Mathetes, Epistle to Diognetus

மத்தேடஸ் தியோக்னெட்டஸுக்கு எழுதிய நிருபம்

1 ம் அத்தியாயம் – நிருபத்தின் போக்கு

மிகவும் மதிப்புக்குரிய டையோக்னெட்டஸ்: கிறிஸ்தவர்கள் தங்கள் இறைவனை எவ்வாறு வழிபடுகிறார்கள் என்பதை அறிய நீங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதை என்னால் அறிய முடிகிறது. அவற்றைப் பற்றிய உங்கள் கேள்விகளை நீங்கள் மிகவும் கவனமாகவும் ஆர்வமாகவும் கேட்டுள்ளீர்கள்: அவர்கள் நம்புகிற கடவுளைப் பற்றியும், அவர்கள் கடைபிடிக்கும் மதத்தின் வடிவத்தைப் பற்றியும், அது உலக வாழக்கையை வெறுக்கவும், மரணத்தை இகழ்வதற்கும் வழிகோலுகிறதா? கிரேக்க கடவுள்களையும் யூத மூட நம்பிக்கைகளையும் அவர்கள் நிராகரிப்பதற்குக் காரணம் என்ன? அவர்கள் அனைவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள பாசம் எவ்வாறு இருக்கிறது? இந்த புதிய குழுவும் அவற்றின் நடைமுறைகளும் இப்போது சடுதியாக வெளிவந்ததன் காரணம் யாது? இவை நீண்ட காலத்துக்கு முன்பு அல்லவா வெளிவந்திருக்க வேண்டும்? உங்களுடைய இந்த விருப்பத்தை நான் அன்புடன் வரவேற்கிறேன், பேசுவதற்கும், கேட்பதற்கும், பேச எனக்கு சந்தர்ப்பம் கொடுத்தமைக்காகவும் எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் திருத்தப்பட்டிருப்பதை நான் கேட்கும்படி செய்யவும், கடவுளை வேண்டுகிறேன். அவ்வாறு நான் செய்தமைக்கு வருத்தப்படக்கூடாது என்றும் கூறிக்கொள்கிறேன்.

2 ம் அத்தியாயம் – சிலைகளின் பயனின்மை

அப்படியானால், உங்கள் மனதில் குடிகொண்டிருக்கும் அனைத்து தப்பான எண்ணங்களிலிருந்தும் விடுபட்டு, உங்களை ஆட்கொண்டிருக்கும் பழக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, உங்களை ஏமாற்றும் காரணிகளையும் ஒதுக்கி, ஆரம்பத்தில் இருந்தே, ஒரு புதிய மனிதனைப் போல, உங்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டு, நீங்கள் ஒரு புதிய (ஒழுங்கான) கோட்பாட்டைக் கேட்பவராகவும் இருக்க வேண்டும்; வாருங்கள், சிந்தியுங்கள், உங்கள் கண்களால் மட்டுமல்ல, உங்கள் புரிந்துணர்வுகளுக்கு இடம் கொடுத்து, நீங்கள் காணும் வடிவங்களை தெய்வங்களாக அறிவிக்கக் கூடுமா என்று சிந்தியுங்கள்.
அவற்றில் ஒன்று நாம் அன்றாடம் மிதிக்கும் கல்லைப் போன்றதல்லவா? அவை இரண்டாவது வகை பித்தளையும் அல்ல, அந்த வகையில் இவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண பாத்திரங்களை விட உயர்ந்தவையும் அல்ல. மூன்றாவதாக, இத்துப்போவதற்கு இவை ஒன்றும் மரத்தால் ஆனவையும் அல்ல. நான்காவதாக, இவை வெள்ளியால் ஆனதும் அல்ல, திருடப்படாமல் அதைப் பாதுகாக்க ஒரு மனிதனை நியமிப்பதற்கு. ஐந்தாவதாக, இவை இரும்பினால் ஆனவையும் அல்ல, இலகுவாகத் துருப்பிடித்துப் போவதற்கு. ஆறாவதாக, இவை களிமண்ணால் ஆனவையும் அல்ல, தாழ்மையான நோக்கங்களுக்காக உருவாக்கப்படும் இவை எவ்விதத்திலும் மதிப்பு மிக்கதாகக் கருதப்படுபவை அல்ல. இவை அனைத்தும் சீரழிவை ஏற்படுத்தக்கூடியவையே? அவை இரும்பு மற்றும் நெருப்பு போன்றவற்றின் துணைகொண்டு வடிவமைக்கப்பட்டவை அல்லவா? முதலாவதாக அவற்றை வடிவமைப்பது ஒரு சிற்பி. இரண்டாவதாக அவற்றைக் காய்ச்சும் உலையும், வெள்ளி வடிவமைக்கும் தட்டான் மூன்றாவதாகவும், நான்காவதாக குயவனும் தான் இதில் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கின்றனர். இந்த அனைத்தும், இந்த [தொழிலாளர்களின்] கலைகளால் இந்த [கடவுள்களின்] உருவங்களை உருவாவதற்கு முன்பு, ஒவ்வொன்றும் அதன் சொந்த வடிவத்தில் தானே இருந்திருக்கும்? இப்போது இவை பாத்திரங்களாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அந்த உலோகங்கள் கலைஞர்களை சந்தித்திராவிட்டால், அவை வெவ்வேறு வடிவங்களை அடைந்திருக்க முடியாதல்லவா? இப்போது உங்களால் வணங்கப்படும் இவை, மீண்டும் மனிதர்களால் வடிவமைக்கப்படும் பாத்திரங்களாக மாறாது என்பதைப் பற்றி நிச்சயமாக சொல்லக்கூடுமா? அவர்கள் அனைவரும் காது கேட்கக்கூடியவர்களா? அவர்கள் கண்களால் பார்க்கக்கூடியவர்களா? அவர்களுக்கென்று வாழ்க்கை என்ற ஒன்று உண்டா? அவர்கள் உணர்வு அற்றவர்கள் அல்லவா? அவர்களால் இயங்க முடியுமா? அவை அனைத்தும் என்றாவது சிதைவடைந்து போகக்கூடியனவல்லவா? அவை அனைத்தும் சீர்கேட்டை ஏற்படுத்தக்கூடியன என்பது தானே உண்மை? இவ்வாறானவற்றையே நீங்கள் கடவுள்கள் என்று அழைக்கிறீர்கள்; இவற்றுக்கு சேவை செய்கிறீர்கள்; இவற்றை நீங்கள் வழிபடுகிறீர்கள்; நீங்களும் அவற்றைப் போலவே ஆகிவிடுவீர்கள். இந்த காரணத்திற்காக நீங்கள் கிறிஸ்தவர்களை வெறுக்கிறீர்கள், ஏனென்றால் அவர்கள் இதுபோன்ற உருவாக்கப்பட்ட வடிவங்களை கடவுள்கள் என்று ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், (கடவுள்களாக இருக்க வேண்டும்) என்று கருதுகிற நீங்களே, அவர்கள் (கிறிஸ்தவர்கள்) செய்வதை விட அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறீர்களே? கல் மற்றும் களிமண்ணால் ஆனவற்றை வணங்கும்போது, நீங்கள் அவற்றை அதிகம் கேலி செய்வதும் அவமானப்படுத்துவதையும் உணரவில்லையா? அவற்றைக் காக்க நபர்களை நியமிப்பது மட்டுமன்றி, வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட உலோக சிலைகளை இரவில் நீங்கள் பூட்டிவைத்துவிட்டு, திருடப்படாமல் இருக்க, பகலில் அவற்றைப் பாதுகாக்க காவலர்களை நியமிக்கிறீர்களே? ஏன் திருட்டுப் போய்விடும் என்ற பயத்தினால் தானே? நீங்கள் அவர்களுக்கு வழங்க விரும்பும் அந்த தானத்தை, அவர்கள் உணர்வு, உள்ளவர்களாக இருப்பின், அதன் மூலம் அவர்களை (மரியாதை செய்வதற்கு மாறாக) தண்டிப்பீர்களா? ஆனால், அதேவேளை அவர்கள் உணர்வுள்ளவர்களாக இருந்திருந்தால், நீங்கள் அவர்களை இரத்தத்தோடும் தியாகங்களின் புகையோடும் வணங்குகிறீர்கள் என்றால், இந்த குற்றச்சாட்டை அவர்கள் மீது சுமத்துபவர்களாக இருந்திருப்பீர்கள். உங்களில் யாரேனும் இத்தகைய அவமானங்களை அனுபவிக்கட்டும்! உங்களில் எவரேனும் இதுபோன்ற காரியங்களைத் தனக்குத்தானே செய்து அதைத் தாங்கிக் கொள்ளட்டும்! ஆனால் எவனாவது ஒரு மனிதன் – தான் கட்டாயப்படுத்தப்பட்டால் அன்றி – அத்தகைய நிலைமையை சகித்துக் கொள்ளக்கூடும். ஏனென்றால் அவனுக்கு உணர்வும் காரணமும் இருப்பதனால். ஆனால். ஒரு கல் என்பது அதைத் தாங்குவதற்கு தயாராக இருக்கிறது. ஏனென்றால் அந்தக் கல்லால் அதைப் புரிந்துகொள்ளக் கூடிய உணர்வு இல்லாத படியால். (உங்கள் நடத்தையால்) அவர் (உங்கள் கடவுள்) உணர்வுள்ளவர் என்பதை நிச்சயமாக நீங்கள் காட்டக்கூடாது. உண்மையாகப் பார்க்கப்போனால், அத்தகைய கடவுள்களை வழிபட கிறிஸ்தவர்கள் பழக்கப்படவில்லை என்றே கூறலாம். நான் சொல்ல இன்னும் பல எளிதான விடயங்கள் உள்ளன; ஆனால் சொல்லப்பட்டவை போதுமானதாக இல்லை என்று யாரும் கருதினால், மேலும் அதை பற்றி சொல்வது கால விரயம் என்றே நான் கருதுகிறேன்.

