The Life of Saint Cyprian

சிசில் சிப்ரியன் அவர்களின் வாழ்க்கை வரலாறு

1. ஒரு பக்தியுள்ள ஆயராகவும், கடவுளின் மகிமையான சாட்சியுமான சிப்ரியன் அவர்கள், அவருடைய மேலான பெயரை நிலைநிறுத்தக்கூடிய பல படைப்புகளையும், ஏராளமான பலன்தரும் வளமான சொற்பொழிவுகளையும், கடவுளின் கிருபையையும் பற்றி பரவலாக எழுதியிருந்தபோதும் கூட, அவரது வாழ்வின் இறுதிவரை அவர் ஒருபோதும் அமைதியாக இருந்ததில்லை. ஆகவே, அவரைப் பற்றி சுருக்கமாக எழுத நாம் முடிவு செய்துள்ளோம். எங்கள் இந்த அரும் முயற்சி அவரது படைப்புகளுக்கும் தகுதிக்கும் மிகவும் பொருத்தமான சான்றாக அமையும் என்பதில் ஐயமில்லை. அதேவேளை, அப்படிப்பட்ட ஒரு சிரேஷ்ட மனிதரின் வாழ்க்கையைப்பற்றி யாருக்கும் தெரியாத ஒரு விடயத்தை நாம் சொல்ல முயலவில்லை. எமது வாதம் பிற மதத்தினருக்கும் பொருந்தும். ஆனால் அவரது ஒப்பற்ற மற்றும் உன்னதமான உதாரணம் ஒரு வழிகாட்டலாகவும் படிப்பினையை உண்டுபண்ணுவதாகவும் இருக்கலாம். எங்கள் மூதாதையர்கள், தியாக உணர்வைப் பற்றிய பயபக்தியுடன், தியாகத்தை மிக அதிகமாகப் பெற்ற சாதாரண மக்களையும், புறச்சபையார்களையும் கூட கௌரவித்தனர். அவர்கள் பட்ட இன்னல்களையும் பற்றி அவர்கள் தெரிவித்தனர். அல்லது, நான் கிட்டத்தட்ட சொன்னது போல், நடைமுறையில் அவர்கள் அனைவருமே, எங்கள் அறிவுறுத்தலுக்காக காத்திருக்கின்றனர். இது இனிமேல் பிறக்கவிருப்பவர்களுக்கும் பொருந்தும். உண்மையில், ஒரு நல்ல துறவியாகவும், வேதசாட்சியாகவும் வாழ்ந்த ஒருவர் கடந்து வந்த துன்பங்களை பற்றி எழுதுவது ஒரு துரதிர்ஷ்டவசமான செயலாகக் கருதவேண்டியுள்ளது. அவரது வேதசாட்சியத்துக்கு அப்படிப்பட்ட வகையில், அவரால் கற்பிக்க கூடியதான ஒரு பாடம் இருந்தது. அவரது வாழ்க்கையின் போக்கு அர்த்தமுள்ளதாக இருந்தபோதிலும், அவரது சாதனைகள் நன்கு அறியப்படவில்லை. ஆயினும்கூட, அவை மிகவும் முக்கியமானவை, மிகச் சிறந்தவை, மிகவும் பாராட்டத்தக்கவை, அவற்றின் மகத்துவம் என்னை அச்சப்பட வைத்தது. மேலும், அவரது உரை நடையை குறிப்பிடத்தக்க வகையில் பயன்படுத்துவதில் மரியாதைக்குரிய விதத்தில் என்னால் செயல்பட முடியும் என்பதையும், இதுபோன்ற உண்மையில் பிரமிக்கத்தக்க  செயல்களுடன் எனது செயல்பாடுகளை தொடர்புபடுத்த முடியும் என்பதையும் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். எனினும், அவருடைய வியக்கத்தக்க செயல்பாடுகளுக்கு அவரது எண்ணிலடங்கா கிரியைகளே சாட்சி பகர்கின்றன. அவற்றை நிரூபிக்க வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை. நீங்கள் அதிகம் கேட்க ஆர்வமாக உள்ளீர்கள் என்று தெரிகிறது. அல்லது முடிந்தால், எல்லாவற்றையும் பற்றி தெரிந்துகொள்ள அதிக ஆவலாக இருக்கிறீர்கள் என்பதும் அறிய முடிகிறது. அவரது உண்மையான வார்த்தைகள் உறங்கி கிடந்தாலும் கூட, ஆர்வமுள்ள மற்றும் தீராத ஆவலுடன் நீங்கள் அவருடைய செயல்களை அறிய விரும்புகிறீர்கள். இது சம்பந்தமான எமது சொல்லாற்றல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பதை விட, நான் மிகக் குறைவாகவே இதைப்பற்றி சொல்கிறேன் என்பதே நிதர்சனம். அவரது மேன்மையான தகுதிக்கு முன் இந்த சொல்லாற்றலின் தகுதி குறைந்தே காணப்படுகிறது. அது உங்கள் ஆசைகளை முழு அளவில் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். ஆகவே நாம் இருபுற அழுத்தங்களுக்கும் முகம் கொடுக்கும் நிலையில் உள்ளோம். அவர் தம்முடைய நற்பண்புகளால் நம்மை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதற்காக உங்கள் வார்த்தைகள் ஊடாக மீண்டும் மீண்டும் நீங்கள் எம்மிடம் இறைஞ்சுகிறீர்கள்.

2. அப்படியானால், நான் எதிலிருந்து தொடங்குவது? அவருடைய விசுவாசத்தின் தொடக்கத்திலிருந்தும், அவருடைய பரலோகத்தின் நியமனத்தால் ஆன அவரது பிறப்பு போன்ற கோணத்தில் இருந்து நோக்கும் போது, அவருடைய நற்பண்புகளைப் பற்றிய விவாதத்தை நான் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? ஏனென்றால், உண்மையிலேயே, கடவுளின் படைப்பின் மூலம் ஒரு மனிதன் அவதரித்தான் என்ற உண்மையைத் தவிர, அதற்கு ஈடாக வேறு எதையும் கூறுவதற்கு முடியாமல் உள்ளது. ஆய்வுகளும் இதரக் கலைகளும் அவரது பக்தியுள்ள இதயத்தை ஊக்கப்படுத்தியிருந்தாலும், நான் இவற்றைத் தவிர்த்து விடுகிறேன். ஏனென்றால் அவை இதைத்தவிர உலகில் அவருக்கு வேறு எந்த நன்மையும் கொண்டு வரவில்லை. அவர் பரிசுத்த சாசனத்தை கற்றுக் கொண்டு, உலகை மறைத்துள்ள கார்முகிலை விலக்கி, ஆன்மீக ஞானத்தின் ஒளியை உலகுக்கு உணர்த்திய பின், நான் கண்ட அனைத்தையும், அவருடைய முந்தைய சாதனைகளைப் பற்றி நான் கற்றுக்கொண்டவற்றையும் பகிர்ந்து கொள்ள விழைந்தேன். எவ்வாறாயினும், நான் நேர்த்தியாக இவற்றை அமைத்துக் கொண்டாலும் (செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளபடியால்) அவருடைய மகிமை பற்றி குறைத்து சொல்வதைக் காட்டிலும் என் அறியாமையால் அவற்றை சொல்ல நேரிட்டது என்பதனை மிகத் தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன். தனது விசுவாசத்தின் பிரதான கொள்கைகளில் தனது தன்னடக்கத்தை கடைபிடிப்பது கடவுளுக்கு ஏற்றதானது என்பதை தவிர எதுவும் இல்லை என்று சிப்ரியன் நம்பினார். இதன்மூலம் இதயமும் மனமும் சத்தியத்திற்கான முழு திறனைக் கொண்டதாக மாறக்கூடும். புனிதம் மிகு, ஆரோக்கியமான வாழ்க்கையின் ஊடாக அளவுக்கதிகமான சிற்றின்ப வேட்கையில் இருந்து நாம் விடுபட முடியும். இவ்வளவு அற்புதமான மாற்றத்தை எவ்வாறு ஒருவர் நினைவு கூறக்கூடும்? விசுவாசத்தில் மறுபிறவி எடுத்த புதிய மனிதனிடம் தெய்வீக ஒளியின் விழுமியங்களையிட்டு இன்னும் தெளிவிவூட்டப்படவில்லை. எனினும் ஏற்கனவே இருந்த பழைய சுவடுகளை ஒளியின் மகிமையால்வெற்றி கொண்டார். இது இருள் நீங்கி ஒளியினால் விடியல் உண்டாயிற்று. இன்னும் மகத்தான மற்றும் புனிதமான ஆவணத்தைப் படிப்பதில் இருந்து அவர் கற்றுக்கொண்ட சில விஷயங்கள் இங்கே சொல்லியுள்ள கதைக்கு பொருந்தாது எனலாம். ஆனால், விசுவாசத்தின் ஆரம்ப நாட்களைப் போலவே, அவர் கண்டதை உடனடியாகப் பற்றிக் கொண்டார். தனது செல்வத்தை பகிர்ந்தளிப்பதன் மூலமும், கடவுளின் நன்மைக்காக ஏழைகளுக்கு உதவுவதற்காக தனது சொத்துகளை விற்றதன் மூலமும் ஒரே நேரத்தில் இரண்டு நன்மைகளை தான் அடையமுடியும் என்பதை அவர் உணர்ந்தார். இந்த உலகத்தின் அபிலாஷைகளை அவமதிப்பதை விட தீங்கு விளைவிக்கும் காரணிகள் எதுவும் இல்லை என்பதை விட, ஆன்மீக பக்தியையும் கருணையையும் கடைப்பிடிப்பதன் மூலம் முழுமைக்கான வழியைக் கற்றுக்கொள்வதற்கு அவர் ஏற்கனவே விடாமுயற்சியுடன் செயல்பட தொடங்கினார். ஆதியில் இருந்தோர் யாராவது இதைப் புரிந்து கொண்டார்களா என்று யோசித்தேன். பல ஆண்டுகளாக, அந்த விசுவாசத்தின் சிறந்த வல்லுநர்கள் கடவுளின் வார்த்தைகளுக்கு தங்கள் இதயங்களையும் காதுகளையும் ஒன்றுபடுத்தி எம் மூதாதையர் இவற்றை செய்திருக்கிறார்களா? இன்னும் திறமையற்ற மற்றும் ஒருவேளை இன்னும் நம்பத்தகாத இருள் மிகுந்த யுகத்தைத் தாண்டி, அவரது புத்திசாலித்தனமான மற்றும் போற்றத்தக்க முயற்சியின் மூலம் அவர் பெற்றுக்கொண்டது என்ன? ஒருவன் எதையும் விதைத்த உடனேயே அவற்றை அறுவடை செய்ய முடியாது. புதிதாக தயாரிக்கப்பட்ட அகழிகளில் இருந்து யாரும் திராட்சைகளை பிழிந்து இரசம் பெறுவதில்லை. தற்போது நடப்பட்ட மரக்கன்றுகளில் இருந்து யாரும் பழத்தை எதிர்பார்க்க இயலாது. ஆனால், சிப்ரியனின் வாழ்வில், அனைத்துமே நம்பமுடியாத பாணியில் நடந்தேறியது. விதைப்பதற்கு முன்பே நான் சொல்கிறேன்; (அப்படி ஒரு விஷயத்தைச் சொல்ல முடிந்தால், யதார்த்தம் அதை ஏற்றுக் கொள்ளாது), முதல் அறுவடை மூலம் கிடைக்கும் திராட்சைப் பழங்கள் கொடியையும், பழங்களையும் வேர்களையும் முந்திக்கொண்டது.

