறுக்கின்றன. தவறான செயல்களைச் செய்த அல்லது கற்பித்தவர்களின் வழிகாட்டுதலை மறுக்க இவ்வாறான காரணிகள் நம்மை வழிநடத்துவது மட்டுமல்லாமல், அது சத்தியத்தை விரும்புவோருக்கு உடந்தையாக இருக்கிறது. மேலும் ஒருவரது சொந்த சீவியம் நிறைவடைய முன்பே மரணம் அவரை அச்சுறுத்துமானால், சரியானதைத் தேர்வு செய்து சரியானத்தைச் சொல்லுங்கள். அப்படியானால், நீங்கள் உங்களப் பக்திமான்கள் அல்லது தத்துவவாதிகள் என்று அழைக்கப்படுவீர்களானால், நீதியின் பாதுகாவலர்கள் மற்றும் கற்றல் ஆர்வலர்கள் என்று போற்றப்படுவீர்களானால், நன்றாகக் கவனியுங்கள். என் சொற்பொழிவைக் கேளுங்கள்; நீங்கள் உண்மையில் அப்படிபட்டவர்களாக இருப்பீர்களானால், உங்களுக்கு அவை  வெளிப்படுத்தப்படும். இந்த சொற்பதங்கள் மூலம் உங்களைப் புகழ்ந்து பேசுவதற்கோ, எங்கள் சொற்பொழிவால் உங்களைப் பிரியப்படுத்துவதற்கோ நாங்கள் வந்துள்ளோம் என்று நினைக்க வேண்டாம். ஆனால் ஒரு துல்லியமான மற்றும் முறையான விசாரணைக்குப் பிறகு  தீர்ப்பை வழங்குமாறு உங்களிடம் மிகத் தாழ்மையாக கேட்டுக்கொள்வதே எமது நோக்கம். தப்பெண்ணத்துடன் புகழப்படுவதோ அல்லது மூடநம்பிக்கை கொண்ட மனிதர்களை மகிழ்விக்கும் விருப்பத்தினாலோ அல்லது தூண்டப்பட்டதாலோ நீங்கள் பகுத்தறிவற்ற தூண்டுதல் மூலம் தீர்ப்பிடுவது என்ற தீய வதந்திகள் நீண்ட காலமாக உலவுகின்றன. இவை உங்களுக்கு எதிரானதாகவே இருக்கும் என்ற ஒரு முடிவை நீங்கள் மேற்கொண்டதாக அமையும். எங்களைப் பொறுத்தவரை, நாம் தீமைகள் செய்யாதவரை, அல்லது தீமைகள் செய்தோர் என்று நிரூபிக்கப்படாதவரை, அல்லது கொடூரர்கள் என்று உறுதிப்படுத்தப்படாதவரை, நீங்கள், எம்மைக் கொல்ல முடியும், ஆனால் எம்மைக் காயப்படுத்தி நோகடிக்க முடியாது.

3 ம் அத்தியாயம் – நீதித்துறை விசாரணைக்கு கோரிக்கை விடல் 

இது ஒரு நியாயமற்ற மற்றும் பொறுப்பற்ற பதம் என்று யாராவது நினைப்பார்களானால், கிறிஸ்தவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்றும், இவை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அவர்கள் தண்டிக்கப்பட தகுதியுள்ளவர்களாக ஆகிறார்கள் என்றும் நாங்கள் கோருகிறோம்; (அப்படியல்லாத பட்சத்தில், நாமே அவர்களை தண்டிக்க வேண்டி ஏற்படும்). ஆனால் எவராலும் எவரையும் குற்றவாளியாகக் காண முடியாவிட்டால், ஒரு பொய்யான வதந்தியின் பொருட்டு, தவறான குற்றமற்ற மனிதர்கள் மேல் நீங்கள் இடும் தீர்ப்பு, நீங்கள் இடும் நேர்மையான தீர்ப்பிலிருந்து உங்களைத் திசை திருப்புகிறது. அதன் காரணமாக அவ்வாறான தீர்ப்பை இட நீங்கள் தகுதியுடையவர்கள் என்று கருதலாம், ஆனால் அது உணர்ச்சி மேலீட்டால் அளிக்கப்பட தீர்ப்பே ஆகும். நிதானமான எந்த நபரும் இது ஒரு சரிப்படுத்தக்கூடிய நியாயமான மற்றும் சமமான காரணி என்ற முடிவுக்கு வரக்கூடும், அதாவது, அவ்வாறான நிகழ்வுகள் தங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் கோட்பாட்டிற்கு விதிவிலக்கான ஒரு  நிலைமையை உண்டாக்கலாம். மறுபுறம், ஆட்சியாளர்கள் தங்கள் முடிவை அறிவிப்பதில் தாழ்மையுடன் செயல்பட வேண்டும், வன்முறை மற்றும் கொடுங்கோன்மை வழியில் முடிவுகள் அமையலாகாது. மாறாக விசுவாசம் மற்றும் தத்துவத்திற்கு அவை ஏற்புடையதாய் இருத்தல் வேண்டும். இதன் காரணமாக, ஆட்சியாளர்களும் ஆளப்படுபவர்களும் அவைகளின் பலன்களைப் பெறுவார்கள். எங்கோ எப்போதோ நமது முன்னோர்களில் ஒருவர், ஆட்சியாளர்களும் ஆளப்படுபவர்களும் தத்துவ ரீதியில் ஒன்றுபட்டாலே ஒழிய, ஆட்சிக்குட்பட்ட மாநிலங்கள் ஆசீர்வாதத்தைப் பெற முடியாது. ஆகவே, எங்கள் விவகாரங்களை அறியாதவர்களாக பழகியவர்கள் அறியாமையின் காரணமாக தண்டனையை அனுபவிக்கக்கூடாது என்பதற்காக, நம் வாழ்க்கையையும் போதனைகளையும் நன்றாக ஆய்வு செய்வது அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுப்பது எங்கள் கடமையாகும். ஆகவே, நீங்கள் கேள்விப்படும் போதெல்லாம் அவை நியாயமான கோரிக்கைகள் என நியாயாதிபதிகளுக்கு முறையிடுவது உங்கள் தலையாய பணியாகும். ஏனென்றால், நீங்கள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டபோதும், நீதியை நீங்கள் நிலை நிறுத்தவில்லை என்றால், நீங்கள் கடவுளுக்கு முன்பாக சாக்குப்போக்கு சொல்வதற்கு உங்களுக்கு காரணம் இருக்காது. 

4 ம் அத்தியாயம் – கிறிஸ்தவர்கள் தங்கள் பெயரின் நிமித்தம் அபாண்டமான கண்டனத்துக்கு உள்ளானர் 

ஒருவர் தனது பெயரைப் பயன்படுத்துவதன் மூலம்; பெயர் குறிக்கும் செயல்களைத் தவிர, நல்லது எது அல்லது தீமைகள் என்ன என்பது பற்றி எதுவும் தீர்மானிக்கப்படுவதில்லை; உண்மையில், இதுவரை நாம் எமது பெயரைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டிருந்தால், அதற்கான தீர்ப்பு வெளிவரும் வரை நாங்கள் மிகச் சிறந்தவர்களே. ஆனால் ஒரு மனிதனின் பெயரைக் குறித்து அதனால் சுமத்தப்பட்ட குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று அவன் இறைஞ்சும் நிலைமை ஏற்பட்டால், அவன் தீயவன் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தால், அதேவேளை, அவன் எந்தக் குற்றமும் செய்யவில்லை எனக் கண்டறியப்பட்டால், அல்லது குடிமக்களாகிய நாம் வெறும் பெயரின் நிமித்தம் அபாண்டமாகத் தண்டிக்கபட நேரிடும் போது, அத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுப்பதன் மூலம் எமது பங்களிப்பு முக்கியமாகக் கருதப்படுகிறது. சிறந்த அல்லது செயலின் அடிப்படையில் எதுவும் நிரூபிக்கப்படாத பட்சத்தில், ஒரு பெயரிலிருந்து கிடைக்கும் புகழோ அன்றி தண்டனையோ நியாயமான முறையில் மகிழ்ச்சி தருவதாக இருக்க முடியாது. உங்கள் மத்தியில் உள்ள சிலர் உங்கள் மேல் குற்றம் சுமத்தினால் அக்குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்களைத் தண்டிக்க வேண்டாம்; ஆனால் எங்கள் விஷயத்தில் நீங்கள் எங்களுக்கு எதிரான ஆதாரமாக பெயரைப் பெறுகிறீர்கள், ஆனால் இப் பெயரைப் பொறுத்தவரை, எங்கள் மேல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களை நீங்கள் தண்டிப்பது ஏற்றுக்கொள்ளப்படலாம். ஏனென்றால், நாம் கிறிஸ்தவர்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறோம், சிறந்ததை வெறுப்பது (கிறிஸ்தவர்களை) அபாண்டமான செயலாகப் பார்க்கப்படுகிறது. மீண்டும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் யாராவது தனது பெயரை மறுத்துக்கும் பட்சத்தில், அவர் ஒரு கிறிஸ்தவர் அல்ல என்று கூறும் பட்சத்தில், நீங்கள் அவரை தவறு செய்தவர் என்று குற்றம் சாட்ட எந்த ஆதாரமும் இல்லாத பட்சத்தில் அவரை விடுவிக்க கடமைப்பட்டுள்ளீர்கள். ஆனால் அவர் ஒரு கிறிஸ்தவர் என்று அவர் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில், அதை ஒப்புக்கொண்டதன் காரணமாக நீங்கள் அவரை தண்டித்தீர்கள். ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பவர் மற்றும் மறுப்பவர் போன்றோரின் வாழ்க்கையை நீங்கள் விசாரிக்க நீதியின் குறுக்கீடு அவசியமாகிறது. அவர்களுடைய செயல்களால் அவர்கள் ஒவ்வொருவரும் எப்படிப்பட்ட மனிதர்கள் என்பது பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால், எமது எஜமான், கிறிஸ்து; அவரை மறுதலித்தல் ஆகாது என்று கற்பித்த சிலர், அவர்கள் கேள்விக்குள்ளாக்கப்படும்போது மற்றையோரை ஊக்கபடுத்துவார்கள். ஆகவே, கேடு நிறைந்த வாழ்க்கையை வாழ்பவர்களைப் பற்றிக் கருத்தில் கொள்ளாமல், எல்லா கிறிஸ்தவர்களையும் பக்தி அற்றவர்கள் என்றும் துஷ்டர்கள் என்றும் குற்றம் சாட்ட முனைகிறார்கள். இதுவும் சரியல்ல. தத்துவத்தைப் பொறுத்தவரையில், சிலர் தங்கள் பெயர் தங்கள் செய்யும் தொழிலுக்கு எவ்விதத்திலும் தகுதியற்றது என்று கருதுகின்றனர்; எனினும் முன்னோர்களின் அபிப்பிராயங்களும் போதனைகளும் முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன, அவை அனைத்தும் தத்துவஞானிகள் என்ற ஒரே பெயரால் அழைக்கப்படுகின்றனர் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இவர்களில் சிலர் நாத்திகத்தை கற்பித்தனர்; உங்களிடையே நன்கு செழுமையான கவிஞர்கள் வியாழனின் அசுத்தம் பற்றி தனது சொந்த குழந்தைகளுடன் பேசி சிரிப்பை மூட்டுகிறார்கள். இப்போது அத்தகைய போதனைகளை பின்பற்றுபவர்கள் உங்களால் கட்டுப்படுத்த முடிவதில்லை; மாறாக, தெய்வங்களை இழிவு படுத்துபவர்களுக்கு நீங்கள் பரிசுகளை அளித்து கௌரவிக்கிறீர்கள். 

5 ம் அத்தியாயம் – கிறிஸ்தவர்கள் நாத்திகர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டனர்

அப்படியானால், இது ஏன் இப்படி இருக்க வேண்டும்? எங்களைப் பொறுத்தவரையில், நாம் எந்த துர்நடத்தையிலும் ஈடுபட மாட்டோம், அதேவேளை இவ்வாறான நாத்திக சிந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம் எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீங்கள் ஆராயத் தேவையில்லை; ஆனால், ஏற்றுக்கொள்ளப்படாத ஆர்வம் மற்றும் சாத்தானின் தூண்டுதலுக்கும் உந்தப்பட்டு, நீங்கள் எங்களை நடத்தை பற்றி எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ளாது, அதற்கான தீர்ப்பும் இடப்படாத நிலையில் எம்மைத்  தண்டிக்கிறீர்கள். சாத்தியத்தையே பேச வேண்டும்; பண்டைய காலத்திலிருந்தே, இந்த சாத்தான்கள், அரூபிகளாய்த் தோன்றி பெண்களை மாசுபடுத்தியது மட்டுமன்றி சிறுவர்களை சீரழித்தும், ஆண்கள் முன் தோன்றி அவர்களைப் பயமுறுத்தும் செயல்களிலும் ஈடுபட்டன. அவ்வாறான செயல்களை விமர்சித்த காரணத்தால் அவர்கள் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டனர்; பயம் அவர்களைப் பற்றிக்கொண்டது அவைகளை சாத்தான்கள் என்று தெரியாமல், அவர்கள் தெய்வங்கள் என்று அழைத்தார்கள், சாத்தான்கள் ஒவ்வொருவரும் அவை தாமே  தேர்ந்தெடுத்த பெயர்களைக் கொடுத்தார்கள். சோக்ரடீஸ் என்ற ஞானி உண்மையான காரணத்தை ஆய்வு செய்து இந்த விடயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதற்கும், பிசாசுகளிடமிருந்து மனிதர்களை விடுவிப்பதற்கும் முயன்றபோது, பிசாசுகள், அநீதியான செயல்களில் ஆனந்தம் கொண்ட மனிதர்கள் மூலமாக, அவர் மரணம் எய்திய போது அவரை ஒரு நாத்திகராகவும், தூற்றப்படக்கூடியவர் என்றும், அவர் புதிய கடவுள்களை அறிமுகப்படுத்துகிறார் என்று குற்றம் சுமத்தின. எங்களப் பொறுத்தளவில் அவை ஒத்த செயல்பாட்டையே பிரதிபலிக்கின்றன. கிரேக்கர்களிடையே மட்டுமல்ல, சோக்ரடீஸ் மூலமாகவும் இதைக் கண்டிக்கவேண்டிய நியாயம் (சின்னங்கள்) மேலோங்கியது. அது மட்டுமல்லாமல், நியாயமான முறையில் கண்டனம் செய்யப்பட்ட காட்டுமிராண்டிகளிடையேயும் (அல்லது வார்த்தை, சின்னங்கள்) அவரே, வடிவம் பெற்று மனிதராகி, இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்பட்டார் ; அவருக்குக் கீழ்ப்படிந்து, இதுபோன்ற காரியங்களைச் செய்தவர்களை தெய்வங்கள் என்பதை நாங்கள் மறுப்பது மட்டுமல்லாமல், அவர்கள் துஷ்டர்கள் மற்றும் இழிவான சாத்தான்கள் என்றும் நாம்  வலியுறுத்துகிறோம், அவற்றின் செயல்களை நல்லொழுக்கத்தை விரும்பும் மனிதர்களுடன் ஒப்பிட முடியாது.

6 ம் அத்தியாயம் – நாத்திகத்தின் குற்றச்சாட்டு மறுக்கப்பட்டது

அதன் காரணமாகவே நாம் நாத்திகர்கள் என்று அழைக்கப்படுகிறோம். இந்த வகையான கடவுள்களைப் பொறுத்தவரை நாங்கள் நாத்திகர்கள் தான் என்று ஒப்புக்கொள்கிறோம், ஆனால் மிகவும் உண்மையான கடவுள், நீதியின் மற்றும் நிதானத்தின் தந்தை மற்றும் பிற நற்பண்புகளைப் கொண்ட அவர் எல்லா அசுத்தங்களுக்கும் அவர் அப்பாற்பட்டவர். ஆனால், அவரும் குமாரனும் (அவரால் அறிவிக்கப்பட்ட இந்த விடயங்களை எமக்குக் கற்பித்தார். அவரால் புகழப்பட்ட பிற நல்ல தேவதூதர்கள் புடைசூழ வந்த), தீர்க்கதரிசனத்தின் ஆவியானவர், அவர்களையே நாம்  வணங்குகிறோம், வழிபடுகிறோம். உண்மைதன்மையை நாம் கற்றுக் கொண்டதைப்போல, கற்றுக்கொள்ள விரும்பும் அனைவரிடத்திலும் நாம் எவ்வித வைராக்கியமும் இன்றி வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

7 ம் அத்தியாயம் – ஒவ்வொரு கிறிஸ்தவரும் தனது சொந்த வாழ்க்கையூடாக தம்மைப் பரீட்சிக்க வேண்டும்

ஆனால் யாராவது சொல்லக்கூடும், சிலர் இப்போது கைது செய்யப்பட்டு தீய செயல்களுக்காகக் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று. குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் வாழ்க்கையைப்பற்றியும் பலமுறை விசாரித்தபின், பலரை நீங்கள் பல முறை கண்டிக்கிறீர்கள், ஆனால் நாங்கள் குறிப்பிட்டவர்களைப் பற்றி அல்ல. இதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், கிரேக்கர்களிடையே தங்களைப் போன்ற கோட்பாடுகளை கற்பிப்பவர்கள் அனைவரையும் தத்துவஞானி என்ற ஒரே பெயரில் அழைக்கிறார்கள், அவர்களின் கோட்பாடுகள் வேறுபட்டிருந்தாலும், காட்டுமிராண்டித்தனம் உள்ளவர்களிடையே  குவிந்து கிடக்கும் குற்றச்சாட்டுகள் ஞானமுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்களின் பொதுச் சொத்து என்றே கருதப்படுகிறது. இப்படியான அனைவரும் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆகையால், குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் செயல்களும் தீர்ப்புக்குள்ளாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். தண்டனைக்கு உட்படுத்தப்படும் ஒவ்வொருவரும் தத்தம் தவறுகளுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும்; ஆனால் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதற்காக அல்ல. அவர் குற்றமற்றவர் என்பது தெளிவாகத் தெரிந்தால், அவர் விடுவிக்கப்படுவார். அதேநேரம் அவர் ஒரு கிறிஸ்தவராக இருப்பதன் மூலம் அவர் தவறு செய்வதில்லை என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. எங்கள் மேல் குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்களை நீங்கள் தண்டிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தவில்லை; அவர்கள் தற்போதைய துர்நடத்தையின் காரணமாகவும், சரியானது எது என்பதை அறியாமையினாலும் அதற்கேற்ற தண்டனைக்கு ஆளாகிறார்கள். 

8 ம் அத்தியாயம் – கிறிஸ்தவர்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்

உங்களுக்காகத்தான் இதை நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம்; எங்கள் சக்திக்கேற்றவாறு இதை நாம் ஆராய்ந்தபோது, நாம் கிறிஸ்தவர்கள் என்பதை மறுப்பது எமது சக்திக்கு உட்பட்டதாகவே  இருக்கிறது; ஆனால் நாங்கள் பொய் சொல்லி வாழ்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஏனென்றால், நித்திய மற்றும் தூய்மையான வாழ்க்கையின் ஆவலால் தூண்டப்பட்டு, நாம் எல்லோரினதும் பிதாவும் படைப்பாளருமான இறைவனோடு ஒன்றித்து அவருடைய இல்லத்தை நாம் தேடுகிறோம், மேலும் நம்முடைய விசுவாசத்தை ஒப்புக் கொள்ள உடன்பட்டு வாழும் நாம் கடவுளால் மெய்ப்பிக்கப்பட்டவர்கள் என்று நம்புகிறோம். அவர்கள் அவரைப் பின்பற்றினார்கள், எந்த பாவமும் இல்லாத அவருடன் நிலைத்திருக்க விரும்பினார்கள். அதன் மூலமே இவற்றை நாம் அடைய  முடியும். ஆகவே, சுருக்கமாய் சொல்லப்போனால், கிறிஸ்துவிடமிருந்து நாம் எதிர்பார்ப்பதும், கற்றுக்கொண்டதும், அவற்றைப்பற்றி கற்பிப்பதும் ஆகும். இதேபோல் பிளேட்டோ, ரதமந்தஸும், மினோஸும் தங்களுக்கு முன் வந்த பொல்லாதவர்களைத் தண்டிப்பார்கள் என்று சொல்லியிருந்தார். நாமும் அதையே செய்வோம் என்று தான் சொல்கிறோம், ஆனால் அதை  கிறிஸ்துவின் கரங்களினூடாக செய்வோம் என்று சொல்கிறோம். துர்நடத்தை கொண்ட அமைப்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து, மீண்டும் ஒன்றுபட்டு, இப்போது நித்திய தண்டனையை அனுபவிக்கின்றன; பிளேட்டோ சொன்னது போல் ஆயிரம் ஆண்டுகளுக்கு அல்ல. அதற்கு மேலேயும் அனுபவிக்க நேரிடுகின்றது. இது நம்பமுடியாதது அல்லது சாத்தியமற்றது என்று எவராவது சொல்வார்களானால், நம்முடைய இந்த பிழையானது நம்முடையதும் நம்மைப் பற்றியதுமாகும். இதில் மற்றையோருக்குப் பங்கில்லை. ஆகவே, எந்தவொரு தீங்கும் செய்யாத எம்மை நீங்கள் எங்களை குற்றவாளிகளாக்க முடியாது.

9 ம் அத்தியாயம் – சிலை வழிபாடு, மடைமையின் சின்னம் 

மனிர்களால் ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டு அங்கே தெய்வங்கள் என்று அழைக்கப்படும் உருவங்களுக்கு செய்யப்படும் பூசைப்பலிகளையும்  மற்றும் மலர் மாலைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; ஏனென்றால், இவை நிதர்சனமற்றவை, இறந்தவை. அங்கே கடவுளின் வடிவம் இல்லை என்பதைக் காண்கிறோம் (ஏனென்றால், அவர்கள் சொல்லும் தெய்வங்கள் என்ற ஒரு மாயையை பின்பற்றுவதாக சிலர் சொல்வது போன்ற ஒரு வடிவம் கடவுளுக்கு இருப்பதாக நாங்கள் கருதவில்லை), ஆனால் கெட்ட சாத்தான்களின் பெயர்களும் அவற்றின் வடிவங்களும் உள்ளன; அவைகளின் தோற்றம் பற்றியும் அறியப்பட்டுள்ளன. எப்படிப்பட்டவர்கள், மற்றும் யார் அந்தக் கைவினைஞர்கள்? அவர்கள் வெட்டி, செதுக்கி, வார்த்து, சுத்தியலால் தட்டி உருவங்களை வடிவமைக்கிறார்கள் போன்ற விளக்கங்களைபற்றி ஏற்கனவே அறிந்தவர்களுக்கு நாங்கள் மீண்டும் சொல்ல வேண்டிய தேவை இல்லை என்று கருதுகிறோம் ஏசாயா 44: 9-20; எரேமியா 10: 3. பெரும்பாலும் மதிப்பிழந்த பாத்திரங்களை, அவற்றின் வடிவத்தை மாற்றுவதன் மூலமும், தேவையான உருவத்தை உருவாக்குவதன் மூலமும், அவற்றை அவர்கள் ஒரு கடவுள் என்று அழைக்கிறார்கள்; இது புத்தியில்லாத செயல் மாற்றுமன்றி, கடவுளை நிந்திக்கும் செயலாகவும் நாம் கருதுகிறோம். அவர் வர்ணனைக்கப்பாற்பட்ட மகிமையும் வடிவமும் கொண்டவர். இவர்களது செயலால் அவருடைய பெயர் சிதைந்துபோகக்கூடிய காரணிகளுடன் இணைக்கப்பட்டு, தொடர்ச்சியான சேவைகளையும் அவற்றுக்கு செய்ய வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். மேலும் இவற்றை உருவாக்கும் கலைஞர்கள் தீய ஒழுக்கம் நிறைந்தவர்களாகக் காணப்படுகிறார்கள், மேலும், அவர்கள் மத்தியில் நடைமுறையில் உள்ள மாசு படிந்த செயல்களையிட்டு நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் தங்கள் சொந்த பெண்களைக் கூட அவர்கள் சீரழித்து விடுகிறார்கள். எப்படிப்பட்ட ஒரு மோகம் இது! அந்த ஒழுக்கக்கேடு நிறைந்த மனிதர்கள் பற்றி இங்கு சொல்லப்பட வேண்டும். உங்கள் வழிபாட்டிற்காக கடவுள்களை வடிவமைத்து மேலும் அத்தகைய மனிதர்களையே அவர்கள் அந்தக் கோயில்களின் பாதுகாவலர்களாக நியமிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள். மனிதர்கள் கடவுள்களின் பாதுகாவலர்கள் என்று நினைப்பது அல்லது சொல்வது கூட முறையற்றது. இதை அங்கீகரிக்க முடியாதிருக்கிறது.

10 ம் அத்தியாயம் – கடவுளுக்கு நாம் எவ்வாறு சேவை செய்ய வேண்டும்?

ஆகவே, மனிதர்களால் கொடுக்கக்கூடிய பொருள் மற்றும் பிரசாதம் போன்றவை கடவுளுக்குத் தேவையில்லை என்பதை நாம் பாரம்பரியமாக அறிந்துள்ளோம். உண்மையில், எல்லாவற்றையும் மனமுவந்து வழங்குபவர் அவர் ஒருவரே. அவரிடத்தில் குடியிருக்கும் சிறப்பையும், நிதானத்தையும், நீதியையும், பரோபகாரத்தையும் பின்பற்றுகிறவர்களை மட்டுமே அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதையும், விசித்திரமான பல நல்லொழுக்கங்களையும் அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் நாம் கற்பித்திருக்கிறோம். அதேவேளை கடவுள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர் இஸ்தீரமான ஒரு பெயரையும் கொண்டு அழைக்கப்படுவதில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. ஆரம்பத்தில் அவர் நன்மைகளைச் செய்தார் என்று நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. மனிதனுக்காக எல்லாவற்றையும் அறியாத பல காரணிகளில் இருந்து உருவாக்கினார். மனிதர்கள் அவருடைய படைப்புகளால் தாம் பெற்ற உருவ அமைப்புகளுக்கு தகுதியானவர்கள் என ஏற்றுக்கொள்வார்களாயின், அவர்கள் தகுதியுள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள், ஆகவே, அவரோடு ஒன்றிப்பதற்கும், ஊழல் மற்றும் துன்பங்களிலிருந்து விடுதலை பெறவும் நாம் தகுதியுள்ளவர்களாக ஆகிறோம். ஆரம்பத்தில் நாம் ஒருவரும் இல்லாத ஒரு சூழ்நிலையில் தான் அவர் நம்மைப் படைத்தார், ஆகவே, அவருக்குப் பிரியமானதைத் தேர்ந்தெடுப்பவர்கள், அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணமாக, அவதூறு போன்றவற்றில் இருந்து விடுபட்டு நாம் அவருடன் ஒன்றித்து வாழ்வதற்கு தகுதியானவர்கள் என்று கருதுகிறோம். முதலில் நாம் சுயமாக வருவது என்பது நம்முடைய சொந்த சக்தியில் நிகழக்கூடியதல்ல; மேலும், அவரைப் பிரியப்படுத்தும் காரணிகளை நாம் பின்பற்றுவதற்காக, அவர் நமக்கு அளித்த பகுத்தறிவுத் திறன்களின் மூலம் அவற்றைத் தேர்ந்தெடுப்பதற்காக, அவர் நம்மை இணங்கச் செய்து விசுவாச வாழ்வுக்கு இட்டுச் செல்கிறார். இவற்றைக் கற்றுக்கொள்வதைத் தவிர்க்காத, ஆனால் அதன்பால் வற்புறுத்தலுக்கு ஆளாகும் எல்லா மனிதர்களின் நலன்கள் பற்றியும் நாம்  நினைக்கிறோம். மனிதனுக்காக இயற்றப்பட்ட சட்டங்களுக்கு அப்பால் அவர் தெய்வீகமாக இருப்பதால், அவரது வார்த்தை சக்தியுடையதாய் இருக்கிறது. கேடு நிறைந்த சாத்தான்கள் ஒவ்வொரு மனிதனிலும் இருக்கும் துஷ்டத்தனம் மற்றும் காமத்தை அவைகளுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, பல தவறான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தியது. அவை எதிலும் நாம் எம்மை இணைத்துக் கொள்ளவில்லை. 

11 ம் அத்தியாயம் – கிறிஸ்தவர்கள் எந்த இராச்சியத்தை எதிர்பார்க்கிறார்கள்?

நாங்கள் ஒரு இராச்சியத்தைத் தேடுகிறோம் என்று நீங்கள் அறிந்தவிடத்து, எந்தவொரு கேள்வியும் கேளாமல் நாங்கள் மனித இராச்சியத்தைப் பற்றி பேசுகிறோம் என்று எண்ணுகிறீர்கள்; ஆனால் நாம் கடவுளின் இராச்சியத்தைப்பற்றிப் பேசுகிறோம், கிறீஸ்தவர்களென குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்த வாக்குரைப்பில் இது வெளிப்படுகிறது. இருப்பினும் வாக்குமூலம் அளிப்பவருக்கு வழங்கப்படும் தண்டனை மரணம் என்பதை அவர்கள் அறிவார்கள். ஏனென்றால், நாம் மனித இராச்சியத்தைத் தேடுவோமானால், நாம் கொல்லப்படக்கூடாது என்பதற்காக நாம் எமது கிறிஸ்துவை மறுதலிக்க  வேண்டிய நிலைக்கு ஆளாகிறோம். நாம் எதிர்பார்ப்பதைப் பெற்றுக்கொள்வதற்காக, எம்மைக் கண்டறியும் சூழ்ச்சியில் இருந்து தப்பிக்க நாம் முயற்சிக்க வேண்டும். ஆனால் நம்முடைய எண்ணங்கள் தற்காலத்தில் திருத்தப்படாததால், மனிதர்கள் நம்மைத் துண்டிக்கும் போது நாம் கவலைப்படுவதில்லை; மரணம் என்பது ஒரு கடனாகும். அனைத்து சூழ்நிலைகளிலும் இது மீள செலுத்தப்படல் வேண்டும்.

