Ignatius of Antioch, Epistle to the Ephesians

புனித இக்னேசியஸ் எபேசியருக்கு எழுதிய கடிதம்

இக்னேஷியஸ் தியோபோரஸ் ஆகிய நான், ஆசியாவில் உள்ள எபேசஸ் திருச்சபையை  வாழ்த்துவதில் இவ்வாறு பெருமிதம் கொள்கிறேன்: நீங்கள் தகுதியுள்ளவராக இருக்க வாழ்த்துவதோடு, இயேசு கிறிஸ்துவில் உங்களுக்கு முழுமையான மகிழ்ச்சி ஏற்பட வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள் – பிதாவாகிய சர்வேசுரனின் முழுமை மூலம் ஆன்மீக அந்தஸ்தில் வளர்ந்த நீங்கள், நித்திய வாழ்வில் நிலைத்து, மாறாத மகிமையுடனும், பிதாவினாலும் நம்முடைய தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் சித்தத்தினாலும் உண்மையான பேரவாவோடு ஒன்றுபட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

1. எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் மற்றும் தர்மத்திற்கு இணங்க, இயல்பான (உணர்வோடு) கடவுளின் பெயரால் நான் உங்களை வரவேற்கிறேன். கடவுளைப் பின்பற்றுபவர்களே, தற்போது, கடவுளுடைய இரத்தத்தினால் உங்களது இதயங்கள் வெம்மையாக்கப் படுகின்றன. உங்களது கடமையை நீங்கள் மிகவும் சரியாகச் செய்திருக்கிறீர்கள். சிரியாவிலிருந்து நான் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறேன். பொதுவாக எங்கள் பெயர் மற்றும் எம்மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக நீங்கள் என்னைப் பார்க்க ஆர்வமாக இருந்தீர்கள். உங்கள் மன்றாட்டின் உதவியுடன் ரோமில் உள்ள கோரிய மிருகங்களை எதிர்கொள்ளவும், அவற்றில் இருந்தது நான் தோல்வியடையாமல் இருக்கவும் இறைஞ்சுங்கள். அதன் மூலம் நானும் இறைவனின் ஒரு சீடராக வேண்டும் என்பதே எனது குறிக்கோள். ஆகவே, கடவுளின் பெயரால் உங்கள் முழு சமூகத்தையும் நான் உங்கள் ஆயராகிய ஒனெசிமஸின் முன்னிலையில் ஏற்றுக்கொண்டேன். சரீரத்தின் சக்திகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதர். இயேசு கிறிஸ்துவில் அவரை நேசிக்கவும், ஒரு மனிதனாய் அவரை உதாரணமாய் ஏற்று சீவிக்கும்படி நான் உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அத்தகைய ஒருவரை ஆயராகப் பெறுவதற்கு உங்களுக்கு தகுதியையும் கருணையையும் அளித்த தேவன் என்றென்றும் ஆசீர்வதிப்பட்டவராவார்.

2. என் சக ஊழியரும், கடவுளின் விருப்பத்தால் உங்களுக்கு கிட்டிய பர்ருஸ் என்ற கோனகத்தொண்டரைப்பற்றிய ஒரு வார்த்தை சொல்ல விழைகிறேன். அவர் சகல வழிகளிலும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு மனிதர். உங்கள் மரியாதைக்கு உரிய உங்கள் ஆயரான அவர் என்னுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. கடவுளுக்கும் உங்களுக்கும் சேவை செய்ய தகுதியான குரோக்கஸ், நீங்கள் என்மீது கொண்டிருக்கும் அன்பின் முன்மாதிரியாக நான் அவரைப் பெற்றுள்ளேன். அவர் எல்லா வகையிலும் எனக்கு ஒரு பெரிய ஆறுதலாக இருந்து வருகிறார். இயேசு கிறிஸ்துவின் பிதாவான சர்வேசுரன்  அவருடைய கிருபையால் அவருக்கு வெகுமதி அளிக்கட்டும் – அவருக்கு மட்டுமல்ல, ஒனேசிமஸ், பர்ரஸ், யூப்ளஸ் மற்றும் ஃப்ராண்டோ உங்கள் அனைவரின் அன்பையும் அவர்களில் நான் கண்டேன். நான் அதற்கு தகுதியானவனாக இருந்தால், நான் எப்போதும் உங்களையிட்டு  சந்தோஷப்படுகிறேன். ஆகவே, உங்கள் ஆயருக்கும் குருக்களுக்கும் கீழ்ப்படிதலில் நீங்கள் பரிபூரணமடைந்து, எல்லா வகையிலும் புனிதத்தன்மையைப் பெற உங்களுக்கு மகிமை அளித்த என் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எல்லா வகையிலும் மகிமைப்படுத்துவது மிகவும் பொருத்தமானது.