3. புதிதாக நுழைந்தவர்கள் (மத விவாதங்களிலிருந்து) விலக்கப்பட வேண்டும் என்று அப்போஸ்தலர்களின் நிரூபங்கள் உரைக்கின்றன. அறிவுறுத்தலைகளுக்கு ஒவ்வாத புதிய சூழ்நிலையில் அவர்கள் கடவுளுக்கு எதிராக ஏதேனும் குற்றம் செய்தால், பலமாத வழிபாட்டின் மூலம் அடைந்த  முட்டாள்தனம் இன்னும் மனதில் ஒளிந்திருக்க வேண்டும் என்றே எண்ணத்தூண்டுகிறது. நான் நினைக்கிறேன் சிப்ரியன் ஒருவர் தான் காலத்தை விட விசுவாசத்தினால் அதிகம் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் என்று. அப்போஸ்தலர் நடவடிக்கையில் கூறப்பட்டதற்கிணங்க, ஒரு சமபாலினத்தவன் பிலிப்பால் உடனடியாக ஞானஸ்நானம் பெற்றதாக விவரிக்கப்படுகிறார். ஏனென்றால் அவர் ஒப்பீடு செய்யாமல் முழு மனதோடு நம்பினார். சமபாலினத்தவர் ஒரு யூதர், அவர் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வந்ததால் ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எழுதியதைப் படித்து கிறிஸ்துவை விசுவாசித்தார். இருப்பினும் அவர் இன்னும் வரவில்லை என்று அவர் நம்பாதிருந்தார். படிப்பறிவற்ற, பேதைகளின் குலத்தோன்றலான சிப்ரியன், முதிர்ச்சியடைந்த ஒரு நம்பிக்கையுடன் தொடங்கி அதில் வெற்றியும் கண்டார். இறுதியாக கடவுளின் கிருபையைப் பொறுத்தவரை அங்கு எவ்விதத் தாமதமோ அல்லது ஒத்திவைப்போ இருக்கவில்லை. நான் மிகக் குறைவாகவே சொன்னேன்; அவர் உடனடியாக திருச்சபை மூப்பராகவும் மற்றும் குருத்துவத்தின் புனிதத்தன்மையையும் பெற்றார். உண்மையில், அத்தகைய நம்பிக்கைக்குரிய மனதில் அளவற்ற கௌரவத்தை யார் நம்பி ஒப்படைக்க மாட்டார்கள்? அவர் ஒரு சாதாரண மனிதராக இருந்தபோதே அதிகம் சாதித்தார். ஏற்கனவே ஒரு திருச்சபை மூப்பராக இருந்தபோது, பழங்கால நீதிமான்களின் உதாரணங்களை நெருக்கமாக பின்பற்றியதன் மூலமும்  மத அனுசரிப்பின் ஊடாக பல கடமைகளை நிறைவேற்றியதன் மூலம் கடவுளை மகிழ்வித்தார். இந்த விஷயத்தில் அவரது வழக்கமான சொற்கள், கடவுளைப் புகழ்ந்து பேசுவதற்காக ஏதாவதொரு குறிப்பிட்ட, தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரைப் பற்றி அவர் வாசித்தறிய வேண்டுமென்றால், அந்த மனிதன் கடவுளுக்கு ஏற்ற செயல்களை செய்துள்ளவரா என அவர் உறுதிப்படுத்திக் கொள்வார். சிலரின் சாட்சியங்களால் புகழ்பெற்ற யோபு கடவுளின் உண்மையான வழிபாட்டாளர் என்றும், பூமியில் யாரையும் அவரோடு ஒப்பிட முடியாது என்பதனாலும், யோபு செய்ததை நாமும் செய்ய வேண்டும் என்று சிப்ரியன் கற்பித்தார். ஆகவே, நாம் இதேபோன்ற செயல்களைச் செய்யும்போது, கடவுளுக்காக இதேபோன்ற ஒரு சாட்சியத்தை முன்வைக்கலாம். தனது சொத்துக்களை இழந்தது பற்றி சிறிதும் கவலை கொள்ளாத அவர், நல்லொழுக்கத்தின் முன்னோடியாக இருந்தார். பாசப்பிணைப்பினால் ஏற்பட்ட தற்காலிக இழப்புகளை இட்டு அவர் கவலை கொள்ள வில்லை. வறுமை அவரை சிதைக்கவோ மற்றும் வலியையோ ஏற்படுத்தவில்லை. அவரது மனைவியின் தூண்டுதல் அவரை எதுவும் செய்ய வில்லை அல்லது அவர் தனது உடலால் அனுபவித்த பயங்கரமான தண்டனை அவரை துவம்சம் செய்யவில்லை. நல்லொழுக்கம் அவளுடைய இருப்பிடத்தில் நிலைத்திருந்தது. பக்தி, ஆழமான வேர்களின் அடித்தளமாக இருந்தது. சோதனைக்கு உட்படுத்தும் சாத்தானின் எந்தவொரு தாக்குதலிலும், துன்பங்களுக்கு மத்தியிலும் கூட, நன்றியோடும், நம்பிக்கையோடும் இறைவனை ஆராதிப்பதை நிறுத்தவில்லை. அவரை நாடி வந்த எவருக்கும் அவருடைய வீடு திறந்திருந்தது. எந்த ஒரு விதவைப் பெண்ணும் வெறும் வயிற்றுடன் கிளம்பிப் போகவில்லை. கண் பார்வை இழந்த எவரும் அவரால் ஒரு தோழனாக வழிநடத்தப்படாமல் இருந்ததில்லை. எந்த ஒரு முடவரும் அவரால் அரவணைக்கப்படாமல் இருந்ததில்லை. சக்திவாய்ந்தவரின் உதவியற்ற எவருக்கும் அவர் ஒரு பாதுகாவலனாக இருந்ததில்லை. ‘கடவுளைப் பிரியப்படுத்த விரும்புபவர்கள் இவற்றைச் செய்ய வேண்டும்,’ என்று கூறியிருந்தார். எல்லா நல்ல மனிதர்களைப்பற்றியும் நற்சான்று பகரும்போது அவர் இவ்வாறு சொல்லியிருந்தார். அவர் எப்போதும் சிறந்தவர்களையே பின்பற்றினார். அதேபோல், அவர் தன்னைப் பின்பற்றும்படியும் செய்தார்.

4. வெளிப்படையாக, சிப்ரியன் ஒரு மூத்தவராக இருந்தபோதும் அவரை விட வயதிலும், பதவியிலும் மூத்தவரான சிசிலியஸுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். இது நேர்மை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக நினைவில் கொள்ளப்பட வேண்டும். சித்தாந்தத்தில் ஏற்பட்ட பிழையால் உண்மையான தெய்வத்தைப் பற்றிய அறிவுக்கு சிப்ரியட்டை வழிநடத்திய இந்த மனிதர் அவரது முழு அன்பு, மரியாதை மற்றும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக மாறினார். அவர் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டார். அதாவது, ஒரு அன்பான நண்பராகவோ அல்லது அதே வயதை ஒத்தவராகவோ அல்லாமல், அவரது புதிய வாழ்க்கையில் அவருடைய பெற்றோரைப்போல் அவர் மாறினார். இந்த மனிதர் முதன்முறையாக அவனது கவனத்திற்கு உட்பட்டு, அவரது அன்பால் ஈர்க்கப்பட்டார். இந்த உலகத்திலிருந்து அவர் வெளியேறிய வேளை அவர்  பக்தி மற்றும் வாழ்க்கை முறையின் பொதுவான பங்காளியாக இருந்தார். அவர் இவ் உலக வாழ்வை நீத்த பிறகு, அந்த மாமனிதருடைய மனைவியையும் குழந்தைகளையும் அன்போடு   கவனித்துக்கொண்டார்.