12 ம் அத்தியாயம் – கிறிஸ்தவர்கள் கடவுளின் பார்வையில் வாழ்கிறார்கள்

மற்றைய எல்லா மனிதர்களையும் விட, நாங்கள், உங்கள் உதவியாளர்கள் மற்றும் தோழமைகள் சமாதானத்தை ஊக்குவிப்பதில், இக்கருத்தை நாம் கொண்டிருப்பதைப் பார்த்து, பொல்லாதவர்கள், பேராசை கொண்டவர்கள், சதிகாரர் மற்றும் நல்லொழுக்கமற்றவர்கள் கடவுளின் பார்வையில் இருந்து தப்பிப்பது சாத்தியமில்லை. ஒவ்வொரு மனிதனும் அவனவன் செய்கைகளுக்கு ஏற்ப நித்திய தண்டனை அல்லது இரட்சணியத்துக்கு உட்படுகிறான். எல்லா மனிதர்களும், அவர்கள் நித்திய நெருப்பினால் தண்டிக்கப்படுவர் என்பதை அறிந்திருந்தால், அவர்களில் எவரும் சிறிதளவேனும் கெட்ட மார்க்கத்தை தெரிவு செய்ய மாட்டார்கள்; ஆனால் அவர்கள் இறைவனின் நல்ல வெகுமதிகளை பெறுவதற்கும் தண்டனைகளில் இருந்து தப்பிப்பதற்கும் எல்லா வகையிலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நல்லொழுக்கத்தால் தன்னை முழுமைப்படுத்திக்கொள்வர். நீங்கள் விதிக்கும் சட்டங்கள் மற்றும் தண்டனைகளின் காரணமாக, அவர்கள் குற்றம் செய்யும் போது உங்கள் பார்வையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்பவர்களுக்கு (மேலும், அவர்கள் மனிதர்கள் என்பதனால், உங்கள் பார்வையில் இருந்து தப்பிப்பது மிகவும் சாத்தியம் என்ற எண்ணத்தில் அவர்கள் தவறிழைக்கிறார்கள்), அவர்கள் தங்கள் அறிவுக்குட்பட்ட விதத்திலும் சரி, உண்மையில் செய்யப்பட்டாலும் அல்லது நோக்கம் கொண்டாலும், கடவுளின் பார்வையில் இருந்து தப்ப முடியாது என்று உறுதியாக நம்பினால், அபராதங்கள் போன்றவற்றின் அச்சுறுத்தல் காரணமாக எல்லா வகையிலும் ஒழுக்கமான வாழ்வே சிறந்தது என்பதை நீங்கள் கூட ஒத்துக்கொள்வீர்கள். இவ்வாறான சூழ்நிலையில், எல்லா மனிதர்களும் நீதியுள்ளவர்களாக மாறிவிடுவார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்கள். ஏனெனில் நீங்கள் தண்டிப்பதற்கு ஒருவரும் இல்லை என்பதால். இது பொது மரணதண்டனை நிறைவேற்றுபவர்களுக்கு கவலையை அளிக்கலாம். ஆனால் நல்ல இளவரசர்களுக்கு அந்தக் கவலை ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, நாங்கள் முன்பு கூறியது போல, இந்த விடயங்கள் தீய சக்திகளால் தூண்டப்படுகின்றன. அவை நியாயமற்ற முறையில் வாழ்பவர்களிடமிருந்து பலிகளையும் சேவைகளையும் கோருகின்றன; ஆனால் உங்களைப் பொறுத்தவரை, பக்தி மற்றும் தத்துவத்திற்கு (நற்பெயருக்கு) இலக்கணமாக வாழும் நீங்கள் நியாயமற்ற எதையும் செய்ய மாட்டீர்கள் என்று நாம் கருதுகிறோம். ஆனால் நீங்களும் அறிவிலிகளைப்போல அதுவே நிதர்சனம் என்ற வழக்கத்தை விரும்புவீர்களானால், நீங்கள் செய்யக்கூடியதைச் செய்யுங்கள். உண்மையை விட கருத்தை மதிக்கும் ஆட்சியாளர்களுக்கு இத்தனை அதிகாரம் கொடுத்துள்ளமை, பாலைவனத்தில் கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களுக்கு சமமாகும். உங்களுக்கு வெற்றி கிட்டாது என்பதை வார்த்தை அறிவிக்கிறது, கடவுளோடு ஒரே பொருளான அவரை விட, அதிகாரமும், நீதியும் கொண்ட ஒரு ஆட்சியாளர் இல்லை என்பதை நாம் அறிவோம். ஏனென்றால், அனைவருமே தங்கள் பிதாக்களின் வறுமை, துன்பங்கள் அல்லது தெளிவின்மையிலிருந்து பின்வாங்குவதால், வார்த்தை நாம் தேர்ந்தெடுப்பதைத் தடைசெய்தாலும், விவேகமான மனிதன் அதைத் தெரிவு செய்ய முன்வருவதில்லை. இவை அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் சொல்கிறேன், எங்கள் ஆசிரியர் இதை முன்னறிவித்திருந்தார், அனைவரின் பிதாவாகிய தேவனுடைய குமாரனும், அப்போஸ்தலரும், ஆட்சியாளருமான இயேசு கிறிஸ்து; அவர்களிடமிருந்து கிறிஸ்தவர்கள் என்ற பேறு எமக்கு கிடைத்ததது. அவர் நமக்குக் கற்பித்த எல்லாவற்றையும் பற்றி நாம் அதிக உறுதியுடன் இருக்கும்போது, அவர் முன்பே முன்னறிவித்தது போலவே அனைத்தும் நிறைவேற வேண்டும் என்ற நியதி இருப்பதால், உண்மையில் அது நிறைவேறும். எந்த ஒரு விடயமும் அது நடப்பதற்கு முன்பு அதைப் பற்றி பிரஸ்தாபிப்பதும், அது நடக்கும் என்று முன்னறிவிப்பதும் இறைவனின் செயலாகும். இங்கே இடைநிறுத்திவிட்டு மேலும் எதையும் சேர்க்க முடியாது. நியாயமானதையும், உண்மையானதையும் நாங்கள் கோருகிறோம் மற்றும் காண்கிறோம். ஆனால் அறியாமையில் ஊறிய மனதை திடீரென  மாற்றுவது அவ்வளவு எளிதானது அல்ல என்பதை நாம் நன்கு அறிந்திருப்பதால், சத்தியத்தை நேசிப்பவர்களை சம்மதிக்க வைப்பதற்காக, சில விடயங்களை இணைக்க உத்தேசித்துள்ளோம். அறியாமையை ஒழிப்பது சாத்தியமில்லை ஆயினும் உண்மையை முன்வைப்பதன் மூலம் அது சாத்தியப்படலாம். 

13 ம் அத்தியாயம் – கிறிஸ்தவர்கள் பகுத்தறிவுடன் கடவுளுக்கு சேவை செய்கிறார்கள்

அப்படியானால், சுயசிந்தையுள்ள நாம் நாத்திகர்கள் அல்ல என்பதை ஒப்புக்கொள்ள மாட்டோம், இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியவர் வணங்குவதை போலவே நாமும் வணங்குகிறோம். நமக்குக் கற்பிக்கப்பட்டபடி, அவருக்கு இரத்தம் சிந்தி ஒப்புக்கொடுக்கப்படும் பலிகள், படையல்கள் மற்றும் தூப ஆராதனைகள் தேவையில்லை என்று அறிகிறோம். பிரார்த்தனை செய்வதன் மூலமும், நமக்கு வழங்கப்பட்ட எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துவதன் மூலமும் நம்முடைய அனைத்து சக்திகளையும் உபயோகித்து  அவரது மேன்மையை புகழ்கிறோம். நாம் கற்றுக்கொண்டதற்கிணங்க,  நம்முடைய வாழ்வாதாரத்திற்காக அவர் அளித்த அந்த கௌரவத்தை தீயினால் பொசுக்குவதல்ல. மாறாக நமக்கும் தேவையுள்ளவர்களுக்கும் பயன்படவும், அவருக்கு நன்றியறிதலுடன் வாழவும் நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் படைப்பு, மற்றும் சுகவாழ்வுக்காகவும், நற்குணங்களுக்காகவும் பருவகால  மாற்றங்களுக்காகவும் வேண்டுதல்கள் மற்றும் கீர்த்தனைகள் மூலம் அவருக்கு நன்றி செலுத்தி, அவர்மீதுள்ள விசுவாசம் மீண்டும் சீர்குலையாது எம் பயணத்தைக் தொடர அவரிடம் எமது மன்றாட்டுகளை முன்வைக்க வேண்டும். இவற்றை எமக்கு கற்றுத்தந்தவர் எமது தலையாய ஆசானாகிய இயேசு கிறிஸ்து. அவர் இந்த நோக்கத்திற்காகவே பிறந்தார், திபெரியஸ் சீசரின் காலத்தில் யூதாவின் சூழ்ச்சிமிகு செயற்பாட்டால் போஞ்சியு பிலாத்துவின் கீழ் சிலுவையில் அறையப்பட்டார். மேலும், அவர் உண்மையான தேவனின் குமாரன் என்பதை அறிந்து, அவரை இரண்டாவது ஸ்தானத்திலும்,  தீர்க்கதரிசனத்தின் பரிசுத்த ஆவியானவர் மூன்றாவது ஸ்தானத்திலும்  இருப்பதால் நாம் அவரை வணங்க எல்லாவிதத்திலும் கடமைப்பட்டுள்ளோம்.ஏனென்றால், சிலுவையில் அறையப்பட்ட ஒரு மனிதனுக்கு,  அனைத்து படைப்புகளின் காரண கர்த்தாவாகிய நித்திய இறைவனுக்கு அடுத்த படியாக இரண்டாம் ஸ்தானத்தை நாம் அளிப்பதால் எம்மை அறிவீனர்கள் என்று அவர்கள் தூற்றுகிறார்கள். ஏனென்றால், இங்குள்ள தெய்வீகத்தனத்தை  அவர்கள் உணரவில்லை, அதை நாங்கள் உங்களுக்கு தெளிவுபடுத்தி, நீங்கள் அதில் கவனம் செலுத்த வேண்டுமென நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

14 ம் அத்தியாயம் – சாத்தான்கள் கிறிஸ்தவ கோட்பாட்டை தவறாக சித்தரிக்கின்றன

நீங்கள் உங்களை காத்துக்கொள்ளும்படி நாங்கள் எச்சரிக்கிறோம். எம்மால் வெறுக்கப்பட்ட சாத்தான்கள் உங்களை வஞ்சிக்கக்கூடாது என்பதற்காகவும், நாங்கள் சொல்வதை நீங்கள் புரிந்துகொள்வதிலிருந்தும் உங்களைத் திசைதிருப்பக்கூடாது என்பதற்காகவும் இதைக்கூற கடமைப்பட்டுள்ளோம்.அவைகள் உங்களை தங்கள் அடிமைகளாகவும் ஊழியர்களாகவும் வைத்திருக்க முயற்சிக்கும். சில சமயங்களில் அவைகள் உங்கள்  கனவுகளில் தோன்றக்கூடும், சில சமயங்களில் மாயாஜால வித்திகளால் உங்களை ஈர்க்கக்கூடும். தங்கள் சொந்த இரட்சிப்புக்காக வலுவான எதிர்க்கும் முயற்சியை மேற்கொள்ளாத அனைவரையும் சாத்தான்கள் அடக்கி ஒடுக்க முயற்சி செய்கின்றன.ஆகவே, வார்த்தையினால் தூண்டப்பட்ட நாம், அவைகளிடமிருந்து (அதாவது, சாத்தான்கள்) விலகி, தேவனுடைய ஒரே பொருளான குமாரனான கர்த்தரை பின்பற்றுகிறோம் – முன்பு காம இச்சையில்  மகிழ்ந்த நாங்கள், இப்போது கற்பு ஒன்றை மட்டும் ஏற்றுக்கொள்கிறோம்; முன்னர் மந்திர வித்தைகளை பயன்படுத்திய நாம், நல்லவரும் பிதாவோடு ஒரே பொருளானவரான கர்த்தருக்கு எம்மை நாம் அர்ப்பணிக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக  செல்வத்தையும், உடைமைகளையும்  சேர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த நாம்,  இப்போது எம்மிடம் உள்ளதை பொதுவாக எண்ணி, தேவைப்படும் அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறோம். நாம் ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுக்கினோம். வேறு இனத்துடன்  அவர்களுடைய வித்தியாசமான பழக்கவழக்கங்களின் காரணமாக  சேர்ந்து வாழ நாம் உடன்படவில்லை. ஆனால் தற்போது ​​கிறிஸ்துவின் வருகையின் பின்னர், அவர்களுடன் சிநேகபூர்வமாக வாழ்ந்து, நம் எதிரிகளுக்காக செபிக்கிறோம். நியாயமற்ற முறையில் நம்மை வெறுப்பவர்களை கிறிஸ்துவின் நல்ல கட்டளைகளுக்கு இணங்க வாழ வைக்க முயற்சிக்கிறோம், எல்லா படைப்புகளின் இறைவனான தேவனிடம் கிடைக்கும் வெகுமதியின் அதே மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் அவர்கள் எங்களுடன் பங்காளிகளாக மாறக்கூடும்.ஆனால், நாம் உலகியலுக்குத் தக்கவாறு நடக்கிற, அதி நவீன முறையில் பகுத்தறிவுடையவர்களாக இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே  வாக்குறுதியளிக்கப்பட்ட விளக்கத்தை உங்களுக்குக் கொடுப்பதற்கு முன்பு, கிறிஸ்துவே கொடுத்த சில கட்டளைகளை மேற்கோள் காட்டுவது சரியானது என்று நாங்கள் கருதுகிறோம்.இனி இது பலம் மிக்க ஆளுனர்களாகிய உங்கள் கைகளில் தான் உண்மையான விடயங்களைப் பற்றி எமக்கு கற்பிக்கப்பட்டுள்ளதா என்பது தங்கியுள்ளது. சுருக்கமான கருத்து மற்றும் பொழிப்பு போன்றன அவரிடமிருந்து வந்தன. ஏனென்றால் அவர் அதி நவீனர் அல்லர் ,  ஆனால் அவரிடமிருந்து வெளிப்படுபவை தேவனுடைய சக்திமிகு வார்த்தைகள் என்பதே நிதர்சனம்.

15 ம் அத்தியாயம் – கிறிஸ்து தாமே கற்பித்தவை

கற்பு குறித்துஅவர் அருளியது இவற்றைத்தான்:ஒரு பெண்ணைக் காம இச்சையுடன் பார்க்கிறவன்,  அவனுடைய மனதால்  ஏற்கனவே அவளுடன் விபச்சாரம் செய்தவனாக ஆகிறான்.மேலும், நீ உனது வலது கண்ணால் பாவம் செய்வாயானால், அதை பிடுங்கி எரிந்து விடு. இரண்டு கண்களோடு நித்திய நெருப்பில் தள்ளப்படுவதை விட, ஒரே கண்ணால் பரலோக இராச்சியத்துக்குள் நுழைவது உனக்கு நன்மையே. மேலும், தனது கணவனிடமிருந்து விவாகரத்து பெற்ற பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொள்பவன் விபச்சாரம் செய்கிறவனாக ஆகிறான். அலிகளாய்ப்  பிறந்தவர்களும், மனிதர்களால் அலிகளாக்கப்பட்டவர்களும், பரலோக இராச்சியத்தின் நிமித்தம் தங்களை அலிகளாக்கிக் கொண்டவர்களையும் இதனுள் அடக்க முடியாது. மத்தேயு 19:12. ஆகவே, மனிதருக்காக இயற்றப்பட்ட சட்டதிட்டங்களின்படி, இரண்டு முறை திருமணமானவர்கள் மற்றும் பெண்களைக் காம இச்சையுடன் பார்க்கிறவர்களும் பாவங்களைக் கட்டிக்கொண்டவர்களாகின்றனர்.விபச்சாரம் செய்பவர் மட்டுமல்ல,  விபச்சாரம் செய்ய விரும்புகிறவரும் அவரது வெறுப்புக்குள்ளாகிறார். ஏனென்றால் நம்முடைய செயல்கள் மட்டுமல்ல, நமது எண்ணங்களையும் தேவன் நன்கு அறிவார்.சிறு பராயம் முதல் கிறிஸ்துவின் சீடர்களாக இருந்த ஆண்களும் பெண்களும் அறுபது அல்லது எழுபது வயதிலும் கூடத் தூய்மையாக இருக்கிறார்கள்;  மனிதர்களின் ஒவ்வொரு இனத்திலிருந்தும் இதை நான் உருவாக்க முடியும் என்று என்னால் பெருமையாகக் கூற முடியும்.தன்னடக்கமற்ற குணங்களை சீர்செய்து கொண்டு, இவற்றைக் கற்றுக்கொண்ட எண்ணற்ற பேர்களைப் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லையே? கிறிஸ்து நீதிமான்களையோ, பரிசுத்தவான்களையோ மனந்திரும்புதலுக்கு அழைக்கவில்லை. பதிலாக, ஒழுக்கக்கேடுள்ள, இறைவனை மதிக்காத அநீதியாளர்கள் போன்றோரையே அழைத்தார். அவருடைய வார்த்தைகள் கூறுவது என்னவென்றால், நான் நீதிமான்களை அழைக்க அல்ல, பாவிகளை மனந்திரும்பவே அழைத்தேன் மத்தேயு 9:13. பரலோகத் தந்தை பாவிக்கு தண்டனையளிப்பதை விட அவன் மனந்திரும்ப வேண்டுமென்றே விரும்புகிறார்.அனைவரிடமும் கொண்ட அன்பின் நிமித்தம் அவர் அன்பைப் பற்றி அவர் இவ்வாறு கற்பித்தார்: உன்னை நேசிக்கிறவர்களை நீ நேசிப்பதன் மூலம் நீ எதையும் புதிதாக செய்யவில்லையே. விபச்சாரம் செய்பவர்கள் கூட இதைச் செய்கிறார்களே? ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் எதிரிகளுக்காக செபியுங்கள், உங்களை வெறுக்கிறவர்களை நேசியுங்கள்,  உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்கள்மீது பொறாமை கொள்பவர்களுக்காக செபியுங்கள். மத்தேயு 5:46, 44; லூக்கா6:28. தேவையுள்ளவர்களுடன் நாம் தொடர்புகொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும். வெறும் தற்புகழ்ச்சிக்காக  எதையும் நாம் செய்யக்கூடாது. அவர் கேட்டுக்கொண்டது போல்,கேட்பவருக்குக் கொடுங்கள், கடன் கேட்போரிடமிருந்து ஒதுங்கிப்போய் விடாதீர்கள். மீண்டும் கிடைக்கும் என்று எண்ணி நீங்கள் கடன் கொடுப்பதானால், நீங்கள் புதிதாய் எதையுமே செய்ய வில்லையே? சாதாரண மக்கள் கூட இதைச் செய்கிறார்களே? பூமிக்கடியில் செல்வத்தைப் புதைத்து வைக்காதீர்கள். ஏனெனில் அவற்றை அந்துப்பூச்சிகளும் கறையான்களும் சிதைத்து விடுகின்றன, திருடர்கள் அதைக் கொள்ளையிட்டு சென்றுவிடுவார்கள். ஆகவே, அந்துப்பூச்சிகளோ அல்லது கறையான்களோ சிதைத்துவிட முடியாத பரலோக இராச்சியத்தில் உங்களை புதையலாய் நீங்கள் இட்டு வையுங்கள்.ஒரு மனிதன் உலகம் முழுவதையும் வென்று, தனது ஆன்மாவை இழந்தால் அவனுக்கு அதில் என்ன லாபம்? அல்லது அதற்கு பதிலாக ஒரு மனிதன் எதைக் கொடுக்க இயலும்? அந்துப்பூச்சிகளோ அல்லது கறையான்களோ சிதைத்துவிட முடியாத பரலோக இராச்சியத்தில் உங்களை புதையலாய் நீங்கள் இடுங்கள். இரக்கமும் கருணையும் உடையவர்களாக இருங்கள்.உங்கள் பிதாவும் இரக்கமுள்ளவர்,  கருணையுள்ளவர், அவர் சூரியனை பாவிகள் மீதும், நீதிமான்கள் மீதும், மற்றும் கொடியவர்கள் மீதும் உதிக்கச் செய்கிறார்.நீங்கள் எதை உண்ண வேண்டும், அல்லது எதை அணிய வேண்டும் என்று நினைத்து கவலை கொள்ள வேண்டாம்: பறவைகள் மற்றும் மிருகங்களை விட நீங்கள்மேன்மையானவர்கள் அல்லவா? கடவுள் அவைகளைப் போஷிக்கிறார்.ஆகையால், நீங்கள் எதை உண்ண வேண்டும், எதை அணிய வேண்டும் என்று கவலை கொள்ள வேண்டாம். உங்களுடைய பரலோக பிதா உங்களுக்கு என்னவெல்லாம் தேவை என்பதை நன்கு அறிவார்.ஆகவே,பரலோக இராச்சியத்தைத் தேடுங்கள், இவை அனைத்தும் உங்களை வந்தடையும். புதையல் இருக்கும் இடத்தில் தான் மனிதனின் மனமும் இருக்கிறது. மனிதர்கள் இவற்றைக் காணாதிருப்பார்களாக. அப்படி இல்லையெனில்  பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவிடமிருந்து உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. மத்தேயு 6: 1. 

16 ம் அத்தியாயம் – பொறுமை மற்றும் சத்தியம் பற்றியது 

நாங்கள் காயங்கள் காரணமாக நோயாளிகளாகவும், அனைவருக்கும் சேவை செய்யத் தயாராகவும், கோபத்திலிருந்து விடுபடவும் தயாராயிருக்க வேண்டும். அவர் சொன்னது இதுதான்: உன்னை எவராவது ஒரு கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு; உன்னுடைய உடையையோ மேலாடையையோ எடுத்துச் சென்றால் அதைத் தடுக்காதே. எவன் கோபப்படுகிரானோ அவன் நெருப்பினால் ஏற்படும் ஆபத்தை சந்திக்கிறான். எவரேனும் ஒருவன் ஒரு மைல் செல்ல உன்னை கேட்டானாகில், அவனுடன் இரண்டு மைல்கள் செல். உனது நற்செயல்கள் மனிதர்களுக்கு முன் பிரகாசிக்கட்டும். அவர்கள், அவற்றைப் பார்த்து, பரலோகத்திலுள்ள உனது பிதாவை மகிமைப் படுத்துவார்கள். நாம் பாடுபடக்கூடாது, நாம் பொல்லாத மனிதர்களைப் பின்பற்றுபவர்களாக இருப்பதை அவர் விரும்பவில்லை, ஆனால் பொறுமையுடனும், மென்மையுடனும், அவமானத்திலிருந்தும், தீமையை நேசிப்பதில் இருந்தும் எல்லா மனிதர்களையும் வழிநடத்தும்படி அவர் நமக்கு அறிவுறுத்தியுள்ளார். ஒரு காலத்தில் நீங்கள் கொண்டிருந்த சிந்தனை பலரின் விடயத்தில் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்களின் வன்மம் மற்றும் கொடுங்கோன்மை மனநிலையை மாற்றியுள்ளது. அவர்களுடைய அயலவர்கள் வாழ்க்கையில் கண்ட அசாதாரண சகிப்புத்தன்மையினால் அவற்றை வெல்லக்கூடியதாயிருந்தது.  பரிவர்த்தனை செய்தவர்களின் நேர்மையான செயலால் தங்கள் சக பயணிகளிடம் மோசடி செய்வதை அவர்கள் கவனித்திருக்கிறார்கள். நாம் ஒருபோதும் சத்தியம் செய்யாமல், எப்போதும் உண்மையை பேசுவது குறித்து அவர் பின்வருமாறு கூறினார்: சத்தியம் செய்யாதீர்கள். ஆனால், ஆம் என்றால் ஆம்; இல்லை என்றால் இல்லை என்று மட்டும் சொல்லுங்கள். இவற்றை விட எது மேலாக வந்தாலும் அது தீமையாகவே வருகிறது. மத்தேயு 5:34, 27. நாம் கடவுளை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்காக, அவர் இவ்வாறு எமக்கு அறிவுறுத்தினார். மிகப் பெரிய, தலையாய கட்டளை என்னவென்றால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்க வேண்டும், அவரை மட்டுமே நீங்கள் முழு இதயத்தோடும், முழு சக்தியோடும் ஆராதிக்க வேண்டும். ஏனெனில் அவரே உங்களப் படைத்த கர்த்தராகிய ஆண்டவர் ஆவார்; மாற்கு 12:30. ஒரு மனிதன் அவரிடம் வந்து, “நல்ல எஜமானர்” என்று சொன்னபோது, அவர் பதிலாக: எல்லாவற்றையும் படைத்த கடவுள் ஒருவர் மட்டுமே நல்லவர் மத்தேயு 19: 6, 17. அவர் கற்பித்தபடி வாழாமல், கிறிஸ்துவின் கட்டளைகளை உதட்டால் கூறினால் அவர்கள் கிறிஸ்தவர்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கர்த்தாவே, ஆண்டவரே, என்று என்னிடம் சொல்லுகிற ஒவ்வொருவரும் பரலோக இராச்சியத்துக்குள் பிரவேசிக்க மாட்டார்கள், ஆனால் பரலோகத்திலுள்ள என் பிதாவின் விருப்பத்தை நிறைவேற்றி அவருடைய வார்த்தையின்படி, வாழ்வதிலும், காரியமாற்றுவதிலும் மாத்திரமே அவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள். எவன் என் வார்த்தைகளைக் கேட்டு, எனக்கு செவி சாய்க்கிறானோ அவன் என்னை அனுப்பியவருக்குச் செவிசாய்க்கிறான். கர்த்தாவே, ஆண்டவரே, நாங்கள் உம்முடைய நாமத்தினால் உண்டு, குடித்து புதுமைகளை செய்யவில்லையா? என்று பலர் என்னிடம் கேட்ட போது, நான் அவர்களை நோக்கி: அக்கிரமக்காரர்களே, என்னை விட்டு விலகுங்கள் என்று கூறினேன். நீதிமான்கள் சூரியனைப் போல பிரகாசிக்கும் போதும், துஷ்டர்கள் நித்திய நன்றாக நெருப்பிற்கு அனுப்பப்படும் போதும், புலம்புவதும் பற்களைக் கடிப்பதையும் அங்கே காணமுடியும். பலர் எனது நாமத்தினாலே வருவார்கள், ஆடுகளின் தோல்களை வெளிப்புறமாக அணிந்து கொள்வார்கள், ஆனால் உள்ளார்த்தமாக அவர்கள் ஓநாய்கள். அவர்களது செயல்களால் நீங்கள் அவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். மேலும் நல்ல கனிகளைக் கொடுக்காத ஒவ்வொரு மரமும் வெட்டப்பட்டு அக்கினியில் போடப்படும். அவருடைய போதனைகளுக்கு இணங்க வாழாது பெயரில் மட்டுமே கிறிஸ்தவர்களாக இருப்பவர்களும் இதுபோன்ற அனைவரும் உங்களால் தண்டிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

17 ம் அத்தியாயம் – கிறிஸ்து சமூகக் கீழ்ப்படிதலைக் கற்பித்தார்

எல்லா இடங்களிலும், மற்றைய எல்லா மனிதர்களையும் விட, நாங்கள் அவரால் கற்பிக்கப்பட்டதற்கு இணங்க, சாதாரண மற்றும் கட்டாய  வரிகளை உங்களால் நியமிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த நாம் பாடுபடுவோம். அந்த நேரத்தில் சிலர் அவரிடம் வந்து சீசருக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமா என்று கேட்டார்கள்; அதற்கு அவர், “சொல்லுங்கள், நாணயம் யாருடைய உருவத்தைக் கொண்டிருக்கிறது? என்று கேட்டார். அவர்கள் அதற்கு, சீசருடைய உருவம் என்று சொன்னார்கள். மறுபடியும் அவர் அவர்களுக்குப் பதிலுரையாக: ஆகையால் சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள். கடவுளை மட்டுமே நாங்கள் வழிபடுகிறோம், ஆனால் மற்ற விஷயங்களில் நாங்கள் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு சேவை செய்கிறோம். உங்களை அரசர்களாகவும் மனிதர்களின் ஆட்சியாளர்களாகவும் ஏற்றுக்கொள்கிறோம். மேலும் உங்கள் அரச அதிகாரத்தின் ஊடாக நீங்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் என்றும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். ஆனால் எங்கள் பிரார்த்தனைகள் மற்றும் வெளிப்படையான விளக்கங்களை நீங்கள் அசட்டை செய்வீர்களானால், நாங்கள் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டோம். ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தனது செயல்களுக்கு ஏற்றவாறு நித்திய நெருப்பில் தண்டனையை அனுபவிப்பான் என்று நாங்கள் நம்புகிறோம். (மாறாக, உண்மையில் வற்புறுத்தப்படுகிறோம்) கடவுளிடமிருந்து அவர் பெற்ற சக்திக்கு ஏற்ப கணக்கைக் கொடுக்க வேண்டும். கிறிஸ்து அதற்கு; “கடவுளால் யாருக்கு அதிகம் கொடுக்கப்பட்டதோ, அவரிடமிருந்து அதிகமாகக் மீளக் கேட்கப்படும்; லூக்கா 12:48.

18 ம் அத்தியாயம் – அழியாத் தன்மை மற்றும் உயிர்த்தெழுதல் என்பவற்றுக்கு சான்று பகர்தல் 

ஆதியில் ஒவ்வொரு மன்னர்களின் ஆட்சியின் முடிவை பிரதிபலிக்க, அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது அனைவருக்கும் பொதுவானது. இது உணர்வற்ற நிலையில் வெளியிடப்பட்டிருந்தால், எல்லா துஷ்டர்களுக்கும் ஒரு தெய்வம் தந்த வரமாக இருக்கும். ஆனால் இதுவரை வாழ்ந்த அனைவருக்கும் அது உணர்வுபூர்வமாக இருந்தபடியால், நித்திய தண்டனை விதிக்கப்படுவதை (அதாவது, துன்மார்க்கருக்கு), நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள். எனவே இந்த விடயங்கள் யாவும் உண்மை என்று  நம்பிக்கை வையுங்கள்.  பில்லி சூனியங்கள் மற்றும் மாயமுள்ள தோற்றங்கள் போன்றவற்றை மாசற்ற குழந்தைகளைக் கொண்டு நீங்கள் மேற்கொள்ளும் கணிப்பையும், இவ்வுலகை விட்டுப்பிரிந்த மனித ஆன்மாக்களை அவர்கள் மேல் எழச் செய்வதும், கனவுகளில் வரவழைப்போரையும் மற்றும் பதில் ஆன்மாக்கள் (பழக்கப்பட்டவர்கள்) மூலம் அழைக்கப்படுபவர்களும், மற்றும் இதுபோன்ற விஷயங்களில் திறமையானவர்கள், இறந்த பிறகும் ஆத்மாக்கள் உணர்வுடன் இருக்கிறார்கள் என்பதை இவை உங்களை நம்ப வைக்கக்கூடும். மற்றும் இறந்தவர்களின் ஆவிகளால் பிடிக்கப்பட்டு எறியப்படுபவர்கள், அனைவரையும் சாத்தானின் ஊழியர்கள் அல்லது மனா நோயாளர்கள் என்று அழைக்கிறார்கள்; ஆம்பிலோகஸ், டோடானா, பைத்தோ போன்றோர் இருப்பதைப் போல் அசரீரிகள் கூறுவதாக நீங்கள் புகழ்ந்துரைக்கிறீர்கள். மற்றும் உங்கள் ஆசிரியர்கள், எம்பெடோக்லஸ் மற்றும் பித்தகோரஸ், பிளேட்டோ மற்றும் சாக்ரடீஸ், மற்றும் ஹோமரின் புதைகுழி, மற்றும் இந்த விஷயங்களை ஆய்வு செய்ய யுலிஸஸின் வம்சாவளி போன்றவை ஒரே வகையாக  கூறப்பட்டவைகள் போலத் தோன்றுகின்றன. இவர்களுக்கு நீங்கள் அளிக்கும் அருள், அவர்கள் கடவுளை நம்புவதை விட குறைவாகவும் உறுதியாகவும் இல்லாத எங்களுக்கும் அருளுங்கள். இறந்துவிட்டு பூமியில் அடக்கம் செய்யப்பட்ட நம்முடைய உடல்களை மீண்டும் பெறுவோம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் கடவுளால் எல்லாம் இயலும் என்று நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். 