3.  நான் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நபர் என்ற ஸ்தானத்தில் இருந்து உங்களுக்குக் கட்டளையிடவில்லை. ஏனென்றால் நான் இயேசு கிறிஸ்துவுக்குள் ஒருகைதியாக இருந்த போதிலும், நான் இன்னும் முழுமையடையவில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் நான் அவருடைய சீடராக ஆரம்பித்து, அதே சீடராக உங்களுடன் பேசுகிறேன். ஏனென்றால், பயிற்சி பெற்றவர்கள் (உண்மையில், ‘அபிஷேகம் செய்யப் பட்டவர்கள், அதாவது, பயிற்சியாளர்கள் விளையாட்டு வீரர்களுக்கு வலி நிவாரணியைத் தேய்ப்பது போல), இது உங்களது நம்பிக்கை, புத்தி மதிகளை செவிமடுத்தல், சகிப்புத்தன்மை மற்றும் பாடுகள் போன்றவற்றைக் குறிக்கிறது. ஆனாலும், உங்கள் விடயத்தில் நான் கொடுள்ள அன்பின் காரணமாக என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. எனவே கடவுளுக்குப் பிரியமாக இருக்கும்படி உங்களை இறைஞ்சுவதற்கு நான் எப்போதும் பின்வாங்கியதில்லை. இயேசுக் கிறிஸ்துவைப் பொறுத்தவரை, எமது வாழ்வை அவரிடம் இருந்து பிரித்துவிட முடியாது. பிதாவின் சித்தத்தினால் பூமியின் அனைத்து முனைகள் வரை நியமிக்கப்பட்ட ஆயர்கள், இவர்கள் இயேசுக்கிறிஸ்துவுடன் ஒரே நிலைப்பாட்டில் இருந்தவர்கள்.

4. எனவே, ஆயரின் பெயருடன் நீங்கள் ஒப்பிடுவது பொருத்தமானது. உங்கள் குருக்கள் ஒரு பாடலின் சரங்களைப் போல, தம் பெயருக்கும் மற்றும் கடவுளை போற்றவும் தகுதியானவர்கள். ஆயர்களுடன் இணக்கமாக இருக்கிறார்கள். ஆகவே, உங்கள் மனதுக்கும் இதயத்துக்கும் இசைவாக இயேசுக்கிறிஸ்து புகழப்படுகிறார். இறைவனையே குறிப்பாகக் கொண்டு ஒரே குரலோடும், மனதோடும் உங்களை ஒரு பாடகர் குழாமாக மெருகு படுத்துங்கள். இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் பிதாவிடம் நீங்கள் ஒரே குரலில் ஒற்றுமையாக கீர்த்தனைகளை பாடலாம். மேலும் அவர் உங்கள் கீர்த்தனைகளை செவிகொடுத்து உங்களை அடையாளம் கண்டு தனது குமாரனோடு உங்களையும் அவரது உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கக்கூடும். ஆகையால், நீங்கள் எப்போதுமே கடவுளின் பங்காளிகளாக இருக்கும் படியாகவும், முழுமையுடன் ஒன்றித்திருப்பது மூலமும்  உங்களுக்கு நன்மைகளையே கொடுக்கும்.

