The Martyrdom of Ignatius

இக்னேசியஸ் என்ற புனித வேதசாட்சி

1 ம் அத்தியாயம் – வேதசாட்சியாவதற்கு இக்னேஷியஸ் அவர்கள் விருப்பம் கொண்டிருந்தார்

ட்ராஜன், ரோமானியர்களின் பேரரசை வெற்றி கொண்ட சிறிது காலத்திற்குப் பின், அப்போஸ்தலராகிய யோவானின் சீடரான இக்னேஷியஸ், அவரும் அப்போஸ்தலராக இருப்பதற்கு எல்லா வகையிலும் சிறந்த குணமுடைய ஒரு மனிதராகத் திகழ்ந்தஅவர், அந்தியோகியர்களின் தேவாலயத்தை மிகுந்த கவனத்துடன் நிர்வகித்து வந்தார். டொமீஷியனின் கீழ் பலவிதமான இன்னல்களுக்கு முகம் கொடுத்து, மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.ஒரு சிறந்த தலைமைத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்த அவர், பிரார்த்தனை மற்றும் உபவாசத்தின் வலிமையாலும், அவரது போதனையின் ஊக்கத்தாலும், மற்றும் அவரது (நிலையான) ஆன்மீக ஊழியத்தாலும், அவர் தனக்கு எதிராக எழுந்த அனைத்து ஆபத்துகளையும் எதிர்த்து நின்றார். அவர் தன்னோடிருந்த தைரியக்குறைபாடு உள்ளவர்களையும், எளிமையான போக்குடையவர்களையும் இழக்க நேரிடும் என்று அஞ்சினார்.இடர்கள் மிகுந்த சூழ்நிலை சிறிது காலம் ஓய்ந்து விட்டிருந்த படியால், திருச்சபையில் நிலவிய அமைதி குறித்து அவர் மகிழ்ச்சியடைந்தார், ஆனால் தன்னைப் பற்றி அவர் வருந்தினார். ஏனெனில் அவர் இன்னும் கிறிஸ்துவுக்குள் உண்மையான அன்பை அடையவில்லை என்றும், அல்லது சீடரின் சரியான அந்தஸ்தை எட்டவில்லை என்ற எண்ணம் அவருள் மேலோங்கி இருந்தது.வேதசாட்சியத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பாவசங்கீர்த்தனம் அவரை இறைவனுடன் இன்னும் நெருக்கமான உறவுக்கு கொண்டு வரும் என்பதை அவர் உள்ளார்ந்த ரீதியாக பிரதிபலித்தார்.ஆகையால், திருச்சபையுடன் சில வருடங்கள் தொடர்ந்தும், ஒரு தெய்வீக ஒளிதரும் விளக்கைப் போல அவர் (புனித) வேதவாக்கியங்களை வெளிப்படுத்தியதன் மூலம் ஒவ்வொருவரின் புரிந்துகொள்ளுதலையும் தெளிவுபடுத்தினார். அவர் தனது (நீண்டகால) விருப்பத்தின் பயனை எய்தினார்.