3 ம் அத்தியாயம் – யூதர்களின் மூடநம்பிக்கைகள்

அடுத்ததாக, யூதர்களைப் போலவே கிறிஸ்தவர்களும் சமய வழிபாட்டின் போது அதே வழமைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்பது பற்றி நீங்கள் எதையாவது கேட்க விரும்புகிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். ஆகவே, யூதர்கள் மேலே விவரிக்கப்பட்ட சேவையிலிருந்து விலகி இருக்கும் பட்சத்தில், ஒரே கடவுளை அனைவருக்கும் இறைவன் என்று வழிபடுவது சரியானது என்று கருதுவது முறை தான், (சரி); என்றாலும், நாம் முறையற்றது என கருதிய வழியில் அவர்கள் அவரை துதிப்பார்களாயின், அவர்கள் பெரிதும் தவறு செய்கிறார்கள். சிறிது காலத்திற்கு முன், பிறவினத்தார் இதுபோன்ற தானங்களை உணர்வு மற்றும் செவிப்புலன் இல்லாதவர்களுக்கு வழங்கியது அவர்களது, முட்டாள் தனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது; மறுபுறம், இந்த விதமான தானங்களை கடவுளே கேட்டு இவர்கள் அந்தத் தானத்தை கொடுப்பது போல் நடந்துகொண்ட விதம், மத வழிபாட்டைக் காட்டிலும் முட்டாள் தனமான செயலாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், வானத்தையும் பூமியையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்து, நமக்குத் தேவையான எல்லாவற்றையும் நமக்குக் கொடுப்பவர், அவருக்கு நாம் எதையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நிச்சயம் எதிர்பார்க்க மாட்டார். ஆனால், இரத்தத்தின் மூலமும், தூபத்தின் புகையோடு தகனப் பலிகொடுத்தலும், அவர்கள் அவருக்கு பலியை (ஏற்றுக்கொள்ளக்கூடியவை என்று எண்ணி) ஒப்புக்கொடுக்கிறார்கள். என்றும், அத்தகைய ஒப்புக்கொடுத்தல்களின் மூலம் அவர்கள் அவருக்கு மரியாதை செய்கிறோம் என்றும் நினைப்பவர்கள், எதுவும் தேவையில்லாதவருக்கு அவர்கள் எதையும் கொடுக்க முடியும் என்று கருதுவதன் மூலம், உணர்வுகள் எதுவும் இல்லாத, ஒரு பொருளை நோக்கிய அவர்கள் காட்டும் மரியாதையில் நான் எவ்வித வேறுபாடும் காணவில்லை. எனவே அத்தகைய கௌரவம் அங்கே தேவையற்றதாகவே கருதத் தோன்றுகிறது.