19 ம் அத்தியாயம் – உயிர்த்தெழுதல் உறுதியானது  

எந்தவொரு சுய சிந்தனையுள்ள நபருக்கும் நாம் உடலோடு  இல்லாவிட்டால் அதை நம்பமுடியாது. ஆகவே அது சிறிய மனித எலும்புகள் நரம்புகள் மற்றும் சதை போன்ற வடிவத்தில் உருவாகலாம் என்று சிலர் சொல்லலாம் நாம் காண்பதைப்போல். இதை இப்போது அனுமானமாகக் கூறபட்டதாகவே இருக்கட்டும். நீங்கள் முன்பு இருந்ததைப்போல இல்லை, இப்போது நீங்கள் இருக்கும் தோற்றம். அத்தகைய பெற்றோரிடமிருந்து பிறந்தவர்கள் (மற்றும் காரணங்கள்), ஒருவர் உங்களுக்கு மனித உரு மற்றும் ஒரு மனிதனின் படத்தைக் காண்பித்து அத்தகைய ஒரு சிறிய உருவில் இருந்து அத்தகைய ஒரு உருவத்தை உருவாக்க முடியும் என்று உறுதியாக சொல்ல முடியுமா? அது உண்மையாக தோற்றம் பெற்றது என்பதை நீங்கள் நம்புவீர்களா? (அத்தகைய நம்பிக்கையை மிஞ்சும் அறிக்கையை) யாரும் மறுக்கத் துணிய மாட்டார்கள். அதேபோல், நீங்கள் இப்போது நம்பமுடியாதவராக இருக்கிறீர்கள். ஏனென்றால் ஒரு இறந்த மனிதன் மீண்டும் உயிர் எழுந்ததை நீங்கள் பார்த்ததில்லை என்பதால். ஆனால் முதலில் நீங்கள் அத்தகைய நபர்களை சிறிய துளியிலிருந்து படைக்கப்பட்டதாக நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள், ஆனால் இப்போது அவர்கள் இவ்வாறு தான் உண்டானார்கள் என்று நீங்கள் காண்கிறீர்கள், எனவே மனித உடல்கள் பூமியில் விதைக்கப்பட்ட விதைகளைப் போல கரைந்தபின் அவை மீண்டும் எழுவது சாத்தியமில்லை. ஆனால் கடவுளால் நியமிக்கப்பட்ட காலத்தில் அப்பழுக்கின்றி மீண்டும் எழும். ஒவ்வொரு ஏதுவும் அது படைக்கப்பட்ட மூலத்திற்கே  மீண்டும் திரும்பும் என்றும், ஆகவே இதில் கடவுளின் சக்தி என்ன பங்கு வகிக்கிறது என்று கற்பனையாளர்கள் கேட்கக்கூடும்.ஆனால் இதை நாம் தெளிவாகக் காண்கிறோம்,  அவர்கள் இப்போதும் தங்களையும் முழு உலகத்தையும் கண்டு உணர்கிறார்கள் என்பதால், அத்தகைய ஒரு மூலத்தில் இருந்து அவை படைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் நம்பியிருக்க மாட்டார்கள்.உலகின் ஏனைய பகுதிகளில் இருப்பவர்களை போல நம்பிக்கையற்றவர்களாக இருப்பதை விட, நம்முடைய இயல்புக்கும் மனிதர்களுக்கும் சாத்தியமில்லாததைக் கூட நம்புவது நல்லது என்று நாங்கள் கற்றுக்கொண்டோம்; ஏனென்றால், நம்முடைய எஜமான் இயேசு கிறிஸ்து; மனிதர்களால் இயலாதது கடவுளால் சாத்தியமானது என்று அருளினார்; மத்தேயு 19:26. உன்னைக் கொல்ல வருபவர்கள் பற்றி நீ அஞ்ச வேண்டாம், அதற்கு அப்பால் அவர்களால் உனக்கு வேறு ஏதுவும் செய்ய முடியாது; ஆனால் மரணத்திற்குப் பிறகு ஆன்மாவையும் உடலையும் நித்திய நரகத்தில் இடக்கூடியவருக்கு பயந்திரு; மத்தேயு 10:28.  துஷ்டர்களும் கொடிய வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கும், கிறிஸ்து மூலம் தேவன் நமக்குக் கற்பித்த விடயங்கள் நிறைவேறும் என்று நம்பாதவர்களுக்கும் நரக தண்டனை கிடைக்கும் என்பது நியதி.

20 ம் அத்தியாயம் – கிறிஸ்தவ கோட்பாட்டிற்கு ஒப்பான பிற மத ஒப்புடைமை

சீர்குலைவை ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் கடவுளால் கலைக்கப்பட வேண்டும் என்று சிபில் மற்றும் ஹிஸ்டாஸ்பெஸ் ஆகியோர் கூறினர்.ஸ்டோயிக்ஸ் என்று அழைக்கப்படும் நடுநிலையுணர்வுக் கோட்பாடுசார்  தத்துவவாதிகள் கடவுளே கூட தீயினால் தீர்க்கப்படுவார் என்று கூறினார்கள். மேலும் இந்த புரட்சியால் உலகம் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தர்க்கிக்கிறார்கள்.ஆனால் எல்லாவற்றையும் படைத்த கடவுள் மாற்றம் செய்யப்பட  வேண்டிய விடயங்களை விட உயர்ந்தவர் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.ஆகையால், சில தருணங்களில் நீங்கள் மதிக்கும் கவிஞர்கள் மற்றும் தத்துவஞானிகளைப் போலவே நாங்களும் கற்பித்தால், மற்றைய காரணிகள் எங்கள் போதனையில் தெய்வீகமாகவும் முழுமையானதாகவும்இருந்தால், நாங்கள் வலியுறுத்துவதற்கான ஆதாரங்களை மட்டுமே நாங்கள் பெற்றால், நாம் ஏன் மற்றைய அனைவரையும் விட அநியாயமாகவும் அதிகமாகவும் வெறுப்புக்கு உள்ளாகிறோம்? அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டு உலகத்தில் நேர்த்தியாக வைக்கப் பட்டுள்ளது என்று நாங்கள் கூறும் அதேவேளை, பிளேட்டோவின் கோட்பாட்டை நாங்கள் நினைவு கூறுகிறோம்.அனைத்தும் சுட்டெரிக்கப்பட்டு விடும் என்று நாங்கள் கூறும்போது,  ஸ்டோயிக்ஸ் என்று அழைக்கப்படும் நடுநிலையுணர்வுக் கோட்பாடுசார் தத்துவவாதிகளின் கோட்பாடு எங்கள் நினைவுக்கு வருகிறது.கொடியவர்களின் ஆன்மாக்கள், மரணத்திற்குப் பிறகும் உணர்வுகளுடன் கிளர்ந்ததால், தண்டிக்கப்படுகின்றன என்பதையும், தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக தங்கள் இருப்பை கழிப்பதையும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம், கவிஞர்கள் மற்றும் தத்துவஞானிகளைப் போலவே நாங்கள் சொல்கிறோம் என்று தோன்றுகிறது. மனிதர்கள் தங்கள் கை வண்ணத்தால் உருவான படைப்புகளை வணங்கக்கூடாது என்று நாங்கள் கருதுகையில், விகடக் கவிஞர் மெனாண்டர் மற்றும் ஏனைய எழுத்தாளர்களால் கூறப்பட்டவைகளை  நாங்கள் சொல்கிறோம். ஏனென்றால் கைவினையை விட கைவினைஞர் உயர்ந்தவர் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

21 ம் அத்தியாயம் – கிறிஸ்துவின் வரலாற்றுக்கு ஈடான ஒப்புவமைகள்

வார்த்தை பற்றி கூறுகையில், கடவுளின் முதல் அவதரிப்பு பாலியல் உறவு இன்றியே ஏற்பட்டது என்றும், அவர் எம்முடைய ஆசிரியரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டு மறித்து, மீண்டும் உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு எழுந்தருளினார் என்றும் நாம் எந்த விளக்கத்தையும்  முன்வைக்கவில்லை. ஜூபிட்டரின் (வியாழனின்) மகன்மாரை நீங்கள் மதிக்கிறவர்களானால், இது அந்த நம்பிக்கையில் இருந்து வேறுபட்டது. உங்கள் மதிப்புமிக்க எழுத்தாளர்கள் வியாழனுக்கு எத்தனை பிறவிசார் புத்திரர்களைக் கொடுத்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்: புதன் என்பது அனைவருக்கும் வார்த்தைகளை விளக்கும் ஆசிரியராகவும் விளங்கினர்.  அஸ்குலாபியஸ், அவர் ஒரு சிறந்த மருத்துவராக இருந்தபோதிலும், இடி, மின்னலால் தாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு சென்றார். மற்றும் பாக்கஸ் என்பவரும் அவ்வாறே அவயவங்கள் மற்றும் சதைகள் கிழிந்தபின் இவ்வாறே எய்தினார். மற்றும் ஹெர்குலஸ் என்பவர்அவர் தனது கடூழியத்தில் இருந்து மீள, தீப்பிழம்புகளுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தார். லெடா மற்றும் டியோஸ்கூரியின் மகன்மார், மற்றும் டானேயின் மகன் பெர்சியஸ், மற்றும் பெல்லெரோபோன் போன்றோர் மனிதர்களிடமிருந்து தோன்றினாலும், பெகாசஸ் என்ற குதிரை மீதேறி சொர்க்கத்திற்கு சென்றார்கள்.அரியட்னே மற்றும் அவளைப் போல ஏனையோரைப்பற்றி சொல்ல எனக்கு என்ன இருக்கிறது? அவர்கள் நட்சத்திரக் கூட்டங்களுக்குள் இணைக்கப்பட்டார்கள் என அறிவிக்கப்பட்டதே?  உங்களிடையே வாழ்ந்து இறந்து போன சக்கரவர்த்திகள் தெய்வீகத்திற்கு தகுதியானவர் என்று நீங்கள் கருதுகிறீர்களே, எவர் சார்பாக நீங்கள் சத்தியம் செய்கிறீர்களோ, அவர் எரியும் சீசரின் இறுதி சடங்கின் போது சீசர்  சொர்க்கத்திற்கு எழுந்திருப்பதைக் கண்டதாக சொல்கிறாரே? வியாழனின் புகழ்பெற்ற ஒவ்வொரு மகன்மார் பற்றியும் என்ன வகையான செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை ஏற்கனவே அறிந்தவர்களுக்கு சொல்ல வேண்டிய தேவையில்லை. இது இளம் அறிஞர்களின் நன்மைக்காகவும் அவர்களை ஊக்கப்படுத்தவும் எழுதப்பட்டதாகவே தெரிகிறது. தெய்வங்களைப் பின்பற்றுவது ஒரு கெளரவமான விடயம் என்று அனைவரும் கருதுகிறார்கள். சிலரின் கூற்றுகளுக்கமைய,  எல்லாவற்றையும் படைத்து ஆளும் வியாழன்  பாரிஸைடு மற்றும் ஒரு பாரிஸைட்டின் மகன் என்று. ஒவ்வொரு நல்ல ஆத்மாவிலிருந்தும் தெய்வங்களைப் பற்றிய ஒரு சிந்தனை இருக்க வேண்டும். அடிப்படை மற்றும் வெட்கக்கேடான இன்பத்திற்கு அடிமையான அவர் கெனிமீட் என்ற இடத்துக்கு அவரால் தும்புறுத்தப்பட்ட பல பெண்களிடம்  வந்தார், மேலும் அவரது மகன்மாரது செயல்களும் அவ்வாறே அமைந்திருந்தன. ஆகவே நாம் மேலே சொன்னது போல, கெட்ட சாத்தான்களே இவ்வாறான காரியங்களை செய்தன. புனிதத்தன்மையிலும் நல்லொழுக்கத்திலும் கடவுளுக்கு அருகில் வாழ்ந்தவர்கள் மட்டுமே தெய்வீகமாக இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். கொடியவர்களாக வாழ்ந்து மனந்திரும்பாதவர்கள் நித்திய நெருப்பில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

22 ம் அத்தியாயம் – கிறிஸ்து என்ற சுதன் பற்றிய ஒப்புவமைகள்

மேலும், இயேசுவே தேவனுடைய சுதன் எனப்பட்டார். சாதாரண தலைமுறையினரால் ஒரு மனிதன் என்று அறியப்பட்டாலும், அவருடைய ஞானத்தின் காரணமாக, தேவ சுதன் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியானவரானார். எல்லா எழுத்தாளர்களும் கடவுளை மனிதர்களின் தந்தை என்றும், கடவுளின் தந்தை என்றும் அழைக்கிறார்கள். கடவுளுடைய வார்த்தை கடவுளிடமிருந்தே வந்தது. அது சாதாரண தலைமுறையிலிருந்து வேறுபட்டது என்று நாம் உறுதியாகக் கூறினால், மேலே சொன்னது போல், புதன் என்பது கடவுளின் தேவதூதர் என்பதற்கு ஒப்பான பதம் என்று சொல்வது உங்களுக்கு ஒன்றும் அசாதாரணமான காரியமல்ல. அவர் சிலுவையில் அறையப்பட வில்லை யாராவது அர்த்தப்படுத்தினால்,  அவர் நீங்கள் நம்பும் வியாழனின் புகழ்பெற்ற மகன்மாருக்கு இணையாக இருக்கிறார். எங்கள் அனுமானத்தின்படி அவர்கள் அவதிக்குள்ளாயினர் என்று அறிந்தோம். மரணத்தின் போது அவர்கள் அனுபவித்த துன்பங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அது மாறுபட்டதாகவே இருந்தது. ஆகவே, அவர் பட்ட துன்பங்களைக்கூட அவர்கள் தாழ்ந்ததாக எண்ணினார்கள். மாறாக, இந்த சொற்பொழிவின் முந்தைய பகுதியில் நாம் வாக்குறுதியளித்தபடி, இப்போது நாம் அவரை உயர்ந்தவர் என்று நிரூபிக்கிறோம்; அப்படி இருப்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளோம் – ஏனென்றால் அவருடைய செயல்களால் அவர் உயர்ந்தவர் என்ற மகிமையைப் பெறுகிறார்.அவர் ஒரு கன்னிதன்மை மாறாத பெண்ணால் பிரசவிக்கப்பட்டவர் என்று நாங்கள் உறுதிப்படுத்தினால், பெர்சியஸை நீங்கள் ஏற்றுக்கொள்வதைப் போலவே இதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில்அவர், முடவர், பாரிசவாத நோயாளிகள் மற்றும் பிறவிக் குருடர்களை முழுமையாகக் குணப்படுத்தினார் என்று நாங்கள் கூறுகிறோம், ஆஸ்குலபியஸால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் செயல்களுக்கு மிகவும் ஒத்ததை நாங்கள் இங்கே குறிப்பிடுகிறோம்.

23 ம் அத்தியாயம் – தர்க்கம் மற்றும் வாதப் பிரதிவாதங்கள் 

இது இப்போது உங்களுக்கு தெளிவாகத் தெரியக்கூடும் – (முதலாவதாக) கிறிஸ்துவால் நமக்குக் கற்பிக்கப்பட்டவற்றுக்கும், அவருக்கு முன் இருந்த தீர்க்கதரிசிகளுக்கும் இணங்க நாங்கள் உறுதியாகக் கூறுவது அனைத்துமே  உண்மையே. உண்மைக்கு எல்லாவிதத்திலும் முதலிடம் கொடுத்த எல்லா எழுத்தாளர்களையும், அவர்களை விட வயதானவர்களுக்கும் எம்மை கொள்வதற்காக கூறுகிறோம், இந்த எழுத்தாளர்கள் சொன்னதைப் போலவே நாங்களும் சொல்கிறோம் என்பதல்ல. இங்கே நாங்கள் உண்மையான விடயங்களைப்பற்றி சொல்வதாலேயே. (இரண்டாவதாக) இயேசு கிறிஸ்து தேவனின் ஒரே சுதனானவர் மற்றும் தேவனின் ஒரே பொருளானவர். அவருடைய வார்த்தையும் முதல் பிறப்பும் சக்தியும்; மேலும், அவருடைய சித்தத்தின்படி மனிதனாகி, மனித இனத்தின் மாற்றத்திற்கும் மீட்புக்காகவும் இந்த விஷயங்களை அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். (மூன்றாவதாக), அவர் மானிடரிடையே ஒரு மனிதனாக அவதரிக்கும் முன், சிலர்முன்னர் குறிப்பிட்டுள்ள சாத்தான்களினால் உந்தப்பட்டவர்கள், கவிஞர்களின் எழுத்தாணி போன்றவற்றினூடாக, அந்த சூழ்நிலைகள் உண்மையில் அவை நிகழ்ந்தன.  அவை கற்பனையாக வடிவமைக்கப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளன. இழிவான மற்றும் கேடு நிறைந்த செயல்களைப் பற்றிய அவதூறான அறிக்கைகளை அவர்கள் புனைந்தனர். எனினும் அவை பற்றிய சாட்சியோ ஆதாரமோ இல்லை. ஆகவே பின்வரும் ஆதாரங்களை நாங்கள் முன்வைக்கிறோம்.

24 ம் அத்தியாயம் – பிறமதத்தவரின் வழிபாட்டு முறைகள்

முதலில் (நாங்கள் ஆதாரம் சமர்ப்பிக்கிறோம்), ஏனென்றால், கிரேக்கர்கள் சொல்வதைப் போன்ற விடயங்களை நாங்கள் சொன்னாலும், நாம் கிறிஸ்துவின் என்ற பெயரை மட்டுமே வெறுக்கிறோம், நாங்கள் எந்தத் தவறும் செய்யாவிட்டாலும், பாவிகளாகக் கருதி கொல்லப்படுகிறோம். மற்ற இடங்களில் மனிதர்கள் மரங்கள், ஆறுகள், எலிகள், பூனைகள் மற்றும் முதலைகள் போன்ற பகுத்தறிவற்ற விலங்குகளை வணங்குகிறார்கள். ஒரே இன விலங்குகள் அனைவராலும் வணங்கப்படுவதில்லை. ஒரு இடத்தில் ஒருவகையான விலங்கும், மற்றைய இடத்தில் வேறு இன விலங்கையும் வணங்குகிறார்கள். ஒரே உருவத்தை வணங்காத காரணத்தால் ஒருவர் மேல் ஒருவர் இடும் தீர்ப்பு நிந்தனைக்குரியதாகவே இருக்கிறது. நீங்கள் வணங்கும் கடவுள்களை நாங்கள் வழிபடவில்லை என்பதும்,  இறந்தவற்றையும்,  அவற்றின் கொழுப்பு முதலியவற்றை படைப்பதிலும், சிலைகள் மேல் அணியும் கிரீடங்களை நாங்கள் வழங்கவில்லை என்பது தான் நீங்கள் எங்களுக்கு எதிராகக் கொண்டு வரும் ஒரே குற்றச்சாட்டாக இருக்கிறது. அதே விலங்குகள் சில மதிப்பிற்குரிய தெய்வங்களாக நீங்கள் போற்றும் ஏனைய காட்டு மிருகங்களுடனும், பலியிடப்பட்டவர்களுடனும் இருப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

25 ம் அத்தியாயம் – கிறிஸ்தவர்களால்  புறக்கணிக்கப்பட்ட பொய்யான கடவுள்கள்

இரண்டாவதாக, மனித இனத்தை சேர்ந்த பலர் – ஒவ்வொரு மனித இனத்திலிருந்தும், செமலின் மகன் பக்கஸையும், லடோனாவின் மகன் அப்பல்லோவையும் வணங்குகின்றனர் (ஆண்கள் மேலுள்ள மோகத்தால் அவர்கள் இதைக் கேட்டது கூட வெட்கக் கேடானது), மற்றும் புரோசர்பைன் மற்றும் வீனஸ் (அடோனிஸின் அன்பால் ஈர்க்கப்பட்டவர்கள். அப்படிப்பட்டவர்களின் மர்மங்களையும் நீங்கள் கொண்டாடுகிறீர்கள்). அஸ்குலாபியஸ், அல்லது தெய்வங்கள் என்று அழைக்கப்படுபவர்களில் ஒருவர் அல்லது வேறு சிலர் – இப்போது, இயேசு கிறிஸ்துவை அறிந்ததன் மூலமாக இவற்றை வெறுக்கக் கற்றுக் கொண்டனர். அதற்காக நாம் மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தாலும், படைக்கப்பட்டிராத மற்றும் வலி அல்லது துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிவுடைய கடவுளுக்கு நாம் நம்மை அர்ப்பணித்திருக்கிறோம். அவர் ஒருபோதும் அந்தியோப்பின் காமத்தையோ, அல்லது வேறு பெண்களையோ, அல்லது கேன்மீடின் காமத்தால் பாதிக்கப்படவில்லை. அத்தோடு தீடிஸ் மூலம் உதவி பெறப்பட்ட ஒருவித நூறு கைகளைக்கொண்ட இராட்சதனால் மீட்கப்படவுமில்லை. அல்லது அவரது மகன் அகிலிஸ் அவரது காமக்கிழத்தி (வைப்பாட்டி) யான ப்ரைஸிஸ் என்பவளால் பல கிரேக்கர்களை அழிக்க வேண்டும் என்று ஆணையிடப்படவும் இல்லை.இந்த விடயங்களை நம்புபவர்களையிட்டு நாம் பரிதாபப்படுகிறோம், அவற்றைக் கண்டுபிடித்தவர்கள் சாத்தான்கள் என்று எங்களுக்குத் தெரியும்.

26 ம் அத்தியாயம் – மந்திரவாதிகளை கிறிஸ்தவர்கள் நம்பவில்லை

மூன்றாவதாக, கிறிஸ்து பரலோகத்திற்கு எழுந்தருளிய பின்பு, சாத்தான்கள் தாங்கள் தெய்வங்கள் என்று சொன்ன சில மனிதர்களை முன்வைத்தன. அவர்கள் உங்களால் துன்புறுத்தப்பட வில்லை என்பது மட்டுமல்லாமல், மரியாதைக்குரியவர்களாகவும் கருதப்பட்டனர். கிட்டோ என்ற கிராமத்தைச் சேர்ந்த சைமன் என்ற சமாரிய இனத்தவன் ஒருவர் இருந்தான். அவர் கிளாடியஸ் சீசரின் ஆட்சியிலும், உங்கள் அரசாட்சி நகரமான ரோமில், அவரிடத்தில் உள்ள சாத்தான்களின் துணைகொண்டு மாயாஜால செயல்களைச் செய்தார்.அவர் ஒரு கடவுளாகக் கருதப்பட்டார், மேலும் ஒரு கடவுளைப் போன்று சிலை வடிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார், இது இரண்டு பாலங்களுக்கிடையில் டைபர் நதியில் அமைக்கப்பட்டது, மேலும் இந்த கல்வெட்டில் உரோமைய மொழியில் இவ்வாறு செதுக்கப்பட்டிருந்தது:-  சிமோனி டீயோ சாங்டோ, புனித கடவுளான சீமோனுக்கு: கிட்டத்தட்ட எல்லா சமாரியர்களும், வேறு சில தேசங்களை சேர்ந்த மக்களும் அவரை வணங்கி, அவரை முதல் கடவுளாக ஏற்றுக்கொண்டனர். அந்த நேரத்தில் அவருடன் சென்ற ஹெலினா என்ற பெண், அவள் முன்பு ஒரு விபச்சாரியாக இருந்தவள். இது அவளால் இவனுள் தோன்றிய முதல் யோசனை என்று கூறுகிறார்கள். சைமனின் சீடனான கப்பெரெட்டியா நகரத்தைச் சேர்ந்த சமாரியனான மெனந்தர்அந்தியோகியாவில் இருந்தபோது, சாத்தான்களின் சூழ்ச்சிகளினால் ஈர்க்கப்பட்டு, அவன் பலரை அவனது மந்திர வித்தையால் ஏமாற்றியிருப்பதை நாம் அறிவோம்.தன்னைப் பின்பற்றியவர்களுக்கு மரணம் என்ற ஒன்று இல்லையென இணங்கச்செய்தார்.  இப்போது கூட அவருடைய இந்த கருத்தை ஏற்றுக்கொடுள்ள சிலர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பொன்டஸின் மனிதரான மார்சியன் என்பவர் இந்நாளிலும் உயிருடன் இருக்கிறார். அவர் சர்வத்தையும் சிருஷ்டித்தவரை விட பெரிய கடவுளை நம்பும்படி தனது சீஷர்களுக்கு கற்பிக்கிறார். மேலும்,  அவர்,  சாத்தான்களின் வழிநடத்துதல் மூலம் ஒவ்வொரு தேசத்திலும் பலரை அவதூறாகப் பேசவும், கடவுள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியவர் என்பதை மறுத்துரைக்கவும், அவரை விட பெரியவர் வேறு சில பெரிய படைப்புகளைச் செய்துள்ளார் என்றும் பிரஸ்தாபித்தார். இந்த மனிதர்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்கும் அனைவரும், நாம் முன்பு கூறியது போல், கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்; தங்களது கோட்பாடுகளில் தத்துவஞானிகளுடன் உடன்படாதவர்களும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தத்துவஞானிகளின் பெயரை இன்னும் அவர்களுடன் பொதுவானதாகக் கொண்டுள்ளனர். இந்த மிகைப்படுத்தப்பட்ட, வெட்கக்கேடான செயல்களை அவர்கள் செய்கிறார்கள் – வேதனை அளிக்கும் செயல்களில் ஈடுபடுவது, மற்றும் முறைகேடான பாலியல் நடவடிக்கைகள், மனித சரீரத்தைப் புசிப்பது  போன்றவை நாங்கள் அறியாதவை. ஆனால் குறைந்த பட்சம் அவர்களின் கருத்துக்கள் காரணமாக அவர்கள் உங்களால் துன்புறுத்தப்படவோ, கொல்லப்படவோ இல்லை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் ஏற்கனவே அனைத்து மதங்களுக்கும் எதிராக இயற்றப்பட்ட கொள்கைகள் பற்றிய ஒரு கட்டுரை என்னிடம் உள்ளது, அதை நீங்கள் படிக்க விரும்பினால், நான் உங்களுக்கு தருகிறேன்.

27 ம் அத்தியாயம் – குழந்தைகளை அம்பலப்படுத்தியமைக்கான குற்ற உணர்வு

ஆனால் எங்களைப் பொறுத்தவரை, புதிதாகப் பிறந்த குழந்தைகளை அம்பலப்படுத்துவது என்பது கொடிய மனிதர்களின் செயல் என்று நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. நாம் யாருக்கும் காயம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், முதலில் நாம் கடவுளுக்கு எதிராக பாவம் செய்யக்கூடாது என்பதற்காகவும் இது கற்பிக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் கிட்டத்தட்ட அம்பலப்படுத்தப்பட்ட அனைத்துமே (சிறுமிகள் மட்டுமல்ல, சிறுவர்களும் கூட) விபச்சாரத்திற்கு தூண்டப்படுவதைக் காண்கிறோம். முன்னோர்கள் எருதுகள், ஆடுகள், செம்மறிகள் அல்லது மேய்ச்சல் குதிரைகளை வளர்த்ததைப் போல, நீங்களும் இந்த வெட்கக்கேடான பயன்பாட்டிற்காக உங்கள் குழந்தைகளை வளர்ப்பதைப் பார்க்கிறோம். இவ்வாறான கேடு நிறைந்த ஏராளமான பெண்கள், இருபாலினத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சொல்லொணா அக்கிரமங்களைச் செய்பவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் காணப்படுகிறார்கள். இவற்றின் மூலம் வாடகை மட்டுமல்ல, அவர்களிடமிருந்து தீர்வைகள் மற்றும் வரிகளை பெறுவது காணக்கூடியதாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்களை நீங்கள் இவ்வுலகில் இருந்து துரட்சி பண்ண வேண்டும். இத்தகைய மிலேச்சத்தனமான செயல்களில் ஈடுபடும் எவரும், புனித்தன்மையான மற்றும் தூய்மையான உடலுறவுக்கு அப்பால் சென்று, தனது சொந்தக் குழந்தை, அல்லது குடும்ப அங்கத்தினர் அல்லது சகோதரருடன் உடலுறவு கொள்ளக்கூடத் தயங்கமாட்டார்கள். சிலர் தங்கள் சொந்த பிள்ளைகளையும் மனைவியையும் கூட விபச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள். சிலர் ஆண்களுடன் ஒருபாலினப் புணர்ச்சியில் ஈடுபட்டு சீரழிந்து விடுகிறார்கள். அவர்கள் இவ்வாறான மர்மங்களை தெய்வங்களின் தாய்க்கு சமமாக ஒப்பிடுகிறார்கள். மேலும் மர்மத்தை வெளிப்படுத்த தெய்வங்களாக மதிக்கப்படும் ஒவ்வொரு உருவத்துடனும் பாம்பை ஒத்த ஒரு பெரிய சின்னம் வரையப்பட்டிருபதைக் காணலாம். உண்மையில், தெய்வீக ஒளி அணைக்கப்படுவது போன்ற இச்செயல்களை நீங்கள் வெளிப்படையாகவும் பாராட்டுதலுடனும் ஏற்றுக்கொள்கிறீர்கள். இவ்வகையான துர்ச்செயல்களில் ஈடுபடாது அதனால் ஏற்படும் எவ்விதத் நீங்களும் முகம் கொடுக்காது நாம் எம்மைக் காத்துக்கொள்வோம். ஆனால் அவற்றைச் செய்கிறவர்களுக்கும், நமக்கு எதிராக பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கும் அநேகர். 

28 ம் அத்தியாயம் – மனிதர் மீது கடவுள் கொண்டுள்ள கரிசனை 

நம்மிடையே வாழும் துஷ்டர்களின் இளவரசன் பாம்பு என்றும், சாத்தான் என்றும், பிசாசு என்றும் அழைக்கப்படுகிறான். நாங்கள் எழுதியுள்ளவற்றைப் பார்த்து நீங்கள் அவை பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், கிறிஸ்து முன்னறிவித்தது போல், அப்படிப்பட்டவர் தனது சேனையுடனும், அவரைப் பின்பற்றுபவர்களுடனும் நித்திய நெருப்பினுள் தள்ளப்பட்டு முடிவில்லாத காலத்திற்கு தண்டிக்கப்படுவார். மனித இனத்தின் மீதுள்ள அக்கறையின் காரணமாகவே கடவுள் இதைச் செய்ய தாமதப்படுத்தினார். சிலர் மனந்திரும்புதலின் மூலம் இரட்சிக்கப்படுவார்கள் என்று அவர் முன்னரே அறிவித்திருந்தார். ஆனால் அப்படிப்பட்டவர்கள் இன்னும் பிறக்கவில்லை என்றே அறிய முடிகிறது. ஆரம்பத்தில் அவர் மனித இனத்தை சிந்தனை சக்தியுடனும், சத்தியத்தைத் தேர்ந்தெடுத்து சரியானதைச் செய்வார்கள் என்றே படைத்தார். இதனால் எல்லா மனிதர்களும் கடவுளுக்கு முன்பாக மன்னிப்பு கேட்கக்கூடியவர்களாய் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் பகுத்தறிவு மற்றும் சிந்தனையுடன் பிறந்திருக்கிறார்கள். கடவுளின் அக்கறை பற்றி நம்பாதவர் எவரேனும் இருப்பின், அவர் கடவுள் இல்லை என்று வாதிடக்கூடியவர். அதேநேரம் அவர் இருக்கிறார் ஏற்றுக்கொண்டாலும், களங்கம் கொண்ட பார்வையின் ஊடாக கடவுள் ஒரு கல் போல இருக்கிறார் என்றும் அதற்கு நல்லொழுக்கமோ தீமைகளோ பற்றி எதுவும் தெரியாது என்றும் கருதுகிறார்கள். ஆனால் மனிதரின் அபிப்பிராயத்தின் படி நன்மை தீமை என்பன அவரவர் அவற்றை ஏற்றுக்கொள்வதிலேயே அடங்கியுள்ளன. இது மிகப்பெரிய அவதூறு மற்றும் தீமை ஏற்படுத்தக்கூடிய செயலுமாகும். 