5. சிப்ரியனின் செயல்களைப் பற்றி கூறுவதானால், அது நீண்ட காலம் எடுக்கும். அவற்றை எண்ணிக்கையில் அடக்குவது ஒரு கடினமான பணியாகும். கடவுளின் தீர்ப்பினாலும், மனிதர்களின் கிருபையினாலும் அவர் ஒரு பாதிரியார் மற்றும் ஆயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளராகவும் அந்த நேரத்தில் ஒரு புதியவராகவும் கருதப்பட்டார். இந்த செயல் ஒன்றே அவரது நற்செயல்களுக்கு போதுமான சான்று என்று நான் நம்புகிறேன். அவர் தனது விசுவாசத்தின் ஆரம்பத்திலும், ஆன்மீக வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தபோதிலும் அவர் சிறந்த குணமுள்ள மனிதராகவே திகழ்ந்தார். எனவே, அவர் தனது எதிர்கால கடமைகளின் பிரகாசம் குறித்து அவர் அக்கறை கொண்டவராக இல்லாவிட்டாலும், அவர் அடையவிருக்கும் குருத்துவத்தின் முழு நம்பகத்தன்மைக்கும் உறுதிபூண்டார். இந்த அசாதாரண நிகழ்வை விட்டு நான் விலக மாட்டேன். கர்த்தருடைய தூண்டுதலால் மக்கள் அனைவரும் அவர்மீதுள்ள அன்பையும் மரியாதையையும் ஆவலுடன் வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது, சிப்ரியன்  தாழ்மையுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறி அவருடைய மூப்பர்களுக்கு அந்த இடத்தைக் கொடுத்தார். அவர் அத்தகைய மரியாதை பெற தகுதியுடையவராகவே  செயல்பட்டார். உண்மையில் அதைவிட அவர் தகுதியானவர். அவர் அந்தஸ்தை விரும்பாதவர். ஆனால் அதைப் பெறுவதற்கு மிகவும் பொருத்தமானவர். மக்கள் பதற்றமடைந்தனர், ஏனென்றால் அவர்கள் இந்த ஆணையால் மிகவும் உற்சாகமாக இருந்தார்கள். இந்த சம்பவம் ஒரு ஆயரை விட, ஒரு ஆன்மீக வேட்கையுடன் அவருக்காக காத்திருந்தது. இலைமறை காய் போல புனிதத்தன்மையால் நிரப்பப்பட்ட இந்த மனிதர் ஒரு பாதிரியார் மட்டுமல்ல, எதிர்கால வேதசாட்சியும் கூட. அவரது சகோதரர்கள் ஏராளமானோர் அவரது வீட்டின் பிரதான நுழைவாயிலில் கூடி ஒவ்வொரு வாயிலிலும் அவர் பால் பாச மழை பொழிந்தனர். அப்போஸ்தலரின் அந்த அனுபவம் அவர் விரும்பியபடியே நடந்தேறியிருக்கக்கூடும் (அதாவது ஜன்னலின் ஊடாக வெளியேறும் வரை). அவர் ஏற்கனவே, நியமிக்கப்பட்ட பாதிரியார் என்ற அந்தஸ்த்தைப் பெற்றிருந்த போதிலும், அப்போஸ்தலருக்குரிய மரியாதையுடன் கௌரவிக்கப்பட்டார். அவரது வருகையை மற்ற அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாகிறது. அவர் வந்ததும், அவரை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இதைப் பற்றி பேச நான் தயங்கினாலும், நான் பேசியே ஆக வேண்டும். அவரது முயற்சியை எதிர்த்த சிலர் இருந்தனர். ஆயினும்கூட, அவர் அவர்களிடம் கனிவாகவும் மென்மையாகவும் நடந்து கொண்டார். அவர் ஆச்சரியப்படும் வகையில் பலர் அவரை அவர்களது நெருங்கிய நண்பர்களில் ஒருவராகக் கருதினர். உண்மையில், அத்தகைய ஏற்றுக்கொள்ளக்கூடிய மனதை மறந்துவிடுவது எப்படிப்பட்டவரையும் ஆச்சரியப்படவைக்குமே தவிர வேறு என்ன செய்யக்கூடும்?

6. இதற்கு மேல் அவருடைய நடத்தை பற்றி விவரிக்க தகுதியானவர் யார்? என்ன பக்தி! என்ன வலிமை! எவ்வளவு கருணை! மற்றும் அதன் ஆழம்! அவரது முகத்தில் மிகுந்த தூய்மை மற்றும் இரக்கத்தின் தோற்றம் தெரிந்தது. அவரைப் பார்த்தவர்களின் மனம் அதைக் கண்டு குழப்பத்தில் ஆழ்ந்தது. அவரது முகம் புனிதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இரண்டும் சமமான அளவுடன் இருந்தது. ஒருவர் அவரைப் பார்த்து பயப்பட வேண்டுமா அல்லது நேசிக்க வேண்டுமா என்ற குழப்பம் மிகுந்திருந்தது. அதேவேளை அவர் பயப்படுவதற்கும் நேசிப்பதற்கும் தகுதியானவர். அவரது ஆடை அவரது முகத்தை ஒத்திருந்தது. அதாவது, அவர் நடுநிலை வகித்தார். அவர் உலக இச்சைகளால் தூண்டப்பட வில்லை. மாறாக அவர் செல்வாக்கு செலுத்தப்பட்டோ அதன் மூலம் மற்றும் தண்டனைக்கு உட்பட்டு அழிந்து போகவோ இல்லை. மிகவும் கச்சிதமான ஆடையை உடுத்தியிருந்ததன் மூலம், அவர் மிகவும் எளிமையாக தோற்றமளித்தார். மேலும், ஒரு பாதிரியாராக, அவருடைய அன்பின் நோக்கம் என்னவாக இருந்தது? அவர் ஏழைகளுக்காக என்ன செய்தார்? உத்தியோகபூர்வமாக  தனது கடமைகளையும் நற்செயல்களையும் செய்ய பயிற்சி பெற்றவர்களுக்கும், சேவை மனப்பான்மையுடன் பொதுவான கடமைகளில் ஈடுபடுவோருக்கும் அவருடைய நீதியின் சாட்சிகள் உணரப்பட்டிருக்கலாம். சிப்ரியட் அவர்கள் ஆயரின் அலுவலகத்தை அலங்கரிக்கும் நோக்கத்தோடு  அங்கு வரவில்லை. ஏனெனில் அந்த அலுவலகம் அவருக்கு ஏற்றவாறு இருந்தது.

7. அதே சமயம், அத்தகைய சலுகைகளூடாக அவர் ஏராளமான மகிமையைப் பெற்றார். உண்மையில், தனது மனசாட்சியின் இரகசிய இடைவெளிகளில் மதம் மற்றும் விசுவாசத்தின் முழு கௌரவமும் நிரம்பப்பெற்றவர். புறமதங்களின் புகழ்பெற்ற பட்டியலில் பகிரங்கமாக பெயரிடப்பட வேண்டும் என்பதை விட வேறு பொருத்தமான எதையும் செய்யாதவர். அவர் எப்போதுமே எல்லாவற்றையும் விரைவாகச் செய்ததைப் போலவே, தியாகத்தின் கிரீடமும் அவரை நோக்கி விரைவாய் வந்திருக்கும். குறிப்பாக, சிங்கங்களுக்கு தன்னை இரையாக்குமாறு அவர் பலமுறை கேட்டுக்கொண்டார். இருப்பினும், அவர் முதலில் வேதேசாட்சியத்தின்  உயர்ந்த நிலையை அடைய விரும்பினார். அதன் பொருட்டு எல்லா நிலைகளையும் கடந்து சென்றார். மேலும், துன்பங்கள் நிறைந்த காலங்களில் உறுதியான மனப்பக்குவம் தேவை. வேதசாட்சியத்தை அடைய அவர் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டார் என்று கற்பனை செய்து பாருங்கள்! விசுவாசத்தின் மூலம் பெறப்படும் அருட்கிருபையின் உச்சத்தை யார் மூலம் காட்டப்பட்டிருக்கக்கூடும்? கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மணமகனுக்கு பொருத்தமாக இருக்கக்கூடிய கன்னி என்பவள் தூய்மையும் பரிசுத்தமும் நிறைந்த வாழ்க்கையை வாழ்வது யாரால் சொல்லப்பட்ட வழக்கம்? மனந்திரும்புதலும், புறமதத்தினருக்கு உண்மையும், பிளவுபட்டவர்களுக்கு ஒற்றுமையும், கடவுளுடைய பிள்ளைகளுக்கு அமைதி மற்றும் சுவிசேஷ வழிபாடுகளையும் கற்பித்தவர் யார்? அவதூறான புறமதத்தினரால் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிர்மூலம் செய்தவர் யார்? கிறிஸ்தவர்களுக்கு ஒரு சிறிய மென்மை அல்லது, மிக மோசமாக, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்ததன் விளைவாக வருங்காலத்திற்கான நம்பிக்கையில் ஒரு சிறிய அளவிலேனும் ஆறுதல் அளிப்பவர் யார்? கருணை மற்றும் பொறுமையை நாம் எங்கே கற்றுக்கொள்கிறோம்? மீட்பின் மகத்துவத்தினால் ஏற்படும் பொறாமையால் ஏற்படும் பகைமையைத் தவிர்க்க எம்மை வழிநடத்துபவர் யார்? தெய்வீக வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு அவற்றை பிரசங்கிப்பதன் மூலம் இவ்வளவு பெரிய தியாகிகளை யாரால் உருவாக்கக்கூடும்? இறுதியாக, ஒரு பரலோக எக்காளத்தின் தெளிவுடன், உயிருள்ள வேதசாட்சியத்துக்கு ஒரு உதாரணமான புகழ்பெற்ற ஒரு செயலைப்பற்றி பற்றி யார் சொல்ல ஆசைப்படுவார்கள்? ஆச்சரியப்படும் விதமாக அதேவேளை  அதிர்ஷ்டவசமாக, கடவுளின் கிருபையால், அந்த நேரத்தில் பல நல்ல நோக்கங்களுக்காக, இந்த மனிதர் புனித வேதசாட்சியத்துக்கு மகுடம் சூட்டினார். வேதசாட்சியாக மரிக்கக்கூடும் என்ற அச்சத்தில் அவர் அவ்வாறு செய்யவில்லை என்பதை அறிய விரும்புகிறீர்களா? அதற்கு நான் வேறு எந்த சாக்குப்போக்கும் கூறவில்லை. அவர் பின்னர் மிகவும் கஷ்டப்பட்டார், அவர் முன்பு அவ்வாறு செய்திருந்தால் அவரது   வழக்கத்தின் படி அவர் அவற்றைத் தவிர்த்திருப்பார். உண்மையில், அவர் அஞ்சியது இறைவனை காயப்படுத்த வேண்டியிருக்குமே என்று மட்டும் தான். முடிசூட்டப்படுவதை விட கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய அவர் விரும்பினார். அவர் எல்லா விடயங்களிலும் கடவுளுக்கு பக்தியுள்ளவராகவும், அதன் மூலம் தெய்வீக ஆலோசனையால் கட்டுப்பட்டவராகவும் காணப்பட்டார். அந்த நேரத்தில் பின்வாங்கும்படி கட்டளையிட்ட இறைவனுக்குக் கீழ்ப்படியாவிட்டால், அவர் அனுபவிக்கும் துன்பங்களுக்கு மத்தியிலும் பாவம் செய்தவர் ஆவார்  என்று அவர் மனதில் நம்பினார்.