2 ம் அத்தியாயம் – இக்னேசியஸ் ட்ராஜனின் கண்டனத்துக்குள்ளாகிறார்

ட்ராஜனுக்கு அது அவனது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு நிறைவாக இருந்தது. சைத்தியர் மற்றும் டேசியர்கள் அத்தோடு பல தேசங்களுக்கு எதிராக அவன் பெற்ற வெற்றியினால், [பெருமையுடன்] அவனது புகழ் பன்மடங்கு உயர்ந்தது.மேலும், கிறிஸ்தவர்களின் மத அமைப்பு எல்லாவற்றையும் தனக்குக்கீழே அடிபணியச் செய்ய விரும்புவதாக நினைத்து, [ஆதலால்) அவர்களைத் துன்புறுத்த எண்ணினான். மற்ற எல்லா தேசங்களையும் போலவே, அவர்களும் அசுரர்களை வணங்க ஒப்புக் கொள்ளாவிட்டால், பக்தியுடன் வாழும் அனைவரையும் கட்டாயமாக (சிலைகளுக்கு) பலி ஒப்புக்கொடுக்க வேண்டும் அல்லது மரணத்துக்குத் தயாராக வேண்டும் என்று கட்டளை இட்டான்.அதன் காரணமாக, கிறிஸ்துவின் உன்னத சிப்பாயான (இக்னேஷியஸ்), அந்தியோகியர்களின் திருச்சபைக்கு பயந்து, தனது சொந்த விருப்பத்திற்கு ஏற்ப, அந்த நேரத்தில் அந்தியோகியாவில் இருந்த ட்ராஜன் முன் கொண்டுவரப்பட்டார். ஆனால் ஆர்மீனியர்கள் மற்றும் பார்த்தியர்களுக்கு எதிராக இவற்றை செயற்படுத்த அவனுக்கு இது அவசரமாக இருந்தது.அவர் ட்ராஜன் என்ற சக்கரவர்த்தி முன் நிறுத்தப்பட்டபோது, (அந்த இளவரசன்) அவரை நோக்கி, “எங்கள் கட்டளைகளை மிகவும் ஆர்வத்துடன் மீறி, மற்றவர்களும் அவ்வாறு செய்யும்படி வற்புறுத்துகிற தீய அசுரனே, நீ யார்? அதனால் நீங்கள் எல்லோரும் பரிதாபத்துக்குரியவர்களாய் மடிய இஷ்டமா? என்று கோபத்துடன் கேட்டான். இக்னேஷியஸ் பதில் அளிக்கையில், யாரும் தியோபரஸை தீயவர்கள் என்று அழைக்கக்கூடாது; பிசாசுகள் அனைத்தும் தேவனுடைய ஊழிய சேனைகளின் இருந்து விலகிப் போய்விட்டன, என்றார். ஆகவே நான் (பிசாசுககுக்கு) எதிரி என்பதால், அவைகளைப் பொறுத்தவரை நீர் என்னை பொல்லாதவன் என்று அழைத்தால், நான் உமது கூற்றை ஏற்றுக்கொள்கிறேன்; பரலோக இராச்சியத்தின் அரசரான கிறிஸ்து [எனக்குள்] இருப்பதால், இந்த (பிசாசுகளின்) எல்லாவிதமான முகாந்திரங்களையும் நான் அழித்து விடுவேன். தியோபரஸ் யார் என்று டிராஜன் கேட்டான். பதிலாக, தியோபரஸ் கிறிஸ்துவை தனது நெஞ்சில் வைத்திருப்பவர் என்று இக்னேஷியஸ் கூறினார். டிராஜன் மீண்டும், எங்கள் மனதில் கடவுள்கள் இருப்பதும், அவர்களுடைய துணையுடனேயே நாங்கள் எமது எதிரிகளுக்கு எதிராகப் போராடுகிறோம் என்று உங்களுக்குத் தெரியவில்லையா? என்று கேட்டான். அதற்கு இக்னேஷியஸ், நீர் அசுரர்களை தேசங்களின் கடவுள் என்று அழைப்பது மூலம் தவறு செய்கிறீரே என்று பதிலளித்தார். வானம் பூமி மற்றும் கடலையும் அவற்றில் உள்ள அனைத்தையும் படைத்த ஒரே கடவுளான தேவனுடைய ஒரே சுதனாகிய இயேசு கிறிஸ்து ஜீவனாயிருக்கிறார், அவருடைய இராச்சியத்தையே நான் என்றும் உயர்த்துகிறேன் என்று உறுதிபடச் சொன்னார். போஞ்சியு பிலாத்துவின் கீழ் சிலுவையில் அறையப்பட்டவர் பற்றித் தானே நீர் சொல்கிறீர்? என்று டிராஜன் கேட்டதற்கு, இக்னேஷியஸ் பதிலாக, அவர் எனது பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்தவர். அவரைத் தங்கள் இதயங்களில் சுமப்பவர்களுக்காக பிசாசின் எல்லா வஞ்சகங்களையும் தீமைகளையும் அவரது காலடியில் இட்டு நிர்மூலம் செய்தவர். அப்படியானால் சிலுவையில் அறையப்பட்ட அவரை உங்களுக்குள் சுமக்கிறீர்களா? என்று டிராஜன் கேட்டதற்கு, இக்னேசியஸ் பதிலாக; ஆம், உண்மையாகவே; ‘நான் அவர்களோடு குடியிருக்கிறேன், நான் அவர்களோடு நடக்கிறேன்’ என்று 2 கொரிந்தியர் 6:16 இல் எழுதப்பட்டுள்ளது அன்று கூறினார். இதைச் சொன்ன பிறகு டிராஜன் தண்டனைத் தீர்ப்பை இவ்விதமாக அறிவித்தான்: “சிலுவையில் அறையப்பட்டவரை தனக்குள் சுமந்து கொண்டிருப்பதாக உறுதிபடுத்தும் இக்னேஷியஸ் என்ற இந்த மனிதனை, படையினரால் பிணைக்கப்பட்டு, பெரிய (நகரமான) உரோமுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும், அங்கே கொடிய மிருகங்களுக்கு இரையாக்கப்பட வேண்டும், இது மக்களுக்கு மனநிறைவு ஏற்படும் பொருட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.” இக்னேசியஸ் என்ற புனிதமான வேதசாட்சி இந்த தண்டனைத் தீர்ப்பை கேட்டவுடன், மகிழ்ச்சியுடன் கூக்குரலிட்டார், “ஆண்டவரே, உம்மை நோக்கிய ஒரு முழுமையான அன்பினால் என்னை கௌரவிக்க நீர் உறுதியளித்தீர், உம்முடைய அப்போஸ்தலன் பவுலைப் போல என்னையும் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கும்படி செய்தீர். இவ்வாறு பேசிய அவர், மகிழ்ச்சியுடன், அவரைப் பிணைத்திருந்த சங்கிலிகளைப் பிடித்துக்கொண்டு; அவர் முதலில் திருச்சபைக்காக மன்றாடி, திருச்சபையை கண்ணீருடன் கர்த்தரின் கரங்களில் ஒப்புக்கொடுத்தார். கொடூரம் மிக்க படையினரால் அவர் அங்கிருந்து விரைந்து கொண்டு செல்லப்பட்டார், ஒரு நல்ல மந்தையின் தலைவராக, ஒரு புகழ்பெற்ற செம்மறியைப்போல் அவர் உரோமுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கே இரத்தவெறியுடன் காத்திருக்கும் மிருகங்களுக்கு இரையாக்கப்பட்டு தண்டனை நிறைவேற்ற அவர் அழைத்து செல்லப்பட்டார்.