29 ம் அத்தியாயம் – கிறிஸ்தவர்களின் தன்னடக்கம் 

மீண்டும் (குழந்தைகளை அம்பலப்படுத்த நாங்கள் அஞ்சுகிறோம்), அவர்களில் சிலர் மீட்கப்படாமல், இறந்து போக அனுமதிக்கலாகாது. அப்படியானால் நாம் கொலைகுற்றத்துக்கு ஆளாகி விடுகிறோம். ஆனால் நாங்கள் திருமணம் செய்வது குழந்தைகளை பெற்று வளர்ப்பதற்காகவே. அப்படியே அல்லாமல் நாம் திருமணத்தை நிராகரித்தாலும் நாங்கள் கற்புடன் வாழ்கிறோம். ஒழுங்கற்ற உடலுறவு என்பது புரியாத ஒரு மர்மம் அல்ல. எங்கள் உறுப்பினர்களில் ஒருவர் அலெக்ஸாண்டிரியாவின் ஆளுநரான பீலிக்ஸ் என்பவருக்கு ஒரு மனுவை சமர்ப்பித்து, ஒரு அறுவை சிகிச்சை நிபுணருக்கு தன்னை ஒரு பாலினத்துக்கு அப்பால் ஒரு அலியாக மாற்ற அனுமதி வழங்கும்படி இறைஞ்சினார். அறுவை சிகிச்சை நிபுணர்களைப் பொறுத்தவரை, ஆளுநரின் அனுமதியின்றி இவ்வகையான அறுவை சிகிச்சைகளை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினர். அத்தகைய அனுமதிபத்திரத்தில் கையெழுத்திட பீலிக்ஸ் முற்றிலும் மறுத்ததன் காரணமாக அந்த இளைஞன் தனியாக வாழ்ந்தான். மேலும் அவன் தனது மனசாட்சியின்படி அம்முடிவை ஏற்றுக்கொண்டான். ஆகவே அவன் நினைத்தபடியே ஒப்புதல் கிடைக்காது என்றும் அறிந்திருந்தான். சமீபத்தில் அண்டினோஸ் உயிருடன் இருந்தபோது, அவர் யார் அவரது தோற்றம் என்ன இந்தத் தேசத்தவர் போன்ற பற்றி அவர்கள் அறிந்திருந்தாலும், அனைவரையும் பயத்தின் காரணமாக, ஒரு கடவுளை போல் அவரை வணங்கத் தலைப்பட்டனர்.

30 ம் அத்தியாயம் – கிறிஸ்து ஒரு மந்திரவாதியல்ல

ஆனால், யாராவது நம்மைச் சந்தித்து எம்மிடம் கிறிஸ்து மனிதர்களிடமிருந்து அவதரித்த மனிதர், அவருடைய செயல்கள் மாயக்   கலைகளின் வல்லமை நிறைந்தது என்று கூறுமிடத்து, அதை எவ்வாறு நாம் தடுத்து, இல்லை, தேவனுடைய குமாரன் அந்த அடிப்படையில் தோன்றவில்லை என்று கூற முடியுமா? நாம் இப்போது ஆதாரங்களை வழங்குவோம், வெறும் கூற்றுக்களை நம்பாமல், (அவரைப் பற்றி) தீர்க்கதரிசனம் கூறியவர்கள் கூற்றுப்படி நடந்ததை நம் கண்களால் பார்க்கிறோம். அவை கணிக்கப்பட்டதைப் போலவே நடக்கின்றன; தற்போதும் நடந்தேறுகின்றன. இது உங்களுக்கு ஒரு வலுவான மற்றும் உண்மையான சான்றாகத் தோன்றும் என்று நாங்கள் நம்புகிறோம்.

31 ம் அத்தியாயம் – எபிரேய தீர்க்கதரிசிகளைப் பற்றிய விளக்கம்

யூதர்களிடையே, கடவுளின் தீர்க்கதரிசிகளாக இருந்த சிலர் இருந்தார்கள், அவர்கள் மூலமாக தீர்க்கதரிசன ஆவியானவர் வரவிருக்கும் பல விடயங்கள் பற்றி அவை நடைபெறும் முன்னே வெளியிட்டார். அவர்களுடைய தீர்க்கதரிசனங்கள் பற்றி பேசப்பட்டபோதும், உரையாடப்பட்ட போதும், தங்கள் சொந்த எபிரேய மொழியில் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட அந்தப் புத்தகங்களை அந்நேரத்தில் யூதர்களிடையே ஆட்சி செய்த அரசர்கள் தங்கள் வசம் வைத்து கவனமாகப் பாதுகாத்தனர். தொலமி என்ற எகிப்திய மன்னன் ஒரு நூலகத்தை உருவாக்கி, எல்லா எழுத்தாளர்களின் படைப்புகளையும் சேகரிக்க முயன்றபோது, அவர் இந்த தீர்க்கதரிசிகளைப் பற்றிக் கேள்வியுற்று, ஏரோதுவுக்கு ஒரு தூது அனுப்பினார். அப்போது யூதர்களின் அரசனாக இருந்த அவர், அத்தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை தனக்கு அனுப்பி வைக்கும்படி கோரி இருந்தார். முன்னறிவிக்கப்பட்டபடியே எபிரேய மொழியில் எழுதப்பட்டபடிருந்த புத்தகங்களை, ஏரோது, தொலமி அரசனுக்கு அனுப்பினார். அவற்றின் உள்ளடக்கங்கள் எகிப்தியர்களுக்கு புரியாதவை எனக் கண்டறியப்பட்ட போது, அவர் மீண்டும் அவற்றை அனுப்பி கிரேக்க மொழியில் மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வின் பின்னர், புத்தகங்கள் எகிப்தியர்களிடமே இருந்தன, அவை இப்போது வரை அவர்களிடமே உள்ளன. அவை உலகெங்கிலும் உள்ள அனைத்து யூதர்களிடமும் உள்ளன. ஆனால் அவர்கள் படித்த போதும், அதில் சொல்லப்பட்டவைகளை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. எனினும், எங்களை எதிரிகளாகவும் பகைவர்களாகவுமே எண்ணினார்கள். உங்களுக்கு நடந்ததைப் போலவே, அவர்கள் கையில் அதிகாரம் இருக்கும்போதெல்லாம் அவர்கள் எங்களைக் கொள்ளவும் தண்டிக்கவும் செய்தார்கள். நீங்கள் இதை நம்பலாம். அக்காலத்தில் நடைபெற்ற யூதப் போரில், யூதர்களின் கிளர்ச்சிபடைத் தலைவரான பார்ச்சோசெபாஸ், இயேசு கிறிஸ்துவை மறுதலித்து அவரை நிந்திக்காவிட்டால், கிறிஸ்தவர்களை கொடூரமான தண்டனைகளுக்கு உள்ளாக்குங்கள் என்று உத்தரவிட்டார். தீர்க்கதரிசிகள் எழுதிய இந்த புத்தகங்களில், நம்முடைய கிறிஸ்து வருவார், ஒரு கன்னிப் பெண்ணுக்கு அவர் பிறப்பார், மனிதரின் மத்தியிலே வளர்ந்து, எல்லா நோய்களையும், வருத்தங்களையும் குணப்படுத்துவார், இறந்தவர்களை உயிரெழுப்புவார், அதன் பின் அவர் வெறுக்கப்பட்டு, அங்கீகாரம் இழந்து, சிலுவையில் அறையப்படுவார் என்று முன்னறிவித்திருப்பதைக் கண்டோம். அவர் இறந்து, மீண்டும் எழுந்து, பரலோகத்திற்கு எழுந்தருளினார். ஆகவே அவர் தேவனுடைய ஒரே குமாரன் என்று அழைக்கப்படுகிறார். இந்த விடயங்களை பரப்புவதற்கு நபர்களை ஒவ்வொரு தேசத்துக்கும் அனுப்ப வேண்டும் என்றும், பிற இனத்தவரும் (யூதர்களிடையே) அவரை நம்ப வேண்டும் என்றும் உத்தேசிக்கப்பட்டது. அவர் தோன்றுவதற்கு முன்பே அவர் பற்றி எதிர்வுகூறப்பட்டது. முதலில் 5000 ஆண்டுகள், பின்னர் 3000 ஆண்டுகள், பின்னர் 2000 ஆண்டுகள், பின்னர் 1000 ஆண்டுகள், பிறகு 800 ஆண்டுகள் என்ற ரீதியில். இவை தீர்க்கதரிசிகளின் தலைமுறை, தலைமுறையாய் நடந்தேறின. 

32 ம் அத்தியாயம் – கிறிஸ்து மோசேயால் எதிர்வுகூறப்பட்டார் 

தீர்க்கதரிசிகளில் முதன்மையானவரான மோசே இவ்வாறு சொன்னார்: செங்கோல் யூதாவிலிருந்து எடுத்துச்செல்லப்படமாட்டாது. ஒரு சட்டவியலாளர் தனது தடங்களில் இருந்து விலகிச் செல்லமாட்டார். இவர்கள் நிமித்தம் அவர் வரும் வரை, அது அவர்களுக்காகவே வைக்கப்பட்டிருக்கும். அவர் தேசங்களின் மேல் விருப்பமுள்ளவராக இருப்பார். இளம் கழுதைக்குட்டியை திராட்சைத் தோட்டத்தில் கட்டி வைத்துவிட்டு, திராட்சையின் இரத்தத்தில் அவருடைய அங்கியைக் கழுவுவார்: ஆதியாகமம் 49:10. ஒரு முறையாக விசாரிப்பதன் மூலம், யாருடைய காலத்தில் யூதர்களுக்கு என்று சட்ட வல்லுனர்களும், அரசர்களும் இருந்தார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இயேசுக் கிறிஸ்துவினுடைய காலம் வரை, நமக்குக் கற்பித்த, இன்னும் புரியாத தீர்க்கதரிசனங்களை விளக்கியவர், (அவர்களுக்கு ஒரு சட்டவல்லுனர் இருந்தார்) மோசே மூலமாக பரிசுத்த மற்றும் தெய்வீக தீர்க்கதரிசனத்தின் ஆவியானவரால் முன்னறிவிக்கப்பட்டபடி, ஆட்சியாளர்கள் யூதர்களைப் புறக்கணிக்க மாட்டார்கள் என்றும், அவர் வரும் வரை அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இராச்சியம் (யூதா யூதர்களின் முன்னோராக இருந்தார், அவர்கள் யூதர்களுடைய பெயரையும் தங்கியிருந்தனர்). அவர் (அதாவது, கிறிஸ்து) தோன்றிய பிறகு, நீங்கள் யூதர்களை ஆளத் தொடங்கினீர்கள், அவர்களுடைய எல்லாப் பிரதேசங்களையும் கைப்பற்றினீர்கள். தீர்க்கதரிசனமானது அவர் தேசங்களின் எதிர்பார்ப்பாக இருப்பார். சில அல்லது பல தேசங்கள் அவர் மீண்டும் வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது பற்றிக் குறிப்பிடுகின்றது. உண்மையிலேயே நீங்களே இதைப் பார்க்க முடியும். அதிலுள்ள உண்மையையும் நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். எல்லா இன மக்களிடையேயும், யூதாவில் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தேடும் சிலர் இருக்கிறார்கள், அவர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர், பூமி போரின் விளைவுகளாக உடனே உங்களிடம் சரணடைந்தது. தீர்க்கதரிசி, இளம் கழுதைக்குட்டியை திராட்சைத் தோட்டத்தில் கட்டி வைத்து, திராட்சையின் இரத்தத்தில் அவருடைய அங்கியைக் கழுவியது போன்ற விடயங்கள், கிறிஸ்துவுக்கு நடக்கவிருந்தவற்றையும், அவர் என்ன செய்யப்போகிறார் என்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளமாகத் தென்பட்டது. ஒரு கிராமத்தின் நுழைவாயிலில் உள்ள ஒரு திராட்சைத் தோட்டத்தில் கழுதைக்குட்டி ஒன்று ஒரு கொடியுடன் பிணைக்கப்பட்டு நின்றிருந்தது. அதை தன்னிடம் கொண்டு வரும்படி அவர் தனது நண்பர்களுக்கு கட்டளையிட்டார். அது கொண்டு வரப்பட்டபோது, அவர் அதன் மேல் ஏறி அமர்ந்து எருசலேமுக்குள் சென்றார். அங்கே யூதர்களின் பெரிய ஆலயம் இருந்தது. அது பின்னர் உங்களால் நிர்மூலமாக்கப்பட்டது. இதற்குப் பிறகு அவர் சிலுவையில் அறையப்பட்டார், ஆகவே எஞ்சியுள்ள  தீர்க்கதரிசனம் நிறைவேறக் கூடியதாயிருந்தது. திராட்சையின் இரத்தத்தில் அவரது அங்கியைக் கழுவுவது என்பது, சகிப்புத்தன்மை மற்றும் உணர்வை முன்னறிவிப்பதாக இருந்தது. அதாவது அவரை நம்புகிறவர்களை அவருடைய இரத்தத்தால் கழுவித் தூய்மைப் படுத்துதல் என்பதே அதன் அர்த்தமாகும். அவருடைய அங்கியே தெய்வீக ஆவியானவர் என்று தீர்க்கதரிசிகளால் அழைக்கப்பட்டது. அவரை விசுவாசிக்கிறவர்கள், கடவுளின் வழித்தோன்றலான அவரது வார்த்தையை பின்பற்றுகிறார்கள். திராட்சையின் இரத்தம் என்று சொல்லப்படுவது என்னவெனில், தோன்றும் போது இரத்தத்துடன் தோன்றினாலும், அது மனிதனின் சந்ததியினால் அல்ல, கடவுளின் சக்தியால் தான் தோன்றும் என்பதைக் குறிக்கிறது. முதல் சக்தி, எல்லாவற்றிற்கும் பிதாவாகவும், ஆண்டவராகவும் இருந்த கடவுளுக்குப் பிறகு வார்த்தையும், அவர் குமாரனும் கூட, எவ்வாறு சரீரத்தாலான மனிதனானார் என்பதை விபரமாகக் காண்போம். மனிதன் திராட்சையில் இருந்து இரத்தத்தை உண்டாக்கவில்லை. கடவுளே, அதைச் செய்தார். ஆகவே, இரத்தம் மனித கோத்திரத்தால் வந்தது அல்ல. அது தெய்வீக சக்தியின் ஊடாக வந்திருக்க இருக்க வேண்டும் என்று மேற்கூறப்பட்டது மூலம் தெரிவிக்கப்பட்டது. ஏசாயா என்ற மற்றொரு தீர்க்கதரிசி, இதே விடயங்களை வேறு விதமாக இவ்வாறு வெளிப்படுத்தினார்: யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும், ஜெஸ்ஸியின் வேரிலிருந்து ஒரு பூ பூக்கும்; அவருடைய கரங்களையே தேசங்கள் நம்பும்; ஏசாயா 11: 1. ஆகவே ஒளிமிக்க ஒரு நட்சத்திரம் உதித்தது. ஜெஸ்ஸியின் வேரிலிருந்து ஒரு மலர் பூத்தது – அது தான் கிறிஸ்து. தேவனுடைய வல்லமையால், யூதாவின் தகப்பனாக இருந்த யாக்கோபின் கோத்திரத்தால் கன்னித்தாயால் அவர் கருத்தரிக்கப்பட்டார், அவர் காட்டியபடி, யூதர்களின் தந்தை; ஜெஸ்ஸி அவருடைய முன்னோன், அவன் வம்சாவளியைப் பொறுத்தவரை யாக்கோபுக்கும் யூதாவுக்கும் மகன்.

33 ம் அத்தியாயம் – கிறிஸ்து பிறந்தவிதம் எதிர்வு கூறப்பட்டது 

ஏசாயா தனது வார்த்தைகளின் மூலம் அவர் ஒரு கன்னிப் பெண்ணின் மூலமாகப் பிறக்க வேண்டும் என்று முன்னறிவித்ததை மீண்டும் கேளுங்கள்; அவர் இவ்வாறு பேசினார்: இதோ, ஒரு கன்னிப்பெண் கருத்தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பார், அவர்கள் ‘கடவுள் எம்முடன்’ என்று அவருடைய பெயருக்குப் பொருள்படக் கூறுவார்கள். ஏசாயா 7:14. நம்பமுடியாத மற்றும் மனிதர்களால் சாத்தியமற்றதாகத் தோன்றிய விடயங்கள், கடவுளின் தீர்க்கதரிசனத்தின் ஆவியால் முன்னறிவித்தவாறு நிறைவேறும் போது, அங்கு அவநம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் அவர்களின் கணிப்பு மூலமாக நம்பிக்கை, ஏற்பட்டது. ஆனால் சிலர், தற்போது உரைக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தைப் புரிந்து கொள்ளாமல், வியாழன் காம இச்சை காரணமாக பெண்களிடம் சென்றதாகக் கூறும் கவிஞர்களின் குற்றச்சாட்டுக்கு நாம் ஆளாகக் கூடாது என்பதனால் அதுபற்றி விளக்க முயற்சிப்போம். அப்படியானால், இதோ, ஒரு கன்னி கருத்தரிக்கலாம், அதுவும் உடல் ரீதியான உறவு கொள்ளாது கருத்தரிக்கலாம் என்பதைக் குறிக்கிறது. அவள் எவருடனேனும் உடல் ரீதியான உறவு கொண்டிருப்பாளானால், அதன் பின் அவள் கன்னியாக இருந்திருக்க மாட்டாள். ஆனால் கடவுளின் வல்லமை கன்னி மீது இறங்கி, அவளை ஆட்கொண்டு, ஒரு கன்னி கருத்தரிக்கும் நிலையை உருவாக்கியது. அந்த நேரத்தில் அந்தக் கன்னியிடம் அனுப்பப்பட்ட தேவனுடைய தூதன் அவளுக்கு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்து கொடுத்து, இதோ, நீ பரிசுத்த ஆவியானவரால் கருத்தரிக்கப்பட்டு, ஒரு குமாரனைப் பெறுவாய், அவர் மாட்சிமை உடைய குமாரன் என்று அழைக்கப்படுவார். நீ அவரை இயேசு என்ற பெயர் கொண்டு அழைக்க வேண்டும். அவர் தம் மக்களை தங்கள் பாவங்களிலிருந்து மீட்பார்; லூக்கா 1:32; மத்தேயு 1:21. எமது நம்பிக்கைக்குரிய, நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து கற்பித்த எல்லாவற்றையும் ஆவணப்படுத்தியவர்கள், ஏசாயா உட்பட, இதை உறுதிப்படுத்தியதன் மூலம், தீர்க்கதரிசனத்தின் ஊடாக நாம் முன்பு அறிவித்தபடியே அவர் பிறக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தீர்க்கதரிசி மோசே அறிவித்தபடி, ஆவியையும் கடவுளின் சக்தியையும் வார்த்தையைத் தவிர வேறு எதுவும் பெரியது என்று நாம் விளங்கிக்கொண்டால், அது தவறாகும். கடவுளின் பிறப்பும் கூட இவ்வாறே தான். கன்னியின் மீது இறங்கி அவளை ஆட்கொண்டு உடல் மூலமான உறவால் அன்றி, பரிசுத்த ஆவியின் வல்லமையே அவள் கருத்தரிக்க காரணமாக அமைந்தது. எபிரேய மொழியில் இயேசு என்றால் கிரேக்க மொழியில் Σωτήρ(மீட்பர்) என்று பொருள். ஆதலினால், தேவதூதரும் கன்னியை நோக்கி: நீ அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும். ஏனென்றால் அவர் தம் மக்களை தங்கள் பாவங்களிலிருந்து மீட்பார் என்று கூறினான். ஆகவே, தீர்க்கதரிசிகள் தெய்வீக வார்த்தையைத் தவிர வேறு எவராலும், எதானாலும் ஈர்க்கப்பட வில்லை. நான் நம்புகிறேன். நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

34 ம் அத்தியாயம் – கிறிஸ்து பிறந்த இடம் பற்றியும் எதிர்வு கூறப்பட்டிருந்தது

இன்னொரு தீர்க்கதரிசியான மீகா முன்னறிவித்தபடி, பூமியின் எப் பகுதியில் அவர் பிறக்கப் போகிறார் என்பது பற்றிக் கூறப்படுவதையும்  கேளுங்கள். அவர் இவ்வாறு கூறியிருந்தார்: யூதாவின் தேசமான பெத்லகேம், யூதாவின் இளவரசர்களை விட எவ்விதத்திலும் குறைந்ததல்ல. உங்கள் மத்தியில் இருந்து ஒரு ஆட்சியாளர் வெளிவருவார், அவர் என் மக்களைப் போஷிப்பார்; மீகா 5: 2. அதன்படி, யூதர்களின் தேசத்தில் ஒரு கிராமம் உள்ளது. அது எருசலேமில் இருந்து முப்பத்தைந்து மைல் தூரத்தில் அமைந்துள்ளது. அங்கே இயேசு கிறிஸ்து பிறந்தார், யூதேயாவில் உங்கள் முதல் செயலுரிமையாளரான சிரேனியஸின் கீழ் செய்யப்பட்ட வரிவிதிப்பு பதிவுகளிலிருந்து நீங்கள் இதுபற்றி அறிந்து கொள்ளலாம். 

35 ம் அத்தியாயம் – நிறைவேறிய ஏனைய தீர்க்கதரிசனங்கள் பற்றிய விளக்கம்

கிறிஸ்து பிறந்து மனிதர்களின் மத்தியில் வளரும் வரை மற்ற மனிதர்களின் பார்வையில் இருந்து எவ்வாறு ஒதுங்கியிருந்தார் என்பது பற்றியும் நிறைவேறியது. இது குறித்து முன்னறிவிக்கப்பட்டதைப் பற்றிக் கேளுங்கள். பின்வரும் கணிப்புகள் பற்றிப் பாருங்கள்: எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. எங்களுக்கு ஒரு இளைஞன் கொடுக்கப்படுகிறான். அரசாங்கம் அவன் தோள்களில் தங்கி இருக்கும்; ஏசாயா 9: 6. அது சிலுவையின் மகத்துவத்தைக் குறிக்கிறது. ஏனென்றால், அவர் சிலுவையில் அறையப்பட்டபோது, அவர் தனது தோள்களால் அந்த நிந்தனையைத் தாங்கினார். அடுத்து வரும் உரையாடல்களில் இதுபற்றி இன்னும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மறுபடியும் அதே தீர்க்கதரிசியான ஏசாயா, தீர்க்கதரிசனத்தின் வல்லமையால் ஈர்க்கப்பட்டு கூறுகையில்; நான் என் கைகளை விரித்து கீழ்ப்படியாத மற்றும் எதிர்த்துப்பேசும் மக்களைப்பார்த்து கூறுகிறேன்; அவர்கள் இப்போது என்னிடம் தீர்ப்பைப்பற்றிக் கேட்கிறார்கள். அஞ்சாது அவர்கள் கடவுளிடம் நெருங்கி வருகிறார்கள்; ஏசாயா 65: 2, ஏசாயா 58: 2. மற்றொரு தீர்க்கதரிசி வாயிலாக அவர் கூறுகிறார் அவர்கள் என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள், எனது உடைகளை பங்குபோட்டுக் கொள்ளும் முகமாக அவர்கள் சீட்டு குலுக்கிப் போட்டார்கள். அரசரும் தீர்க்கதரிசியுமான தாவீது உண்மையில் இவற்றைச் சொன்னார்; இயேசு கிறிஸ்துவைத் தவிர எவரும் அத்தனை துன்பங்களை  அனுபவிக்கவில்லை. அவர் தனது கைகளை அகல விரித்து, யூதர்களால் நிந்திக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டும் கூட, அவர் கிறிஸ்து என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தீர்க்கதரிசி பேசியபடியே, அவர்கள் அவரைத் துன்புறுத்தி, அவரை தீர்ப்புக்கதிரையில் அமரச்செய்து, அவர்களைத் தீர்ப்பிடும்படி சொன்னார்கள். அவர்கள் என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள் என்று கூறப்பட்டது. சிலுவையில் அவருடைய கைகளிலும் கால்களிலும் அறையப்பட்ட ஆணிகளைக் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டது. அவர் சிலுவையில் அறையப்பட்ட பிறகு அவர்கள் அவருடைய உடையைப் பங்கு போட்டுக்கொள்ள சீட்டுகளைக் குலுக்கிப்போட்டார்கள். பின்னர் அவரை சிலுவையில் அறைந்தவர்கள் அதை அவர்களிடையே பிரித்துக் கொண்டார்கள். இவை உண்மையிலேயே நடந்தேறின. போஞ்சியு பிலாத்துவின் செயல்களில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். மற்றொரு தீர்க்கதரிசியான செப்பனியாவின் தீர்க்கதரிசன வார்த்தைகளை நாம் மேற்கோள் காட்டுமிடத்து, அவர் ஒரு கழுதையின் குட்டியின் மீது உட்கார்ந்து எருசலேமுக்குள் வருவார் என்று வெளிப்படையாக முன்னறிவிக்கப்பட்டார். இவை தான் அந்த வார்த்தைகள்: சீயோனின் மகளே பெரிதும் மகிழ்ச்சி கொள்; எருசலேமின் மகளே, கூச்சலிடு, இதோ, உங்களது அரசர் உங்களிடம் வருகிறார். தாழ்மையான விதத்தில் ஒரு கழுதையின் குட்டி மீது அமர்ந்து அவர் வருகிறார்; சகரியா 9:9. 

36 ம் அத்தியாயம் – தீர்க்கதரிசனத்தின் பல்வேறு மாதிரிகள்

தனிப்பட்ட முறையில் தீர்க்கதரிசிகள் பேசியவற்றை நீங்கள் கேட்கும்போது, அவர்கள் ஏவப்பட்டவர்களால் பேசப்படுகிறார்கள் என்று நீங்கள் கருதக்கூடாது, மாறாக அவர்களை இயக்கும் தெய்வீக வார்த்தையினூடாகவே அவர்கள் பேசுகிறார்கள். சில சமயங்களில் எதிர்காலத்தை முன்னறிவிப்பவர், நடக்கவிருக்கும் விடயங்களை அறிவிக்கிறார். சில நேரங்களில் அவர் கடவுளினால் நியமிக்கப் பட்டவராகவும், அனைவரின் பிதாவானவரால் நியமிக்கப்பட்டவர் போலவும் பேசுகிறார். நீங்கள் அறிந்த எழுத்தாளர்களிடமிருந்தும் நீங்கள் காணக்கூடியது போலத்தான், ஒரு மனிதன் தான் முழு எழுத்தாளராக இருக்கின்ற அதேவேளை, அளவளாவும் மற்றையோரையும் அறிமுகப்படுத்துகிறான். தீர்க்கதரிசிகளின் புத்தகங்களை தம்மிடம் வைத்திருந்த யூதர்கள் அது பற்றி புரிந்து கொள்ளவில்லை. ஆகவே கிறிஸ்து வந்தபோது கூட அவரை அடையாளம் காணமுடியாதிருந்தனர். அதேநேரம், அவர் வந்துவிட்டார் என்று சொன்னபடியால் எங்களை வெறுக்கின்றனர். ஆனால், அவர்களின் எதிர்வுகூறலை நிரூபிக்கும் வகையில் அவர் சிலுவையில் அறையப்பட்டார். 

37 ம் அத்தியாயம் – பிதாவால்அருளப்பட்ட வார்த்தைகள்

இதுவும் உங்களுக்கு தெளிவாக இருக்கலாம் என்று எண்ணுகிறோம். ஏசாயா என்ற தீர்க்கதரிசி மூலம் பிதாவால் நியமிக்கப்பட்டவர் என்பவரால் பின்வருபவை கூறப்பட்டன: எருது தன் உரிமையாளரையும், கழுதை தன் எஜமானரின் தொழுவத்தையும் அறிந்திருக்கும். ஆனால் இஸ்ரேல் அறிந்து கொள்ளவில்லை. எம் மக்கள் அவற்றைப் புரிந்து கொள்ளவும் இல்லை. ஐயோ, பாவமுள்ள தேசமே! பாவங்கள் நிறைந்த மக்களே! துஷ்டர்களே! பாவங்கள் நிறைந்த பிள்ளைகளே! நீங்கள் கர்த்தரைக் கைவிட்டீர்கள். அதே தீர்க்கதரிசி பிதாவினால் நியமிக்கப்பட்டவராகப் பேசும்போது, நீங்கள் எனக்காக எவ்விதமான வீட்டைக் கட்டப்போகிறீர்கள்? கர்த்தர் சொல்லுகிறார்: வானம் என் சிம்மாசனம், பூமி எனது காலடி. ஏசாயா 66:1. மற்றொரு இடத்தில், உங்கள் அமாவாசைகள் மற்றும் உங்கள் ஓய்வு நாட்களை என் ஆன்மா வெறுக்கிறது. விரதத்தின் பெரிய நாளையும் மற்றும் உடல் உழைப்பையும் விட்டு என்னால் விலகி இருக்க முடியாது. நீங்கள் என்னைக் காண வராவிட்டாலும் நீங்கள் சொல்வது எனக்கு கேட்கும். உங்கள் கைகள் இரத்தத்தால் நனைந்தவை. நீங்கள் நன்கு மென்மையான பொடி மற்றும் தூபம் கொண்டு வந்தால், அது எனக்கு வெறுப்பையே ஏற்படுத்தும். ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பையும், காளை மாடுகளின் இரத்தத்தையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். யாருக்காக நீங்கள் இவற்றை உங்கள் கைகளில் தாங்க வேண்டும்? கேடுகளின் பிணைப்பில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளவும். வன்முறையை ஏற்படுத்தும் ஒப்பந்தங்களின் இறுக்கமான முடிச்சுகளை கிழித்துப் போடுங்கள். வீடற்றவர்களுக்கு நிவாரணமும், நிர்வாணமாய் இருப்பவர்களுக்கு உடையையும், பசியுடன் இருப்போர் மத்தியில் உங்கள் உணவையும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏசாயா 1:14, ஏசாயா 58: 6. கடவுளால் நியமிக்கப்பட்ட தீர்க்கதரிசிகள் ஊடாக எவ்வகையான விடயங்கள் கற்பிக்கப்படுகின்றன என்பது பற்றி இப்போது நீங்கள் உணரலாம். 

38 ம் அத்தியாயம் – சுதனால்அருளப்பட்ட வார்த்தைகள்

கீழ்ப்படிதல் அற்ற மற்றும் மறுத்துரைக்கும் மக்களுக்கும், தீய வழியில் நடப்பவர்களுக்கும் நான் என் கைகளை அகல விரித்திருக்கிறேன். ஏசாயா 65: 2. மீண்டும் நான் சாட்டைகளுக்கு என் முதுகையும், என் கன்னங்களை அறையப்படுவதற்காகவும் கொடுத்தேன். துப்புதலின் போது ஏற்படும் அவமானத்திலிருந்து நான் என் முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. கர்த்தர் எனக்கு உதவியாக இருந்தார்; ஆகையால் நான் குழப்பமடையவில்லை; ஆனால் நான் என் முகத்தை உறுதியான பாறையாக ஆக்கிக்கொண்டேன். நான் வெட்கப்படக் கூடாது என்று நான் தெரிந்துகொண்டேன். ஏனென்றால் அவர் என்னருகில் இருந்து என்னை நியாயப்படுத்துகிறார். ஏசாயா 50: 6. அவர்கள் என் உடையைப் பகிர்ந்து கொள்ள சீட்டுப் போட்டு, என் கைகளையும் கால்களையும் துளைத்தனர் என்று அவர் கூறுகிறார். கர்த்தர் என்னைத் தூக்கத்தில் கிடத்தியபடியால் நான் தூங்கி மீண்டும் எழுந்தேன். மறுபடியும் அவர் கூறுகிறார், அவர்கள் உதடுகளால் பேசினார்கள், அவர்கள் தலையை அசைத்து, “அவன் தன்னை விடுவித்துக் கொள்ளட்டும் என்றார்கள். இவை அனைத்தும் யூதர்களின் கைகளால் தான் கிறிஸ்துவுக்கு நிகழ்ந்தன என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அவர் சிலுவையில் அறையப்பட்டபோது, அவர்கள் உதடுகளால் முணுமுணுத்து, தலைகளை அசைத்து, “இறந்தவர்களை உயிர்த்தெழுப்பியவர் என்றால், தன்னையும் காப்பாற்றிக்கொள்ளட்டும்”, என்றனர். 