8. இறுதியாக, தாமதத்தினால் ஏற்பட்ட நன்மையைப்பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இது குறித்து ஏற்கனவே நாம்  விளக்கமளிக்கப்பட்டுள்ளோம். ஆனால் பின்னர் நிகழ்ந்ததைப் பார்த்து நாங்கள் திருப்தி அடைந்தோம். அவ்வாறு கூறப்பட்டதால் இருந்து அவர் பின்வாங்கியது மனிதன் மேல் கொண்ட பயத்தினால் அல்ல. மாறாக தெய்வீக கட்டளையால் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். வன்முறை  மற்றும் கடுமையான கலவரங்களால் மக்கள் பேரழிவிற்கு ஆளானார்கள். வஞ்சகமுள்ள எதிரிகள் அனைவரையும் ஒரே வலையில் சிக்க வைக்க முடியாது என்பதால், பல சந்தர்ப்பங்களில் ஒரு மனநலம் குன்றிய தன்மையை அம்பலப்படுத்திய பொறுப்பற்ற சிப்பாய் ஒருவனைக்கொண்டு அவர்களை பல்வேறு வழிகளில் ஒவ்வொருவராக ஒழித்துக்கட்டினார். அவர்களின் காயங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, காயமடைந்தவர்களை அவ்விடத்தில் இருந்து அகற்றி அவர்களை கவனித்துக்கொள்வதற்கு அவர் தெய்வீக தீர்வைப் பயன்படுத்தினார். இயற்கையிலும் பிற துறைகளிலும் கூடுதலாக ஆன்மீக ரீதியில் பயிற்சியளிக்கப்பட்ட சிப்ரியட் அவர்கள் அதே இயற்கையால் பாதுகாக்கப்பட்டார். மோதல்களின் வலிமை இருந்தபோதிலும், சீரான பாதையில் நேர்மையின் நடுவில் அவரால் சபையை இயக்கி அதை வழிநடத்த முடிந்தது. இந்த திட்டங்கள் தெய்வீகமானவை அல்லவா? கடவுள் இல்லாமல் இது சாத்தியமாகுமா? என நான் கேட்கிறேன். இதுபோன்ற விடயங்கள் தற்செயலாக நடப்பவை என்று நினைப்பவர்களை  நன்றாக உற்று நோக்கும்படி கூறுங்கள். சபை தெளிவான குரலில் அவர்களுக்கு இவ்வாறு பதிலளிக்கிறது: ‘கடவுளின் சித்தம் இல்லாமல் மக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை நான் ஏற்பதாக இல்லை’.

9. மேலும், இது பொருத்தமானது என்று தோன்றினால், பின்வரும் கருத்துகளையும் கவனியுங்கள். சிப்ரியனுடைய வாழ்க்கையின் பிற்காலங்களில் ஒரு பயங்கரமான தொற்றுநோய் பரவியது. அது அருவருப்பான நோய் மட்டுமல்ல, அது பற்றி கூறுவதற்கே மிகவும் கேடு நிறைந்த கொள்ளை நோயாக இருந்தது. அதன் திடீர் தாக்குதலால் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர். அச்சத்தினால் பீடிக்கப்பட்ட மக்கள் வீடு வீடாக படையெடுத்தனர். அனைவரும் பயத்தினால் மிகவும் நடுநடுங்கிப்போயிருந்தனர். நோய் தொற்றாமல் இருக்குமுகமாக அவர்கள் தப்பி ஓடினர். கொள்ளை நோயால் பீடிக்கப்பட்டுள்ள நபருடன் தங்கி இருப்பது இறப்பதற்கு சமம் என்று நினைத்து அவர்களுடைய அன்புக்குரியவர்களைக்கூட வெறுக்கத் தொடங்கினர். அதே சமயம், நகரத்தின் எல்லாப் பக்கங்களிலும் கொள்ளை நோயால் இறந்தவர்களின் உடல்கள் சிதறிக்கிடந்தது மட்டுமன்றி, நோயுற்றவர்களும் இறக்கும் தருவாயில் உள்ள மக்களும் அவ்வுடல்களுக்கிடையே காணப்பட்டனர். அவர்கள் கடந்து சென்றோரிடம் அனுதாபத்தைப் பெற முயன்றனர். குரூரமான விதத்தில் ஆதாயங்களைத் தேடுவதைத் தவிர வேறு எதையும் பற்றி யாரும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. இதேபோன்ற அனுபவத்தை நினைத்து நடுங்காதவர்கள் இல்லையெனவே கூறலாம். அத்தருணத்தில் அவர் தான் செய்ய விரும்பியதை வேறு எவரும் செய்யவில்லை. இந்த சூழ்நிலைகளில் கிறிஸ்துவின் மற்றும் கடவுளின் பிரதான குருவானவரின் செயல்களை அசட்டை செய்வது குற்றமாகும். கூடியிருந்த மக்களை கருணையுடன் ஆசீர்வதிக்குமாறு முதலில் அவர் அறிவுறுத்தினார். வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள் மூலம் விடயங்களை கருணை உள்ளத்தோடு கையாள்வதில் கடவுளின் வெகுமதி எத்தனை நன்மை பயக்கும் என்பதை அவர் அவர்களுக்குக் கற்பித்தார். கருணை உள்ளத்துடன் நாம் நமது சகோதரர்களை மட்டுமே கவனிப்போமானால் அதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. நிச்சயமாக, ஒரு மனிதன் வரி வசூலிப்பவர் மற்றும் பரிச்சயம் இல்லாத அந்நியரை விட அதிகளவு நற்செயல்களை செய்தால் மட்டுமே அவர் சரியானவர் எனப்படுவார். அதாவது, கர்த்தருடைய ஆலோசனையின் படியும் ஊக்கத்தினாலும், தீமையை நன்மையூடாகவும், கடவுளிடமிருந்து கிடைக்கும் அன்பினூடாகவும் வெல்வதன் மூலமும், எதிரிகளை அதிகமாக நேசிப்பதன் மூலமும், துன்புறுத்துபவர்களின் மன்னிக்கும்படியாக ஜெபிப்பதன் மூலமும் தான் நாம் இறைவனின் கருணையை பெற முடியும். ‘இறைவனான ஆண்டவர் சூரியனை தொடர்ந்து உதிக்கச்செய்து, விதைக்கப்பட்ட விதைகள் முளைப்பதற்கு அவசியமான மழையைப் பொழியச்செய்து, அனைத்தையும் வழிநடத்துவாராக. இத்தனை இரக்கம் மற்றும் கருணையை அவர் காட்டுவது அவருடைய நண்பர்களுக்கு மட்டுமல்ல. கடவுளின் மகன் என்று கூறும் ஒருவர் தனது தந்தையின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டுமல்லவா? எங்கள் பிறப்புக்கு இசைவாக வாழ நாங்கள் தகுதியானவர்கள். கடவுளில் மீண்டும் பிறந்தவர்கள் சிதைவுண்டு போவதில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் ஒரு மகனாக, ஒரு நல்ல தந்தையின் தலைமுறை வாயிலாக அவர் கர்ப்பித்த நன்மையை பின்பற்ற வேண்டும்’.