5. மேலும், நான் ஒரு குறுகிய காலத்தில், உங்கள் ஆயருடனான மனிதாபிமான ஒற்றுமையை மட்டுமல்ல, அத்தகைய ஆன்மீகத்தையும் அடைந்துவிட்டேன் என்றால், அவருடன் ஒருவராக மாறிய உங்களை நான் வாழ்த்தக் கடமைப் பட்டுள்ளேன். திருச்சபை இயேசுக்கிறிஸ்துவிலும், இயேசுக்கிறிஸ்து பிதாவோடும் ஒன்றாக இருப்பது போல் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனும் ஏமாற்றப்படாதிருக்கக் கடவானாக. எவன் ஒருவனும் இறைவனின் சரணாலயத்திற்குள் நுழைய முடியாதவனாக இருப்பானானால், அவன் [கடவுளின்] பெயரால் பெற்றுக்கொள்ளக்கூடிய அப்பத்தை இழந்து விடுகிறான். ஓரிரண்டு மனிதர்களின் செபத்திற்கு இவ்வளவு சக்தி இருக்குமானால், ஆயர் மற்றும் முழு ஆலயத்தின் பிரார்த்தனை எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும்? ஆகவே, மற்றவர்களுடன் ஒன்றுகூடத் தவறும் எவரும் ஏற்கனவே தனது தற்பெருமையைக் காட்டி தன்னைத் தானே ஒதுக்கி வைத்துக் கொள்கிறார். எழுதியுள்ளவாறு; ‘கடவுள் பெருமைகளை ஏற்றுக்கொள்வதில்லை.’ ஆகவே, நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து இருக்க வேண்டுமானால், ஆயர்களை வெறுக்காது கவனமாக இருப்போம்.

6. மேலும் மனிதன், ஒரு ஆயர் தான் சொன்ன சில சொற்களைக் காப்பாற்றக் கூடியவராக இருப்பாரானால் அவரை மதிக்கக்கடவான். ஏனெனில், எவரேனும் தன்னுடைய வீட்டை பராமரிக்க தனது எஜமானரால் அனுப்பப்பட்டிருப்பாரேயானால், எஜமானரைப் போலவே அவரை நாம் மதிக்கக்கடவோம். ஆகையால், வெளிப்படையாகக் கூறினால், ஆயரை நாம் கர்த்தரின் ஸ்தானத்தில் வைத்து மதிப்பளிப்பது அவசியம். ஒழுங்கான, மத அனுஷ்டானங்களை மதித்த நீங்கள் அனைவரும் சத்தியத்தின் படி வாழ்கிறீர்கள். உங்களிடையே மதங்களுக்கு எதிரான எந்தக் கொள்கையும் ஒரு முடிவை எட்டவில்லை என்பதால் அனைவரும் ஒனேசிமஸ் அவர்களின் பாராட்டுக்கு உரியவர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். உண்மையில், அவர் இயேசுக்கிறிஸ்துவில் உண்மையாக இருந்திராவிட்டால் நீங்கள் அவருடைய பேச்சையும் கேட்டிருக்க மாட்டீர்கள்.

7. சிலர் கடவுளுக்கு தகுதியற்ற விதத்தில் வஞ்சகமாகவும், கொடூரமாகவும் நடந்து கொள்ளும்போது, அதன் வலியைத் தாங்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். அத்தகைய மனிதர்களை நீங்கள் மிருகங்களாக எண்ணி விலக்க வேண்டும்; ஏனென்றால், அவர்கள் நீங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் பொது உங்களைக் கடிக்கக்கூடிய விசர் நாய்களைப்  போன்றவர்கள். இவர்களில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனென்றால் இந்த மனிதர்கள் குணமடைவது கடினம். உடல் மற்றும் ஆன்மா இரண்டிலும் ஒரு மருத்துவர் அவர் எப்போதும் நிதர்சனமாய் இருக்கிறார். பிறந்தவர் ஆனால் உண்டாக்கப்பட்டவர் அல்ல. மனித அவதாரம் உள்ளவர். மரணத்தை வென்றவர். கன்னி மரியாளின் மகன் மற்றும் தேவனுடைய குமாரன். முதலில் பாடுபட்டாலும் பின்னர் துன்பத்துக்கு உள்ளாகவில்லை. அவர் நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து என்ற உண்மையான சர்வேசுரன்.