39 ம் அத்தியாயம் – பரிசுத்த ஆவியின் நேரடிக் கணிப்புகள்

தீர்க்கதரிசனத்தின் ஆவியானவர் நடக்கவிருக்கும் விடயங்களை முன்னறிவிப்பது பற்றி பேசும்போது, அவர் இவ்வாறு சொல்கிறார்: சீயோனிலிருந்து நியாயப்பிரமாணமும், எருசலேமிலிருந்து கர்த்தருடைய வார்த்தைகளும் வெளிப்பட்டன. அவர் தேசங்களிடையே தீர்ப்பாளராய் இருப்பார். பலரைக் கண்டிப்பார்; அங்குள்ள மக்கள் தங்கள் வாள்களை கலப்பைகளாகவும், ஈட்டிகளை கத்தரிக்கும் கோல்களாகவும் பாவிப்பார்கள். தேசங்கள் மற்றைய தேசங்களுக்கு எதிராக தம் வாள்களை உயர்த்தமாட்டாது, இனிமேல் அவர்கள் போர் செய்யக் கற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏசாயா 2: 3. அது நிறைவேறியது என்று நாம் உங்களுக்கு புரிய வைக்க முடியும். எருசலேமிலிருந்து சில பேர், பன்னிரண்டு பேர், கல்வியறிவு மற்றும் பேசும் திறன் அற்ற இவர்கள், வெளி உலகிற்கு சென்றார்கள். ஆனால் கடவுளின் வல்லமையால் அவர்கள் எல்லா மனிதர்களுக்கும் கிறிஸ்துவால் அனுப்பப்பட்டு அனைத்து வார்த்தைகளையும் கற்பிக்கும்படி அறிவித்தார்கள். முன்னர் ஒருவரை ஒருவர் கொலை செய்து பழகிய நாம், இப்போது நம் எதிரிகளுக்கு எதிராகப் போரிடுவதைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், நம்முடைய பரீட்சார்த்திகளிடம் பொய் சொல்லவோ, ஏமாற்றவோ எத்தனிக்காமல் வாழக் கற்றுக்கொண்டோம். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்காகவே மனமுவந்து உயிர் துறக்கவும் தயாராக  இருக்கிறோம். ஒரு கூற்றின் படி, நாக்கு சத்தியம் செய்கிறது, ஆனால் மனம் மறுக்கிறது. எமது விடயத்திலும் இவ்வாறானவை பின்பற்றப்படலாம். உங்களால் தேர்தெடுக்கப்பட்ட படையினரும், இராணுவ நீதியை ஏற்றுக்கொள்ள சத்தியப்பிரமாணம் செய்தவர்களும், தங்கள் சொந்த வாழ்க்கை, பெற்றோர், நாடு, மற்றும் அனைத்து உறவினர்களுக்கும் தங்கள் விசுவாசத்தை தெரிவிக்க விரும்பினால், நீங்கள் அவர்களுக்கு எந்தவிதமான சீர்குலைவையும் ஏற்படுத்த முடியாது என்பது முற்றிலும் அபத்தமானது. சீர்குலைவுஏற்படக்கூடும் என்பதற்காக எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள வேண்டுமென்பதில்லை. அதை எமக்கு தரக் கூடியவரிடமிருந்து நாம் விரும்புவதைப் பெற அவர் சித்தம் கொள்ளும் வரையில் நாம் சகித்துக்கொள்ளலாம். 

40 ம் அத்தியாயம் – கிறிஸ்துவின் வருகை முன்னறிவிக்கப்பட்டது

அவருடைய கோட்பாட்டை வெளியிட்டு, அவருடைய தோற்றத்தை அறிவித்தவர்களைப் பற்றி முன்னறிவிக்கப்பட்டது, மேலே குறிப்பிடப்பட்ட தீர்க்கதரிசி மற்றும் அரசன் தீர்க்கதரிசனத்தின் ஆவியால் இவ்வாறு பேசுவது நாளுக்கு நாள், இரவுக்கு இரவு உரைக்கப்படுகிறது. இது அறிவுடைமையாகப் பார்க்கப்படுகிறது. அவர்களின் குரல் கேட்காத இடத்தில் பேச்சோ மொழிகளோ இருக்கவில்லை. அவர்களுடைய குரல் பூமி முழுவதற்கும், அவர்களின் வார்த்தைகள் உலகின் அனைத்து முனைகளுக்கும் சென்றன. அவர் சூரியனை தனது கூடாரத்தில் அமைத்துள்ளார். ஒரு மணமகன் தனது அறைக்கு வெளியே செல்லும் போது எப்படி மகிழ்ச்சியாக இருப்பானோ, அது போன்று தனது போக்கைக் குறித்து அவர் மாபெரும் மகிழ்ச்சியில் இருப்பார். இவை தவிர தாவீதின் வேறு சில தீர்க்கதரிசன வார்த்தைகளை குறிப்பிடுவது சரியானது மற்றும் பொருத்தமானது என்று நாங்கள் நினைத்தோம். இதிலிருந்து தீர்க்கதரிசனத்தின் வல்லமை மனிதர்களை எவ்வாறு வாழ அறிவுறுத்துகிறது என்பதையும், யூதர்களின் அரசனான ஏரோது மற்றும் யூதர்களால் கிறிஸ்துவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட சதியை அவர் எவ்வாறு முன்னறிவித்தார் என்பதையும், அவர்களில் உங்கள் ஆளுனராக இருந்த பிலாத்துவையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அவரது வீரர்கள், ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்த மனிதர்களால் அவர் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதையும், தேவன் அவரை எக்காரணத்துக்காக தம்முடைய குமாரன் என்று அழைக்கிறார் என்றும், தம்முடைய எதிரிகளையெல்லாம் அவருக்குக் கீழ்ப்படியும்படி சொல்வார் என்றும் அறிவித்தார். சாத்தான்கள் தங்களால் இயன்றவரை, பிதாவாகவும், அனைவருக்கும் ஆண்டவராகவும் இருக்கும் கடவுளின் சக்தியிலிருந்தும், கிறிஸ்துவின் வல்லமையில் இருந்தும் தப்பிக்க எவ்வாறு முயற்சி செய்கின்றன என்பது பற்றியும், நடுத்தீர்வு நாள் வருவதற்கு முன்பு கடவுள் அனைவரையும் மனந்திரும்பும் படி அழைக்கிறார் என்பது பற்றியும் அறிந்து கொள்ளுங்கள். இந்த விடயங்கள் பற்றியும் இவ்வாறு கூறப்பட்டன: தேவபக்தியற்றவர்களின் ஆலோசனையின் படி நடக்காத, பாவிகளின் வழியில் செல்லாத, இகழ்ச்சியாளர்களின் இருக்கையில் அமராது இருக்கும் அனைவரும் பாக்கியவான்கள். ஆனால் அவர்களுடைய மகிழ்ச்சி கர்த்தருடைய தீர்ப்பில் இருக்கிறது. அவருடைய தீர்ப்பையிட்டு அவர்கள் இரவும் பகலும் தியானிப்பர். அவர் நீர் நிலைகளுக்கு அருகில் நடப்பட்ட ஒரு மரத்தைப் போல இருப்பார். அது அதனுடைய பருவத்தில் கனிகளைக் கொடுக்கும். அதன் இலைகள் வாடிப்போவதில்லை, அது செய்யும் அனைத்தும் செழிப்புறும். ஆனால் தேவபக்தியற்றவர்கள் அவ்வாறல்ல. அவர்கள் காற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்படும் வைக்கோலுக்கு ஒப்பானவர்கள். ஆகையால், தேவபக்தியற்றவர்கள் தீர்ப்புக்கு முன்பாகவும், பாவிகள் நீதிமான்களின் சபையின் முன்பாகவும் நிற்க மாட்டார்கள். கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிவார். ஆகவே  தேவபக்தியற்றவர்களின் மார்க்கம் அழிந்துபோகும். பிறவினத்தவர் ஏன் கோபப்படுகிறார்கள், மக்கள் ஏன் புதிய விடயங்களையிட்டு கற்பனை செய்கிறார்கள்? பூமியின் அரசர்கள் தங்களைத் தாங்களே உருவகித்துக் கொண்டனர், ஆட்சியாளர்கள் கர்த்தருக்கும் அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கும் விரோதமாக ஒன்றிணைந்து ஆலோசனை கூறுகிறார்கள், “நாங்கள் அவர்களின் கட்டுகளைத் துண்டித்து, அவர்களின் நுகத்தை எங்களிடமிருந்து தூக்கி எறிவோம். வானகத்தில் உள்ளவர் அவர்களைப் பார்த்து சிரிப்பார், கர்த்தர் அவர்களை ஏளனம் செய்வார். பின்னர் அவர் கோபத்துடன் அவர்களிடம் பேசுவார். அவர் தனது அதிருப்தியின் காரணமாக அவர்களைத் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவார். கர்த்தருடைய ஆணையை அறிவித்து, அவருடைய புனித குன்றின் மேல் நான் சீயோனின் அரசனாக்கப்பட்டேன். கர்த்தர் என்னை நோக்கி, “நீ என் மகன்; இந்த நாளில் நான் உன்னை உருவாக்கினேன். என்னிடம் கேள், நான் தருவேன். உன்னுடைய சுதந்தரத்திற்காக பிறவினத்தவரையும், பூமியின் முக்கிய பகுதிகள் யாவையையும் உம்முடைய உடைமையாக்குவேன்.” இரும்புக் கம்பிகள் கொண்டு அந்த மந்தைகளை மேய்க்க வேண்டும்; அதாவது குயவனின் பாத்திரங்கள் சுக்குநூறாக உடைவது போன்று அவை இருக்க வேண்டும். ஆகையால், ஆட்சியாளர்களே எப்போதும் ஞானமுள்ளவர்களாக இருங்கள். பூமியின் நீதவான்களே, நீங்கள் அனைவருமே தெளிவுடையவர்களாக இருங்கள். கர்த்தரை பயத்தோடு வழிபடுங்கள். நடுக்கத்தின் மூலம் மகிழ்ச்சியடையுங்கள். எந்த நேரத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் கர்த்தரைக் கோபத்துக்கு ஆளாக்காதீர்கள். அவருடைய அறிவுறுத்தளுக்கு செவிமடுங்கள். அவருடைய கோபம் சடுதியாகத் தூண்டப்படும் போது நீங்கள் எளிதில் அழிந்துபோவீர்கள்.அவர் மீது நம்பிக்கை வைப்பவர்கள் அனைவரும் பாக்கியவான்கள்.

41 ம் அத்தியாயம் – சிலுவையில் அறையப்பட்டதும் அனுமானிக்கப்பட்டது

மீண்டும், மற்றுமொரு தீர்க்கதரிசனத்தில், தீர்க்கதரிசனத்தின் ஆவியானவர், அதே தாவீது மூலம், கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின்பும், ஆட்சி செய்ய வேண்டும். அதைப்பற்றி அவர் பின்வருமாறு அறிவித்தார்:கர்த்தரை நோக்கித் துதியுங்கள், பூமியெங்கும், நாளுக்கு நாள் அவருடைய இரட்சணியத்தை அறிக்கையிடுங்கள்.ஏனென்றால், இறைவன் பெரியவர், எல்லா கடவுள்களுக்கும் மேலாக அவருக்கு அஞ்சி நடக்கவும் பெரிதும் புகழப்படவும் வேண்டியவர்.தேசங்கள் தெய்வங்கள் என்று சொல்லிக் கொள்பவை  எல்லாம்  சாத்தான்களின் சிலைகள். தேவன் ஒருவரே வானகத்தை உண்டாக்கினார். புகழும் மாட்சியும் அவருடைய முகத்திற்கு முன்பும், வலிமையும் மகிமையும் அவருடைய பரிசுத்தத்தின் உறைவிடத்திலும் உள்ளன. நித்திய பிதாவாகிய கர்த்தருக்கு மகிமை செலுத்துங்கள்.கிருபையைப் பெற்று, அவருடைய பிரசன்னத்தின் முன் அமர்ந்து, அவருடைய பரிசுத்த வளவுக்குள் சென்று அவரைத் துதியுங்கள். பூமியெல்லாம் அவருடைய முகத்திற்கு முன்பாக அஞ்சி நடக்கட்டும். அது ஸ்தாபிக்கப்படக்கடவதாக. என்றும் அசைக்கப்படாதவாறு இருக்கட்டும். தேசங்களில் உள்ளவர்கள் மகிழட்டும். கர்த்தர் சிலுவை மரத்தைக்கொண்டு ஆட்சி செய்துள்ளார்.

42 ம் அத்தியாயம் – கடந்த காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனம்

தீர்க்கதரிசனத்தின் ஆவியானவர், நடக்கவிருக்கும் விடயங்களைப் பற்றி பேசும்போது, அவை ஏற்கனவே நடந்ததைப் போல- ஏற்கனவே என்னால் அவைபற்றி மேற்கோள் காட்டிய பத்திகளில் காணப்படுவதன் காரணமாக – இந்த சந்தர்ப்பத்தில் வாசகர்களுக்கு எந்தவிதமான குழப்பத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது (தவறாகப் புரிந்துகொள்ளுதல்) என்பதற்காக இதை நாங்கள் மேலும் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளோம். அவர் முற்றிலும் அறிந்த விடயங்கள் நடந்தேறும், அவை ஏற்கனவே நடந்ததைப் போல அவர் எதிர்வுகூறியுள்ளார். அவ்வார்த்தைகள் இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்,  அவற்றில்  நீங்கள் கவனித்தால் இதை உணருவீர்கள். மேலே சொல்லப்பட்ட வார்த்தைகள், கிறிஸ்து ஒரு மனிதனாக அவதரித்து சிலுவையில் அறையப்படுவதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே தாவீது அறிவித்திருந்தார். அவருக்கு முன்பாக வாழ்ந்தவர்களில் எவரும் அல்லது  அவருடைய சமகாலத்தில் வாழ்ந்தவர்களோ, சிலுவையில் அறையப்பட்டதன் மூலம் பிற இனத்தவருக்கு எவ்வித மகிழ்ச்சியையும் தரவில்லை. ஆனால் எமது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டு, மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்து,  பரலோகத்திற்கு எழுந்தருளி எம்மை ஆட்சி செய்தார்; இவை அனைத்தும் அப்போஸ்தலர்களால் எல்லா நாடுகளிலும் அவருடைய நாமத்தினால் அறிக்கையிடப்பட்டிருந்தது. அவர் வாக்குறுதியளித்த அழியாமையை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியையே உண்டுபண்ணியது.

43 ம் அத்தியாயம் – பொறுப்பு வலியுறுத்தப்பட்டது

எங்களால் சொல்லப்பட்டதிலிருந்து, என்ன நடந்தாலும், அது ஒரு அபாயகரமான தேவையினால் நிகழ்கிறது என்று சிலர் நினைக்கக்கூடும். ஏனென்றால் இது முன்பே நடந்ததாக முன்னறிவிக்கப் பட்டுள்ளது, இது பற்றியும் நாங்கள் விளக்குகிறோம்.  ஒவ்வொரு மனிதனின் செயல்களுக்கு ஏற்ப தண்டனைகளும், திருந்தி வாழவதற்கு கிடைக்கும் சாந்தப்பங்களும், அதேவாறு நல்ல வெகுமதிகளும் வழங்கப்படுகின்றன என்பதை நாங்கள் தீர்க்கதரிசிகளிடமிருந்து கற்றுக்கொண்டோம், அது உண்மை என்றே  நாங்கள் கருதுகிறோம். அது அவ்வாறு இல்லையென்றால், எல்லாமே விதியால் நிகழ்கின்றனவேயன்றி, நம்முடைய சொந்த சக்தியில் எதுவும் இல்லை.ஏனென்றால், உதாரணத்திற்கு ஒரு மனிதன், நல்லவனாகவும், மற்றவன் தீயவனாக இருக்கும் பட்சத்தில், முதலாமவன் மெச்சத்தகுந்தவன் என்றோ அல்லது பிந்தியவன் குற்றம் செய்தவன் என்றோ அர்த்தம் கொள்ள முடியாது. மீண்டும், மனித இனம் தீமையைத் தவிர்த்து, இலகுவாக நல்லதைத் தேர்ந்தெடுக்கும் சக்தி அதற்கு இல்லையென்றால்,  அவர்கள் எப்படிப் பட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் செய்த செயல்களுக்கு பொறுப்புக் கூற மாட்டார்கள். ஆனால் எளிமையான அவர்களின் விருப்பப்படி அவர்கள் நேர்மையாக நடந்துகொண்டே தடுமாறுகிறார்கள். எப்படி என்பதை நாங்கள் இவ்வாறு நிரூபிக்கிறோம். அதே மனிதன் எதிர்மறையான விடயங்களுக்கு மாறுவதை நாம் காண்கிறோம். இப்போது, அம்மனிதன் நல்லவனாகவோ அல்லது கெட்டவனாகவோ  இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், அவன் ஒருபோதும் எதிர்மறைத் தன்மைகளுக்கோ அல்லது மாற்றங்களுக்கோ தகுதியுடையவனாக இருக்க முடியாது. ஆனால் சிலர் நல்லவர்களாகவும் மற்றவர்கள் கெட்டவர்களாகவும் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் நாம் விதியை தீமைக்கான காரணமாகப் பார்க்கிறோம். மேலும் விதி என்பது எமக்கு எதிராக செயல்படுவதாக உணர்கிறோம். அல்லது ஏற்கனவே கூறப்பட்டவை உண்மை போன்று தோன்றக்கூடும். எதையும் நல்லொழுக்கம் உள்ளது என்று ஏற்றுக்கொள்ளவோ அல்லது தீயது என்று வெறுத்து ஒதுக்கவோ முடியாது. ஆனால் விடயங்கள் அவற்றின் அபிப்பிராயங்களோடு மட்டுமே நல்லது அல்லது கெட்டது  என்று கணக்கிடப்படுகின்றன. இதன் உண்மைத் தன்மை என்னவெனில், அது மிகப் பெரிய இழிவு மற்றும் கொடுமை. ஆனால் இதை எம்மால் தவிர்க்க முடியாத விதி என்று கூறுகிறோம், நல்லதைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு தகுதியான வெகுமதிகள் கிடைக்கும் அதேவேளை, எதிர்மாறாகத் தேர்ந்தெடுப்பவர்களுக்கும் அதற்கேற்றவாறே தகுதியான சம்பாவனைகள் கிடைக்கும்.  மற்றையவை, அதாவது, மரங்கள் மற்றும் நான்கு கால்களையுடைய சீவராசிகள் போலன்றி, கடவுள் மனிதனை வேறுவிதமாக உண்டாக்கினார். ஏனென்றால் அவன் வெகுமதியையும் புகழையும் பெற தகுதியற்றவன் என்பதற்காக அல்ல. அவன் தானாக நல்லதைத் தெரிவு செய்யவில்லை. ஆனாலும் அவன் முடிவில் படைக்கப்பட்டான். அவன் தீயவனாக இருந்தால்,   தண்டனைக்கு தகுதியானவனாக இருப்பான். ஆகவே அவன் படைக்கப்பட்டான் என்பதைத் தவிர வேறொன்றும் இங்கே சொல்வதற்கில்லை.

44 ம் அத்தியாயம் – தீர்க்கதரிசனம் அதன் பலனை இழக்கவில்லை

தீர்க்கதரிசனத்தின் பரிசுத்த ஆவியானவர் இதை நமக்குக் கற்பித்தார்; முதலில் படைத்த மனிதனிடம் கடவுள் இவ்வாறு பேசினார் என்று மோசேயால் நமக்குச் சொல்லப்பட்டுள்ளது: இதோ, நன்மையும் தீமையும் உங்கள் முகத்துக்கு முன்னே உள்ளன. எனினும் நீங்கள் நல்லதையே தேர்ந்தெடுங்கள். மற்றைய  ஒரு தீர்க்கதரிசி ஏசாயா, பின்வரும் வார்த்தைகள் ஊடாக பிதாவாகவும், அனைவருக்கும் ஆண்டவராகவும் இருக்கும் கடவுளிடமிருந்து வந்ததாகக் கூறினார். உங்களைக் கழுவி,  தூய்மைப் படுத்துங்கள்; உங்கள் ஆன்மாக்களிலிருந்து தீமைகளை வெளியேற்றுங்கள். நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். ஆதரவற்றோருக்கு சார்பாக தீர்ப்பிடுங்கள். விதவைகளுக்காக  மன்றாடுங்கள். வாருங்கள், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயலாற்றுவோம் என்று கர்த்தர் சொல்கிறார். உங்கள் பாவங்கள் கடும் சிவப்பு நிறத்தில் இருக்குமானால், நான் அவற்றை வெண்கம்பளி போல வெண்மையாக்குவேன். அவை சிவப்பு நிறமாக இருக்கும் பட்சத்தில், நான் அவற்றை பனி போல வெண்மையாக்குவேன். நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்தால், நீங்கள் தேசத்தின் நன்மையைப்  புசிப்பீர்கள். ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லையென்றால், வாள் உங்களை துவம்சம் செய்துவிடும். கர்த்தருடைய திருவாயால் அவை அருளப்பட்டன; ஏசாயா 1:16. வாள் உங்களை துவம்சம் செய்துவிடும் என்பதன் பொருள் கீழ்ப்படியாதவர் வாளால் வெட்டப்பட்டுக் கொல்லப்படுவார் என்பது அல்ல. அது கூறுவது என்னவென்றால், கடவுளின் வாள் என்பது நெருப்பு. கொடிய பாவங்களை செய்தவர்கள் அந்த நெருப்பின் மேல் ஊற்றப்படும் எண்ணெயாய் மாறுகிறார்கள்.ஆகையால் தான், “வாள் உன்னை துவம்சம் செய்து விடும்” என்று  கர்த்தருடைய திருவாய் அதைப் பற்றி அருளியது.  சடுதியாக வெட்டி எறிய உபயோகிக்கப்படும் வாளைப் பற்றி அவர் கூறியிருந்தால், ‘வெட்டக்கூடும்’ என்று அவர் கூறியிருக்க மாட்டார். மேலும் பிளேட்டோ கூறுகையில், ஒரு விடயத்தைத் தேர்ந்தெடுப்பவரே அதற்கான பழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடவுள் குற்றமற்றவர். இது மோசே என்ற தீர்க்கதரிசியிடமிருந்து பெற்று கூறப்பட்டது.  எல்லா கிரேக்க எழுத்தாளர்களையும் விட மோசே மிகவும் பழமையானவர். எது எவ்வாறாக இருந்தாலும், தத்துவஞானிகள் மற்றும் கவிஞர்கள் ஆன்மாவின் அழியாத தன்மை, அல்லது மரணத்திற்குப் பின் கிடைப்பதாகக் கூறப்படும் தண்டனைகள், அல்லது பரலோககத்தைப் பற்றிய சிந்தனைகள் அல்லது இது போன்ற கோட்பாடுகள் குறித்து கூறியுள்ளனர். இவைகள் யாவும் அவர்கள் தீர்க்கதரிசிகளிடமிருந்து பெற்ற பரிந்துரைகள் ஆகும். எனவே, எல்லா மனிதர்களிடமும் சத்தியத்தின் வித்துக்கள் இருப்பதாகத் தெரிகிறது; ஆனால் அவர்கள் முரண்பாடுகளை வலியுறுத்தும்போது (உண்மையை)அவைபற்றித் துல்லியமாக புரிந்து கொள்வதில்லை என்று குறைக்கு ஆளாகின்றனர். எனவே எதிர்கால நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டதைப் பற்றி சொன்னால், அவை ஒரு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய  தேவையால் வந்தவை என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் எல்லா மனிதர்களாலும் செய்யப்பட வேண்டிய அனைத்தையும் கடவுள் முன்னறிவித்துள்ளார். மேலும் மனிதர்களின் எதிர்கால செயல்கள் அனைத்தும் அவற்றின் பன்மடங்கான மதிப்புக்கு ஏற்ப ஈடுசெய்யப்பட வேண்டும் என்பது அவருடைய ஆணை என்பதால், அவர் தகுதிக்கு ஏற்ப வெகுமதிகளை வழங்குவார் என்று தீர்க்கதரிசனத்தின் ஆவியின் மூலம் எதிர்வு கூறியிருந்தார். மனிதனின் மேல் அக்கறை காட்டுவதன் மூலம் மனித இனத்தின் மேல் எப்போதும் அவர் கரிசனை கொண்டுள்ளார் என்பதையே அவர் எமக்குக் காட்டுகிறார். ஆனால், சாத்தான்களுடைய அமைப்பில் ஹிஸ்டாஸ்பெஸ், சிபில் அல்லது தீர்க்கதரிசிகளின் புத்தகங்களைப் படிப்பவர்களுக்கு எதிராக மரணத் தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளது.  பயத்தின் மூலம் அவற்றைப் படிக்கும் மனிதர்கள்  நல்ல அறிவைப் பெற்றுக்கொள்வதில் இருந்து தடுக்கப்படுகிறார்கள். சாத்தான்கள் அவர்களை தமது அடிமைத்தனத்தில் தக்க வைத்துக் கொள்ளும். இருப்பினும், அவை எப்போதும் அவ்வாறு செயல்பட முடியாது. நாங்கள் பயமின்றி அவற்றைப் படிக்கிறோம் என்பது மட்டுமல்ல. அவற்றை நீங்கள் வாசிக்கும் முன், நன்றாக ஆய்வு செய்யுங்கள். ஏனெனில் அவற்றின் உள்ளடக்கங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியூட்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலரை நாம் சம்மதிக்க வைத்தாலும் கூட, நம்முடைய பங்கு அதில்  மிகப் பெரியதாக இருக்கும். ஏனென்றால், நல்ல கணவர்மாராகிய  நாம் எமது எஜமானிடமிருந்து அதற்கான வெகுமதியைப் பெறுவோம்.

45 ம் அத்தியாயம் – பரலோகத்தில் கிறிஸ்துவின் சபைபற்றி முன்னறிவிக்கப்பட்டது

அனைவருக்கும் தந்தையான எம் தேவன், கிறிஸ்துவை மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழச் செய்து, அவரை பரலோகத்திற்கு அழைத்துக்கொண்டார். மேலும் அவர் தனது எதிரிகளையும் சாத்தான்களையும் அடிபணிய வைக்கும் வரை, அவரால்  நல்லவர்களாகவும் நல்லொழுக்கமுள்ளவர்களாகவும் முன்னறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழுமையடையும் வரை, அவரை அங்கேயே வைத்திருப்பார். அப்படிப்பட்டவர்களுக்காகவே அவரது அனுப்புதலை அவர் இன்னும் தாமதப்படுத்துகிறார் – தாவீது என்னும் தீர்க்கதரிசி கூறியிருப்பதைக் கேளுங்கள். இவை தான் அவர் அருளிய வார்த்தைகள்: கர்த்தர் என் இறைவனை நோக்கி: நான் உன் எதிரிகளை உனது காலடிக்குக் கொண்டு வரும் வரை, என் வலது புறத்தில் அமர்ந்திருப்பாயாக. கர்த்தர் எருசலேமிலிருந்து அதிகாரத்தின் செங்கோலை உனக்கு அனுப்புவார். உனது எதிரிகளின் மத்தியில் நீ அரசாள்வாயாக. நீ வல்லமையுடன் வீற்றிருக்கும் நாளில் அழகிய உன்னுடைய புனிதர்களின் பிரசன்னத்தில் உனது ஆட்சி அமையக்கடவது. அழகிய காலைபொழுதின்  உத்திரத்தில் இருந்து நான் உன்னை அவதரிக்கச் செய்தேன். எருசலேமிலிருந்து அதிகாரத்தின் கோலை அவர் உங்களிடம் அனுப்புவார் என்று அவர் கூறுவது, அவருடைய அப்போஸ்தலர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, எல்லா இடங்களுக்கும் சென்று பிரசங்கித்த வலிமையான வார்த்தைகளை முன்னறிவிப்பதாகும். கிறிஸ்துவின் பெயரை  உச்சரிப்பவர்களுக்கு அல்லது அவரை ஏற்றுக்கொள்வோருக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், எல்லா இடங்களுக்கும் சென்று நாம் அதைக் கற்பித்தது மட்டுமன்றி அதை பரவவும் செய்தோம். நீங்களும் இந்த வார்த்தைகளை உண்மையான மனதோடு படித்தால், நான் முன்பு சொன்னது போல், எங்களைக் கொல்வதைத் தவிர, உங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. உண்மையில் இதனால் எங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படப் போவதில்லை. ஆனால் உங்களுக்கும், எங்களை அபாண்டமாக வெறுப்பவர்களுக்கும் மற்றும் மனந்திரும்பாத அனைவருக்கும் நெருப்பினால் நித்திய தண்டனை கிடைக்கும் என்பது திண்ணம்.

46 ம் அத்தியாயம் – கிறிஸ்துவானவரின் வார்த்தைக்கு முன் உலகில் இருந்த வார்த்தை

சிலர் எவ்வித காரணமுமின்றி நாம் கற்பித்தவற்றை வக்கிர சிந்தையுடன், கிறிஸ்து நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சிரேனியஸின் ஆட்சியின் கீழ் பிறந்தார் என்றும், பின்னர், போஞ்சியு பிலாத்துவின் காலத்தில் அவர் போதித்தார் என்று நாம் சொன்னோம் என்றும், அவருக்கு முன் பிறந்த எல்லா மனிதர்களும் பொறுப்பற்றவர்கள் என்றும்  நாம் அதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்றும் கூறித்திரிந்தார்கள். ஆதலினால், வரக்கூடிய சிரமத்தை எதிர்நோக்கி அதைத் தீர்ப்போமாக. கிறிஸ்துவானவர் கடவுளின் முதல் பிறப்பு என்று நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. நாம் மேலே அறிவித்தது போல், வார்த்தையானவரோடு அனைத்து மனித இனத்தைச் சேர்ந்தவர்களும் பங்குதாரராக இருந்ததோடு, நாத்திகர்களாக இருந்தவர்கள் என்று கருதப்பட்டாலும், வார்த்தையானவர் அவர் ஒருவரே என்று நியாயமான முறையில் வாழ்ந்தவர்கள் கிறிஸ்தவர்கள். கிரேக்கர்கள் மத்தியில் வாழ்ந்த சோக்ரடீஸ், ஹெராக்ளிடஸ் போன்றோரும் அவர்களைப் போன்ற ஏனையவர்களும், அவர்களிடையே வாழ்ந்த காட்டுமிராண்டித்தனமானவர்களும்,  ஆபிரகாம்,  அனனியா, அஸாரியாஸ், மிசேல், எலியாஸ் மற்றும் பலரின் செயல்களும் அவர்களது பெயர்களும் தற்போது விவரிக்க முடியாதிருக்கிறது. ஏனென்றால் அது கடினமானதும்  சோர்வை ஏற்படுத்தக்கூடியவை என்றும் நாங்கள் அறிவோம். ஆகவே, கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்து, காரணமின்றி வாழ்ந்தவர்களும் கூட  பொல்லாதவர்களாகவும், கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் காணப்பட்டனர். நியாயமான முறையில் வாழ்ந்தவர்களை அவர்கள் கொல்லவும் தயங்கவில்லை. ஆனால், வார்த்தையானவரின் சக்தியின் மூலம், பிதாவாகவும், அனைவருக்கும் ஆண்டவராகவும் இருக்கும் தேவனுடைய சித்தத்தின்படி, அவர் ஒரு கன்னிப் பெண்ணால் பிரசவிக்கப்பட்டு, இயேசு என்று பெயரிடப்பட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு எழுந்தருளினார். இதை ஒரு புத்திசாலித்தனமான மனிதன் ஏற்கனவே அதிகமாக சிலாகிக்கப்பட்டவற்றில் இருந்து புரிந்துகொள்ள முடியும். இந்த விடயத்தைப் பற்றிய ஆதாரம் இப்போது அவ்வளவாகத் தேவைப்படுவதில்லை என்பதால், அவசரமாகத் தேவைப்படும் விடயங்களைப்பற்றிய ஆதாரங்களை நிகழ்காலத் தேவைக்காக நாம் சமர்ப்பிப்போம்.