10. இன்னும் நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. நிச்சயமாக, சொல்ல வேண்டிய முக்கியமான விடயங்கள் உள்ளன. எனினும், இந்த கட்டுரையின் வரையறுக்கப்பட்ட நோக்கம் ஒரு நீண்ட விவாதத்தை செய்வது அல்ல. அதற்கு இடமோ, காலமோ இல்லை. இதுவரை சொன்னவைகள் போதுமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இருப்பினும், புறமதத்தவர்கள் தளம் அமைத்து இந்த விடயங்களைக் கேட்கக் கூடுமானால், அவர்கள் அவற்றை உடனே நம்புவார்கள். அப்படியானால், ஒரு கிறிஸ்தவர் என்ற நாமத்தைப் பெற்றவர், தனது விசுவாசத்தின் மூலம் செய்ய முடியாதது என்று எதுவும் உண்டோ? மனிதர்களின் இயல்பு மற்றும் பண்புக்கு ஏற்ப சேவைகள் உடனடியாக வழங்கப்பட்டன. ஏழைகளின் நலனுக்காக தங்கள் செல்வத்தை தானம் செய்யாத பலர், செல்வத்தை விட வேறு வழிகளில் ஈடு செய்தனர். மேலும் தங்கள் சொந்த உழைப்பால் அவர்கள் பெற்ற அனைத்தையும் மாற்றியோருக்கு சிறந்த ஊதியமாகக் கொடுத்தனர். அத்தகைய எஜமானனின் கீழ் இதுபோன்ற ஊழியத்தில் உடனடியாக சேர விருப்பமற்றோர் இருக்கக்கூடுமோ? அவர் இந்த நேரத்தில் பிதாவாகிய கடவுளையும் நியாயாதிபதியான கிறிஸ்துவையும், எஜமானையும் மகிழ்விக்க முடியும். ஆகவே, மிகப்பெரிய கடமையில் உள்ளடக்கியுள்ள தாராள மனப்பான்மை விசுவாசமுள்ள குடும்பத்திற்கு காட்டுவதற்கு மட்டுமல்ல, அனைவருக்கும் நன்மை கிடைக்கும் இலக்குகளை அடைவதே. அரசனால் கொல்லப்பட்ட அல்லது சொந்த தேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட டோபியாஸின் ஈடு இணையற்ற பக்தியைப் பார்க்கிலும் அதிகமாக அவர் செய்தார். அவர் மீண்டும் மீண்டும் சகித்துக்கொண்டது மட்டுமல்ல, அவர் கிறிஸ்துவுக்கு முன்பாக இருந்தாலும், தான் உண்மையை பேசினேன் என்பதை ஒப்புக்கொள்வார். அவருடைய காலம் வரை அனைத்தும் பரிபூரணமாய் இருக்க வேண்டும்.

11. சிப்ரியன் அவர்களின் நல்ல மற்றும் புனிதமான செயல்களின் நிமித்தம் அவர் நாடுகடத்தப்பட்டார். ஒழுக்கக்கேடானது எப்போதும் கெட்டதை  எமக்கு தருகிறது. ஆயினும் அவற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்டவை நம்மை நல்வழியில் இட்டுச்செல்லும். அதுமட்டுமல்லாமல், கடவுளின் ஊழியரது கேள்விக்கு பதிலளித்ததன் தொடர்ச்சியாக ஆளுநரை ஆயர் விசாரித்தபின் கடவுளின் ஊழியர் அளித்த பதில் பிரச்சினைக்குட்பட்டதாயிற்று.  நகரத்திற்கு நல்லது செய்தவர் அதிலிருந்து வெளியேற்றப்பட்டார் – உயிருள்ளவர்கள் நரக நெருப்பின் ஆக்கினைக்கு ஆளாகக்கூடாது என்பதற்காக பாடுபட்டவர் அவர். அவர் கொடுஞ்செயல்களுக்கு எதிராக விழிப்புடன் செயற்பட்டவர் என்று நான் கூறுவேன். அவர் செய்த நன்மைக்கு எப்போதும் வெகுமதி கிடைக்கப் போவதில்லை என்று நன்றாக அறிந்தே அவர் அந்த நற்செயல்களை செய்தார்.  மக்கள் எல்லோரும் நகரத்தின் பாழடைந்த பகுதிகளை விட்டு வெளியேறும் போது, ​​பாழடைந்த மாநிலமும் ஆதரவற்ற நாடும் மக்கள் அவற்றை விட்டு வெளியேறுவது பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. இருப்பினும், வெளியேற்றப்படுதல் என்ற வார்த்தையை ஒரு தண்டனைக்குரிய விடயமாகவே பார்க்கவேண்டியுள்ளது. உலக நாடுகளில் வாழும் மக்கள் தங்கள் நாட்டை மிகவும் நேசிக்கிறார்கள். அவர்கள் தங்கள் பெற்றோருடன் பொதுவான பெயரைப் பகிர்ந்துகொடுள்ளனர். ஆனால் எமது பெற்றோர் கர்த்தருக்கு எதிராக எம்மைத் தூண்டினால், நாம்  அவர்களை வெறுக்கக்கூடும். அவர்களின் ஊருக்கு வெளியே வசிப்பது  அவர்களுக்கு கிடைக்கும் கடுமையான தண்டனை. ஒரு கிறிஸ்தவனைப் பொறுத்தவரை, அவன் இந்த உலகம் முழுவதையும் தனது வீடாகக் கருதவேண்டும். ஆகையால், அவர் ஒரு இரகசியமான, மறைக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டால், அவர் வெளியேற்றப்பட்டவராகக் கருத முடியாது. ஏனென்றால் அவர் கடவுளோடு விசுவாசத்தில் அன்னியோன்யமாக  இருந்தார். அவர் முழு இதயத்தோடு கடவுளை துதித்தபோதும் கூட, அவர் தனது சொந்த நகரத்திலேயே அந்நியராக கருதப்பட்டார். பரிசுத்த ஆவியின் கொடைகளினூடாக, முன்னாளில் அவரை ஆட்கொண்ட  உலக ஆசைகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அவர் தனது சொந்த குடிமக்களிடையே வாழ்ந்திருந்தாலும், அல்லது அவரது பெற்றோர் மத்தியில் வாழ்ந்த போதிலும், அவர் ஒரு அந்நியராகவே வாழ்ந்தார் என்று என்னால் சொல்ல முடியும். ஒரு விதத்தில் இது ஒரு தண்டனையாகத் தோன்றினாலும், இதுபோன்ற சூழ்நிலைகளிலும் நிகழ்வுகளிலும் நம்முடைய விசுவாசத்துக்கு இது ஒரு சோதனை என்று தான் கூற வேண்டும். அவற்றை பொறுமையுடன் சகித்துக்கொள்ளும்போது அவை தண்டனையாகத் தெரிவதில்லை. ஏனென்றால் அது ஒரு மகிமை. இருப்பினும், நாடுகடத்தப்படுவது எங்களுக்கு ஒரு தண்டனையாகத் தெரியவில்லை. அப்பாவிகளை சாட்சியாக முன்னிறுத்தப்படுவதை செல்வாக்கு படைத்தவர்கள் தண்டனை என்று  நினைப்பதன் மூலம், அவர்களின் மனசாட்சி அவர்களுக்கு மிகப் பெரிய ஒரு நெருடலையும் மோசமான குற்ற உணர்வையும் அளிக்கிறது. இங்கே, அந்த இடத்தின் நிலையையைப் பற்றி விவரிக்க நான் முயலவில்லை. நேரப்பற்றாக் குறை காரணமாக அவற்றைப்பற்றிய அனைத்து விபரங்களையும் தர முடியாதுள்ளது. ஆனால், அந்த இடம் அழுக்கு சாக்கடையால் சூழப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, ஆரோக்கியமற்ற, காற்றோட்டமான சூழல் இல்லாத, கடற்கரைக்கு மிக தொலைவிலும், மிகவும் பாழடைந்த, தனிமைப்படுத்தப்பட்ட, மனித வாழ்வுக்குத் தகுதியற்ற, இருள் சூழ்ந்த இடத்தின் நடுவே அமைந்துள்ளது என்று வைத்துக் கொள்வோம். கடவுளின் ஊழியரான சிப்ரியட் நாடு கடத்தப்பட்டு தங்கவைக்கப்பட்ட இடமாக அது இருக்க முடியுமா? அல்லது எலியாவுக்கு பறவைகள் மூலமும், தானியேலுக்கு தேவதூதர் மூலமும் சேவை செய்யப் பட்டதல்லவா? ஆகவே அப்படிப்பட்ட ஒரு இடத்துக்கு அவர் நாடு கடத்தப்படக்கூடுமா? அவருடைய பெயரை உச்சரிப்பதில் நாம் உறுதியாக இருக்கும் வரை, மிகச்சிறிய விடயங்கள் மனிதகுலத்திற்கு அவசியமானது அல்லது அவசியம் அற்றது என்று எண்ணுவதைத் தவிர்க்க வேண்டும். இதுவரை, கடவுளின் ஊழியர் இரக்கம் மிகு செயல்களைச் செய்துள்ளார். அதன் பெறுபேறுகளையிட்டு அவர் கவலை கொள்ள வில்லை.