8. ஆகையால், உண்மையில், கடவுளுக்கு முழுமையாக ஒப்புக்கொடுக்கப் பட்டதால், நீங்கள் வஞ்சிக்கப்பட்டதாக யாரும் உங்களை தவறாக வழிநடத்த வேண்டாம். உங்களுக்குள் எந்த ஒரு உணர்ச்சியும் உங்களைத் துன்புறுத்துவதற்கு ஒரு நிலையான சக்தியைக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால், நீங்கள் நிச்சயமாக கடவுளின் சித்தத்தின்படி வாழ்கிறீர்கள். உங்களுக்கு நிலையான, மற்றும் ஒரு எளிமையான தியாகமாக, நான் எபேசியர் அவர்களை உங்களுக்காக நியமிக்கிறேன். அதன் மூலம் உங்கள் திருச்சபை எல்லா யுகங்களிலும் நினைவுகூறப்படும். ஆன்மாவின் வழி  நடப்பவர்கள் சரீரத்தின் காரியங்களைச் செய்வதை விட சரீரத்தினால் ஆன மனிதர்களால் ஆன்மாவின் செயல்களைச் செய்ய முடியாது. விசுவாசத்தால் துரோகமான காரியங்களையும், துரோகத்தை விசுவாசத்தின் ஊடாகவும் செய்ய முடியாது. நீங்கள் இயேசுக்கிறிஸ்துவின் பெயரால் எல்லா வற்றையும் செய்கிறீர்கள். அவை கூட நீங்கள் சரீரத்தின் ஊடாக மேற்கொள்ளும் ஒருவகை ஆன்மீகச் செயலே.

9. கெட்ட கோட்பாட்டைக் கொண்ட சில அந்நியர்கள் உங்கள் வழியைக் கடந்து சென்று விட்டார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் அவர்கள் விதைத்த விதை உங்களிடையே வேரூன்ற நீங்கள் அனுமதிக்கவில்லை. அவர்கள் விதைத்ததை நீங்கள் பெறக்கூடாது என்பதற்காக நீங்கள் அவற்றை செவிமடுப்பதை நிறுத்தி விட்டீர்கள். பிதாவாகிய தேவனுடைய கட்டிடத்திற்காக செதுக்கப்பட்ட ஆலயத்தின் கற்களைப் போல, இயேசுக்கிறிஸ்துவின் பாரமான சிலுவை, பரிசுத்த ஆவியின் வல்லமை ஆகியவற்றால் நீங்கள் மேலே உயர்த்தப்பட்டீர்கள். உங்கள் விசுவாசம் உங்களை உயர்த்தியது. தர்மம் என்பது கடவுளுக்கு வழிவகுக்கும் பாதையாகும். நீங்கள் அனைவரும் சக இயாத்ரீகர்கள், கடவுளையும் அவருடைய சபையையும் உங்களுடன் சுமந்து செல்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவின் பரிசுத்த பிரசாதத்தை உடையவர்களாக இருக்கிறீர்கள். இயேசுக்கிறிஸ்துவின் கட்டளைகளில் அலங்கரிக்கப்பட்டவர்கள் ஆவீர்கள். இந்த நிருபத்தின் ஊடாக, உங்கள் பண்டிகையில் நான் பங்கேற்க முடியும், உங்கள் பங்காளனாக இருக்க வேண்டும. வாழ்க்கையில் வெறுமனே மனிதனாக அல்ல. கடவுளோடு ஒன்றித்திருப்பதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியில் பங்கு பெற முடியும்.