47 ம் அத்தியாயம் – யூதேயா பாழடைந்தது பற்றி முன்னறிவிக்கப்பட்டது

யூதர்களின் தேசம் வீணடிக்கப்பட வேண்டும் என்ற தீர்க்கதரிசனத்தின்  ஆவியால் கூறப்பட்டதைக் கேளுங்கள். மக்கள் மத்தியில் என்ன நடந்தது என்று ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்த ஒரு மனிதனிடமிருந்து இந்த வார்த்தைகள் வெளிப்பட்டன. அவை தான் இவை: சீயோன் ஒரு வனப்பகுதி, எருசலேமும்  ஒரு பாழான பிரதேசமாகும். எங்கள் சரணாலயமான வீடு சாபத்துக்குள்ளாகியது. எமது பிதாக்கள் ஆசீர்வதித்த மகிமை நெருப்பால் எரிக்கப்பட்டு, அதன் மகிமைமிக்க விடயங்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. நீங்கள் இவற்றிலிருந்து விலகி, அமைதிகாத்து, எங்களை மிகவும் புண்படுத்திவிட்டீர்கள்; ஏசாயா 64: 10-12.  முன்னறிவிக்கப்பட்டபடி, எருசலேம் வீணடிக்கப்பட்டு விட்டது என்று நீங்கள் நம்புகிறீர்கள். அதன் பாழடைந்த தன்மை பற்றியும், அதில் குடியிருக்க எவரையும்   அனுமதிக்கக் கூடாது என்பது பற்றியும், ஏசாயாவின் பின்வரும் தீர்க்கதரிசனம் கூறி இருந்தது: அவர்களுடைய தேசம் பாழாகிவிட்டது, அவர்களுடைய எதிரிகள் அதை அவர்கள் முன் விழுங்குகிறார்கள். அவர்களில் யாரும் அதில் குடியிருக்க மாட்டார்கள்; ஏசாயா 1:7.  ஆகவே தான் அதில் யாரும் வசிக்காதபடிக்கு அது உங்களால் பாதுகாக்கப்படுவதாகவும், அதில் நுழையும் யூதருக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

48 ம் அத்தியாயம் – கிறிஸ்துவின் கிரியையும் மரணமும் முன்னறிவிக்கப்பட்டன

நம்முடைய கிறிஸ்துவானவர் சகலவித நோய்களையும் குணமாக்கியருள்வார் என்றும், மரித்தோரை உயிர்த்தெழச்செய்வார் என்றும்  எதிர்வு கூறப்பட்டது. இவை தான் அந்த வார்த்தைகள்: அவர் வரும்போது முடவர் மான் போலப் பாய்வர், திக்கிப் பேசும் நாக்கு தெளிவாக பேசும், குருடர்கள் பார்வை பெறுவார்கள்,  தொழுநோயாளிகள் குணமடைவார்கள், மரித்தவர்கள் உயிர் பெற்று எழுந்து நடப்பார்கள். ஏசாயா 35: 6. அவர் அந்த காரியங்களைச் செய்தார் என்பதை, போஞ்சியு பிலாத்துவின் செயல்களிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளலாம். அவரும் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டவர்களும் கொல்லப்பட வேண்டும் என்று தீர்க்கதரிசனத்தின் சக்தியால் எவ்வாறு கணிக்கப்பட்டது என்பது பற்றி ஏசாயா சொல்வதைக் கேளுங்கள்:  இவை தான் அந்த வார்த்தைகள்: இதோ, நீதியுள்ளவர்கள் அழிந்து போகிறார்கள், அதை யாரும் மனதில் கொள்ளவில்லை. நீதிமான்கள் கைது செய்யப்படுகிறார்கள், எந்த மனிதனும் அதைப்பற்றி  கருத்திற் கொள்வதில்லை. பொல்லாதவன் முன்பாக நீதியுள்ளவன் கொண்டு எடுக்கப்படுகிறான். அவனுடைய நல்லடக்கம் அமைதியானதாக இருக்கும். ஏனெனில் அவன் எம்மத்தியில் இருந்து எடுக்கப்படுகிறான். ஏசாயா 57: 1. 

49 ம் அத்தியாயம் – யூதர்கள் அவரை நிராகரித்தது முன்னறிவிக்கப்பட்டிருந்தது

மீண்டும், அதே ஏசாயாவால், அவரைத் தேடாத பிற இனத்தைக்கொண்ட தேசங்கள் அவரை வணங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது, ஆனால் எப்போதும் அவரை எதிர்பார்த்த யூதர்கள் அவர் வரும்போது அவரை அடையாளம் காண மாட்டார்கள். வார்த்தைகள் கிறிஸ்துவின் மக்களால் பேசப்படுகின்றன. எனக்கு செவிகொடாதவர்களுக்கு என்னை நான் வெளிப்படுத்தினேன். என்னைத் தேடாதவர்களை நான் கண்டேன்: இதோ, இது என் பெயரைக் கேட்டிராத ஒரு தேசம். கீழ்ப்படியாத மற்றும் மறுத்துரைக்கும் மக்களுக்கும், தீய வழியில் நடந்து பாவங்களால் தொடரப்பட்ட மக்களை நோக்கி நான் என் கைகளை விரித்தேன். அவர்கள் என் முகத்துக்கு நேராக எனது கோபத்தைத் தூண்டுபவர்களாக இருக்கின்றனர். ஏசாயா 65: 1-3. யூதர்களும் தீர்க்கதரிசனங்களைக் கொண்டிருந்ததோடு, கிறிஸ்து வருவார் என்று எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள், அவரை அடையாளம் காணமுடியவில்லை. அது மட்டுமல்லாமல், அவரை கீழ்த்தரமாக நடத்தினார்கள். அப்போஸ்தலர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு அவரைப் பற்றிப் பிரசங்கித்து, தீர்க்கதரிசனங்களை வெளிப்படுத்தும் வரை, கிறிஸ்துவைப் பற்றி எதுவும் கேள்விப்படாத பிறவினத்தார், மகிழ்ச்சியும் விசுவாசமும் நிறைந்தவர்களாய், தங்கள் வசம் வைத்திருந்த சிலைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, கிறிஸ்து மூலம் உண்டாக்கப்படாத கடவுளுக்கு தங்களை அர்ப்பணித்தார்கள்.  கிறிஸ்துவை ஒப்புக்கொண்டவர்களும், அவரை அவதூறாக பேசியவர்களும், பண்டைய பழக்க வழக்கங்களை பின்பற்றுவது துன்பகரமான இருக்கும் இதுபற்றி ஏசாயா சுருக்கமாகக் கூறியதைக் கேளுங்கள். அது என்னவெனில், இனிப்பை கசப்பு என்றும், கசப்பை இனிப்பு என்றும் அழைப்பவர்களுக்கு ஐயோ கேடு! ஏசாயா 5:20. 

50 ம் அத்தியாயம் – அவர் பட்ட அவமானமும் எதிர்வுகூறப்பட்டது 

எம் பொருட்டு ஒரு மனிதனாக அவர் அவதரித்ததால், அவர் துன்பத்தையும் அவமானங்களையும் சகித்துக்கொண்டார். மேலும் அவர் மாட்சிமையுடன் மீண்டும் வருவார். இது தொடர்பான தீர்க்கதரிசனங்களைக் கேளுங்கள்; அவை தான் இவை: அவர்கள் அவருடைய ஆன்மாவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்ததாலும், அவர் பாவிகளுடன் இணைத்து பார்க்கப்பட்டதாலும், அவர் பலரின் பாவத்தைச் சுமந்து, பாவங்களைக் கட்டிக்கொண்ட மக்களுக்காகப் பரிந்து பேசுவார். இதோ, எனது சேவகன் விவேகத்துடன் நடந்துகொள்வான், உயர்த்தப்படுவான், பெரிதும் புகழப்படுவான். பலர் உம்மைப் பார்த்து ஆச்சரியப்பட்டதைப் போல, மனிதர்களுக்கு முன்பாக உம்முடைய வடிவம் அழிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து உமது மகிமை மறைக்கப்படும்; பல தேசங்கள் ஆச்சரியப்படும். அரசர்கள் அவர் முன் மௌனித்திருப்பார்கள். ஏனென்றால், அவரைப் பற்றி யாருக்கும் சொல்லப்படவில்லை. கேள்விப் படாதவர்கள் அவரைப்பற்றி புரிந்துகொள்வார்கள். ஆண்டவரே, எங்கள் அறிக்கையை நம்பியவர் யார்? கர்த்தருடைய கரம்  யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது? வறண்ட நிலத்தின் வேராக, ஒரு குழந்தையாக நாம் அவருக்கு முன் எம்மை வெளிப்படுத்தினோம். அவருக்கு எவ்வித வடிவமோ மகிமையோ இல்லை; நாங்கள் அவரைக் கண்டோம், எவ்வித வடிவமோ அழகோ இருக்க வில்லை. ஆனால் அவருடைய வடிவம் மனிதகுலத்தவர்களை விட அதிகமாக அவமதிக்கப்பட்டும் கறைபடிந்ததுமாக இருந்தது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன், தன் பலவீனத்தை எப்படித் தாங்குவது என்பது பற்றி அறிவான். ஏனென்றால் அவன் முகம் பக்கமாகத் திரும்பியிருக்கும். அவன் வெறுக்கப்பட்டான். அவனுக்கென்று எவ்விதமான மதிப்பும் கிடைப்பதில்லை. அவர் நம்முடைய பாவங்களை சுமந்து, நமக்காக அல்லல் பட்டார். ஆனாலும் நாம் அவரை மேலும் அடித்து துவம்சம் செய்து அல்லல்பட வைக்கிறோம். ஆனால் நம்முடைய பாவங்களுக்காக அவர் காயமடைந்தார். நம்முடைய அக்கிரமங்களுக்காக அவர் நசுக்கப்பட்டார், சமாதானத்தின் தாகம் அவரிடம் இருந்தது. அவர் பட்ட காயங்களால் நாம் குணமடைந்தோம். நாம் அனைவரும் செம்மறிகளைப் போல் வழி தவறிவிட்டோம். ஒவ்வொரு மனிதனும் தன் வழியே அலைந்து திரிந்தான். நம்முடைய பாவங்களுக்காக அவர் தம்மைக் கையளித்தார். தனது தூபங்கள் எதையும் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. அவர் செம்மறி கொலைக்களத்துக்குக் கொண்டுவரப்படுவதை போல்    கொண்டு வரப்பட்டார். அதனால் அவர் வாயைத் திறக்கவில்லை. அவர் அவமானப்படுத்தப்பட்டு, அவருடைய தீர்ப்பு பறிக்கப்பட்டது. ஏசாயா 52: 13-15, ஏசாயா 53: 1-8. அதன்படி, அவர் சிலுவையில் அறையப்பட்ட பிறகும் கூட, அவருக்கு அறிமுகமானவர்கள் அனைவரும் அவரை மறுதலித்து,   உதாசீனம் செய்தார்கள். அதன்பிறகு, அவர் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து அவர்கள் முன் தோன்றியதும், இவை அனைத்தும் நிறைவேறும் என்று முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களைப் படிக்க அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததும், அவர் பரலோகத்திற்கு எழுந்தருளுவதைக் கண்டும், விசுவாசித்ததும், அங்கிருந்து அவர்களால் அனுப்பப்பட்ட வல்லமையைப்  பெற்று, ஒவ்வொரு மனித இனத்தினிடையேயும் சென்று, அவர்கள் இவற்றைக் கற்பித்தார்கள். ஆதலால் தான் அவர்கள் அப்போஸ்தலர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

51 ம் அத்தியாயம் – கிறிஸ்துவின் மாட்சிமை

இவற்றை அனுபவிப்பவருக்கு வர்ணிக்க இயலாத தோற்றம் உண்டு எனவும், எதிரிகளை ஆளக்கூகிடிய திறமையும் உண்டு என்று தீர்க்கதரிசனத்தின் ஆவி நமக்கு உணர்த்தக்கூடும். அவர் இவ்வாறு பேசினார்: அவருடைய தலைமுறையை யார் அறிவிக்கக்கூடும்? ஏனென்றால், அவருடைய வாழ்க்கை பூமியிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய பாவங்களுக்காக அவர் மரணத்திற்கு முகம் கொடுத்தார். அவருடைய நல்லடக்கத்தை துஷ்டர்களிடமும், அவருடைய மரணத்தை செல்வந்தர்களிடமும் கொடுப்பேன். ஏனென்றால் அவர் எந்த விதமான வன்முறைகளிலும் ஈடுபடவில்லை. அவருடைய வாயில் இருந்து எந்த விதமான வஞ்சகமும் வெளிப்பட்டதில்லை. இறைவன் அவரை வடுக்களில் இருந்து தூய்மைப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறார். அவர் பாவத்திற்குக் கையளிக்கப்பட்டிருந்தால், உங்கள் ஆன்மா அவருடைய நீண்டு நீடிக்கும் சந்ததியைக் காணும். தேவன் கர்த்தர் தம்முடைய ஆன்மாவை துக்கத்திலிருந்து விடுவிப்பதிலும், அவருக்கு வெளிச்சத்தைக் காண்பிப்பதிலும், அறிவால் அவரை பூரணப்படுத்துவததிலும், பலருக்கு நியாயத்தை உரைக்கும் நீதிமான்களை நியாயப்படுத்துவதிலும் மகிழ்ச்சியடைகிறார். அவர் நாம் செய்யும் அக்கிரமங்களையும் சுமக்கிறார். ஆகையால், அவர் பலரது மரபுரிமையின் சக்தியைக் கொண்டிருக்கிறார். பலமுள்ளவர்களின் தன்மையை அவர் பிரித்திடுவார். ஏனென்றால், அவருடைய ஆன்மா மரணத்திற்குக் கையளிக்கப்பட்டது. அவர் பாவிகளுடன் சேர்த்து பார்க்கப்பட்டார். அவர் பலரின் பாவங்களைச் சுமந்தார், அவர்களுடைய பாவங்களுக்காக அவர் கையளிக்கப்பட்டார்; ஏசாயா 53: 8-12. தீர்க்கதரிசனத்தின் பிரகாரம், அவர் எவ்வாறு பரலோகத்திற்கு எழுந்தருளினார் என்பது பற்றியும் அறிந்துகொள்ளுங்கள். இவ்வாறு சொல்லப்பட்டது: வானகத்தின் வாயில்களை உயர்த்துங்கள். மகிமையின் அரசர் உள்ளே வருவதற்காக அது திறந்திருக்கக்கடவதாக. மாட்சிமையின் அரசர் என்பவர் அவர். கர்த்தர் வலிமைமிக்கவர்; அவர் சக்தி வாய்ந்தவர். அவர் மீண்டும் மகிமையுடன் வானத்திலிருந்து எப்படி வருவார் என்பது பற்றி தீர்க்கதரிசி எரேமியா குறிப்பிடுவதைக் கேளுங்கள். இதுவே அவர் கூறிய வார்த்தைகள்: இதோ, மனிதகுமாரனாக அவர் வானத்தில் இருந்து மேகங்களின் ஊடாக வருவார். அவருடைய தேவதூதர்களும் அவருடன் வருவார்கள்; தானியேல் 7:13.

52 ம் அத்தியாயம் – தீர்க்கதரிசனத்தில் நிறைவேறிய சிலவற்றை நோக்குவோம்  

அக்காலம் முதல் ஏற்கனவே நடந்தவை அனைத்தும், அவை நடைபெறும்  முன்பே தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டன என்பதை நாங்கள் நிரூபிக்கிறோம். அதேபோன்று எதிர்வுகூறப்பட்ட சில தீர்க்கதரிசனங்கள் இதுவரை நிறைவேறவில்லை என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆயினும் இவை உறுதியாக நடக்கும் என்று நம்பப்படுகிறது. முன்பு நிகழ்ந்தவை யாவும் முன்னறிவிக்கப்பட்டவாறே நிறைவேறியது போல, சில தெரியாதவையாக இருப்பினும், எஞ்சியவை, அவை அறியப்படாதவை, நம்பமுடியாதவை என்றபோதும் கூட, அவை நிறைவேறும் என்றே கூறப்பட்டுள்ளது. தீர்க்கதரிசிகள் அவருடைய இரண்டு வகைகளைப் பற்றி அறிவித்துள்ளனர். ஒன்று, அவர் அவமானத்துடனும் மற்றும் துன்பப்பட்ட மனிதராக அவரை அறிந்தது. இது ஏற்கனவே நிறைவேறிவிட்டது. இரண்டாவதாக, தீர்க்கதரிசனத்தின்படி, அவர் வானகத்திலிருந்து மகிமையுடனும், மாட்சிமையுடனும், அவருடைய தேவதூதர் புடைசூழ வருவார், அப்போது அவர் பூமியில் வாழ்ந்த எல்லா மனிதர்களையும் உயிர் எழுப்புவார். தகுதியுள்ளவர்களை அழியாத ஆடைகளால் போர்த்துவார். பொல்லாதவர்களை நடுத்தீர்வையின் பின் கெட்ட சாத்தான்களுடன் சேர்த்து நித்திய நரக நெருப்பிலே தள்ளுவார். இந்த விடயங்கள் பற்றியும் முன்னறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை நாங்கள் உறுதி செய்வோம். எசேக்கியேல் என்ற தீர்க்கதரிசியால் இதுபற்றி இவ்வாறு கூறப்பட்டது: மூட்டுக்கள் மூட்டுகளோடும், எலும்புகள் எலும்புகளோடும், அவற்றை சுற்றியிருக்கும் சதை மீண்டும் வளரும். ஒவ்வொரு முழங்காலும் கர்த்தரை வணங்கக்கடவதாக, ஒவ்வொரு நாவும் அவரது திருநாமத்தை உச்சரிக்கக்கடவதாக; எசேக்கியேல் 37:7-8; ஏசாயா 45:24. துஷ்டர்கள் எந்த வகையான உணர்வோடு அவர்களின் தண்டனைக்கு உட்பட வேண்டும் என்பது பற்றி பின்வருமாறு கூறப்பட்டதைக் கேளுங்கள்; அவர்களை அரித்துண்ணும் புழுக்கள் ஓயாதிருக்கும், அவர்கள் மேல் எரியும் நெருப்பு தணியாதிருக்கும்; ஏசாயா 66:24. அது அவர்களுக்கு இலாபத்தையும் அளிக்காது. அப்போதே அவர்கள் மனந்திரும்புவார்கள். அவர் மகிமையுடன் வருவதைக் காணும்போது யூத மக்கள் என்ன சொல்வார்கள், அவர்கள் என்ன செய்வார்கள் என்பதையிட்டு சகரியா என்ற தீர்க்கதரிசி இவ்வாறு முன்னறிவித்தார்: சிதறிபோய் இருக்கும் குழந்தைகளைச் சேகரிக்க நான்கு திசைக் காற்றுகளுக்கும் கட்டளையிடுவேன். வடக்கு காற்றையும், தெற்குக் காற்றையும் அவர்களைத் திரும்பக் கொண்டு வரும்படிக் கட்டளையிடுவேன். பின்னர் எருசலேமில் பெரிய புலம்பல் இருக்கும், வாய் அல்லது உதடுகளின் புலம்பல் அல்ல, அது இதயங்களின் புலம்பலாக இருக்கும். அவர்கள் தங்கள் ஆடைகளை அல்ல, அவர்களுடைய இதயங்களை நீக்கி விடுவார்கள். பழங்குடியினர் பாரம்பரியமாக துக்கத்தை அனுபவிப்பார்கள். பின்னர் அவர்கள் தங்களால் குத்தப்பட்டவரைப் பார்ப்பார்கள். அதன் பின் அவர்கள்; கர்த்தாவே, உம்முடைய வழியிலிருந்து விலகி எங்களை ஏன் தவறான வழியில் வாழ சித்தம் கொண்டீர்? என்று புலம்புவார்கள். எங்கள் பிதாக்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மகிமை எங்களுக்கே அவமானமாக மாறியுள்ளது என்பார்கள் 

53 ம் அத்தியாயம் – தீர்க்கதரிசனங்களின் சுருக்கம்

பலதரப்பட்ட தீர்க்கதரிசனங்களை நாம் முன்வைக்க முடிந்தாலும், கேட்க மற்றும் புரிந்துகொள்ளக் கூடியோருக்கு இவை போதுமானவை என்று நாங்கள் அபிப்பிராயப்படுகிறோம். வியாழனின் மக்கள் என்று அழைக்கப்படுபவர்களைப் பற்றி கூறப்படும் கட்டுக்கதைகளைப் போல, ஆதாரங்களைத் தயாரிக்க முடியாமல் வெறும் வெற்றுக் கூற்றுக்களை நாங்கள் புனையவில்லை என்பதை அந்த நபர்கள் தெரிந்து கொள்வர்  என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். சிலுவையில் அறையப்பட்ட ஒரு மனிதர், அவர் உண்டாக்கப்பட்டவரல்லாத கடவுளின் முதல் பிறப்பு என்ற காரணத்தோடும், மேலும் அவர் வருவதற்கும் மனிதனாக பிறப்பதற்கும் முன்பே வெளியிடப்பட்ட அவரைப் பற்றிய சாட்சியங்களை நாம் காணாவிட்டால், நாம் இவற்றை நம்பியிருக்க   மாட்டோம். அவர் முழு மனித இனத்திற்கும் தீர்ப்பளிக்க வல்லவர்.   யூதர்களின் தேசத்தின் பேரழிவின் போதும், ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்தவர்களும் அப்போஸ்தலர்கள் மூலமாக அவருடைய போதனைகளால் உந்தப்பட்டு, அவர்களுடைய பழைய பழக்க வழக்கங்களை நிராகரித்தார்கள். அதில் அவர்கள் ஏமாற்றப்பட்டாலும், அவர்களுடைய உரையாடல் தொடர்ந்தது. ஆமாம், நம்மைப் பார்ப்பதும், பிறவினத்தவரின் மத்தியில் இருந்து வந்த கிறிஸ்தவர்கள், யூதர்களிடமிருந்தும் சமாரியர்களிடமிருந்தும் வந்தவர்களைக் காட்டிலும் ஏராளமானவர்கள், உண்மையுள்ளவர்கள் என்பதை எப்படி அறிவது? மற்றைய மனித இனங்கள் அனைத்தும் தீர்க்கதரிசனத்தின் ஆவியால் பிறவினத்தார் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் யூத மற்றும் சமாரிய இனங்கள் இஸ்ரவேலின் கோத்திரம் என்றும் யாக்கோபின் வீடு என்றும் அழைக்கப்படுகின்றன. யூதர்களிடமிருந்தும், சமாரியர்களிடமிருந்தும் வந்தவர்களை விட பிறவினத்தவரிடமிருந்து வந்தவர்கள் மத்தயில் அதிகமான விசுவாசிகள் இருக்க வேண்டும் என்று எதிர்வுகூறியது தீர்க்கதரிசனம். ஆயினும் நாம் உண்டாக்குவோம். அது குறித்து இவ்வாறு சொல்லப்பட்டது: மலடானவர்களே, மகிழ்வுறுங்கள், ஏனெனில் நீங்கள் கருத்தரிக்க மாட்டீர்கள். உடல் உழைப்பில்லாமல் இருப்பவர்களே, ஆர்ப்பரியுங்கள்.  ஏனென்றால் அநேகமானோர் தனித்து விடப்பட்டோரின் பிள்ளைகள். தனியாக இருக்கும் பெண் கணவனோடு இருக்கும் பெண்ணைவிட மிகுதியான பிள்ளைகளைப் பெறுவாள் ஏசாயா 54:1. பிறவினத்தார் அனைவரும் உண்மையான கடவுளை தனிமைப்படுத்தி, தங்கள் கைகளால் கிரியைகளைச் செய்தார்கள். ஆனால் யூதர்களும் சமாரியர்களும், தேவனுடைய வார்த்தையை தீர்க்கதரிசிகளால் பெற்றுக்கொண்டு, கிறிஸ்துவின் வருகையை எப்பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் வரும்போது அவர்களால் அவரை அடையாளம் காண முடியவில்லை. சிலரைத் தவிர, ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின் ஆவி அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று கணித்திருந்தது. அவர் அவர்களூடாகப்  பேசினார்: கர்த்தர் எங்களுக்கு ஒரு சந்ததியை விட்டுச் சென்றிராவிட்டால், நாமும் சோதோம் மற்றும் கோமோர்ஹா போல இருந்திருப்போம். ஏசாயா 1: 9. சோதோம் மற்றும் கோமொர்ஹா ஆகியவை தேவபக்தியற்ற மனிதர்களின் நகரங்களாக இருந்தன. அவற்றை தேவன் நெருப்பினாலும் கந்தகத்தினாலும் எரித்து ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டன. அவர்களில் ஒருவன் அந்நியன். அவன் பெயர் லோத். பிறப்பால் ஒரு கல்தேயன். அவனைத்தவிர, வேறெவரும்   இரட்சிக்கப்படவில்லை. அவனுடன் சேர்த்து அவனது மகள்மாரும் மீட்கப்பட்டனர். அக்கறை உள்ளவர்கள் தங்கள் நாடு முழுவதுமே பாழடைந்து, எரிந்து தனித்துவிடப்பட்டுக் கிடப்பதைக் காணலாம். பிறவினத்தவரிடமிருந்து வந்தவர்கள் எவ்வாறு உண்மையானவர்கள், அதிக நம்பிக்கை கொண்டவர்கள் என்று முன்னறிவிக்கப்பட்டார்கள் என்பதைக் காட்ட, ஏசாயா என்ற தீர்க்கதரிசி சொன்னதை மேற்கோள் காட்டுவோம்; ஏனெனில் அவர் பின்வருமாறு பேசினார்: இஸ்ரேல் முழு இதயசுத்தியோடு விருத்தசேதனம் செய்யவில்லை, ஆனால் பிறவினத்தார் சரீரத்தால் விருத்தசேதனத்தை மேற்கொள்ளவில்லை. ஆகவே, பல விடயங்கள், அவை கண்ணால் பார்க்கையில், சத்தியத்தைத் தழுவியவர்கள் மீது நம்பிக்கையையும், தீர்ப்பையும் ஏற்படுத்தப் போதுமானவை. மற்றும் அவர்களின் கருத்துக்களில் மதவெறி காணப்படவில்லை. அவர்களுடைய உணர்வுகளாலும் ஆளப்படுவதில்லை. 

54 ம் அத்தியாயம் – பிறவினத்தார் புராணங்களின் தோற்றப்பாடு

கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உருவாக்கித் தந்த புராணங்களை வாசிக்கும் இளைய சமூகத்தினருக்கு அவர்கள் கற்றுக் கொள்ள எவ்விதமான ஆதாரங்களையும் சேர்க்க மாட்டார்கள். கெட்ட சாத்தான்களின்  செல்வாக்கைக் கொண்டு, மனித இனத்தை ஏமாற்றவும், பிழையாக  வழிநடத்தவும் அவர்களுக்கு சொல்லப்பட்டிருப்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். கிறிஸ்துவானவர் வரப்போகிறார், மனிதர்களிடையே தேவபக்தியற்றவர்கள் நெருப்பால் தண்டிக்கப்படுவார்கள் என்று தீர்க்கதரிசிகள் மூலமாக அறிவித்ததைக் கேட்டு, அவர்கள் பலரை வியாழனின் மக்கள் என்று அழைக்க முன்வந்தார்கள். அவர்கள் மனிதர்களிடையே ஒரு தவறான போக்கை உருவாக்கும் எண்ணத்தில்,  கிறிஸ்துவைப் பற்றி சொல்லப்பட்ட அனைத்தும் கவிஞர்களால் கூறப்பட்ட வர்ணனைகள் மற்றும் வெறும் அற்புதக் கதைகள் என்ற கருத்தை உருவாக்கினர். இவை இரு சாராக்கும்,  அதாவது,  கிரேக்கர்களிடமும்,  அனைத்து தேசங்களிலும் (சாத்தான் வசப்பட்டவர்கள்) கிறிஸ்துவை விசேஷமாக நம்புவார்கள் என்று தீர்க்கதரிசிகள் முன்னறிவித்ததை அவர்கள் துல்லியமாக புரிந்து கொள்ளவில்லை. ஆனால் நம்முடைய கிறிஸ்துவைப் பற்றி சொல்லப்பட்டதைப் பின்பற்றினார்கள், பிழையாக வழிநடத்தப்படும் மக்களுக்களுக்கு இதை  நாம் விளக்குவோம். நாம் ஏற்கனவே கூறியது போல மோசே என்ற தீர்க்கதரிசி, மற்றெல்லா எழுத்தாளர்களையும் விட வயதானவர். நாம் முன்பு கூறியது போல, இது அவரால் இவ்வாறு முன்னறிவிக்கப்பட்டது: யூதாவிலிருந்து ஒரு இளவரசனும், அவருடன் பயணிக்கும் ஒரு சட்டமியற்றுபவரும் இடறிவிட மாட்டார்கள். அவர் பிறவினத்தாரின் மீது விருப்பமாக இருப்பார். கழுதைக்குட்டியை திராட்சைத் தோட்டத்தில் கட்டி வைத்துவிட்டு, தனது   அங்கியைத் திராட்சையின் இரத்தத்தில் கழுவுவார்; ஆதியாகமம் 49:10. சாத்தான்கள் அதற்கிணங்க, இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கேட்டபோது, பாக்கஸ் என்பவன் வியாழனின் மகன் என்று கூறி, அவனே திராட்சைத் தோட்டத்தைக் கண்டுபிடித்தவன் என்றும், அதில் பொதிந்துள்ள தேவ அதிசயங்களுக்கும்(அல்லது கழுதைக் குட்டியையும்) அவனே காரணம் என்றும் உரைத்தார்கள். பல துண்டுகளாகக் கிழியுண்டு அவன் பரலோகத்திற்கு போனான் என்றும் அவர்கள் கற்பித்தார்கள். ஏனென்றால், மோசேயின் தீர்க்கதரிசனத்தில், வரப்போகிறவர் தேவனுடைய குமாரனா என்பதையும், அவர் கழுதையின் மேல் சவாரி செய்வாரா அல்லது பூமியில் நிலைகொள்வாரா, அல்லது பரலோகத்திற்கு எழுந்தருளிப் போவாரா என்பதைப்பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஏனெனில் அதில் குறிப்பிட்டுள்ளது இளம் கழுதைக்குட்டியா அல்லது குதிரைக் குட்டியா என்ற தடுமாற்றமும், அவர் வருவதற்கான அடையாளமாக எதைக்கொண்டு வருவார், அல்லது அவர் தான் தேவனுடைய குமாரனா என்று தெரியாமல், மனிதர் மத்தியில்  பிறந்த பெல்லெரோபோன்,  தனது குதிரையான பெகாசஸின் மீது ஏறி  சொர்க்கத்திற்கு ஏறினான் என்று நாங்கள் மேலே நினைவுபடுத்தியது போல்  இதுவும் ஒரூ நிகழ்வா என்ற தடுமாற்றமும் நிலவியது. மற்றைய தீர்க்கதரிசி ஏசாயா கூறியது போல், அவர் ஒரு கன்னிப் பெண்ணின் வயிற்றில் பிறக்க வேண்டும் என்றும், அவர் தனது சொந்த வலிமையால் பரலோகத்திற்கு எழுந்தருள வேண்டும் என்றும் கூறப்பட்டதை அவர்கள் கேட்டபோது, அது பெர்சியசால் பேசப்பட்டதாக எண்ணி அவர்கள் பாசாங்கு செய்தனர். முன்னர் எழுதப்பட்ட தீர்க்கதரிசனங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளபடி, அவருடைய வழக்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு மாபெரும் வலிமையானவர் ஒருவர் தேவை என்று அவர்கள் அறிந்தபோது, ஹெர்குலஸ் என்பவன் வலிமையானவன் என்றும், அவன் பூமியெங்கும் பயணம் செய்தவனென்றும் அவர்கள் சொன்னார்கள். அவர் எல்லா நோய்களையும் குணமாக்குபவர் என்றும், இறந்தவர்களை உயிர்ப்பிப்பவர் என்றும் முன்னறிவிக்கப்பட்டதை அவர்கள் அறிந்தபோது, அஸ்குலாபியஸை என்பவனை உருவாக்கினார்கள்.