3 ம் அத்தியாயம் – இக்னேஷியஸ் ஸ்மிர்னாவுக்குக் கடல் வழியே பயணம் செய்கிறார்

ஆகையால், துன்பத்தை அனுபவிக்க தயாராக இருந்த போதிலும் அவர் மிகுந்த சுறுசுறுப்போடும், மகிழ்ச்சியுடனும், அந்தியோகியாவிலிருந்து செலியுசியாவுக்கு வந்தார். அந்த இடத்தில் இருந்தே அவர் பிரயாணத்தைத் தொடங்கினார். பல்வேறுபட்ட இன்னல்களுக்குப் பின்னர் அவர் ஸ்மிர்னாவை அடைந்தார். அங்கு அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கரை இறங்கி, (முன்பு) தனது சக சீடராகவும் மற்றும் (தற்போது) ஸ்மிர்னாவின் ஆயராகவும் கடமையாற்றிய புனித பொலிகார்ப் அவர்களைக் காண விரைந்தார். அவர்கள் இருவரும் முன்னைய காலங்களில் அப்போஸ்தலரான புனித யோவானின் சீடர்களாக இருந்தனர். பின்னர் அவரிடம் அழைத்து வரப்பட்டு, சில ஆன்மீக வெகுமதிகளை அவருடன் உரையாடல்கள் மூலம் பகிர்ந்துகொண்டதன் பின், அவரது பிணைப்புகளை மகிமைப்படுத்திய அவர், தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக தன்னுடன் சேர்ந்து உழைக்கும்படி வேண்டினார். முழுத் திருச்சபையையும் இதைக் கேள்வியுற்று, மிக ஆர்வத்துடன் இந்தப் பரிசுத்தமான மனிதரை, (ஆசியாவின் நகரங்கள் மற்றும் திருச்சபைகள், தங்கள் ஆயர்கள், திருச்சபை மூப்பர்கள் மற்றும் கோனாகத் தொண்டர்கள் மூலம் வரவேற்றன, அனைவரும் அவரைச் சந்திக்க விரைந்தனர். ஏதேனும் ஒரு வழியில் அவர்கள் அவரிடமிருந்து ஏதாவது ஒரு ஆன்மீக வெகுமானத்தைப் பெறக்கூடும்), ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, புனித பொலிகார்ப், காட்டு மிருகங்களுக்கு இரையாக்கப்படுவதன் மூலம், அவர் விரைவில் இந்த உலக வாழ்விலிருந்து விடைபெற்று, கிறிஸ்துவின் திரு முகத்திற்கு முன் வெளிப்படுவார்.