10. ஆகவே, மற்றெல்லோருக்காகவும் மன்றாடுவதை நீங்கள் நிறுத்த வேண்டாம். ஏனென்றால் அவர்கள் தங்கள் நம்பிக்கையை மாற்றி உண்மையான கடவுளைக் கண்டறிவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. குறைந்தபட்சம் நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்து அவர்களுக்கு ஒரு தெளிவைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பைக் கொடுங்கள். அவர்கள் உங்களிடம் கோபப்படும் போது, நீங்கள் சாந்த குணமுள்ளவர்களாக இருங்கள். உங்கள் பணியின் மூலம் அவர்கள் மதிப்புக்குரிய வார்த்தைகளுக்கு எளிமையாக பதிலளிக்கவும். உங்கள் மன்றாட்டின் ஊடாக அவர்கள் செய்யும் அவதூறுகள், பிழைகளை, நீங்கள் கொண்ட நிலையான விசுவாசத்தின் ஊடாகவும் மென்மையான போக்கினாலும் அவர்கள் நோகடிக்கப் படுவதில் இருந்து தவிருங்கள். அவர்களை நோக்கி விதண்டாவாதமான வார்த்தைகளை சொல்ல அவசரப்பட வேண்டாம். ஆனால், உங்கள் நியாயமான, எளிமையான சுபாவத்தின் மூலம் நீங்கள் அவர்களின் சகோதரர்கள் என்பதைக் காட்டுங்கள். இறைவனைப் பின்பற்றுவதில் ஆர்வமாக இருப்போம். தவறுகளைப் பொறுப்பதன் மூலமும், இழப்பை தாங்கிக்கொள்வதிலும், வெறுப்பை சகித்துக் கொள்வதிலும் முதன்மையானவர்களாக இருக்க முயற்சிப்போம். அதேவேளை, உடலாலும், உள்ளத்தாலும் பரிபூரண தூய்மையோடும்  நிதானத்தோடும் இயேசுக் கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருப்போம்.

11. இறுதி நாட்கள் நெருங்கிவிட்டன. மீதமுள்ளவர்களுக்கு கடவுளின் பொறுமையைப் பற்றி பக்தியுடனும் பயத்துடனும் வாழ்வோம். இல்லாது போனால், நமக்கு எதிரான தீர்ப்பைக் கொண்டு வரும். ஒன்று, நம்மீது வரவிருக்கும் கோபத்திற்கு அஞ்சுவோம். இல்லை எனில், நம்முடைய கிருபையை நேசிப்போம் – மற்றொன்று, நாம் இயேசுக்கிறிஸ்துவில் உண்மையான வாழ்க்கைக் வாழ எம்மைத் திடப்படுத்திக் கொள்வோம். அவரைத் தவிர வேறு எதுவும் உங்களிடம் மேன்மையாகக் காணப்படக் கூடாது. அவருடைய உதவியால் ஆன்மீக முத்துக்களைப் போல என்னைக் கட்டுண்ட சங்கிலிகளைத் தாங்குகிறேன். இவற்றில், உங்கள் செபங்களில் எப்போதும் எனக்கொரு பங்குண்டு என்று நான் நம்புகிறேன் – நான் மீண்டும் எழ நேரிட்டால், இயேசுவின் சக்தியின் மூலம் அப்போஸ்தலர்களுடன் எப்போதும் ஒருவராக இருந்த கிறிஸ்தவ எபேசியர்களின் கூட்டத்தில் நானும் ஒருவனாகக் காணப்படுவேன்.