55 ம் அத்தியாயம் – சிலுவையின் அடையாளங்கள்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், வியாழனின் மக்கள் என்று அழைக்கப்பட்ட எவரிடமும் அவர்கள் சிலுவையில் அறையப்பட்டதாக அறியப்படவில்லை. அது அவர்களுக்குப் புரியவுமில்லை என்பதால், அதைப் பற்றிய அனைத்தும்  அடையாளமாகவே வைக்கப்பட்டுள்ளன. இது, தீர்க்கதரிசி முன்னறிவித்தபடி, சிலுவை என்பது அவருடைய சக்தி மற்றும் அவரது பாத்திரத்தின் மிகப்பெரிய அடையாளமாகும். எங்கள் நோக்கத்தின் படி, இது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த உருவ அமைப்பு இல்லாவிட்டால், அவை நிர்வகிக்கப்படலாமா அல்லது ஒரு சமூகத்தை கொண்டிருக்க முடியுமா என்பதை உலகில் உள்ள அனைத்து கோணங்களில் இருந்தும் நன்றாகக் கவனியுங்கள். கப்பல் என்று அழைக்கப்படும் பாதுகாப்பான ஒரு கலத்தைத் தவிர, கடல் ஒருபோதும் பயணிக்கவில்லை. அது இல்லாமல் பூமி உழவு செய்யப்படுவதில்லை. வடிவங்களை உருவாக்கப் பயன்படுவது கருவிகளே அன்றி, துளை இடுபவர்கள் மற்றும் தொழில் நுட்பவியலாளர்கள் அல்ல. மனித வடிவம் பகுத்தறிவற்ற விலங்குகளிடமிருந்து வேறுபடுகிறது. அது நிமிர்ந்து இருப்பது மற்றும் கைகளை நீட்டுவது, மற்றும் நெற்றியில் இருந்து மூக்கு என்று அழைக்கப்படும் முக அமைப்பைக் கொண்டதும், இதன் மூலம் உயிர் வாழ சுவாசம் உள்ளிழுத்து வெளியேற்றப்படுகிறது. இந்த அமைப்பு  சிலுவையின் வடிவத்தைத் தவிர வேறு எந்த வடிவத்தையும் காட்டுவதில்லை. ஆகவே, தீர்க்கதரிசிகளால் கூறப்பட்டது போன்று, நம்முடைய முகத்திற்கு முன்னால் உள்ள சுவாசமே நம் கர்த்தராகிய கிறிஸ்துவானவர் ஆவார். இந்த வடிவத்தின் சக்தி நீங்கள் அறிந்த சின்னங்கள், அதாவது அவை  வெக்சில்லா (பதாகைகள்) மற்றும் கிண்ணங்கள் என அழைக்கப்படுகின்றன. இதன் அடிப்படையிலேயே நீங்கள் வாழும் தேச, மாநில உடைமைகள் அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் அறிந்திராவிட்டாலும் கூட, இவை உங்கள் அதிகாரம் மற்றும் அரசாங்கத்தின் அடையாளமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த வடிவத்தின் மூலமே உங்கள் ஆட்சியாளர்கள் இறந்த பிறகு அவர்களின் உருவங்களை செதுக்குகிறீர்கள். மேலும் கல்வெட்டுகளை உபயோகித்து அவர்களுக்கு கடவுள்கள் என்று பெயரிடுகிறீர்கள். ஆகையால், நாங்கள் காரணிகளைக்கொண்டும், தெளிவான சாட்சியங்களைக்கொண்டும் எங்கள் அதிகபட்ச திறனைக்கொண்டும்  வலியுறுத்தியும், அவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால்,  நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நன்கு அறிவோம். இதில் எங்கள் பகுதி முடிவுற்று நிறைவுக்கு வருகிறது.

56 ம் அத்தியாயம் – சாத்தான்கள் இன்னும் மனிதர்களை தவறாக வழிநடத்துகின்றன

கிறிஸ்துவின் தோற்றத்திற்கு முன்பு, வியாழனின் மக்கள் என்று கூறப்படுபவர்கள், அவனிடமிருந்து பிறந்தவர்கள் என்று சொல்வதில் தீய சக்திகள் திருப்தி அடையவில்லை. ஆனால் அவர் தோன்றி, மானுடர் மத்தியில் அவதரித்தார். இது எவ்வாறு தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டது என்பதை அறிந்து, அவரை விசுவசிக்கவும், அனைத்துத் தேசங்களும் அவரைத் தேட வேண்டும் என்பதை அவர்கள் அறிந்தபோது, அவர்கள் மேலே சொன்னது போல் மற்றைய சமாரியர்களான சைமன் மற்றும் மெனாண்டர் போன்றோரை மந்திர மற்றும் சூனிய வித்தைகளால் பல வலிமையான செயல்களைச் செய்யத் தூண்டினர். அவர்கள் பலரை ஏமாற்றினார்கள், இன்னும் ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றனர். உங்களிடையே கூட, நாங்கள் முன்பு கூறியது போல் சீமோன், கிளாடியஸ் சீசரின் ஆட்சியில் ஆளுகையின் நகரமான உரோமில் இருந்தார். மேலும் புனிதமான செனட்டையும் உரோமைய மக்களையும் பெரிதும் வியப்பில் ஆழ்த்தினர். அவர் ஒரு கடவுளாகக் கருதப்பட்டார். மற்றவர்களைப் போலவே கௌரவிக்கப்பட்டார். சிலைகளை தெய்வங்களாக மதிக்கின்ற உங்களைப்போலவே அவர் கௌரவிக்கப்பட்டார். ஆகவே, மதிப்புக்குரிய சட்டசபையையும், உங்கள் மக்களையும், உங்களுடன் சேர்ந்து இந்த நினைவுச்சின்னத்தின் நடுவர்களாக இருக்கும்படி பிரார்த்திக்கிறோம். அந்த மனிதனின் கோட்பாடுகளில் யாராவது அகப்பட்டுக் கொண்டால், அவர் உண்மையை அறிந்து கொள்ளக்கூடும். அதனால் பிழையான வழிகளை நாடுவதில்லை இருந்து தப்பிக்க முடியும். ஆனால், சிலையைப் பொறுத்தவரை, நீங்கள் விரும்பினால், அதை அழித்து விடவும். 

57 ம் அத்தியாயம் – மேலும் துன்பங்களுக்கு உள்ளாதல்

கொடியவர்களைத் பெரும் தீயினால் தண்டிக்க எந்தவிதமான விவாதங்களும் இருக்க முடியாது என்று சாத்தான்களாலும் கூட, மனிதர்களை வற்புறுத்த முடியாது. கிறிஸ்துவானவர் வந்தபின் அவரை மறைத்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. பகுத்தறிவற்ற முறையில் வாழ்ந்து, கெட்ட மற்றும் கொடிய பழக்கவழக்கங்களில் ஊறி, தங்கள் சொந்த அபிப்பிராயங்களுக்கே பாரபட்சம் காட்டியவர்கள், நம்மைக் கொன்று நம்மை வெறுத்து ஒதுங்கியிருக்க வேண்டும். இங்கு யாரை நாம் வெறுக்கிறோம் என்பது மட்டுமல்ல, நிரூபிக்கப்பட்டபடி, இரக்கப்படுதல் போன்ற நல்ல முயற்சிகள் மனந்திரும்புதலுக்கு வழிவகுக்கும். நாங்கள் மரணத்திற்கு அஞ்சுபவர்கள் அல்ல. ஏனென்றால் நாம் நிச்சயமாக ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் என்பதே நியதி. இதில் புதிதாக எதுவும் செல்வதற்கு இல்லை. ஆனால் இவைகள் யாவும் ஒரே மாதிரியாக தொடர்கிறன. இவற்றில் ஒரு வருடத்தைக் கடந்தவர்களைத் திருப்திப்படுத்தினால், அவர்கள் நம்முடைய கோட்பாடுகளுக்கு செவிசாய்க்கக் கூடும். அப்படியாயின் அவர்கள் எப்போதும் துன்பம் மற்றும் இல்லாமை போன்றவற்றில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழலாம். ஆனால் மரணத்திற்குப் பிறகு எதுவும் இல்லை என்று அவர்கள் நினைப்பதும், இறப்பவர்கள் உணர்வற்ற நிலைக்குச் செல்கிறார்கள் என்று அறிவிப்பதும், அவர்கள் இந்த வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் துன்பங்களிலிருந்தும் தேவைகளிலிருந்தும் நம்மை விடுவிப்பவர்கள் என்றும், தங்களை பொல்லாதவர்கள், மனிதாபிமானமற்றவர்கள் என்றும் மதவெறியாளர்கள் என்றும் நிரூபிக்கின்றனர். எங்களை அவர்கள் கொல்வது, எம்மை விடுவிக்கும் நோக்கத்துடன் அல்ல. இதனால் நாம் எமது வாழ்க்கையையும் மகிழ்ச்சியையும் இழக்க நேரிடும். 

58 ம் அத்தியாயம் – மதவெறியர்களை மேலும் ஊக்குவித்தல் 

நாம் முன்பு சொன்னது போல், சாத்தான்கள் பொன்டஸில் உள்ள  மார்சியனை கருவாக வைத்து, அவன் வானம், பூமி மற்றும் எல்லாவற்றையும் படைத்தவர் கடவுள் என்பதையும், தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்ட கிறிஸ்துவானவர் தம்முடைய குமாரன் என்பதையும் மறுதலிக்க மனிதர்களுக்கு கற்பிக்கின்றான். அத்துடன் அனைவரையும் படைத்தவரைத் தவிர வேறொரு கடவுளையும், அதேபோல் இன்னொரு குமாரனைப்பற்றியும் அவன் பிரசங்கிக்கிறான். இந்த மனிதன், அவன் மட்டுமே உண்மையை அறிந்திருப்பதைப் போல, நம்மைப் பார்த்து நகைக்கின்றான். அவர்கள் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், பகுத்தறிவற்ற மூடர்களான அவர்கள், ஒரு ஓநாய் ஆட்டுக்குட்டிகளை கவ்விச் செல்வது போல கொண்டு செல்லப்படுகிறார்கள். நாத்திகக் கோட்பாடுகளுக்கும் சாத்தானின் சூழ்ச்சிகளும் எளிதில் இரையாகிறார்கள். சாத்தான்கள் எனப்படுபவை அவர்களை உருவாக்கிய கடவுளிடமிருந்தும், அவருடைய முதல்பேறான கிறிஸ்துவிடமிருந்தும் மனிதர்களை கவர்ந்திழுப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ததாக அறியப்படவில்லை. தங்கள் சொந்தக் கைகளால் பூலோக வாழ்க்கையில் தங்களை இறுக்கமாக பிணைத்துக்கொண்டோரும் தற்போது பிணைக்கப்பட்டுள்ளோரையும், பூமிக்கு மேலே தங்களை உயர்த்திக் கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். ஆனால் தெய்வீக விடயங்களைப் பற்றி சிந்திக்க தங்களை அர்ப்பணிப்பவர்கள், ரகசியமாக தள்ளி வைக்கப்படுகிறார்கள். அவர்கள் மத்தியில் புத்திசாலித்தனமான, நிதானமான, தூய்மையான மற்றும் உணர்வுகளை உள்ளடக்கிய வாழ்க்கை இல்லாதபட்சத்தில், அவர்கள் கடவுளற்ற நிலைக்குள் தள்ளப்படுகிறார்கள்.

59 ம் அத்தியாயம் – மோசேவிடம் பிளேட்டோவுக்கு உள்ள கடப்பாடு

இவை எங்கள் ஆசிரியர்களிடமிருந்து எம்மிடம் வந்தவை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம் – அதாவது தீர்க்கதரிசிகள் மூலமாகக் கொடுக்கப்பட்ட விபரங்களைப் பற்றி இங்கே நாம் குறிப்பிடுகின்றோம். பிளேட்டோ தனது அறிக்கையை இரவல் வாங்கிக் கூறுகையில், கடவுள், இல்லாத ஒன்றிலிருந்தே இவ் உலகை உண்டாக்கினார் என்றார். ஏனெனில் மோசே என்பவர் முதல் தீர்க்கதரிசி. அவர் ஏனைய கிரேக்க எழுத்தாளர்களை விட மிகப் பழமையானவர். தேவன் முதலில் உலகை எவ்வாறு, எந்தெந்த எதுக்களில் இருந்து  படைத்தார் என்பதைப் பற்றி தீர்க்கதரிசனத்தின் ஆவியானவர் இவ்வாறு கூறினார்: ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமி கண்ணுக்குப் புலப்படாததும், வெறுமையாகவும் இருந்தது. கடலால் சூழப்பட்ட பூமியின் ஆழமான பகுதிகள் இருளில் மூழ்கி இருந்ததன. தேவன் தம்முடைய சக்தியினால் தண்ணீரில் அசைவை உண்டு பண்ணினார். கடவுள், “ஒளி உண்டாகக்கடவதாக” என்றதும், அது அப்படியே நிறைவேறியது.ஆகவே, பிளேட்டோவும் அவருடன் உடன்பட்டவர்களும்,  அவர்களுடன் சேர்ந்து நாமும் கற்றுக்கொண்டோம். மேலும், கடவுளுடைய வார்த்தையால் உலகம் முழுவதும் மோசே முன்பு கூறிய ஏதுக்களைக்கொண்டு உருவாக்கப்பட்டது என்பதை நீங்களும் உறுதியாக நம்பலாம். அதையே கவிஞர்கள் எரேபஸ் என்று அழைக்கிறார்கள். இதுபற்றி முன்னர் மோசே பேசியதையும் நாம் அறிவோம்; உபாகமம் 32:22. 

60 ம் அத்தியாயம் – சிலுவையைப் பற்றிய பிளேட்டோவின் கோட்பாடு

பிளேட்டோவின் டிமியோஸ் என்ற பதத்தில் கடவுளின் குமாரனைப் பற்றிய சரீரவியல் சம்பந்தமான விவாதத்தில் அவர் கூறுகிறார்; அவர் அவரை பிரபஞ்சத்தின் சிலுவை வடிவமாக நிறுவினார். அதை அவர் மோசேயிடமிருந்து இரவலாகப் பெற்றுக்கொண்டார் என்று சொல்கிறார்.மோசேயின் இலக்கணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு; அந்தக் காலத்தில் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறி வனாந்தரத்தில் தங்கி இருந்தபோது, அவர்கள் கொடிய மிருகங்கள், விரியன் பாம்புகள், குளவிகள் மற்றும் மக்களுக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பெரும் எண்ணிக்கையிலான பாம்புகள் போன்றவற்றிடம் அவர்கள் சிக்கிக் கொண்ட போது, மோசே, கடவுளால் உந்தப்பட்டும் அவரது தூண்டுதலாலும், பித்தளையை உபயோகித்து ஒரு சிலுவையின் உருவமாக செய்து, அதை பரிசுத்த கூடாரத்தில் ஏற்றி வைத்து, மக்களை நோக்கி: இந்த உருவத்தைப் பார்த்து, இதை விசுவாசிப்பீர்களானால், அதன் மூலம் நீங்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று சொன்னார்; எண்ணாகமம்; 21: 8. இவை நடந்து முடிந்ததும், பாம்புகள் இறந்துவிட்டன என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. பிளேட்டோவின் இலக்கணங்களில் உள்ள படி அது சிலுவையின் அடையாளம் தானா என்பது பற்றி துல்லியமாக புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் ஆதியில் கடவுளுக்கு அடுத்த சக்தியாக இப்பிரபஞ்சத்தில் சிலுவையே அடையாளமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மூன்றாவது விடயத்தைப் பற்றி அவர் பேசுகையில், நாம் மேலே சொன்னது போல், மோசேயால் சொல்லப்பட்டதற்கிணங்க, தேவனுடைய ஆவியானவர் தண்ணீருக்கு மேல் அசைவை ஏற்படுத்தி அதை நகரும்படி செய்தார். கடவுளோடு காணப்படும் அடையாளங்களுக்கு அவர் இரண்டாவது இடத்தைக் கொடுக்கிறார். அவர் பிரபஞ்சத்தில் சிலுவையையே அடையாளமாக வைத்தார் என்று கூறுகிறார். தண்ணீரால் சுமக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஆவியானவருக்கு மூன்றாவது இடமும், தண்ணீர் என்பது இந்தப் பிரபஞ்சத்தின் மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் எழுதியிருப்பதாக அறியப்படுகிறது. தீர்க்கதரிசனத்தின் ஆவியானவர் மோசேயின் மூலம் பேசுகையில், ஒரு பாரிய அளவிலான கலகம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பது பற்றிக் குறிப்பிடுகிறது. அவர் இவ்வாறு கூறுகிறார்: நித்திய நெருப்பு பூமியை நோக்கி இறங்கி, பூமியின் ஆழத்தில் உள்ள குழிகளையும் துவம்சம் செய்யும்; உபாகமம் 32:22. அப்படியானால், மற்றவர்கள் கொண்டிருக்கும் அதே கருத்தை நாமும் கொண்டிருக்கிறோம் என்பதல்ல. எனினும் எல்லோரும் நாம் பேசியதை போலவே பேசுகிறார்கள். நம்மிடையே இவை பற்றி எழுதியிருக்கும் விடயங்களை அறிந்திராதவர்கள்,  படிப்பறிவில்லாதவர்கள்,  பேச்சில் தர்க்குறிகளாகவும் காணப்படுபவர்கள், புத்திசாலிகள் மற்றும் இது பற்றிய ஆழ்ந்த அறிவுள்ளோரிடம் கேட்டு கற்றுக்கொள்ளலாம்.அவர்களில் சிலர், உண்மையில் ஊனமுற்றோர் மற்றும் கண்பார்வை இழந்தவர்கள் ஆவர். இவை மனித ஞானத்தின் விளைவுகளால் ஏற்பட்டவை அல்ல. அவை கடவுளின் சித்தத்தினால் அருளப்பட்டன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

61 ம் அத்தியாயம் – கிறிஸ்தவ ஞானஸ்நானம்

கிறிஸ்துவின் மூலமாக நாம் புதிய மனிதர்களாக மாற்றம் அடைந்தபோது நாம் கடவுளுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கப்பட்ட விதத்தையும் பற்றிக் கூறுவேன். தவறினால், நாம் கொடுக்கும் விளக்கத்தில் நியாயமற்ற தன்மை நன்கு புலப்படும். நாம் கற்பிப்பதும் சொல்வதும் உண்மை என்று விசுவாசித்து அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொண்டும், செபத்தாலும், விரதங்கள் மூலமும் கடவுளை மகிமைப்படுத்தியும், கடந்த காலங்களில் அவர்கள் செய்த பாவங்களை மன்னிக்க வேண்டியும், நாம் அவர்களுடன் சேர்ந்து செபித்து விரதம் அனுஷ்டிக்கிறோம். நீர் இருக்கும் இடத்திற்கு அவர்கள் எம்மால் அழைத்து வரப்படுகின்றனர். மேலும் நாம் மீளுருவாக்கம் செய்யப்பட்ட அதே முறையில் அவர்களும் புத்துயிர் அளிக்கப்பட்டனர். எம் ஆண்டவராகிய பிரபஞ்சத்தின் பிதா, நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரால், அவர்கள் தண்ணீரால் கழுவப்பட்டார்கள். கிறிஸ்து சொன்னார்: நீங்கள் மீண்டும் பிறக்காவிட்டால், நீங்கள் பரலோக இராச்சியத்திற்குள் நுழைய மாட்டீர்கள். யோவான் 3: 5. ஆனால், ஏற்கனவே பிறந்தவர்கள் தங்கள் தாய்மார்களின் கர்ப்பப்பையில் மீண்டும் நுழைவது சாத்தியமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். பாவம் செய்து மனந்திரும்பியவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து எவ்வாறு விடுதலை பெறுகிறார்கள் என்பதை நான் மேலே எழுதியது போல் ஏசையாஸ் என்ற தீர்க்கதரிசி அறிவிக்கிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: உங்களைக் கழுவுங்கள், உங்களை சுத்தமாக்குங்கள்; உங்கள் தீய செயல்களின் உங்கள் ஆன்மாவிலிருந்து வீசியெறியுங்கள். நல்லவற்றையே செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். தந்தைமாரற்ற பிள்ளைகள் சார்பில் வாதிடுங்கள், விதவைகளுக்காக மன்றாடுங்கள். வாருங்கள், நாம் ஒன்றாக சேர்ந்து நியாயத்தை நிலைநிறுத்துவோம் என்று கர்த்தர் சொல்கிறார். உங்கள் பாவங்கள் கருஞ்சிவப்பு நிறமாக இருந்தாலும், நான் அவற்றை கம்பளி போல வெண்மையாக்குவேன். அவர்கள் சிவப்பு நிறமாக இருக்கும் பட்சத்தில், நான் அவற்றை பனி போல வெண்மையாக்குவேன். ஆனால் நீங்கள் மறுத்து கலகம் செய்தால், கூரிய வாள் உங்களை துவம்சம் செய்துவிடும். கர்த்தரே இதைத் திருவாய் மலர்ந்தருளினார். ஏசாயா 1: 16-20. இக் காரணத்திற்காகவே அப்போஸ்தலர்களிடமிருந்து நாம் (இந்த சடங்கு பற்றி) கற்றுக்கொண்டோம். பிறக்கும் போது  நாம் எவ்வித அறிவோ, விருப்பமோ இன்றியே பிறந்தோம். எங்கள் பெற்றோர் முன்னிலையில் நாம் கெட்ட பழக்கங்களிலும் கபடத்தனமான முறையிலும் வளர்த்து ஆளாக்கப்பட்டோம். நாம் தேவை மற்றும் அறியாமையின் பிள்ளைகளாக இருக்கக்கூடாது மாறாக, தெளிவு மற்றும் அறிவின் பிள்ளைகளாக மாற வேண்டும். முன்பு செய்த பாவங்களை போக்குவதற்கு தண்ணீரில் ஞானஸ்நானம் பெறலாம். இது நம்மை மீண்டும் பிறந்தவர்களாகமாற்றுகிறது. நாம் செய்த பாவங்களையிட்டு மனம்வருந்தி மனந்திரும்பி, பிதாவாகிய தேவன், அவர் பிரபஞ்சத்தின் ஆண்டவர், அவர் கழுவ வேண்டிய நபரை இந்த பெயரால் மட்டுமே அழைப்பார். வர்ணனைகளுக்கு அப்பாற்ப்பட்ட கடவுளின் பெயரை எவரும் அறிந்திரர். அப்படிப்பட்ட ஒரு பெயர் இருப்பதாக யாராவது சொல்லத் துணிந்தால், அது அவருடைய ஒரு நம்பிக்கையற்ற தன்மையையே விளக்குகிறது. இந்த கழுவிச் சுத்தம் செய்தல் எனப்படுவது ஒளியூட்டுதல் என்று அழைக்கப்படுகிறது, ஏனென்றால் இவற்றைக் கற்றுக்கொள்பவர்கள் தங்கள் புரிந்துணர்தல்களின் மூலம் ஒளியைப் பெறுகிறார்கள். போஞ்சியு பிலாத்துவின் அதிகாரத்தின் கீழ் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவை பற்றி, பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசிகள் மூலம் எல்லாவற்றையும் முன்னறிவித்தார். ஒளி பெறுபவரே கழுவப்படுகிறார். 

62 ம் அத்தியாயம் – சாத்தான்களும் அவைகளின் போலித்தோற்றமும்

தீர்க்கதரிசி வெளியிட்ட முழுக்கைப்பற்றிக் கேள்விப்பட்ட சாத்தான்கள்,  தங்கள் கோவில்களுக்குள் வந்தவர்களைத் தூண்டின. மேலும் அவைகள் பிரசாதங்களுடனும், தகனப்பலிகளுடனும் அவர்களை அணுகி, பன்னீரைத் தூவிக்கொள்ளும்படி அவர்களை நிர்ப்பந்திக்கின்றன.அவர்கள் (பலி நிறைவேற்றிய பின்பு) வெளியேறியவுடன் சாத்தான்களின் உருவங்கள் அமைந்திருக்கும் ஆலயங்களுக்குள் நுழையும் முன், அவர்கள் தங்களைத் தாங்களே முழுவதுமாக கழுவும்படி நிர்ப்பந்திக்கின்றன.அவ்விதமான கோயில்களுக்குள் சென்று வணங்க முன், அங்கே உள்ள குருக்களின் கட்டளைக்கமைய, அவர்கள் தங்கள் காலணிகளை கழற்றும்படி பணிக்கப்படுகிறார்கள். சாத்தான்கள் மேற்படி தீர்க்கதரிசியான மோசேக்கு என்ன நடந்தது என்பதை அறிந்தவைகளாக, அவைகளின் போலித்தனத்தை இவ்விதமாகக் காட்டுகின்றன. அக்காலத்தில், மோசே எகிப்துக்குச் சென்று அங்கிருந்த இஸ்ரவேல் மக்களை வெளியேற்றும்படி கட்டளை இடப்பட்டபோது, அரேபியா தேசத்தில் தனது மாமன் அவனது மந்தைகளை மேய்த்துக்கொண்டிருந்த வேளை, நமது கிறிஸ்துவானவர் ஒரு புதரிலிருந்து அக்கினி வடிவில் தோன்றி, “உங்கள் காலணிகளை கழற்றிவிட்டு, அருகில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றார். அவர் தன் காலணிகளைக் கழற்றிவிட்டு அருகில் வந்தபோது, அவர் எகிப்துக்குச் சென்று அங்குள்ள இஸ்ரவேல் மக்களை வெளியேற்றும்படி பணிக்கப்பட்டார். மோசே கிறிஸ்துவிடமிருந்து வலிமையைப் பெற்றார். அவர் அவருடன் நெருப்பில் தோன்றிப் பேசினார். உடனே அவர் கீழே இறங்கி, பெரிய மற்றும் பல அற்புதமான காரியங்களைச் செய்து மக்களை வெளியேற்றினார். மேலும் இதுபற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அவர்எழுதியவற்றில் இருந்துஅவற்றைத் துல்லியமாகக் கற்றுக்கொள்ள முடியும்.

63 ம் அத்தியாயம் – கடவுள் மோசே முன் தோன்றிய விதம்

பெயர் அறிந்திராத கடவுள் மோசேயுடன் பேசினார் என்று யூதர்கள் அனைவரும் இப்போது சொல்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள ஏசாயா,   தீர்க்கதரிசனத்தின் ஆவியானவர் வருத்தத்துடன் கூறுகையில், எருது தன் உரிமையாளரையும், கழுதை தன் எஜமானரின் கொட்டகையையும், அறிந்திருக்கின்றன. ஆனால் இஸ்ரேலோ என்னை அறியவில்லை, என் மக்கள் புரிந்து கொள்ளவும் இல்லை; ஏசாயா 1: 3. இயேசுவே கிறிஸ்துவானவர். ஆயினும், பிதா என்பவர் யார், குமாரன் என்பவர் யார் என்று யூதர்கள் அறிந்திருக்க வில்லை. “பிதாவைத் தவிர வேறு எவரும் குமாரனை அறிய மாட்டார்கள்; குமாரன் அல்ல,  பிதாவானவரைப்பற்றி அறிந்தவர்களையே குமாரன் வெளிப்படுத்துகிறார். மத்தேயு 11:27. நாம் முன்பு கூறியது போல, கடவுளுடைய வார்த்தையே அவருடைய குமாரன்.அவர் தேவதூதர்களையும் அப்போஸ்தலர்களும் அழைக்கிறார். நாம் தெரிந்து கொள்ள வேண்டியதை அவர் அறிவிக்கிறார்,  வெளிப்படுத்தப்பட்டதை அறிவிக்க அவர் அனுப்பப்பட்டுள்ளார்.நம்முடைய கர்த்தர் சொல்வது போல், எனக்கு செவிகொடுப்பவர், என்னை அனுப்பியவருக்குச் செவிகொடுக்கிறார்: லூக்கா 10:16.  மோசேயினால் எழுதப்பட்டவைகளில் இருந்து இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் எழுதப்பட்டிருப்பது இதுவே: தேவனுடைய தூதர் மோசேயுடன், புதரிலிருந்து நெருப்புச் சுடர் வடிவில் தோன்றிப் பேசினார். நான் ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள், உங்கள் பிதாக்களின் கடவுள்; எகிப்துக்குச் சென்று என் மக்களை வெளியேற்றி அங்கிருந்து அவர்களைக் கொண்டு வா; யாத்திராகமம்: 3: 6. இதன் பின் நடந்தவற்றை நீங்கள் அறிய விரும்பினால், அதே இலக்கணங்களில் இருந்து  நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஏனென்றால் முழு கதையையும் இங்கே விபரிக்க முடியாமல் உள்ளது. ஆனால், இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் மற்றும் அவருடைய தூதர் என்பதை நிரூபிப்பதற்காகவும், முதலில் வந்த வார்த்தையாகவும் சில சமயங்களில் அக்கினி வடிவத்திலும், சில சமயங்களில் தேவதூதர்களின் சாயலிலும் தோன்றியது பற்றியே இவ்வளவும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இப்போது, தேவனுடைய சித்தத்தின்படி, மனித இனத்திற்காக மனித வடிவில் அவதரித்து, சாத்தான்களால் தூண்டப்பட்ட, மதியற்ற  யூதர்களால் ஏற்பட்ட எல்லா துன்பங்களையும் அவர் சகித்துக் கொண்டார். அவற்றைப் பற்றி மோசேயின் வார்த்தைகள் மூலம்  உறுதிப்படுத்தியிருந்தாலும், தேவனுடைய தூதன் மோசேயுடன் ஒரு புதரில் அக்கினி வடிவில் தோன்றிப் பேசினார்: நானே ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், மற்றும் யாக்கோபின் கடவுள். ஆயினும் இதைச் சொன்னவர் தான் பிரபஞ்சத்தின் பிதாவும், அதைப் படைத்தவருமாக இருந்தார். தீர்க்கதரிசனத்தின் ஆவியானவர் அவர்களைக் கடிந்துகொண்டு, இஸ்ரவேல் என்னை அறியவில்லை, என் மக்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறுகிறார்: ஏசாயா 1:3. நாம் ஏற்கனவே காட்டியபடி, மறுபடியும், இயேசு, அவர்களுடன் இருந்தபோது, “பிதாவைத் தவிர வேறு எவரும் குமாரனை அறியார். குமாரனும் பிதாவைத் தவிர வேறு எவரையும் அறியார். குமாரனே அவற்றை வெளிப்படுத்துவார்: மத்தேயு 11:27. அதன்படி, யூதர்கள், மோசேயுடன் பேசியது பிரபஞ்சத்தின் பிதாவே என்ற கருத்து அநேகமாக நிலவிய போதிலும், அவருடன் பேசியவர் உண்மையில் தேவனுடைய குமாரன். அவர் தேவதூதர் மற்றும் அப்போஸ்தலர் என்றும் அழைக்கப்படுபவர். பிதாவையோ குமாரனையோ அறியாததையிட்டு இந்த இரு சாராரும் தீர்க்கதரிசனத்தின் ஆவியானவராலும், கிறீஸ்துவாலும் நீதியான முறையில் குறைக்கு ஆளாகிறார்கள். குமாரன் தான் பிதா என்று உறுதிப்படுத்துகிறவர்கள், பிதாவைப் பற்றி அறிந்திருக்கவில்லை, பிரபஞ்சத்தின் பிதாவுக்கு ஒரு மகன் இருக்கிறான் என்பதையும் அறிந்திருக்கவில்லை. அவர் கடவுளின் முதல் வார்த்தையானவராக   இருப்பதால், கடவுளோடு ஒரே பொருளாக வீற்றிருக்கிறார்.பழங்காலத்தில், அவர் அக்கினி வடிவத்திலும், தேவதூதரின் வடிவத்திலும் மோசேயுக்கும் மற்ற தீர்க்கதரிசிகளுக்கும் காட்சியளித்தார். ஆனால் தற்போது உங்கள் ஆட்சிக் காலங்களில், பிதாவின் ஆலோசனையின்படி, அவரை நம்புகிறவர்களின் இரட்சிப்பிற்காக, பிதாவின் சித்தத்தின்படி ஒரு கன்னியின் மூலம் மனிதனாக அவதரித்தார்.தம்மை விசுவாசிப்பவர்களின் இரட்சணியத்துக்காக சொல்லொணா கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் முகம் கொடுத்து, மரித்து, மீண்டும் உயிர்த்தெழுந்ததன் மூலம் அவர் மரணத்தை வென்றார்.   புதரிலிருந்து அக்கினி வடிவில் தோன்றி மோசேயிடம் சொல்லப்பட்டவை; நானே ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள், உங்கள் பிதாக்களின் கடவுள்; யாத்திராகமம்: 3: 6. இதன் மூலம் சொல்லப்பட்டிருப்பது என்னெவெனில், கிறீஸ்துவில் வாழும் கிறீஸ்துவின் மக்கள், இறந்து போனாலும் கிறீஸ்துவுக்குள் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். என்பதே.  மோசேயால் எழுதப்பட்டது போல, ஆபிரகாம் என்பவரான ஈசாக்கின் தந்தை, யாக்கோபின் தந்தையான ஐசக் போன்றோர் இறைவனைத் தேடுவதில் தங்களை மும்முரமாக ஈடுபடுத்திக்கொண்டவர்களில்முதன்மையானவர்கள்.       