12. இப்போது, நான் இரண்டாவது ஸ்தானத்தைப் பற்றி குறிப்பிட முடிவு செய்தபடியால், இந்த சிரேஷ்ட மனிதரின் நல்மனதுக்கும் அவருடைய விருப்பத்திற்கும் ஏற்றவாறு நன்றாக சூரிய ஒளியின் வெளிச்சத்தில் தெய்வீகம் மிக்க ஒரு தங்குமிடம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்வோம். தேவனுடைய இராச்சியத்தையும் அவருடைய நீதியையும் தேடத்தொடங்கிய நாள்முதல், அவர் அறியாத அதிசயங்கள் அவருக்கு அறிவிக்கப்பட்டது மட்டுமன்றி, மன ஆறுதலும் நிறைவாய்க் கிடைத்தன. அவரைப் பார்க்க வந்த சகோதரர்களிடம் கடவுளின் மகிமையான வருகையைப் பற்றியும், அவர் இழந்ததாக நினைத்த எல்லாவற்றையும் அவருக்கு மீண்டும் கிடைக்கச்செய்த குடிமக்களின் தயவையும்  விவரிப்பதை நான் தவறவிட மாட்டேன். இவ்வாறாக நாடுகடத்தப்பட்ட தனது ஊழியர் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய  துன்பங்களில் இருந்து மீண்டு மிகவும் பாதுகாப்பாக இருப்பார் என்றும் அவரது ஆழமான வேதசாட்சியத்தில் முழு நம்பிக்கை வைத்திருப்பார் என்றும் பொருள் பட தேவன் அவரை காத்து இரட்சித்தார். அவர் நாடு கடத்தப்பட்ட ஒருவர் மட்டுமல்ல, ஒரு வேதசாட்சியும் கூட! ‘உண்மையில், நான் நாடுகடத்தப்பட்டிருந்த நாட்களில், ஒரு நாள் நான் உறங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு சாதாரண மனிதனின் உயரத்தை விட மிக உயரமான ஒரு மனிதன் என் முன்னே தோன்றினான்’ என்றார். (அவர் மேலுள்ள அன்பின் மிகுதியின் காரணமாக எனது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் இருந்து நான் மட்டும் எனது சுய விருப்பத்தின் படியே நாடு கடத்தப்பட தேர்ந்தெடுக்கப் பட்டேன். காரணம், அவரது துன்பத்தில் நான் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்காக!). அவரை உரோமருடைய குற்றவியல் நடுவர் ஆய்வகப்  பணிமனைக்கு அழைத்துச் சென்றபோது, நான் அங்கே அமர்ந்திருந்த ஆளுநரை நோக்கி நடந்து சென்றதை பார்க்கக்கூடியதாயிருந்தது. அவர் என்னைப் பார்த்ததும், அவர் பின்னே இருந்த ஒருவர் உடனடியாக ஒரு எழுதுபலகையில் எதோ எழுதத் தொடங்கினார். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. காரணம், அவர் என்னிடம் வழக்கமான முறையில் எதுவும் கேட்கவில்லை. இருப்பினும், அவருக்குப் பின்னால் நின்றிருந்த இளைஞன் அவன் எழுதிய  ஆவணத்தை கவனமாகப் படித்தான். அவர் எழுதப்பட்ட வார்த்தைகளை உச்சரிக்க முடியாததால், சமிக்ஞை மூலமாக பலகையில் எழுதப்பட்ட விடயத்தின் உள்ளடக்கங்களை எனக்கு விளக்கினர். அவரது கத்தியைப் போன்ற தட்டையான திறந்த கை அசைவின் மூலம் சொல்லப்பட்டதை நான் புரிந்துகொள்ளும் வகையில் வாக்கியத்தின் அடையாளத்தை பிரதிபலித்தது.  எனது எதிர்காலத்தில் நான் பெறவிருக்கும் தண்டனை ஊடாக ஏற்படவிருக்கும் துன்பத்தின் நான் புரிந்துகொள்கிறேன். எனவே, சட்டபூர்வமாக மேற்கொள்ள வேண்டிய எனது நடவடிக்கைகளை செம்மைப்படுத்த குறைந்தபட்சம் ஒரு நாளைக்காவது தண்டனையை ஒத்தி வைக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து கோரி வருகிறேன். பலமுறை என்னிடம் வேண்டுகோள் விடுத்த பிறகு, அவர் தனது எழுதுபலகையில் மீண்டும் எதோ எழுதத் தொடங்கினார். இருப்பினும், அவரது முக பாவத்தில் தெரிந்த அமைதியை நோக்கும்போது, என்பால் அதை நியாயப்படுத்த நீதிபதியானவர் தனது மனதை மாற்றிக் கொண்டதை நான் உணர்ந்தேன். அந்த இளைஞன் நான் முன்பு அனுபவித்த துன்பங்களைப்பற்றி என்னிடம் சைகை மூலம் காட்டினான். அந்த சைகை நான் எதிர்பார்த்தபடி மறுநாள் வரை தண்டனை ஒத்திப்போடப்பட்டது என்பதற்கான ரகசிய அடையாளம் என்பதனை மீண்டும் மீண்டும் எனக்கு உணர்த்தியது. தனது கைவிரல்கள் ஒன்றோடொன்றை பின்னி அதை சைகை மூலம் எனக்குக் காட்டினார். நான் இன்னும் தண்டனை அறிக்கையை வாசிக்கவில்லை என்றாலும், தண்டனையை ஒத்திவைத்த படியால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மேலும், அதில் அளிக்கப்பட்டிருந்த விளக்கத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மையை அறிந்து நான் சற்று பயந்திருந்தேன். அந்த பயத்தினால் உண்டான கலக்கம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த என் இதயத்தில் ஆதங்கத்தை ஏற்படுத்தியது.

13. இந்த வெளிப்பாட்டை விட தெளிவான காரணி ஏதாவது இருக்கிறதா; இந்த கருத்தை ஆராய்வதை விட வேறு எது சிறந்தது? பிற்காலத்தில் நடக்கவிருந்த அனைத்து நிகழ்வுகளும் அவருக்கு முன்னறிவிக்கப் பட்டன. கடவுளின் வார்த்தைகள் என்றும் பொய்த்ததில்லை. அத்தகைய தூய்மையான உடன்படிக்கையில் இருந்து எதுவும் அழிக்கப்படவோ அல்லது நீக்கப்படவோ இல்லை. இறுதியாக, நான் உங்களுக்குச் சொல்லிய ஒவ்வொரு விபரத்தையும் நினைவில் கொள்க. அவர் அனுபவிக்கும் தண்டனையைப் பற்றி பரிசீலிக்கையில், தண்டனை மறுநாள் வரை ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று அங்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். அவரால் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுமுகமாகவே இவ்வாறான வேண்டுகோளை அவர் விடுத்திருந்தார். ஒரு ஆண்டுக்கு முன் கண்ட தரிசனத்துக்கு அமைய இந்த ஒரு நாள் அவர் வாழ்வில் அமைந்தது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், கடந்த ஆண்டு அவருக்கு அந்த நிகழ்வு பற்றி வெளிப்படுத்தப்பட்ட அதே தேதியில் அவர் முடிசூட்டப்பட்டார். கர்த்தருடைய தினத்தை வேதாகமத்தின் படி கடைபிடிக்கும் ஆண்டாக நாம் அறிந்திருக்கவில்லை என்றாலும், எதிர்கால நிகழ்வுகளுக்கு அவை பொருத்தமாக இருக்கும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆகையால், ஒரு நாள் ஒரு வருடம் என்று கூறப்பட்டிருப்பது, அதிகமானது என்றும், அது அதிக அளவில் இருக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது. அது இனிமேலும் பொருந்தக்கூடியதல்ல. மேலும், அவை சைகைகளால் விளக்கப்பட்டவை. வார்த்தைகளால் அல்ல. நியமிக்கப்பட்டவை நிறைவேறிய உடனேயே அது வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படுகிறது. உண்மையில், அவர் அதைப் பார்த்த நாளில் தான் முடிசூட்டப்பட்டார் என்பதைத் தவிர, இது ஏன் சுட்டிக்காட்டப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. இருப்பினும், அவர் அனுபவித்த நிந்தனைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆயினும்கூட, நாள் அமைதியாகக் கடந்து சென்றது, நிச்சயமாக, அவர் அது பற்றி அறிந்திருக்கவில்லை. வேதாகமத்தில் இதே போன்ற ஒரு நிகழ்வை நான் கண்டேன். பிரதான குருவாகிய சகாரியாஸால் தேவதூதனால் வாக்குறுதியளிக்கப்பட்ட குமாரனை நம்பாததால் பேச அவரால் முடியாமற் போனது. அதன் காரணமாக, தனது மகனின் பெயரை வாயால் உச்சரிப்பதற்கு பதிலாக, அதை எழுத ஒரு எழுதுபலகையை கேட்டு வாங்கி அதில் ஒரு அடையாளத்தை இட்டார். தேவனுடைய தூதன் தன் குரு அனுபவித்த துன்பத்தின் அடையாளத்தை விசுவாசத்தின் மூலம் வெளிப்படுத்தியதன் ஊடாக அவரை சக்தி மயப்படுத்தினார். எவ்வாறாயினும், அவர் மரணதண்டனை ஒத்தி வைக்க கால அவகாசம் கேட்டதன் காரணம், அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவதற்கும் மற்றும் இதர கடமைகளை செம்மைப்படுத்துவதற்கும் எதுவாகவே. எவ்வாறெனினும், அவருடைய குருத்துவக்கடமைகள் தவிர, அவர் வேறு என்ன ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்? அல்லது கடைசியாக நிறைவேற்றப்படவேண்டியவை என்னென்ன? ஏழைகளின் பராமரிப்பு குறித்து தான் எடுக்க வேண்டிய முடிவுகள் போன்ற அனைத்து விடயங்களையும் செய்துமுடிக்க அவருக்கு அந்த அவகாசம் தேவைப்பட்டது. உண்மையில், அவரை நாடுகடத்த அல்லது கொல்ல நினைத்த மக்களால் தான் அவர் தூக்கிலிடப்பட்டார் என்று நான் நம்புகிறேன். வேறு எந்த காரணங்களும் இருக்க வாய்ப்பில்லை. அவரின் நோக்கம் ஏழைகளுக்கு சேவை செய்வதேயாகும். உண்மையாகக் கூறப்போனால் அவருடைய கடைசி விருப்பம் ஏழைகளுக்கு சேவை செய்வதாகவே இருந்தது. ஆகையால், அவருடைய விவகாரங்கள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. அத்தோடு அவருடைய கடைசி விருப்பம் நிறைவேறியவுடன் மறுநாள் உதயமும் நெருங்கிவிட்டது.