4 ம் அத்தியாயம் – யூதர்களின் ஏனைய அனுசரிப்புகள்

ஆனால் உணவைப் பற்றிய அவர்களின் குற்றமற்ற போக்கு, சபாத் என்ற ஓய்வு நாளைப் பற்றிய அவர்களது மூடநம்பிக்கை, விருத்தசேதனம் பற்றிய அவர்களது வீண் பெருமை, நோன்பு மற்றும் அமாவாசை பற்றிய அவர்களின் ஆடம்பரம் என்பன முற்றிலும் அபத்தமானவை. அவை பற்றிப் பேசுவதற்குக் கூட தகுதியற்றவையாகவே நோக்கப்படுகின்றன. நீங்கள் என்னிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், மனிதர்களால் முறையாக உருவாக்கப்பட்டுள்ளதைப் பயன்படுத்துவதற்காக, இறைவனால் படைக்கப்பட்ட சிலவற்றை ஏற்றுக்கொள்வதும், மற்றையவற்றை பயனற்றவை என்றும் தேவையற்றவை என்று நிராகரிப்பதும் எவ்வாறு சட்டபூர்வமானதாக இருக்கும்? ஓய்வுநாளில் நல்லதைச் செய்ய அவர் நம்மைத் தடைசெய்தார் என்று கடவுளைப் பற்றி பொய்யாகப் பேசுவதை எப்படி இழிவான செயல் அல்ல என்று கூறுவது? சரீரத்தில் மேற்கொள்ளப்படும் விருத்தசேதனத்தை மகிமைப்படுத்துவது மற்றும் அதுவே தெரிந்துகொள்ளப்பட்டமைக்கு சான்றாகும் என்றும், அதன் காரணமாகவே அவர்கள் கடவுளால் நேசிக்கப்பட்டவர்களுமாய் இருந்தார்கள் என்ற கூற்று கேலிக்குரிய விடயமாய்த் தெரியவில்லையா? அது அவர்கள் அனுசரிக்கும் மாதங்களையும் நாட்களையும் பொறுத்தது; கலாத்தியர் 4:10. நட்சத்திரங்கள் மற்றும் சந்திரனுக்காகக் காத்திருப்பது, அவற்றின் சொந்த போக்குகள், கடவுளின் நியமனங்கள் மற்றும் பருவங்களின் விசித்திரங்கள், அவற்றில் சில, விழாக்களுக்காகவும், மற்றயவை துக்கத்திற்காகவும் அமைவது போல – இதை தெய்வீக வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கருதினால், அது முட்டாள்தனத்தின் வெளிப்பாடு என்றே அர்த்தப்படும் அல்லவா? அவ்வாறெனில், (யூதர்களுக்கும் பிறவினத்தாரும்) பொதுவான வீண் ஆடம்பரம் மற்றும் தவறுகளிலிருந்து கிறிஸ்தவர்கள் முறையாக விலகியிருக்கிறார்கள் என்பதையும், யூதர்களின் வீண் பெருமை போன்றவற்றிலிருந்து நீங்கள் இவற்றை சரியாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று நான் நினைக்கிறேன். ஆகையால், நீங்கள் எந்தவொரு மனிதரிடமிருந்தும் கடவுளை வழிபடும் அவர்களது விசித்திரமான மற்றும் அதனுள் பொதிந்திருக்கும் மர்மத்தை கற்றுக் கொள்ளக்கூடாது.

5 ம் அத்தியாயம் – கிறிஸ்தவர்களின் நடத்தை

ஏனென்றால், கிறிஸ்தவர்கள் மற்றைய மனிதர்களிடமிருந்து நாடு, மொழி, அல்லது அவர்கள் கடைபிடிக்கும் பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் இருந்து வேறுபடுவதில்லை. ஏனென்றால், அவர்கள் அவர்களுக்கே என்று அமைக்கப்பட்ட சொந்த நகரங்களில் வசிப்பதில்லை, அல்லது விசித்திரமான உச்சரிப்பையோ பேச்சையோ உபயோகிப்பதில்லை, எந்தவொரு தனித்துவத்தாலும் வரையறுக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதுமில்லை. அவர்கள் பின்பற்றும் நடத்தை நிச்சயமாக எந்தவொரு ஊகத்தாலும் அல்லது அறிந்து கொள்ளத்துடிக்கும் மனிதர்களின் ஆழ்ந்த அக்கறையாலும் திட்டமிடப்படவில்லை; சிலரைப் போலவே, அவர்கள் வெறுமனே எந்தவொரு மனித கோட்பாடுகளையும் ஆதரிப்பவர்களாகவும் அவர்களைப் பற்றி பறைசாற்றிக்கொள்ளவுமில்லை. ஆனால், கிரேக்க மற்றும் அந்நாட்டோடு இணைந்த மிக மோசமான வாழ்கை வாழும் நகரங்களில் வசிப்பது போன்றவை ஒவ்வொன்றும் ஏற்கனவே தீர்மானித்திருப்பது போல, அவர்களின் உடை, உணவு மற்றும் சாதாரண நடத்தை ஆகியவற்றின் அடிப்படையில், பூர்வீக மக்களின் பழக்கவழக்கங்களின் ஊடாக, அவற்றின் அற்புதமான பரிமாணங்களை நமக்குக் காட்டுகின்றன. அவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் வாழ்ந்தாலும், ஆனால் வெறுமனே வெளிநாட்டவர்கள் என்றே கருதப்படுகிறார்கள். குடிமக்களாகிய அவர்கள் எல்லாவற்றையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள், ஆனால் அவற்றை எல்லாம் வெளிநாட்டவர்களைப் போலவே சகித்துக்கொள்கிறார்கள். அனைத்து அந்நிய நாடுகளும் அவர்களுடைய சொந்த நாடாகவும், அவர்கள் அவதரித்த பூமிகள் அனைத்தும் அந்நியர்களின் பூமிகளாகவும் காணப்படுகின்றன. அவர்கள் எல்லோரையும் போலவே திருமணம் செய்து கொள்கிறார்கள்; அவர்கள் குழந்தைகளையும் பெற்றெடுக்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் சந்ததியை அழிக்கவில்லை. அவர்களுக்கென்று பொதுவான ஒரு மேசை உண்டு, ஆனால் பொதுவான படுக்கை இல்லை. அவர்கள் சரீரமாகவே இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் சரீரத்தால் தான் வாழ்கிறார்கள் என்று கூறமுடியாது. 2 கொரிந்தியர் 10: 3 அவர்கள் பூமியில் தங்கள் நாட்களைக் கடத்துகிறார்கள். ஆனால் அவர்கள் பரலோக குடிமக்களாக இருக்கிறார்கள். பிலிப்பியர் 3:20 அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள், அதே சமயம் தங்கள் வாழ்க்கையினால் சட்டங்களை மீறி நடக்கிறார்கள். அவர்கள் எல்லா மனிதர்களையும் நேசிக்கிறார்கள், அனைவராலும் அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்கள் அறியப்படாமலும் கண்டனத்துக்கு உரியவர்களாகவும் இருக்கிறார்கள்; அவர்கள் மரணத்துக்கு உட்படுத்தப் படுகிறார்கள், ஆனாலும் மீண்டும் வாழ்வளிக்கப்படுகிறார்கள். 2 கொரிந்தியர் 6: 9 அவர்கள் ஏழைகள், ஆனால் பலரை செல்வந்தர்களாக மாற்றுகிறார்கள். 2 கொரிந்தியர் 6:10 அவர்கள் அனைத்தையும் உடையவர்களாகக் காணப்படவில்லை. ஆனால் அனைத்தையும் ஏராளமாகக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள், ஆனாலும் அந்த அவமதிப்பின் ஊடாக அவர்கள் மகிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் இழிவான பேச்சுக்கு ஆளாகிறார்கள். ஆனாலும் நியாயப்படுத்தப்படுகிறார்கள்; அவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள், அதேவேளை ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். 2 கொரிந்தியர் 4:12 அவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள், அந்த அவமதிப்பை அவர்கள் கௌரவத்துடன் மீள செலுத்துகிறார்கள்; அவர்கள் நன்மை செய்கிறார்கள், ஆனால் தீயவர்களாக தண்டிக்கப்படுகிறார்கள். தண்டிக்கப்படும்போது, அவர்கள் உடனடியாக மீள வாழ்க்கைகுத் திரும்புவது போல் மகிழ்ச்சியடைகிறார்கள்; அவர்கள் அந்நியர்கள் என்று யூதர்களால் தாக்கப்படுகிறார்கள், கிரேக்கர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள்; இன்னும் அவர்களை வெறுப்பவர்கள் ஏன் வெறுக்கிறார்கள் என்ற காரணத்தை அறியாமலே அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை உமிழ்கிறார்கள்.