4 ம் அத்தியாயம் – இக்னேஷியஸ் திருச்சபைகளுடன் தொடர்பு கொள்கிறார்

இந்த விடயங்களை அவர் இவ்வாறு பேசி, சாட்சியம் அளித்தார், அவருடைய நல்ல பாவசங்கீர்த்தனத்தின் மூலம் பரலோகத்தைப் பாதுகாக்கவிருந்த ஒருவராக கிறிஸ்துவிடம் தனது அன்பை விரிவுபடுத்தினார், மேலும் அவருடைய [நெருங்கி வரும்] இன்னலைப் பற்றி அவருடன் ஜெபத்தில் இணைந்தவர்களை ஊக்கமூட்டி திருச்சபைக்கு பிரதியுபகாரமாக, தங்கள் ஆட்சியாளர்களோடு அவரைச் சந்திக்க வந்தவர்களுக்கு, நன்றி கடிதங்களை அனுப்பி, அதில் ஆன்மீக கிருபையை விட்டுவிடாது இருக்க வலியுறுத்தி, பிரார்த்தனை மற்றும் புத்திமதிகளையும் சொல்லியிருந்தார். இதன் காரணமாக, எல்லா மனிதர்களும் அவரை நோக்கி மிகவும் அன்பால் ஈர்க்கப்படுவதைக் கண்டபோது, சகோதரத்துவத்தின்பால் அவர் கொண்டிருந்த அன்பு இறைவனிடம் அவர் கொண்ட அதீத ஆர்வத்தை தடுக்கும் என்று அஞ்சியதால், வேதசாட்சியத்தின் கதவுகள் அவருக்குத் திறக்கப்பட்டன. இப்படியாகத்தான் அவர் ரோமானிய திருச்சபைக்கு எழுதிய கடிதம் கடைசியாக இங்கே வந்தடைந்தது.

5 ம் அத்தியாயம் – இக்னேஷியஸ் உரோம் நகருக்குக் கொண்டு வரப்படுகிறார்

இந்த நிருபத்தின் மூலம், அவர் விரும்பியபடி, ரோமில் குடியிருந்த சகோதரர்கள் (அவருடைய வேதசாட்சியத்தில் விருப்பமில்லாதவர்கள்) மற்றும் ஸ்மிர்னாவிலிருந்து பயணம் மேற்கொள்ள இஷ்டமின்றி இருந்தவர்களை (கிறிஸ்டோபரசின் படையினரால் வலிமைமிக்க (நகரமான) ரோமில் உள்ள பொது மக்களின் பார்வைக்கு முன் அவர்கள் காட்டு மிருகங்களுக்கு இரையாக்கப்படுவதை காண்பிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர் இந்த உயர் நிலையை அடையவே பாடுபட்டார்), அவர் [அடுத்து] ட்ரோவாஸில் கரை இறங்கினார். பின்னர், அந்த இடத்திலிருந்து நியோபோலிஸுக்குச் சென்று, பிலிப்பியாசுக்கு மாசிடோனியா வழியாக நடந்தே சென்றார். அதேவேளை எபிடாம்னஸுக்கு அருகிலுள்ள எபிரஸின் அப்பால் இருந்த பகுதிக்கும் சென்றார். அங்கே துறைமுகத்தில் ஒரு கப்பலைக் கண்டு, அதில் ஏறி அவர் ஏட்ரியாடிக் கடல் வழியாகப் பயணம் செய்து, அங்கிருந்து டைர்ஹீனில் நுழைந்து, பல்வேறு தீவுகள் மற்றும் நகரங்களைக் கடந்து செல்லும் போது, புட்டியோலி நகரம் அவரது பார்வையில் பட்டது, அவர் அங்கே இறங்கி அப்போஸ்தலரான புனித பவுல் வாழ்ந்த அந்த இடத்தில் அவரது காலடிகளைப் பாதிக்க மிக ஆர்வமாகக் காணப்பட்டார் அப்போஸ்தலர் பணிகள் 28: 13-14. ஆனால் ஒரு கடுமையான காற்று அவரை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்தது. கப்பல் வேகமாக முன்னோக்கி தள்ளப்படுகிறது; எனினும், அந்த இடத்திலுள்ள சகோதரர்களின் அன்பின் மீது தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், தனது பயணத்தைக் தொடர்ந்தார். ஆகையால், சாதகமான காற்றைத் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்த நாங்கள், ஒரு நாள் மற்றும் ஒரு இரவு தயக்கமின்றி விரைந்து சென்றோம், இந்த நீதியுள்ள மனிதர் எங்களிடமிருந்து புறப்பட்டுச் செல்வதையிட்டு (நாங்கள் செய்ததைப் போல) துக்கப்படுகிறோம். ஆனால், அவர் விரும்பியபடியே இது நடந்தது, ஏனெனில் அவர் நேசித்த கர்த்தரை அடைய அவர் விரைவில் இந்த உலகத்தை விட்டு வெளியேற ஆவலாயிருந்தார். பின்னர் உரோமைய துறைமுகத்தை அடைந்த போது, புனிதத் தன்மை எனக் கருத்தப்படாத நிகழ்வானது நிறைவடையும் நேரம் நெருங்கியிருந்தபடியால், போர் வீரர்கள் எங்கள் மந்த நிலையைக் கண்டு கோபப்படத் தொடங்கினர், ஆனால் ஆயர் மகிழ்ச்சியுடன் அவர்களின் அவசரத்தைப் புரிந்து கொண்டு செயலாற்றினார்.