14. சிஸ்டஸ் நகரத்திலிருந்து ஒரு தூதர் ஏற்கனவே அங்கு வந்திருந்தார். மேலும் அவர், தான் எதிர்பார்த்திருந்த கொலையாளி அருகில் வந்து விட்டதாகக் கூறினார். ஒரு புனிதமான, விசுவாசியான அவர் தண்டனை நிறைவேற்றப்படக் காத்திருந்தார். அவர் ஒரு மிகவும் போற்றப்பட்ட மற்றும் அமைதியான தேவ ஊழியராக இருந்த அவர் இறுதியில் பரிசுத்த வேதசாட்சியாக சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளானார். அப்படிப்பட்ட கொடூரமான தண்டனையை நிறைவேற்றிய கொலைகாரனாக அந்தக் கொலையாளி கருதப்பட்டான். அதைத்தான் அவன் வாழ்நாள் முழுவதும் செய்துள்ளான். ஒவ்வொரு நாளும் மரணத்திற்காகக் காத்திருக்கும் ஒருவருக்கு மரணம் என்பது ஒரு கிரீடத்தைப் போலவே அமைகிறது. அதே நேரம், அவரது பழைய நண்பர்கள், உயர் அதிகாரிகள், உன்னத குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற பிரபுக்கள் அவரிடம் வந்து அவரை அங்கிருந்து வெளியேறும்படி கேட்டிருந்தனர். இது வெறுமனே வெற்புறுத்தலாக மட்டும் இருந்துவிட வில்லை. அவர் அங்கிருந்து வெளியேறும் பட்சத்தில், அவர் சென்று தங்குவதற்கான இடங்களையும் அவர்கள் ஆயத்தம் செய்ய முன்வந்தனர். ஆனால் சிப்ரியன் அவர்களோ விண்ணக வாழ்வில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். எனவே உலகத்தை அவர் வெறுக்கத் தொடங்கியது மட்டுமன்றி, தன்மேல் அக்கறை காட்டியவர்களால் அவருக்கு ஏற்பட்ட சோதனைகளுக்கு இணங்கவும் மறுத்துவிட்டார். ஆனால், அவ்வேளை இறையருளால் அவர் காப்பாற்றப்படவேண்டும் என்று கட்டளையிடப் பட்டிருந்தால், ஒருவேளை அவர் தனது விசுவாசிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருந்திருப்பார். நிச்சயமாக, அத்தகைய ஒரு உன்னத மனிதனின் உத்தமமான தியாகச்செயலை மதித்து பாராட்டாவிட்டால், எம்மில் எவ்வித மதிப்பும் கிடையாது. உலகம் வைராக்கியத்தால் நிறைந்தது, தலைவர்கள் அவருடைய பெயரை துச்சமாக எண்ணி வெறுத்த போதும் கூட, அவர் தனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், தேவ ஊழியர்களுக்கு உபதேசம் செய்தார். கர்த்தருடைய அறிவுரையின் பேரில், அந்திம காலத்தில் அவர் வருவார் என்ற மகிமையை தியானிப்பதன் மூலம் இந்த பூவுலகத்தில் வாழும் காலங்களில் ஏற்படக்கூடிய துன்பங்களை புறக்கணிக்கும்படி அவர்களை ஊக்குவித்தார். உண்மையில், அவர் பிரசங்கிப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். கடவுளைப் பற்றி நிறையப் பேசிய அவர் போதனைகளை மேற்கொள்ளும் போதே இறைபதம் எய்தும் பாக்கியத்தை கேட்டு இறைஞ்சினார்.

15. இந்த வழியில், தேவே ஊழியர்களின் அன்றாட கடமைகள் கடவுளுக்குப் பிரியமான ஒரு தியாகச் செயலாகும். ஆளுனரின் உத்தரவின் பேரில், அதிகாரி ஒருவர் திடீரென சம்பவ இடத்தில் தனது படையினருடன் தோன்றினார். அல்லது, இன்னும் சொல்லப்போனால், அவர்கள் அறியாமல் அவரிடம் வந்ததாகவே அவர்கள் எண்ணினார்கள். (அவரது விசுவாசத்தின் ஆரம்ப நாட்களில், அவரது சொத்துக்கள் விற்கப்பட்டு இருந்தாலும், கடவுளின் கிருபையால் அவை மீண்டும் அவரிடம் வந்து சேர்ந்தன. உண்மையில், சட்டப்படி அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தால், அவர் மீண்டும் சொத்துக்களை விற்று ஏழைகளின் நலனுக்காக கொடுத்திருந்திருக்க முடியும்). எப்போதுமே தயாராக இருக்கும் ஒரு மனம், எதிர்பாராத தாக்குதல் ஒன்று ஏற்படப்போகிறது என்பதை அறியாமல் இருக்குமா? எனவே அவர் மிகவும் தாமதமாக உணர்ந்தாலும், அதை பொருட்படுத்தாது தான் செய்யும் காரியங்களிலேயே கண்ணாயிருந்தார். அவர் ஒரு தீவிரமான மற்றும் உறுதியான மனதுடன், முகத்தில் மகிழ்ச்சியுடனும், இதயத்தில் தைரியத்துடனும் காணப்பட்டார். இருப்பினும், தண்டனை அடுத்த நாள் வரை ஒத்திவைக்கப்பட்டதால், அவர் உரோம அரச குற்றவியல் நடுவர் ஆய்வகப் பணிமனை அதிகாரியின் இல்லத்திற்கு போயிருந்தார். அப்போது திடீரென்று கார்தேஜ் முழுவதும் அவர் அங்கே இருப்பதாக வதந்திகள் பரவின. தீசஸ் (சிப்ரியன்) செலுத்திய செல்வாக்கின் காரணமாக, எல்லோரும் அவரின் புகழை அறிந்திருந்தார்கள். அவரது புகழ், கௌரவம் போன்றவற்றால் மட்டுமல்ல, அவரது சிறப்பான செயல்களாலும் அவர் அதிகமாக அறியப்பட்டிருந்தார். எல்லா இடங்களிலிருந்தும் இருந்து வந்த  மக்கள் அங்கு திரண்டனர். விசுவாசத்தினூடான எங்கள் பக்தியின் காரணமாக இது எங்களுக்கு ஒரு புகழ்பெற்ற நிகழ்வு அன்று போற்றினர். ஆனால் புறமதத்தினர் அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும், ஒரு இரக்க சிந்தையுள்ள காவலர் ஒருவர் அன்றிரவு அவரை அழைத்துச் சென்று ஒரு அதிகாரியின் வீட்டில் தங்க வைத்தார். பின்னர் நாங்கள், அவரது தோழர்கள் மற்றும் நண்பர்கள் வழக்கம் போல் அவருடன் இருந்தோம். இதற்கிடையில், மக்கள் அனைவரும் அந்த அதிகாரியின் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தெரியாமல் இரவில் ஏதாவது நடக்கும் என்று அவர்கள் கவலை கொண்டிருந்தனர். தெய்வீக நன்மை என்பது எப்போதுமே விலைமதிப்பற்ற ஒன்று. தேவனுடைய மக்கள் தேவ ஊழியரின் துன்பங்களில் அவரோடு நின்று அதை பகிர்ந்துகொள்ள மிகவும் ஆவலாயிருந்தனர். அவர் ஏன் மீண்டும் அதிகாரியின் வீட்டிற்கு வந்தார் என்று யாராவது கேட்கலாம். வெளிப்படையாக, சிலர் இந்த நடவடிக்கையை விரும்பினர். ஆளுனரும் தனது பங்கிற்கு அதை விரும்பவில்லை என்றே தெரிந்தது. புனிதத்தன்மையான விடயங்களில் தனது செல்வாக்கை செலுத்துவதில் ஆளுநரிடம் தெரிந்த சோம்பேறித் தனத்தைப் பற்றிக் கூற என்னை நான் சற்றே தொலைவில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு பக்தியுள்ள மனத்தால் மனசாட்சிக்கு விரோதமாய் இந்த பாவச்செயலை அனுமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. அதாவது, ஒரு புனிதமான வேதசாட்சியானவர் ஒரு தனி மனிதனின் பிடிவாத குணத்தினால் தீர்ப்பிடப்படுவதை பற்றியே இங்கு சொல்ல வருகிறேன். ஒரு வருடத்துக்கு முன் தீர்மானிக்கப்பட்ட அந்த நாளை என்ற நாள் நிதர்சனமாய் உதயமாக வேண்டும்.