6 ம் அத்தியாயம் – கிறிஸ்தவர்களுக்கு உலகத்தோடு உள்ள தொடர்பு

அனைத்தையும் ஒரே வார்த்தையில் சுருக்கமாகச் சொல்லப் போனால் – ஆன்மா உடலில் இருப்பது போல், கிறிஸ்தவர்கள் இவ்வுலகில் வாழ்கிறார்கள். ஆத்மாவானத்து உடலின் அனைத்து உறுப்புகளிலும் கலந்திருப்பது போல, கிறிஸ்தவர்கள் உலகின் அனைத்து நகரங்களிலும் பரந்து விரிந்து காணப்படுகிறார்கள். ஆத்மா உடலினுள் வாழ்கிறது, ஆனாலும் அதுவே உடலாகி விடாது; கிறிஸ்தவர்கள் உலகில் பரந்து வாழ்கிறார்கள், ஆனால் இவ்வுலகம் அவர்களுடையது அல்ல.கண்ணுக்குப் புலப்படாத ஆன்மா உடம்பினால் பாதுகாக்கப்படுகிறது, கிறிஸ்தவர்கள் உண்மையில் உலகில் இருந்தாலும், அவர்களின் விசுவாசம் கண்ணுக்குப் புலப்படாமலே இருக்கிறது. சரீரம் ஆத்மாவை வெறுக்கிறது, அதற்கு எதிராகப் போரிடுகிறது, 1 பேதுரு 2:11 தனக்கு எந்தக் தீங்கும் ஏற்படவில்லை என்றாலும், அது இன்பங்களை அனுபவிப்பதைத் தடை செய்கிறது; உலகமே கிறிஸ்தவர்களை வெறுக்கிறது. தீங்குகள் நேர்ந்தாலும், அவர்கள் இன்பங்களை விட்டொழிக்கத் தயாராகவே இருந்தனர். ஆன்மா அதை வெறுக்கும் சரீரத்தை நேசிக்கிறது, மேலும் அதன் அங்கங்களையும் [நேசிக்கிறது]; கிறிஸ்தவர்களும் அவர்களை வெறுப்பவர்களை அதிகமாக நேசிக்கிறார்கள். ஆன்மா உடலில் சிறை வைக்கப்பட்டுள்ளது, ஆனாலும் ஆன்மாவைத் தாங்கும் அந்த உடலை தன்னகத்தே உள்ளடக்கி வைத்திருக்கிறது. அவ்வண்ணமே தான், கிறிஸ்தவர்கள் இந்த உலகில் சிறைப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் வாழும் இவ்வுலகத்தை ஒன்றாக வைத்திருக்கிறார்கள். அழிவில்லா ஆன்மா மரணம் என்ற ஒரு கூடாரத்தில் சீவிக்கிறது; அவ்வாறே கிறிஸ்தவர்கள் ஊழல்கள் நிறைந்தவர்களாக (உடலோடு கூடிய) இவ்வுலகில் உலவுகிறார்கள். அவர்கள் விண்ணகத்தில் ஒரு அழியாத வாசஸ்தலத்தைத் தேடுகிறார்கள். ஆன்மாவுக்கான உணவு மற்றும் பானம் தவறாக வழங்கப்படுகிற போதும், அது சிறந்ததாகவே அமைகிறது; இதேபோல், கிறிஸ்தவர்கள் நாளுக்கு நாள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டாலும், எண்ணிக்கையில் அவர்கள் அதிகரித்தே காணப்படுகின்றனர். கடவுள் அவர்களுக்கு இந்த அதி சிறப்பு மிக்க நிலையை அளித்துள்ளார். அதை அவர்கள் நிராகரிப்பது நியாயமல்ல.