12. நான் யார், யாருக்கு எழுதுகிறேன் என்று எனக்குத் தெரியும். நான் கண்டனம் செய்யப்பட்டவன்; நீங்கள் கருணை பெற்றவர்கள். நான் ஆபத்தில் இருக்கிறேன், நீங்கள் எப்போதும் பாதுகாப்பாய் இருக்கிறீர்கள். கடவுளுக்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்கள் பாதையில் நீங்களும் உள்ளீர்கள். ஒரு துறவியாக, வேதசாட்சியாக இறந்த, பரிசுத்த பவுலுடன் நீங்கள் திருவிருந்துகளில் பங்கு கொண்டீர்கள் – நான் கடவுளை அடையும்போது அவருடைய அடிச்சுவடுகளில் நான் பயணித்திருப்பேன். அவருடைய ஒவ்வொரு நிருபத்திலும் கிறிஸ்துக்இயேசுவில் உங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

13. ஆகையால், கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்கும் அவரைப் புகழ்வதற்கும் அடிக்கடி ஒன்றுகூட, முழுமனதோடும் ஆர்வத்தோடும் இருங்கள். ஏனென்றால், நீங்கள் அடிக்கடி ஒன்றுகூடும் போது, சாத்தானின் சூழ்ச்சிகள் அழிக்கப்பட்டு, அவனால் வரும் ஆபத்துக்கள் உங்கள் விசுவாசத்தின் சக்தியின் மூலம் கரைந்துவிடும். சமாதானத்தை விட சிறந்தது எதுவுமில்லை, அதில் பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள போருக்கான காரணிகளை முடிவுக்கு கொண்டுவருகிறது.

14. நீங்கள் இயேசுக்கிறிஸ்துவிடம் பரிபூரண நம்பிக்கையும் அன்பும் வைத்திருந்தால் இந்த உண்மைகள் அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள் வாழ்க்கையின் தொடக்கமும் முடிவும்; விசுவாசத்தின் ஆரம்பம் மற்றும் இறுதியாக அன்பு; இவை இரண்டும் இறைவனில் ஒற்றுமைக்கு வழி வகுக்கின்றன. இவை அனைத்திற்கும் பிறகு தான், ஒருவர் ஒரு கிறிஸ்தவ மனிதராகப் பரிணமிக்கிறார். விசுவாசத்தை வெளிப்படுத்தும் எவரும் பாவத்தை செய்ய மாட்டார்கள். தர்மம் பண்ணுபவர்களை யாரும் வெறுக்க மாட்டார்கள். ஒரு மரம் அதன் கனியால் தெரிந்து கொள்ளப்படுகிறது. அதேபோல் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் என்று கூறுபவர்களும் அவர்கள் செய்யும் நல்ல செயல்களால் அடையாளம் காணப்படுகிறார்கள். தேவைப்படுவது வெறும் தற்போதைய உத்தியோகம் அல்ல, பதிலாக, விசுவாசத்தின் வலிமையால் நாம் மேற்கொள்ளும் இறுதிவரையான விடா முயற்சியே.

15. கிறீஸ்தவராய் இல்லாது ஒருவர் பேசிக்கொண்டிருப்பதை விடவும், கிறீஸ்தவராய் இருந்து அவர் மௌனியாய் இருப்பது மேன்மையானது. ஒருவர் தாம் கற்றதைப் பிரசங்கிப்பதை கடைபிடித்தால் அதுவே சிறந்தது. அவ்வாறு பேசிய ஒரு குரு இருக்கிறார் – அவரால் பேசப்பட்டது நிறைவேறியது. அவர் அமைதியாய் செய்த காரியங்கள் கூட பிதாவுக்கு மிகவும் பிடித்தமானவை. இயேசுவின் வார்த்தையை உண்மையில் பெற்றுக் கொண்ட எவரும் அவருடைய மௌனத்தை விளங்கி கொள்ளலாம். எனவே நிறைவானவராக இருக்க முடியும். அவர் தனது வார்த்தைகளால் செயல்படவும், மௌனத்தால் அதை அறிந்து கொள்ளவும் செய்தார். இறைவனிடமிருந்து எதுவும் மறைக்கப்படக்கூடியதல்ல. நாம் மறைக்கும் விடயங்கள் கூட அவருக்கு அருகில் தான் உள்ளன. நாம் செய்யும் அனைத்தையும் செய்வோம். ஏனெனில் அவர் நமக்குள் குடியிருப்பதைப் போல – நாம் அவருடைய ஆலயமாகவும், அவர் நம்முடைய கடவுளாகவும் இருக்கிறார். எனவே, உண்மையில், நாம் அவர் மீது கொண்டுள்ள அன்பிலிருந்து இதைத் தெளிவாகக் காண்கிறோம்.