6 ம் அத்தியாயம் – இக்னேஷியஸ் உரோமில் கொடிய மிருகங்களுக்கு இரையாக்கப்படுகிறார்

எனவே அவர்கள் போர்டஸ் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து வெளியேறினர்; (வேதசாட்சியின் புனிதத்தத்தன்மையும் புகழும் ஏற்கனவே வெளிநாடுகளில் பரவத் தொடங்கியது) பயமும் அதேவேளை மகிழ்ச்சியும் நிறைந்த சகோதரர்களை நாங்கள் சந்தித்தோம். தியோபரஸைச் சந்திக்க தகுதியுள்ளவர்கள் என்று நினைத்ததால் அவர்கள் உண்மையில் மகிழ்ச்சி அடைந்தார்கள், ஆனாலும் பீதியடைந்தவர்களாகக் காணப்பட்டனர். ஏனென்றால் ஒரு சிறந்த மனிதர் மரணத்திற்கு இட்டுச் செல்லப்படுகின்றார் என்ற காரணத்தால். இப்போது அவர் சிலரை மெளனமாக இருக்கும்படி கட்டளையிட்டார், அவர்கள் ஆர்வத்துடன், மக்களை திருப்திப்படுத்துவதாகக் கூறினர், இதனால் அவர்கள் நீதியான இவரை அழிக்கக் கோரக்கூடாது. அவர் தனது ஆன்மாவின் வலிமையின் ஊடாக இதை உடனடியாக அறிந்துகொண்டு, அனைவருக்கும் மரியாதை செலுத்தி, தம்மீது உண்மையான பாசத்தைக் காட்டும்படி அவர்களிடம் இறைஞ்சினார். மேலும் அவருடைய நிருபத்தில் (இந்த இடத்தில்) கூறப்பட்டதை விட அதிக காலம் வாழ்ந்த அவர், தான் இறைவனிடம் விரைந்து செல்வதைத் தடுக்க வேண்டாம் என்று அவர்களை நேயமுடன் கேட்டுக்கொண்டார். பின்னர், அனைத்து சகோதரர்களுடனும் [அவருக்கு அருகில்] மண்டியிட்டு, துன்புறுத்தலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும், பரஸ்பர அன்பு இருக்கக்கூடும் என்றும் அது சகோதரர்களிடையே தொடர வேண்டுமென்றும் திருச்சபைகள் சார்பாக தேவனுடைய குமாரனிடம் மன்றாடினார். இவை நிறைவடைந்தபின், அரை வட்ட அமைப்பில் உள்ள அரங்கத்தினுள் அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார். தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அரங்கத்தினுள் எறியப்பட வேண்டுமென்று சில காலத்திற்கு முன்பு வழங்கப்பட்ட சீசரின் கட்டளைப்படி, பொது மக்களுக்கான பார்வை அரங்கங்கள் மூடப்படவிருந்தன (ஏனென்றால் அதை ஒரு புனிதமான நாளாக அவர்கள் கருதினார்கள், இது உரோமைய பதின்மூன்றாவது கட்டளை என்று அழைக்கப்படுகிறது. இதில் மக்கள் சாதாரண எண்ணிக்கையை விட அதிகமாக கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள்). அதற்கிணங்க, அவர் இவ்வாறு ஆலயத்திற்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் காட்டு மிருகங்களுக்கு இறையாகப் போடப்பட்டார். இவ்வாறு பரிசுத்த வேதசாட்சியான இக்னேஷியஸின் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று எழுதப்பட்டபடி, நீதிமான்களின் விருப்பம் ஏற்றுக்கொள்ளபட்டிருந்தது. நீதிமொழிகள் 10:24 (இறைவனுக்கு). தண்டனை நிறைவேற்றப்பட்ட பின், அவரது எச்சங்களை சேகரிக்க அவர் எந்த சகோதரர்களுக்கும் தொந்தரவாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தோடு, அவர் தனது நிருபத்தில் குறிப்பிட்டிருந்ததை போலவே அவருடைய முடிவும் இருக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தை முன்கூட்டியே தெரிவித்திருந்தார். அவருடைய புனித எச்சங்களின் கடினமான பகுதிகள் மட்டுமே எஞ்சியிருந்தன, அவை அந்தியோகியாவிற்கு அனுப்பப்பட்டு துணியால் மூடப்பட்டிருந்தன, வேதசாட்சியாய் இருந்தபடியால் அவை புனித திருச்சபைக்கு விலைமதிக்க முடியாத பொக்கிஷமாகக் காணப்பட்டன.