7 ம் அத்தியாயம் – கிறிஸ்துவின் வெளிப்பாடு

ஏனென்றால், நான் சொன்னது போல், இது அவர்களுக்கு வழங்கப்பட்ட வெறும் பூலோகத்தைக் கண்டுபிடிக்கும் செயல் அல்ல, அல்லது இது வெறும் மனிதனால் சொல்லப்படும் அபிப்பிராயமும் அல்ல. அவை மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய உரிமையை அவர்களுக்கு கொடுக்கின்றன. அதேவேளை, அவை வெறும் மனிதனைப்பற்றிய தெளிவின்மையை அவர்களுக்கு உணர்த்துவதுமில்லை. ஆனால் உண்மையிலேயே கடவுள் எல்லாம் வல்லவர், எல்லாவற்றையும் படைத்தவர், கண்ணுக்குத் தெரியாதவர், பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டு, மனிதர்களிடையே (சத்தியத்தின் வடிவமாக, புரியாத புதிராக) உறுதியாக அவர்களின் இதயங்களில் நிலைகொண்டார். எவரும் அனுமானித்தபடி, அவர் எந்தவிதமான ஊழியரையோ, தேவதூதரையோ, ஆட்சியாளரையோ, அல்லது பூலோகத்துக்குரிய விடயங்களை ஏற்றுக்கொண்டவர்களில் ஒருவரையோ, அல்லது வானகத்துக்கு உரிய விடயங்களை பூலோகத்தின் ஆளுகைக்கு ஒப்படைத்தவர்களில் ஒருவரையோ அனுப்பவில்லை. ஆனால் எல்லாவற்றையும் உருவாக்கி வடிவமைத்தவர் அவர் ஒருவரே. அவரே வானகத்தை உருவாக்கினார் – கடலை அதன் சரியான எல்லைக்குள் அடக்கினார் – அவருடைய கட்டளைகளை அனைத்து நட்சத்திரங்களும் வலுவாகக் கடைபிடிக்கின்றன. அவரிடமிருந்தே சூரியன் தனது அன்றாட சுழட்சியை மேற்கொள்கிறது. நிலவும் அவருக்கு கீழ்ப்படிந்து இரவில் பிரகாசிக்கும்படி கட்டளை இடப்பட்டுள்ளது, நட்சத்திரங்களும் அவருக்குக்குக் கீழ்ப்படிந்து, நிலவைப் பின்தொடர்கின்றன. அவராலே அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. அனைத்தும் அவற்றின் சரியான எல்லைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளன, வானகமும் அத்தோடிணைந்த அனைத்தும், பூலோகமும் அத்தோடிணைந்த அனைத்தும், கடலும் கடல்வாழ் சீவராசிகள், பொருட்கள் அனைத்தும் – நெருப்பு, காற்று, பாதாளம் மற்றும் உயரத்தில் உள்ள அனைத்தும், பூமியின் ஆழத்தில் உள்ளவை மற்றும் இடையில் உள்ள யாவும் அவராலேயே உண்டாக்கப்பட்டன. இவரையே (தூதராக) அவர்களுக்கு அனுப்பினார். அப்படியானால், ஒருவர் தனது மனதில் கொண்டிருக்கும் நோக்கம், கொடுங்கோன்மையைக் கடைப்பிடிப்பதற்காகவா அல்லது பயம் மற்றும் பயங்கரவாதத்தைத் தூண்டுவதற்காகவா? எந்த வகையிலும் கிடையாது. ஆனால் கருணை மற்றும் சாந்தத்தின் செல்வாக்கின் மூலமே இது சாத்தியப்படும். ஒரு அரசன் தன் மகனை – அவனும் ஒரு அரசன் – அனுப்பியவாறே – கடவுள் அவரை அனுப்பினார்; மனிதர்களுக்காக அவர் அவரை அனுப்பினார்; ஒரு இரட்சகராக அவர் அவரை அனுப்பினார், நம்மை வற்புறுத்தாமல், சம்மதிக்க வைக்க விரும்பினார்; கடவுளிடம் வன்முறை என்ற பேச்சுக்கு இடமில்லை. எம்மை அழைப்பது போல, அவர் அவரை அனுப்பினார், பழிவாங்கும் விதமாக நம்மைப் பின்தொடர்வதற்காக அல்ல; எங்களை நேசிக்கவே அவர் அனுப்பினார், நம்மை தீர்ப்புக்கு உட்படுத்துவதற்காக அல்ல. எம்மை நடுத்தீர்க்க அவர் மீண்டும் அவரை அனுப்புவார், அவர் தோன்றுவதை சகித்துக்கொள்வோர் யாருளர் ? மல்கியா 3: 2.
இங்கே காணப்படும் கையெழுத்துப் பிரதிகளில் கணிசமான இடைவெளி காணப்படுகிறது.
கர்த்தரை மறுக்க அவர்கள் வற்புறுத்தப்படுவார்கள், இன்னும் அவர்கள் மீண்டும் எழக்கூடாது என்பதற்காக அவை காட்டு மிருகங்களுக்கு இரையாக்கப்படுவதை நீங்கள் காணவில்லையா? அவர்களில் அதிகமானோர் தண்டிக்கப்படுவதை நீங்கள் காணவில்லையா, மீதமுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. இது மனிதனின் செயலாகப்படவில்லை: இது கடவுளின் வல்லமை; இவை அவருடைய வெளிப்பாட்டின் சான்றுகள்.

8 ம் அத்தியாயம் – வார்த்தை வருவதற்கு முன்பு மனிதர் முகம் கொடுத்த துயர்மிகு நிலை

தேவன் வருவதற்கு முன்பு அவர் யாரென்பதை மனிதர்களில் எவரேனும் புரிந்துகொண்டார்களா? நம்பகமான தத்துவவாதிகள் என்று கருதப்படுபவர்களின் வீண் மற்றும் வேடிக்கையான கோட்பாடுகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அவர்களில் சிலர் கடவுள் தீயின் உருவம் என்றனர். வேறு சிலர் அவர்கள் தங்களைத் தாங்களே வரவிருக்கும் கடவுள் என அழைத்தார்கள்; மற்றும் சிலர் கடவுள் தண்ணீர் வடிவமானவர் என்றனர்; மற்றவர்கள் கடவுளால் உருவாக்கப்பட்ட வேறு சில படைப்புகளைப் பார்த்து அவை தான் கடவுள் என்றனர். ஆனால் இந்த கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்று உறுதிசெய்யப்படுவதற்கு தகுதியானதாக இருந்திருக்குமானால், படைக்கப்பட்ட எஞ்சியுள்ள அனைத்தும் கடவுள் என்று அறிவிக்கப்படலாம். ஆனால் இத்தகைய அறிவிப்புகள் வெறுமனே எம்மை ஏமாற்றுபவர்கள் எம்மைத் தடுமாற வைக்கும் தவறான பதங்கள்; எந்த ஒரு மனிதனும் அவரைக் கண்டதில்லை, அல்லது அவராகத் தெரியப்படுத்தவுமில்லை. ஆனாலும், அவர் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். அவர் விசுவாசத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்தியுள்ளார், தேவனான அவரைக் காண இது ஒன்று மட்டுமே வழி என்று எமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. தேவனைப் பொறுத்தவரை, எல்லாவற்றையும் படைத்து வடிவமைத்தவர் அவரே. அவரவர்க்கு எற்ற பொறுப்புகளையும் வழங்கி, தன்னை வெறுமனே மனிதகுலத்தின் சிநேகிதராக மட்டுமல்லாமல், (அவர்களுடன் அவர் நடந்துகொண்ட விதத்தின் மூலம்) நீண்ட சகிப்புத்தன்மையையும் வெளிப்படுத்தினார். ஆமாம், அவர் எப்போதுமே அத்தகைய ஒரு குணமுடையவராகவே இருந்தார், இப்போதும் இருக்கிறார், எப்பொழுதும் இருப்பார். காருண்யம் மிக்கராகவும், நல்லவராகவும், கோபம் கொள்ளாதவராகவும், உண்மையானவராகவும் (முற்றிலும்) நல்லவராக மட்டுமே இருக்கிறார்; மத்தேயு 19:17. அவர் தனது மனதில் ஒரு பெரிய மற்றும் அனுமானத்துக்கெட்டாத எண்ணக்கருவை ஏற்படுத்தினார். அதனூடாக அவர் தனது குமாரனுடன் மட்டுமே பேசினார். அவர் தனது சொந்த புத்திசாலித்தனமான ஆலோசனையை பாதுகாத்து வைத்திருந்த வரை, அவர் நம்மை புறக்கணிப்பதாகவும், நம்மீது அக்கறை காட்டவில்லை என்றும் தோன்றியது. ஆனால் அவர் ஆரம்பத்திலிருந்தே தயார் செய்து பாதுகாத்த விடயங்களை தம்முடைய அன்புக்குரிய குமாரன் மூலமாக திறந்ததும் வெளிப்படுத்தியும், அனைத்து விதமான ஆசீர்வாதங்களையும் ஏக காலத்தில் நம்மீது பொழிந்தார். இதனால் நாம் அவருடைய நன்மைகளில் பங்குபெறும் அதேவேளை, நாமும் நமது நடத்தைகளை (அவருக்காக செய்யும் சேவைகளில்) செயலில் காட்ட வேண்டும். நம்மில் யார் தான் இவ்வாறான விடயங்கள் நடந்தேறும் என்று எதிர்பார்த்திருக்கக் கூடும்? தேவனுக்கும் அவரது குமாரனுக்கும் இடையே உள்ள உறவுக்கமைய, தன் மனதில் உள்ள அனைத்தையும் அவர் அறிந்திருந்தார்.