16. சகோதரரே, எந்த தவறும் செய்யாதீர்கள்; குடும்பங்களின் ஊழல் செய்பவர்கள் தேவனுடைய இராச்சியத்தை அடையத் தகுதி அற்றவர்கள். அப்படி செய்தால், சரீர இச்சையின் படி இவற்றைச் செய்கிறவர்கள் கேடு நிறைந்தவர்கள். மோசமான கோட்பாட்டுடன் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை விசுவசியாது அதை அவமதித்தல், எவ்வளவு மோசமானது? அத்தகைய ஒருவன் அப்படிப்பட்ட பாவத்தை கட்டிக் கொள்வானாகில், அவன் நித்திய நெருப்பிற்குள் தள்ளப்படுவான். அவனுக்குச் செவிகொடுபவனும் அவ்வாறே தண்டிக்கப்படுவான்.

17. இந்த காரணத்தினால் தான் இறைவன் தனது திருத்தலையில் பரிசுத்த தைலத்தைப் பெற்றுக்கொண்டார் – அதாவது திருச்சபைக்குள் அழியாத வாசனையை அவர் சுவாசித்திருந்தார். இந்த உலகத்தின் இளவரசனின் கோட்பாட்டின் மணம் மிகுந்த எவற்றாலும் அபிஷேகம் செய்து கொள்ளாதீர்கள். அவர் உங்களுக்கு நியமிக்கப்பட்ட உங்கள் சொந்த வாழ்க்கையே உங்களை சிறைப்படுத்திக்கொள்ளும். இயேசுக்கிறிஸ்து என்ற கடவுளிடம் கிடைத்த அறிவை ஏற்றுக்கொள்வதன் மூலம் நாம் அனைவரும் ஏன் அறிஞர்களாக மாறக்கூடாது? கர்த்தர் உண்மையிலேயே நமக்கு கொடுத்த கிருபையை அறியாமல் நாம் ஏன் நம் முட்டாள் தனத்தில் மூழ்கி அழிந்து போகிறோம்?

18. நான் என் வாழ்க்கையை ஒரு மிக எளிமை என்ற பதத்திற்கு மாற்றீடாக முன்வைக்கிறேன். அது நம்பிக்கை அற்றவர்களுக்கு தடைக்கல்லாக இருக்கிறது. ஆனால் எங்களுக்கு அது இரட்சிப்பும் நித்திய சீவனுமாய் இருக்கிறது. புத்திசாலிகளும் தத்துவவாதிகளும் எங்கே போனார்கள்? தாம் விவேகமுள்ள மனிதர்கள் என்று பெருமை பேசியோர் எங்கே? நம்முடைய தேவனாகிய இயேசுக்கிறிஸ்து, தேவனுடைய கட்டளையின் படி, மரியாளின் வயிற்றில் உதித்து, தாவீதின் சந்ததியினராக இருந்தார். அவர் தனது ஞானஸ்நானம் என்னும் புனித தேவதிரவிய அனுமானத்தின் ஊடாக, தண்ணீருக்கு புனிதத் தன்மையை ஏற்படுத்தினார்.