7 ம் அத்தியாயம் – இக்னேஷியஸ் இறந்த பிறகு தரிசனத்தில் தோன்றுகிறார்

இப்போது இந்த விடயங்கள் ஜனவரி கலெண்டுகளுக்கு முந்தைய பதின்மூன்றாம் நாளில்; அதாவது டிசம்பர் இருபதாம் திகதி, சூரா மற்றும் செனெசியோ இரண்டாவது முறையாக உரோமையர்களின் தூதர்களாக இருந்தனர். இந்த விடயங்கள் அனைத்திற்கும் நாம் கண் கண்ட சாட்சிகளாக இருந்தோம், இரவு முழுவதும் வீட்டினுள் கண்ணீருடன் கழித்திருந்தோம், அத்தோடு முழங்கால்களில் இருந்து, கடந்து விட்ட நிகழ்வுகளில் இருந்து பலவீனமான மனிதர்களான எமக்கு அவர் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென இடைவிடாத செபத்தால் இறைவனை மன்றாடினோம், நாங்கள் ஒரு சிறிய தூக்கத்தில் இருந்தபோது தான், புனித இக்னேஷியஸ் திடீரென்று எங்களுடன் நின்று எங்களை அரவணைப்பதை எங்களில் சிலர் கண்டோம், மற்றைய சிலர் அவர் மீண்டும் எங்களுக்காக செபிப்பதைக் கண்டார்கள், வேறு சிலர் அவரை வியர்வை சொட்டச்சொட்ட நிற்பதைப் பார்த்தார்கள், அவர் தனது கடுமையான உழைப்பின் வாயிலாக கர்த்தருடன் நின்றார். மேலும் இவற்றை நாங்கள் மிகுந்த சந்தோஷத்துடன் கண்டபோதும், நாம் கண்ட பல தரிசனங்களை ஒன்றாக ஒப்பிட்டுப் பார்த்தபோதும், அனைத்து நன்மைகளையும் எமக்கு அருளிய இறைவனைப் புகழ்ந்து பாடிப் போற்றினோம். புனிதர்களின் (வேதசாட்சிகளின்) மகிழ்ச்சியைப் பற்றிய எங்கள் உணர்வை வெளிப்படுத்தினோம். (இது நடந்த) நாள் மற்றும் நேரம் இரண்டையும் நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம், அவருடைய வேதசாட்சியத்தின் ஊடாக நம்மை ஒன்றிணைத்துக்கொள்வதன் மூலம், கிறிஸ்துவின் முதன்மையான மற்றும் உன்னதமான வேதசாட்சியுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள இயலுமாக இருந்தது. அவர் சாத்தானை தனது காலடியில் வைத்து மிதித்து துவம்சம் செய்பவர். கிறிஸ்துவை நேசிப்பதன் மூலம், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் அவர் சித்தத்தின் படியே முழுமையடையச் செய்தார். அவர் வழியாக அவரோடு அவரில் எல்லாம் வல்ல பிதாவுக்கும், பரிசுத்த ஆவிக்கும், என்றென்றைக்கும் மகிமையும் வல்லமையும் மாட்சியும் உண்டாகக்கடவதாக. ஆமென்.