9 ம் அத்தியாயம் – தேவனின் திருக்குமாரன் ஏன் மிகத் தாமதமாக அனுப்பப்பட்டார்?

அந்தக் காலம் நீடித்தவரை, அவர் நம்மை அடக்கமுடியாத தூண்டுதல்கள் சுமந்து பல்வேறுபட்ட ஆசைகள் மற்றும் காம இச்சைகள் எம்மை தவறான வழிகளில் இட்டுச் செல்லாவண்ணம் எமக்கு விலக்களித்தார். இது நம்முடைய பாவங்களால் அவர் மகிழ்ச்சியடைந்தார் என்று அர்த்தம் கொள்வதல்ல. மாறாக அவர் நாம் செய்த பாவங்களை சகித்துக்கொண்டார்; அப்போது நிலவிய அநீதிக்கெதிராக செயல்பட வேண்டிய நேரத்தை அவர் அங்கீகரித்திருந்தார். அவ்வண்ணமே அவர் நீதியை உணர்ந்த ஒரு மனதை உருவாக்க முயன்றார். ஆகவே, நமது சொந்த ஆக்கங்களின் மூலம் நாம் வாழ்க்கையை அடைவதற்கு தகுதியற்றவர்கள் என்று நம்பப்படுவதால், தேவனின் தயவால் எமக்கு உறுதியளிக்கபட்டால் அன்றி; தேவனுடைய இராச்சியத்தினுள் நுழைய நம்மால் இயலாது என்பது எமக்கு வெளிப்படுத்தப்பட்டது. ஆயினும், தேவனுடைய வல்லமையால் எமக்கு இப்பாக்கியம் கிட்டக்கூடும். ஆனால், நம்முடைய துரோகச்செயல் அதன் உச்சத்தை எட்டியதும், அதற்குண்டான வெகுமதியான தண்டனையும், மரணமும் நமக்கு வரப்போகிறது என்பது தெளிவாக சொல்லப்பட்டது. முன்னர் தேவன் தம்முடைய தயவையும் சக்தியையும் வெளிப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்ட காலம் வந்தபோது, தேவனின் அன்பு மனிதரைக் கௌரவித்தது மட்டுமன்றி, எம்மை வெறுப்புடன் நோக்கியோ, எம்மைத் தூக்கி எறிந்தோ, நம்முடைய துர்ச்செயல்களை நினைவில் கொள்ளாது எம்மீது மிகுந்த பொறுமை காட்டப்பட்டது. நம்முடைய பாவங்களின் சுமையை அவரே ஏற்றுக்கொண்டார், அவர் தம்முடைய குமாரனை நமக்கு மீட்பளிப்பவராகக் கொடுத்தார். பாவிகள் மத்தியில் பரிசுத்தராகவும், துஷ்டர்கள் மத்தியில் குற்றமற்றவராகவும், அநீதி இழைப்பவர்களுக்கு நீதிமானாகவும், ஊழல்வாதிகள் மத்தியில் நேர்மையானவராகவும், அழிந்து போகிறவர்கள் மத்தியில் அழிவில்லாதவராகவும் அவர் இருக்கிறார். அவருடைய நீதிவழுவாத கோத்திரத்தைத் தவிர நம் பாவங்களைப் போக்க வல்ல வேறு எதுவும் உண்டா? தேவனுடைய ஒரே குமாரனைக் காட்டிலும், துஷ்டரும், தேவபக்தி அற்றவர்களுமான நாம் எவ்வாறு எம்மை நல்லவர்கள் என்று நியாயப்படுத்தப் போகிறோம்? ஓ! என்றும் ஒரு இனிமையான பரிமாற்றமே! தேடி அடைய முடியாத செல்வமே! அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்ட நன்மையே! பலரின் துர்ச்செயல்கள் ஒரு நீதியுள்ளவருக்குள் மறைக்கப்பட வேண்டும், ஒருவருடைய நீதியானது பல பாவிகளை மனம் திருப்ப வேண்டும்! ஆகவே, அக்காலத்தில் எமக்கு உணர்த்தியவாறு இயற்கையானது நமது வாழ்க்கையை மீண்டும் நமக்கு பெற்றுக் கொடுக்க மாட்டாது என்பதை இரட்சகர் எமக்கு உணர்த்தினார். (முன்பு) எமது மீட்பர் காப்பாற்ற முடியாத விடயங்களை கூட காப்பாற்ற முடியும் என்று எமக்கு உரைத்தார். இந்த இரு உண்மைகள் மூலமாக அவருடைய கருணை மீது நாம் நம்பிக்கை கொள்ளவும், நமக்கு ஊட்டமளிக்கவும், தந்தையாய், ஆசிரியராய், ஆலோசகராய், குணப்படுத்துபவராய், நம்முடைய ஞானம், ஒளி, கௌரவம், மகிமை, சக்தி மற்றும் வாழ்க்கை ஆகியவற்றை மதிக்கும்படி எம்மை வழிநடத்துகிறார். ஆகவே உடை மற்றும் உணவு குறித்து நாம் அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை.