64 ம் அத்தியாயம் – சத்தியத்தைப் பற்றிய தவறான விளக்கங்கள்

இதுவரை சொல்லப்பட்ட விளக்கங்களில் இருந்து, சாத்தான்கள் மோசே சொன்னதை வைத்து   புரோசர்பைன் வியாழனின் மகள் என்று வலியுறுத்தின. மேலும் கோரே என்ற அவளின் பெயரில் ஆறுகள் அல்லது நீரூற்றுகள் அமைந்துள்ள இடங்களில் ஒரு உருவத்தை அமைக்க மக்களைத் தூண்டின.  (கோரா, என்றால் கன்னி அல்லது மகள் என அர்த்தம்)என்பதையிட்டுநீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். நாம் மேலே சொல்லியிருந்ததை போல், மோசே, ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்று எழுதியிருந்தார். பூமி ஏதோவொரு வடிவம் இல்லாமலும், வெறுமையானதாகவும் இருந்தது.  தேவனுடைய ஆவி தண்ணீரில் அசைவை ஏற்படுத்தியது. ஆகையால், கடவுளின் ஆவியானவர் தண்ணீரில் அசைவை உண்டு பண்ணியதைப் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளதைப் போலவே, புரோசர்பைன் (அல்லது கோரா) வியாழனின் மகள் என்று அவை கூறின. அதே போல் மினெர்வா வியாழனின் மகள் என்றும் அவைகள் வஞ்சகமாகக் கருதின. அதாவது பாலியல் புணர்ச்சியினால் அல்ல என்றும், கடவுள் ஒரு கருவை உண்டாக்கி அவரது வார்த்தையால் உலகை உண்டாக்கினார் என்பதை அறிந்த அவை, மினெர்வா தான் முதல் கருவாகும் அன்று கூறியது மிகவும் அபத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம். அவ்வாறான கருத்தரிப்பு ஒரு பெண்ணுக்கே இடம்பெற்றது என்று அவைகள் வலியுறுத்தியதையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. இதேபோல், வியாழனின் மக்கள் என்று அழைக்கப்படும் மற்றவர்களின் செயல்களும் அதிகளவு கண்டனத்துக்கு உள்ளாயின.

65 ம் அத்தியாயம் – திருவருட்சாதனங்களை கொடுக்கும் முறை

ஆனால், நாங்கள் அவனை/அவளைநீரினால்கழுவி சுத்தம்செய்து எங்கள் போதனைகளைப் பற்றி அவர்கள்நன்றாக அறிந்து கொண்டதன் பிற்பாடு, சகோதரர்கள் என்று அறியப்பட்டவர்கள் கூடியிருக்கும் இடத்திற்கு அவரை/அவளை அழைத்து வருவோம். அங்கே நமக்காகவும், ஞானஸ்நானம் பெற்ற (ஒளியினால் நிரப்பப்பட்ட) நபர் சார்பாகவும், இதயபூர்வமாக மன்றாடும் முகமாக சகோதரர்கள் அங்கே குழுமி இருப்பர்.அனைத்து இடங்களிலும், அனைவர் மத்தியிலும் நாம் தகுதியுள்ளவர்வர்கள் என்று தெரிவிக்கும் பொருட்டு நாம் இப்போது உண்மையைக் கற்றுக்கொண்டோம். எமது நற்செயல்கள் மூலம் நல்ல குடிமக்களாகவும், இறை கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களாகவும் தொடர்ந்து இருப்போம். இதனால் நாம் என்றும் இரட்சிக்கப்படுவோம். அவ்வாறான நித்திய இரட்சிப்பின் மகிழ்ச்சியோடு மன்றாட்டுக்களை நிறைவு செய்து  ஒருவருக்கொருவர் முத்தமிட்டு அன்பைப் பகிர்ந்து கொள்கிறோம்.  அப்பொழுது அப்பமும், திராட்சை இரசமும் தண்ணீரில் கலக்கப்பட்டு சகோதரர்களின் குழாமின் தலைவரிடம் கொண்டு வரப்படும். அவர் அவற்றை எடுத்து, சுதன் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரால் பிரபஞ்சத்தின் பிதாவுக்கு புகழையும் மகிமையையும் அளித்து, நீண்ட மன்றாட்டுடன் நன்றி கூறி ஒப்புக்கொடுக்கிறார். பரிசுத்த பிதாவின் திருக்கரங்களில் இவற்றை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் தகுதிபெறும் பொருட்டே இம்மன்றாட்டுக்கள் ஒப்புக்கொடுக்கப்படுகின்றன. அவர் பிரார்த்தனைகளையும் நன்றியறிதலையும் நிறைவு செய்தவுடன், அங்கு கூடியிருக்கும் மக்கள் அனைவரும் ‘ஆமென்’ என்று கூறி தங்கள் ஒன்றித்தலை வெளிப்படுத்துகிறார்கள்.‘ ஆமென்’ என்ற இந்த வார்த்தை எபிரேய மொழியில் γένοιτο (அப்படியே ஆகக்கடவது) என்று பதிலளிப்பதாக அர்த்தம் கொடுக்கிறது. சகோதரர்கள் குழாமின் தலைவர் நன்றி தெரிவித்ததும், மக்கள் அனைவரும் தங்கள் ஒன்றித்தலை வெளிப்படுத்தியதும், கோனாகத் தொண்டர்கள் (Deacons)  என்று அழைக்கப்படுபவர்கள், தண்ணீரில் கலக்கப்பட்ட திராட்சை இரசத்தையும் அப்பத்தையும் நன்றி செலுத்திய பின், அங்குள்ள ஒவ்வொருவருக்கும் கொடுக்கிறார்கள். அங்கு சமூகம் அளிக்கத் தவறியவர்களுக்காக, அவர்களின் பங்கை ஒப்படைப்பதற்காக   மன்றாட்டாளர்கள் எடுத்துச் செல்கிறார்கள்.

66 ம் அத்தியாயம் – திவ்விய நற்கருணை

இந்த உணவு நம்மிடையே நற்கருணை என்று அழைக்கப்படுகிறது.  இதில் நாம் கற்பிக்கும் விடயங்கள் யாவும் உண்மை என்று நம்புகிறவர்களும், மற்றும் ஜென்ம பாவங்கள் நீங்கும் முகமாக திருமுழுக்கு என்னும் சடங்கின் மூலம் நீரினால் கழுவப்பட்டு, பாவ மன்னிப்புப் பெற்று மறுவாழ்வு அடைந்தவர்கள் மற்றும்  கிறீஸ்துவை ஏற்றுக்கொண்டு, கிறிஸ்துவின் கட்டளையிட்டபடி வாழ்பவர்கள் தவிர, மற்றைய யாரும் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. இவற்றை சாதாரணமான அப்பமாகவோ அல்லது இராசமாகவோ நாம் பெற்றுக்கொள்வதில்லை. நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, தேவனுடைய வார்த்தையால் முழு சரீரமாய், நம்முடைய இரட்சணியத்தின் நிமித்தம், தமது உடல் மற்றும் இரத்தம் ஆகிய  இரண்டையும் அர்ப்பணித்தார். ஆகவே அவருடைய வார்த்தையின் மகிமையால் ஆசீர்வதிக்கப்பட்ட உணவும், அதிலிருக்கக்கூடிய இயல்புமாற்றமும் நம்முடைய இரத்தத்துடனும் சரீரத்துடனும் ஒன்றித்து எமது ஆன்மாவுக்கு ஊட்டமளிக்கின்றது. ஏனெனில்அது இயேசுக்கிறீஸ்துவின் திருவுடலும் திரு இரத்தமுமாகும். அப்போஸ்தலர்களைப் பொறுத்தவரை, நற்செய்திகள் என்று அழைக்கப்படும் அவர்கள் எழுதிய நினைவுக் குறிப்புகளில், இவ்வாறு அவர்களுக்கு கட்டளையிடப்பட்டதை நம்மிடையே பகிர்ந்து கொண்டுள்ளனர். இயேசு அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபோது, “இது எனது சரீரம். இதை புசிக்கும் போது என்னை நினைவுகூருங்கள்” என்றார்: லூக்கா 22:19. அதேபோல், கிண்ணத்தை எடுத்து நன்றி செலுத்தி, அவர் இது என் இரத்தம் என்று கூறி, அதை அவர்களுக்கு (அப்போஸ்தலர்களுக்கு) மட்டும் கொடுத்தார். இப்படியான புனிதத்தன்மை வாய்ந்த நற்கருணை ஒப்புக்கொடுத்தலை அறிந்த தூரநோக்குடைய கெட்ட சாத்தான்கள், மித்ராஸின் ரகசியங்களின்  போதும் இதே முறையைக் கையாள வேண்டும் என்று கட்டளையிடுகின்றன. ஏனெனில், அங்கே அப்பமும், ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் கொண்டு ஆரம்பிக்கப்படுகிற விசித்திரமான சடங்குகளில் அவை சில மந்திரங்களுடன் வைக்கப்படுகின்றன. இது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் அல்லது நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

67 ம் அத்தியாயம் – கிறிஸ்தவர்களின் வாராந்த வழிபாடு

இந்த விடயங்களையிட்டு நாம் தொடர்ச்சியாக ஒருவருக்கொருவர் நினைவில் வைத்திருப்போம். நம்மிடையே இருக்கும் செல்வந்தர்கள் ஏழைகளுக்கு உதவுகிறார்கள். நாங்கள் எப்போதும் ஒன்றித்தே இருக்கிறோம். எமக்கு வழங்கப்பட்ட எல்லாவற்றிற்கும், அனைத்தையும் படைத்த பிதாவுக்கு, அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகவும், பரிசுத்த ஆவியின் வழியாகவும் எமது ஆராதனையை செலுத்துவோம். ஞாயிற்றுக்கிழமை என்று அழைக்கப்படும் நாளில், நகரங்களில் அல்லது நாட்டில் வாழும் அனைவரும் ஒரு இடத்தில் ஒன்றுகூடி, அப்போஸ்தலர்களின் நிரூபங்கள் அல்லது தீர்க்கதரிசிகளால் நிரூபங்கள் போன்ற நேரம் அனுமதிக்கும் வரை வாசிக்கப்படுகின்றன. பின்னர். வாசிப்பவர் நிறைவு செய்தவுடன், இது திவ்விய யாகத்தை நடத்துபவர், இங்கு வாசிக்கப்பட்ட நல்ல விடயங்களைப் பின்பற்றுமாறும் அதன்படி நடக்கவும் வாய்வழியாக அறிவுறுத்துகிறார். பின்னர் நாம் அனைவரும் ஒன்றாக எழுந்து நின்று மன்றாட்டுகளை ஒப்புக்கொடுத்த பின்னர், நாம் முன்பு சொன்னது போல், அப்பமும் திராட்சை இரசமும் தண்ணீரும் பீடத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. சடங்கை நடத்துபவரும் அவ்வாறே அச்சடங்குகளுக்குரிய பிரார்த்தனைகளையும் நன்றியறிதலையும் ஒப்புக்கொடுக்கிறார். கலந்து கொள்ளும் மக்களும் அவற்றை ஆமோதித்து ஏற்றுக்கொண்டு, ‘ஆமென்’ என்று பதிலளிக்கிறார்கள். கிறீஸ்துவின் சரீரமும் இரத்தமுமாக மாற்றம் பெற்ற அப்பமும் இரசமும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. அதற்காக அங்கு குடியிருப்பவர்கள் அனைவரும் நன்றி செலுத்துகிறார்கள். மேலும் திருப்பலியில் பங்குகொள்ள இல்லாதவர்களுக்கு கோனாகத் தொண்டர்களால் இவை எடுத்துச் செல்லப்பட்டு கொடுக்கப்படுகிறன. மேலும், வசதி படைத்தவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள், ஒவ்வொருவரும் தம்மால் ஆனதைக் கொடுப்பார்கள். சேகரிக்கப்பட்டவை சடங்கு நடத்தும் தலைவரிடம் கையளிக்கப் படுகின்றன. அவர் ஆதரவற்றோர், நோய் அல்லது வேறு எந்த காரணத்தினால் உதவிகள் எதிர்பார்ப்போர், கடன் போன்ற சுமைகளில் இருப்பவர்கள், நம்மிடையே தங்கியிருக்கும் அந்நியர்கள், மற்றும் வாய்வழியாக உதவிகோருவோர் மற்றும் தேவைப்படும் அனைவருக்கும் உதவுகிறார். அதனால் ஞாயிற்றுக்கிழமை என்பது நாம் அனைவரும் நம்முடைய பொதுவான ஒன்றுகூடலை மேற்கொள்ளும் நாள். ஏனென்றால் கடவுள் இருள் மற்றும் அதனையொட்டிய அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி உலகைப் படைத்த முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால். அதேவேளை, இது போன்ற ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தான் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். சனிக்கு (சனிக்கிழமை)முந்தைய நாளில் அவர் சிலுவையில் அறையப்பட்டார். சூரியனின் நாளான சனியின் மறுநாளன்று (ஞாயிற்றுக்கிழமை), அவருடைய அப்போஸ்தலர்களுக்கும் சீடர்களுக்கும் அவர் தரிசனமானார். அவர் இவற்றை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அவை அனைத்தையும் நீங்கள் தெரிந்துகொள்வதற்காகவும் உங்கள் கவனத்திற்காகவும் நாம் சமர்ப்பிக்கிறோம்.

68 ம் அத்தியாயம் – முடிவுரை

இதுவரை சொல்லப்பட்டவை நியாயமானவை, உண்மையானவை என்று உங்களுக்குத் தோன்றினால்,  அவைகளை மதிக்கவும். ஆனால் அவை உங்களுக்கு முட்டாள்தனமாகத் தெரிந்தால், அவற்றை முட்டாள்தனமாக இகழ்ந்து, எதிரிகளுக்கு எதிராக நீங்கள் செயல்படுவதைப் போல, எந்தத் தவறும் செய்யாத எவருக்கும் எதிராக மரணத்தீர்ப்பை இடாதீர்கள்.நீங்கள் தொடர்ந்து அநீதி இழைப்பீர்களானால்,  வரவிருக்கும் கடவுளின் தீர்ப்பிலிருந்து உங்களால் தப்பிக்க முடியாது என்று நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம். கடவுளுக்குப் இஷ்டமானதைச் செய்ய உங்களை நாம் அழைக்கிறோம். உங்கள் தந்தையான மிக உயர்ந்த மற்றும் மிகச் சிறந்த ஆட்சியாளரான அட்ரியனின் நிருபத்தின் பிரகாரம், நாம் விரும்பியபடி தீர்ப்பிடுமாறு நாங்கள் கோரலாம். எனினும் நாங்கள் இந்த வேண்டுகோளையும் விளக்கத்தையும் உங்கள் முன் வைக்கிறோம்: அட்ரியனின் முடிவின் அடிப்படையில் அவை அமையவேண்டும் என்பது அல்ல. ஏனெனில் நாம் கேட்பது நியாயமானது என்று நாங்கள் நன்கு அறிவோம். இது பற்றி நாங்கள் உண்மையைத்தான் பேசுகிறோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காக,  அட்ரியனின் நிருபத்தின் பின்வரும் நகலை நாங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்:

பின் இணைப்பு

கிறிஸ்தவர்கள் சார்பாக அட்ரியன் எழுதிய நிருபம்

உங்கள் முன்னோடியான செரினியஸ் கிரானியனஸ் அவர்களால் எனக்கு விலாசமிடப்பட்ட கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டேன். அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். இதில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை நான் மெளனமாக வைத்திருக்க விரும்பவில்லை. ஏனெனில் அப்பாவிகள் தொந்தரவுகளுக்கு உள்ளாகக்கூடாது என்பதற்காகவும், தகவல் கொடுப்பவர்கள் மிகவும் பாரதூரமான விளைவுகளை சந்தித்து விடக்கூடாது என்பதற்காகவுமே. அதற்கிணங்க, உங்கள் மாகாணத்தில் வசிப்பவர்கள் அங்குள்ள நீதிமன்றங்களில் கிறிஸ்தவர்கள் மேல் குற்றம் சாட்டுவதற்காக இந்த மனுவை அவர்கள் வசம் தக்க வைத்துக் கொண்டால், அவர்கள் அவ்வாறு செய்வதை நான் தடை செய்யவில்லை. இந்த வெறும் வேண்டுகோள்களையும் கண்டனங்களையும் பயன்படுத்தி நான் அவர்களை கஷ்டப்படுத்த மாட்டேன். யாராவது ஒருவர் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் பட்சத்தில், நீங்கள் அதன் மீது தீர்ப்பு வழங்கினால் அது மிகவும் நியாயமானது. எனவே, எவரேனும் குற்றச்சாட்டை முன்வைக்கும்போதும், மேலும் சம்பந்தப்பட்டவர்கள் சட்டங்களுக்கு முரணாக செயற்படுகின்றனர் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் பட்சத்திலும், குற்றங்களுக்கு ஏற்ற விதத்தில் நீங்கள் தண்டனைகளை வழங்க முடியும். இது சம்பந்தமாக ஹெர்குலஸால், அறிவுறுத்தியபடி, நீங்கள் கவனமாக இவற்றுக்கு செவிகொடுக்க வேண்டும், எந்தவொரு மனிதனும், வெறும் பழிவாங்கும் நோக்கத்துடன் எவருக்கேனும் எதிராக குற்றச்சாட்டைக் கொண்டு வந்தால், அவனுடைய இந்தத் தீய நோக்கத்திற்காக அதற்கேற்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

ஆசியாவின் பொது சபைக்கான அன்டோனினஸின் நிருபம்

பிரதான மதகுருவும், தனது தீர்ப்பாயத்தின் பதினைந்தாம் ஆண்டை நிறைவு செய்தவரும், அந்நிய தேசத்துக்கான தூதராக செயற்பட்டவரும், ஆசியாவின் பொது சபையின் தந்தையானவருமான பேரரசர் சீசர் டைட்டஸ் எலியஸ் அட்ரியனஸ் அன்டோனினஸ் அகஸ்டஸ் பியஸ் அவர்களின் வாழ்த்து: தெய்வங்கள் கூட அத்தகைய குற்றவாளிகள் தப்பிக்கக்கூடாது என்று சொல்ல வேண்டும் என்று நான் ஆணித்தரமாக நினைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட தெய்வங்களுக்கு அதிகாரம் இருந்தால், அவர்களை வணங்க மறுப்பவர்களை தண்டித்திருப்பார்கள். ஆனால் நீங்கள் தான் இந்த நபர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறீர்கள். அது நாத்திகர்களின் கருத்து என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் எங்களால் நிரூபிக்க முடியாத வேறு சில விடயங்களை அவர்கள் மீது திணிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குற்றம் சாட்டப்பட்டதற்காக அவர்கள் இறப்பது தான் மேல் என்று கருதுவது குற்றம் சாட்டியவர்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் அவர்கள் கீழ்ப்படிதலைக் காட்டிலும், தங்கள் பகட்டான வாழ்க்கை மூலம் உங்களை வெல்வார்கள். ஏற்கனவே நிகழ்ந்த, மற்றும் இப்போதும் நிகழும் பூகம்பங்களைப் பற்றி நீங்கள் எங்களுக்கு நினைவூட்டுவதாகத் தெரியவில்லை. அவை நிகழும் போதெல்லாம் உங்கள் இதயம் பலவீனம் அடைகிறது. இதனால் இந்த மனிதர்களுக்கு மாறாக உங்கள் நடத்தையை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் அவர்கள் உங்களை விட கடவுள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். உண்மையிலேயே நீங்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் கடவுள்களைப் புறக்கணிப்பதாகவே தோன்றுகிறது. நீங்கள் தேவாலயங்களை புறக்கணிக்கிறீர்கள். கடவுளை வணங்குவதை நீங்கள் அங்கீகரிப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, அவரை மகிமைப்படுத்துபவர்கள் மேல் நீங்கள் பொறாமைப்படுகிறீர்கள், அவர்களை மரணத்தை நோக்கித் தள்ளுகிறீர்கள். அத்தகையோரைப் பற்றி, மாகாணங்களின் பிரதான ஆளுநர்களில் சிலர் எனது மிகுந்த வணக்கத்துக்குரிய தந்தைக்குக் கடிதங்கள் எழுதினர். உரோமைய அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் எவ்விதமான சதி முயற்சிகளையும் மேற்கொள்ளாத பட்சத்தில், அவர்கள் அத்தகைய நபர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று அவர் தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்ற நபர்களைப் பற்றி பலர் எனக்கு பல கடிதங்களை அனுப்பியுள்ளனர். நானும் அக்கடிதங்களுக்கு எனது தகப்பனாரின் தீர்ப்பைப் பின்பற்றி பதிலளித்தேன். ஆனால் எந்தவொரு நபரும் அவருக்கு எதிராக, யாராவது ஏதேனும் குற்றச்சாட்டை ஒன்றைக் கொண்டு வரும் பட்சத்தில், அவர் அத்தகைய பிழையைச் செய்திருப்பார் என்ற போதிலும், அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அதேவேளை, குற்றம் சாட்டியவர் நீதி வரைமுறைகளுக்கு உட்பட்டவராகவும் அதைப்பற்றிய தெளிவுடையவராகவும் இருத்தல் வேண்டும். 

மேல் சட்டசபைக்கு (செனட் சபைக்கு) மார்கஸ் அரேலியஸ் எழுதிய நிருபம்; அதில் கிறிஸ்தவர்கள் தான் அவரது வெற்றிக்கு காரணம் என்று கூறுகிறார்

புனித மேல்சட்டசபைக்குஅனுப்பிய தனது வாழ்த்துச் செய்தியில், பேரரசர் சீசர் மார்கஸ் ஆரேலியஸ் அன்டோனினஸ் ஜெர்மானிக்கஸ் பார்த்திகஸ் சர்மாட்டிகஸ் ரோம் மக்களுக்கு இவ்வாறு கூறினார்: எனது மகத்தான வடிவமைப்பைப் பற்றியும், ஜெர்மனியின் எல்லைகளில் நான் என்ன நன்மைகளைப் பெற்றேன் என்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தேன், அதிக களைப்பு மற்றும் வேதனையுடன் நான் எதிரிகளால் சூழப்பட்ட நிலையில், நான் ஒன்பது மைல் தொலைவில் உள்ள கார்னண்டமில் எழுபத்து நான்கு பேர் கொண்ட குழுவினரால் அடைக்கப்பட்டுள்ளேன். எதிரி மிக அருகில் இருப்பதாக, ஒற்றர்கள் எங்களுக்கு சுட்டிக்காட்டினர். எங்கள் இராணுவ சேனைத் தலைவர் பாம்பியானஸ் 977,000 பேர் கொண்ட ஒரு பெரும் படை நம்மை நெருங்கி வருவதாகக் காட்டினார். உண்மையில் அவர்களை நாமும் பார்த்தோம். இப்படியான ஒரு சேனையால் நான் முடக்கப்பட்டேன். என்னுடன் இருந்ததோ, முதலாவது, பத்தாவது, இரட்டைப் படை மற்றும் கடற்படையினரைக் கொண்ட ஒரு சேனை மட்டுமே. எனது சொந்த நிலைப்பாட்டையும், எங்களைப் பாதுகாத்தவர்களையும் கருத்திற்கொண்டு, காட்டுமிராண்டிகள் மற்றும் எதிரிகளின் பரந்த அளவிலான எண்ணிக்கையயைக் கண்டதும் உடனடியாக நான் எனது நாட்டின் கடவுள்களிடம் பிரார்த்தனை செய்ய முயன்றேன். எதிரிகள்எம்மைக் கண்டுகொள்ளாத படியால், நம்மிடையே உள்ள கிறிஸ்தவர்களின் பெயரால் அழைக்கப்படுவோரை என்னிடம் வரவழைத்தேன். அவர்களிடம் விசாரித்தபின், அவர்களில் ஒரு பெரிய எண்ணிக்கையையும், ஏராளமான எனதுசார்பானவர்களையும் நான் கண்டேன். அவர்களைக் கண்டதும் நான் ஆத்திரமடைந்தேன். அது எந்த வகையிலும் பிரயோசனம் இல்லை என்பதையும் புரிந்துகொண்டேன். ஏனெனில் நான் அவர்களின் பலத்தைபற்றி அறிந்து கொண்டேன். எனவே  எம்மவர்கள்  போரைத் தொடங்கினர், ஆயுதங்கள், யுத்தத் தளபாடங்கள் ஆகியவற்றைக் கொண்டு அல்ல. அவர்கள் தங்கள் மனசாட்சியில் வீற்றிருக்கும் கடவுளின் நேயம் காரணமாக அத்தகைய ஆயத்தங்கள் அவர்களுக்கு தேவைப்படவில்லை போலத் தெரிந்தது.  ஆகவே,  நாத்திகர்கள் என்று நாம் கருதுபவர்கள்   கடவுளை அவர்களின் ஆளும் சக்தியாக அவர்களின் மனசாட்சியில் நிலை நிறுத்திக் கொண்டிருக்கக்கூடும். அவர்கள் தரையில் தெண்டனிட்டு எனக்காக மட்டுமல்லாமல்,  முழு இராணுவத்தினருக்காகவும் இறைவனை மன்றாடினார்கள். அவர்களை தண்ணீர்த்தாகம் மற்றும் உணவுப்பஞ்சத்திலிருந்து விடுபட வேண்டும் என்று இறைஞ்சினார்கள். ஐந்து நாட்களாக எங்களுக்கு தண்ணீர் கூடக் கிடைக்கவில்லை.  ஏனென்றால் தண்ணீர் கிடைப்பதற்கு எவ்வித வழியும் இல்லை; நாங்கள் ஜெர்மனியின் மத்திய பகுதியில், அதுவும் எதிரியின் பிரதேசத்தில் இருந்தோம். அதேநேரத்தில் அவர்கள் தரையில் தெண்டனிட்டு கடவுளிடம் (எனது அறியாமையினால் நான் தேடாத ஒரு கடவுள்) மன்றாடியதன் மூலம், வானத்திலிருந்து தண்ணீர் பொழிந்தது. அது எம்மை மிகவும் புத்துணர்ச்சி பெறச் செய்தது.  ஆனால் உரோமின் எதிரிகள் மீது தண்ணீரானது பொழியாமல்,  வாடிய பனிக்கட்டிகளாய் விழுந்தது. எங்கள் மன்றாட்டுகளைத்தொடர்ந்து,  இறைவன் எங்களைக் கைவிடாமல்  எம்மோடு இருப்பதை நாங்கள் உணர்ந்தோம்-  கடவுள் என்பவர் வரம்புகளுக்கு அப்பாற்பட்ட வல்லமையும் என்றும் அழியாத மகிமையும் கொண்டவர். அப்படியானால்,  நடந்த இவற்றைப்பார்த்து, கிறீஸ்தவர்களாகிய நாம் அனைவரையும் மன்னிப்போமாக.  அவர்கள் தங்கள் மன்றாட்டுக்கள் மூலம் இறைவல்லமையையே தங்களைக் காக்கும் ஆயுதமாகப் பெறுவார்கள். கிறிஸ்தவர் என்ற அடிப்படையில் எத்தகைய ஒருவர் மீதும் நாம் குற்றம் சுமத்தக்கூடாது என்று அறிவுறுத்துகிறேன். ஆனால், ஒருகிறிஸ்தவர் எனப்படுபவர், தான் ஒரு கிறிஸ்தவர் என்ற காரணத்தால் ஏதாவது குற்றச்சாட்டுக்கு ஆளானால்,  அத்தோடு தான் ஒரு கிறிஸ்தவர் என்ற ஒரே காரணத்துக்காக குற்றம்சாட்டப்பட்டவர் என்றால், அவர் தன்னை கிறீஸ்தவர் என்று ஒப்புக்கொள்ளும் பட்சத்திலும், இதைத் தவிர வேறு எவ்வித குற்றமும் அவர் செய்யவில்லை   என்பதையும் அவர் வெளிப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவரது நேர்மையை தான் ஒரு கிறிஸ்தவர் என்ற ரீதியில் அவர் வெளிப்படுத்த வேண்டும். அதே நேரம், அவர் மீது அநியாயக் குற்றச்சாட்டுகளைக் குவிப்பவர் உயிருடன் எரிக்கப்பட வேண்டும். நான் மேலும் சொல்ல விரும்புவது என்னவென்றால்,  மாகாண ஆட்சியாளர் அல்லது அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஒருவரை,  அத்தகைய விடயத்தை ஒப்புக்கொள்ளும் கிறிஸ்தவரை சாட்சியங்களைத் திரும்பப் பெறுமாறு  கட்டாயப் படுத்தக்கூடாது.  அதற்கு அவர் உடன்படவும் கூடாது. இவ்வாறான விடயங்கள் மேல் சட்டசபையின் ஆணை ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். எனது பிரகடனம் டிராஜன் மன்றத்தில் வெளியிடப்படவேண்டும் என்று நான்கட்டளை பிறப்பிக்கின்றேன். தளபதி விட்ராசியஸ் போலியோ, சுற்றியுள்ள அனைத்து மாகாணங்களுக்கும் இப்பிரகடனம் விரிவடைவதைக் காண்பார்.  மேலும் அதைப் பயன்படுத்தவோ அல்லது வைத்திருக்கவோ விரும்பும் எவருக்கும், நான் இப்போது வெளியிடும் ஆவணத்தின் நகலைப் பெறுவதைத் தடுக்க வேண்டாம்.