19. மரியாளின் கன்னித்தன்மையும் பிரசவமும், கர்த்தருடைய மரணமும் இந்த உலகத்தின் இளவரசனிடமிருந்து மறைக்கப்பட்டன – கடவுளின் மௌனத்தின் காரணமாக மூன்று சக்திவாய்ந்த மர்மங்கள் பாதுகாக்கப்பட்டன. அப்படியானால், அவர் எவ்வாறு சரியான நேரத்தில் தோன்றினார்? ஒரு நட்சத்திரம் வானத்தில் பிரகாசித்தது. அது மற்றைய அனைத்து நட்சத்திரங்களையும் விட அது பிரகாசமாக இருந்தது. மேலும், அதன் புதுமை வியக்க வைக்கக் கூடியதாய் இருந்தது. சூரியனும் சந்திரனும் நட்சத்திரத்தைப் பற்றி மற்ற நட்சத்திரங்களுடன் சேர்ந்து ஆர்ப்பரிக்க ஆரம்பித்தன. ஆனால் அந்த நட்சத்திரத்தின் பிரகாசம் மற்றைய எல்லாவற்றையும் விஞ்சியது. வேறு எதையும் போலல்லாமல், இந்த புதுமையின் தோற்றத்தை அறிந்து கொள்வது குழப்பமாக இருந்தது. இவ்வாறு நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்க கடவுள் ஒரு மனிதனின் வடிவத்தில் வந்த போது, ​​எல்லா மாயைகளும் நிர்மூலமாக்கப்பட்டன. ஒவ்வொரு தீங்கிழைக்கும் காரணிகளும் மறைந்துவிட்டன. அறியாமை ஒழிந்தது. பண்டைய இராச்சியம் இடிபாடுகளாக மாறியது. கடவுளின் படைப்புக்கள் ஆரம்பமாகி விட்டன. மேலும் மரணத்தை வெல்லும் நோக்கத்தினால் மற்றைய அனைத்தும் பரபரப்புக்குளாயின.

20. கிறிஸ்துவின் வருகையைப் பற்றி நான் எழுதுகிறேன். தர்மத்திலும், ஒரே விசுவாசத்திலும், தாவீதின் குமாரனாகவும், தேவனுடைய குமாரனாகவும், என்றும் சரீரத்துடனும், ஆன்மாவோடும் வாசம் செய்யும் இயேசுக்கிறிஸ்துவில் சமமாக ஒன்று சேருங்கள். பிரிவை எண்ணாத மனதோடு ஆயருக்கும் மதகுருக்களுக்கும் கீழ்ப்படிய முடியும் என்பதும், அழியாத ஒளடதம் என்பதும் மரணத்திற்கு எதிரான ஒளடதம் என்பதும் புனிதத்தன்மை வாய்ந்த ஒரே அப்பத்தைப் பிட்டு ஒப்புக்கொடுக்கும் செயல் பற்றிய தெளிவான குறிப்பாகும். இது இயேசுக்கிறிஸ்துவில் என்றென்றும் வாழ நமக்கு உதவுகிறது. 

21. கடவுளின் நினைவாக, உங்களுக்காகவும், ஸ்மிர்னாவுக்கு அனுப்பப்பட்ட வர்களுக்காகவும் நான் என் உயிரை தியாகம் செய்கிறேன். இங்கிருந்து நான் உங்களுக்கு எழுதுவதன் மூலம் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். கர்த்தர் என்னை நேசிப்பதைப் போலவே நான் உங்களை நேசிக்கிறேன். இயேசுக்கிறிஸ்து உங்களை நினைவில் வைத்திருப்பது போல் என்னை நினைவில் வையுங்கள். சிரியாவில் உள்ள தேவாலயத்திற்காக ஜெபியுங்கள். அங்குள்ள கடைசி விசுவாசியான நான் ஒரு கைதியாக ரோம் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். கடவுளின் மகிமைக்கு நான் தகுதியானவனாக கருதப்பட்டதால் தான் அவ்வாறாக நடத்தப்பட்டேன். பிதாவாகிய சர்வேசுரனுக்கும் நம்முடைய பொதுவான நம்பிக்கையாளரான இயேசுக் கிறிஸ்துவுக்கும் என்றும் எனது அதிமேன்மை வாய்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் கூறி விடைபெறுகிறேன்.