10 ம் அத்தியாயம் – விசுவாசத்தின் மூலம் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்

இந்த விசுவாசத்தை நீங்கள் மனதிற்கொள்ள விரும்பினால், அனைத்து விதமான அறிவையும் முதலில் பிதாவிடமிருந்து பெற்றுக்கொள்வீர்கள். தேவன் மனிதகுலத்தை நேசித்தார், அவரே உலகத்தைப் படைத்து அதில் உள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார். அவை அனைத்திற்கும் புரிதலையும் ஏற்படுத்தினார். அவருக்கு மட்டுமே வானகத்தை நோக்கி பார்க்கும் பாக்கியத்தையும் அருளினார். அவரே அவருடைய ஒரே பேறான குமாரனை அனுப்பி, அவர் மூலமாக பரலோகத்தில் ஒரு இராச்சியத்தைப் பற்றி வாக்குறுதியளித்து, அவரை நேசிப்பவர்களுக்கு அதைக் கொடுத்தருளினார். நீங்கள் இதைப் பற்றி அறிந்துகொண்டவுடன், அந்த மகிழ்ச்சியால் நிரப்பப்படுவீர்கள் என்று நினைத்ததுண்டா? அப்படியில்லாவிடில், முதலில் உங்களை நேசித்த அவரை நீங்கள் எப்படி நேசிப்பீர்கள்? நீங்கள் அவரை நேசித்தால், அவருடைய தயவைப் பின்பற்றுபவராக இருப்பீர்கள். ஒரு மனிதன் கடவுளைப் பின்பற்றுபவனாக மாறுவதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அவனாக விரும்பும் பட்சத்தில், அது முடியாமற் போகாது. அந்த மகிழ்ச்சியை, அயலவர்களை ஆளுவதன் மூலமோ, அல்லது பலவீனமானவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதன் மூலமோ, அல்லது செல்வந்தர்களாக இருப்பதன் மூலமோ, பலவீனர்கள் மீது வன்முறையைக் காட்டுவதன் மூலமோ அடைய முடியாது. இவ்வாறான செயல்கள் மூலம் யாராலும் கடவுளைப் பின் பற்றுபவராக மாற முடியாது. ஆனால் இவ்வாறான விடயங்கள் அவருடைய மாட்சிமைக்கு ஏற்புடையதல்ல. மாறாக, தன் அயலானின் சுமையை ஏற்றுக்கொள்பவன்; அவன் எந்த விதத்தில் உயர்ந்தவனாக இருந்தாலும், குறைபாடுள்ள மற்றொருவருக்கு நன்மை செய்யத் தயாராக இருப்பவன்; தேவனிடமிருந்து அவன் எதைப் பெற்றாலும், தேவையுள்ளவர்களுக்கு அதை பகிர்ந்தளிப்பதன் மூலம், (அவருடைய பலன்களை) அவற்றைப் பெறுபவர்களுக்கு அவன் தேவனாகக் காணப்படுகிறான். அவனே கடவுளை உண்மையாகப் பின்பற்றுகிறவன் ஆவான். பூமியில் இருக்கும்போதே, வானகத்தில் உள்ள தேவன் (பூமியை) ஆளுகிறார் என்பதை நீங்கள் காண்பீர்கள்; அப்போது நீங்கள் கடவுளின் உன்னத செயல்களை பற்றிப்பேச ஆரம்பிப்பீர்கள். கடவுளை மறுக்காத காரணத்தால் தண்டனை அனுபவிப்பவர்களை நீங்கள் நேசிக்கவும் பாராட்டவும் வேண்டும். உண்மையான பரலோக வாழ்வு என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும்போது, உலகில் மரணத்தையும் அவமதிப்பையும் நீங்கள் கண்டனம் செய்ய வேண்டும். உண்மையிலேயே மரணம் என்பதையிட்டு நீங்கள் பீதி கொள்ளும் போது, அது நித்திய நெருப்பிற்கு கண்டனம் செய்யப்படுபவர்களையும் கடைசிவரை பாதிக்கக்கூடும். நீதியின் நிமித்தம் நெருப்பை ஒரு கணம் தாங்கிக்கொண்டும், அந்த நெருப்பின் கொடுமையை நீங்கள் அறிந்து கொள்ளும்போதும் அதை மகிழ்ச்சியாக எண்ணுவோரை நீங்கள் நிச்சயம் போற்றுவீர்கள்.

11 ம் அத்தியாயம் – இந்த விடயங்கள் அறிந்துகொள்ளவும் நம்புவதற்கும் தகுதியானவை

விசித்திரமான விஷயங்களைப் பற்றி நான் பேசவில்லை, சரியான காரணத்துடன் பொருந்தாத எதையும் பற்றி நான் குறிப்பிடவில்லை; அப்போஸ்தலர்களின் சீடராக இருந்ததால், நான் பிறவினத்தாரின் போதகராகிவிட்டேன். சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட சீடர்களிடம் எனக்கு வழங்கப்பட்ட விடயங்களைப் பற்றி நான் மறைபரப்பு செய்கிறேன். ஜீவனுள்ள வார்த்தையால் சரியாகக் கற்பிக்கப்பட்டவர்கள், அவருடைய சீடர்களுக்கு வார்த்தையால் தெளிவாகக் காட்டப்பட்டுள்ள விடயங்களை துல்லியமாகக் கற்றுக்கொள்ள முற்படமாட்டார்கள், அப்படியானவர்களுக்கே வார்த்தை வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது; அது (அவர்களிடம்) பேசுகிறது. விசுவாசமற்றவர்களால் அது உண்மையில் புரிந்து கொள்ளப்படவில்லை, அப்படியானால், சீடர்களுடன் உரையாடி, அவரால் உண்மையுள்ளவர் என்று கருதப்பட்டு, பிதாவின் உன்னத கிரியைகளைப்பற்றிய அறிவைப் பெற்றவர் யார்? இதை வெளிப்படுவதற்காகவே வார்த்தையை அவர் உலகிற்கு அனுப்பினார்; அவர், (யூதர்களின்) மக்களால் வெறுக்கப்பட்டார், அப்போஸ்தலர்களால் பிரசங்கிக்கப்பட்டபோது அவர் பிறவினத்தாரின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். ஆரம்பத்தில், புதியவர் போல் தோன்றினாலும், வயதானவராகக் காணப்பட்டார். அத்தோடு புனிதர்களின் இதயங்களில் புதிதாக அவதரித்தவர் இவர்தான். அவர்தான், நித்திய வாழ்வளிக்கும், மகன் என்று இன்று அழைக்கப்படுகிறார்; திருச்சபை செழுமையடைந்து, அதன் கிருபை, பரவலாகப் பரவுகிறது. புனிதர்களால் நிரம்பியுள்ளது. புரிந்துகொள்ளுதலை அளிக்கிறது, மர்மங்களை வெளிப்படுத்துகிறது, நேரங்களை அறிவிக்கிறது, உண்மையுள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, தேடுபவர்களுக்கு கிடைக்கச்செய்கிறது, அவர்களின் விசுவாசத்தின் வரம்புகள் தகர்க்கப்படவில்லை, அல்லது பிதாக்கள் நிர்ணயித்த வரம்புகளும் தாண்டப்படவில்லை. பின்னர் நீதியைப் பற்றிய பயம் முன்னிறுத்தப்படுகிறது, தீர்க்கதரிசிகளின் கிருபை வெளிப்படுகிறது, சுவிசேஷசத்தின் மேலுள்ள நம்பிக்கை உறுதிப்படுத்தப்படுகிறது, அப்போஸ்தலர்களின் பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது, திருச்சபையின் கிருபை புகழ்ச்சி பெறுகிறது; நீங்கள் வார்த்தை கற்பிக்கும் கிருபைக்கு தலைவணங்குவதை அவர் அறிவார்; அதையே அவர் விரும்புகிறார். எங்களுக்குக் கட்டளையிடும் வார்த்தையின் ஊடாக நாம் எந்த விடயத்தை சொல்லத் விழைகிறோமோ அதை நாங்கள் உங்களுடன் வேதனையுடனும், அன்பைப்பற்றி எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட விடயங்களின் ஊடாகவும் தொடர்புகொள்கிறோம்.

12 ம் அத்தியாயம் – உண்மையான ஆன்மீக வாழ்வுக்கு அறிவின் முக்கியத்துவம்

நீங்கள் இவற்றைப் படித்து கவனமாகக் செவிமடுத்தபோது, தேவனை உண்மையாக நேசிப்பது, (நீங்கள்) மகிழ்ச்சியின் சொர்க்கமாக மாறுவது, எல்லா வகையான வளங்களையும் தன்னகத்தே கொண்டு நன்கு செழித்து வளரும் ஒரு மரத்தை உங்களுக்குக் காண்பிப்பது போன்றவற்றை நீங்கள் அறிவீர்கள். அது பல்வேறு கனிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அறிவு என்ற மரமும் ஜீவன் என்ற மரமும் நடப்பட்டுள்ளன. ஆனால் அது அறிவை அழிக்கும் மரம் அல்ல – கீழ்ப்படியாமையே அழிவுக்கு இட்டுச்செல்கிறது. முக்கியத்துவம் இல்லாமல் அந்த வார்த்தைகள் எழுதப்படவில்லை, ஆரம்பத்தில் இருந்தே கடவுள் எப்படி சொர்க்கத்தின் நடுவில் வாழ்க்கை என்ற மரத்தை நட்டாரோ, அந்த அறிவின் மூலம் வாழ்க்கைக்கான வழியை வெளிப்படுத்தினார், முதலில் படைக்கப்பட்டவர்கள் இந்த (அறிவை) சரியாகப் பயன்படுத்தாதபோது, பாம்பின் சூழ்ச்சி மூலம், உடைகள் களையப்பட்டு நிர்வாணமாக விடப் பட்டார்கள். ஏனென்றால், அறிவு இல்லாமல் வாழ்க்கை இல்லை, அல்லது ஒழுக்கமான வாழ்க்கை இல்லாவிடின் அறிவு என்பது பாதுகாப்பாக இராது. எனவே இரண்டும் ஒன்றுக்கு அருகில் ஒன்றாக நெருக்கமாக நடப்பட்டன. அப்போஸ்தலர், (இந்த இணைப்பின்) சக்தியை உணர்ந்து, உண்மையான கோட்பாடு பற்றி அறியாமல், அறிவைக் குற்றம் சாட்டுகிறார், அறிவு பீறிடுகிறது, ஆனால் அன்பு மேம்படுகிறது. உண்மையான அறிவு இல்லாமல் தனக்கு எதுவும் தெரியும் என்று நினைப்பவனும், தனது வாழ்க்கைக்கு சாட்சியாக இருப்பவனும் எதையும் அறியாதவனாக இருக்கிறான், ஆகவே வாழ்க்கையை நேசிக்கத் தவறிய பாம்பால் ஏமாற்றப்படுகிறான். ஆனால் அறிவை பயத்துடன் கலந்து, வாழ்க்கையின் பிற்பாதியைத் தேடுபவர், நம்பிக்கை எனும் செடிகளில் பழங்களைத் தேடுபவர் ஆகிறார். உங்கள் இதயமே உங்கள் ஞானத்தின் இருப்பிடமாக இருக்கட்டும்; உங்கள் வாழ்க்கை உங்களை நோக்கி நீங்கள் பெற்றுக்கொண்ட உண்மையான அறிவாக இருக்கட்டும். இந்த மரத்தைத் தாங்கி, அதன் கனியைக் கண்ணுருவதின் மூலம், கடவுளால் விரும்பப்பட்டவர்களாக நீங்கள் எப்போதும் ஒன்றுகூடி இருப்பீர்கள். அந்த மரத்தை பாம்பால் நெருங்க முடியாது, எந்த வஞ்சகமும் அதை அணுகாது; ஏவாளும் வஞ்சிக்கப் பட்டிருக்க மாட்டாள். ஆதலால் அவள் கன்னியாகவே பார்க்கப்படுகிறாள்; இரட்சணியம் வெளிப்படுத்தப்படுகிறது, அப்போஸ்தலர்கள் புரிந்துகொள்ளல் மூலம் நிரப்பப்படுகிறார்கள், கர்த்தருடைய பஸ்கா முன் நோக்கி நகர்கிறது. மற்றும் இசைக் குழாம்கள் அனைத்தும் ஒன்றுகூடி, அவர்கள் சரியாக வரிசைப் படுத்தப்படுகிறார்கள். வார்த்தையானது புனிதர்களுக்குக் கற்பிப்பதில் பெருமிதம் அடைகிறது. அதன் வழியாகவே பிதா மகிமைப்படுத்தப்படுகிறார்: அவருக்கே என்றென்றும் மகிமையும், மாட்சிமையும் உண்டாகக்கடவதாக. ஆமென்