16. இறுதியாக அந்த நாள் வந்தது – குறிக்கப்பட்ட அந்த நாள்; தீர்மானம் மிக்க அந்த நாள் மற்றும் தெய்வீகத்தன்மை வாய்ந்த அந்த நாள்; கொடுங்கோலன் தண்டனையை நிறைவேற்ற தயாராக இருந்த அந்த நாள் உதயமானது. இனிமேலும் ஒத்திவைக்கவோ அவகாசம் பெறவோ முடியாது. சூரிய ஒளி பிரகாசித்தது. மேகங்கள் வானில் எங்கும் அழகாகக் காட்சியளித்தது. அன்று தனது இன்னுயிரை தியாகம் செய்யக் காத்திருந்த மனிதனின் மனதிற்கு இது ஒரு மகிழ்ச்சியைத் தந்த நாளாகவும் இருந்தது. அவர் அதிகாரியின் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அவர் கிறிஸ்துவின் வழிகாட்டலில் தேவனால் தேர்தெடுக்கப்பட்ட அதிகாரியாக இருந்தார். பல்வேறு தராதரத்தையுடைய அணிகள் மற்றும் அணிகளைச் சேர்ந்தவர்கள் சுவர் போல் அவரைச் சூழ்ந்திருந்தனர். அதுமட்டுமல்லாமல், அதிக எண்ணிக்கையிலான படையினர் அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் மரணத்தை எதிர்த்துப் போராடக் கூடிய ஒருவரை  எதிர்கொள்வது போல் அவரைச் சூழ்ந்திருந்தனர். அவர் மைதானத்தை கடந்தபோது துக்கம் அவரை பற்றிக்கொண்டது. அந்த அரங்கம் இது மிகவும் நன்றாக உருவாக்கப் பட்டிருந்தது. ஆயினும் அதி ஒரு  உள்நோக்கம் இருந்தது. சிப்ரியன் அவர்கள் நீதியின் கிரீடத்திற்கான பயணத்தை நிறைவு செய்து மற்றுமொரு கிரீடத்தைப் பெறுவதற்கான பயணத்தை ஆரம்பித்திருந்தார். அந்தப் பயணத்தைப் பற்றி தியானிக்க பொருத்தமான இடத்தைக் கடந்து சென்றார். அவர் உரோம அரச குற்றவியல் நடுவர் தீர்ப்பு மையத்துக்கு வந்தார். அதுவரை ஆளுனர் அங்கே சமூகமளித்திராத காரணத்தால், அவருக்கு பிறிதொரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் நீண்ட பயணத்தின் காரணமாக வியர்த்தபடி அங்கே அமர்ந்திருந்தார். (வழமைக்கு மாறாக, அவர் அமர்ந்திருந்த இருக்கை கைத்தறி துணியால் மூடப்பட்டிருந்தது. நிந்தனைக்குள்ளான போதும் கூட ஒரு மூத்த குடிமகனுக்கு அளிக்க வேண்டிய மரியாதை அங்கு அவருக்குத் தரப்பட்டிருந்தது). ஒரு முன்னாள் கிறிஸ்தவ அதிகாரி, சிப்ரியன் அவர்கள் தனது ஆடைகளை மாற்றத் தயாராக இருப்பதாக நினைத்து அவருக்கு தனது உடைகளைக் கொடுத்தார். இரத்த வியர்வையில் நனைந்து  வேதசாட்சியத்தின் ஊடாக இறைவன் திருவடிக்கு செல்லத் தயாரான ஒருவருக்கு, தனது  ஆடையைக் கொடுப்பது தவிர அவர் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை என்பது உறுதியாய்த் தெரிந்தது. சிப்ரியன் பதிலாக அவரிடம், ‘இனிமேல் வராத பிரச்சனைகளுக்கு இன்று நாம் தீர்வு காணப்போகிறோம். மரணத்தையே துச்சமாக எண்ணிய எனக்கு சரீரத்தால் ஏற்படக்கூடிய உபாதைகள்  என்ன செய்துவிட முடியும்?’ என்று கேட்டார். திடீரென்று, ஆளுனர் அரங்கத்திற்குள் வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சிப்ரியன் தனது இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, ஆளுநரின் முன் நிறுத்தப்பட்டு அவருடைய பெயர் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு அங்கே அவர் தான் அந்த மனிதர் என்று பதிலும் கொடுக்கப்பட்டது.

17. பின்னர் நீதிபதி தனது எழுது பலகையில் இதற்குமுன் (தண்டனை பற்றி) இதுவரை அறிந்திராத தீர்ப்பை வாசித்தார். இது ஆத்மீகவாதத் தண்டனை எனப்பட்டது. இது ஆயர்கள் மற்றும் அவர்களின் சாட்சிகளுக்கும் அளிக்கப்பட மரண தண்டனை. தான் சார்ந்திருந்த மரபுகளை மதித்த ஒருவருக்கு அல்லது தெய்வங்களின் எதிரி என்று அழைத்த ஒரு நபருக்கு இது ஒரு உயந்தபட்ச தண்டையாக அமைந்தது. அவர் தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக செயல் பட்டார். மேலும் அவர் தான் சிந்திப்போகும் இரத்தத்தின் மூலம் ஒழுக்கத்தை நிலை நாட்டுவார். இதற்காகவே இந்த மரண தண்டனையே  தவிர வேறு இதில் எந்த உண்மையும் கிடையாது. உண்மையில் இதுபற்றிய விளக்கத்தை ஒரு பலமத வழிபாட்டாளர் கூறுகிறார். ஆகவே  அது ஒரு தெய்வீக கட்டளை என்றே எண்ணத்தூண்டுகிறது. இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் புனிதத் தன்மை வாய்ந்த ஆயர்கள் பொதுவாக தங்களுக்கு வரப்போகும் தூபங்களை முன்கூட்டியே அறிந்திருந்தனர். கிறிஸ்துவின் வழிகாட்டுதலுக்கமைய தனது வாழ்க்கையை வாழ சிப்ரியன் அதிகம் பிரயாசை மேற்கொண்டார். அவர் போலி தெய்வங்களின் எதிரியாக செயல்பட்டார். சிலைகளை அழிக்க கட்டளையிட்டார். மேலும், தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தார். அவரது இரத்தத்தால் நல்லொழுக்கத்தை ஸ்தாபித்தார். மேலும் வேதசாட்சியத்தின் மகிமை அவரிடம் பிரதிபலித்தது. அவர் தனது சொந்த இரத்தத்தை சிந்துவதன் மூலம் ஒழுக்கத்தை நிலைநாட்டினார்.

18. அவர் உரோம அரச குற்றவியல் நடுவர் தீர்ப்பு முனையத்தின் வாயில்களைக் கடந்து சென்ற போது, இராணுவ சிப்பாய்கள் அடங்கிய வீரர்கள் குழுவொன்று அவருடன் சென்றது. அவர்களோடு, நூறுபேர் கொண்ட படையணித் தளபதியும், படையினரும் சூழ்ந்துகொண்டு அவருடன் சென்றார்கள். இது அவருடைய விருப்பத்திற்கு மாறாகவே நடைபெற்றது. அவர் உண்மையில் பாடுகளை அனுபவித்த இடம் ஒரு பள்ளத்தாக்கு பிரதேசமாகும். எல்லா பக்கங்களிலும் அடர்த்தியான மரங்களால் கிரமமாக சூழப்பட்டிருந்த படியால் அந்த இடம் மிகவும் ரம்மியமாகக் காட்சி தந்தது. இருப்பினும், அப்பகுதியில் காணப்பட்ட அடர்த்தியான சூழ்நிலையால் அந்த இடம் மறைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அங்கே இருந்த மக்கள் கூட்டம் சற்று குழப்பமடைந்தது. அவருடைய நண்பரான சக்கேயசைப் போலவே, அவருடைய மற்றைய  தோழர்களும் மரங்களில் ஏறி அவரைப் பார்க்க முடியுமா என்று ஆவலாய் இருந்தனர். தாமதமாக மரணதண்டனை விதிக்க உத்தரவிட்ட படியால் சிப்ரியன் தனது கண்களை தாமே இறுகக் கட்டிக்கொண்டார். வாளால் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்ற நியமிக்கப்பட்டிருந்த நபர், மிகவும் கலக்கமுற்றவராய் வாளை கடினமாகப் ஓங்கிப் பிடித்துக் கொண்டு இருந்தார். அந்த மனிதனின் கைகள் வெகுவாய் நடுங்கின. நடுங்கும் கைவிரல்களால் வாளைப் பிடித்திருந்த அந்த நபர் மகிமையின் நேரம் கூடும் வரை காத்திருந்தார். சரியான நேரம் வந்த போது, பரலோகத்திலிருந்து கிடைத்த வலிமையின் துணையால் அந்த மகா மனிதனின் மரணத்தை நிறைவேற்ற நியமிக்கப்பட்டிருந்த நூறு பேர் கொண்ட படையணியின் தலைமைச் சேவகனின் கைகளின் பிடி தளர்ந்தது. தேவ ஆசீர்வாதம் பெற்ற மக்கள் மற்றும் தங்கள் ஆயருடன் பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்தவர்களும், இதுபோன்ற விடயங்களால் மிகுந்த அல்லல்களை  அனுபவித்தவர்களும், அவருடைய பிரசங்கங்களை எப்போதும் கேட்டவர்களும், எல்லாம் வல்ல தங்கள் இறைவனை உரத்த அழுகையுடன் துதித்தவர்களும்  இவ்வாறே தேவ கிருபையால்  முடிசூடிக்கொண்டனர். எல்லா மக்களும் ஒரே நேரத்தில் அவருடைய மகிமையைப்பெற தாங்கள்  மன்றாடிய மன்றாட்டுக்கள் மூலம் தங்களது எதிர்பார்ப்பு நிறைவேற வில்லை என்று நினைத்தால், கிறிஸ்துவின் பிரகாசமான கண்களாலும், ஆயர் பட்ட துன்பங்களை முழு இதயத்தோடும் ஏற்றுக்கொண்டமை, அது கிறீஸ்துவின் சித்தத்துக்கு அமைவாகவும், கடவுளின் தூதராக செயல்பட அவருக்கு உண்டான ஒரு உன்னத செய்தியாகவே அது இருந்திருக்கும். அவர் பட்ட துன்பங்களின் விளைவாக எல்லா நல்ல மனிதர்களுக்கும் முன்மாதிரியான வராயிருந்த சிப்ரியன் அவர்கள், அப்போஸ்தலர்களுக்குப் பிறகு வேதசாட்சிகளின் கிரீடத்தை சூட்டிக்கொண்ட முதலாமவர் என்ற பேறைப் பெற்றார். கார்தேஜில் மூத்த குடிமகனாக நியமிக்கப்பட்ட காலம் தொட்டு, எந்தவொரு நல்ல மனிதரும், மதகுருவானவர்கள் அடங்கலாக, இவ்வளவு துன்பங்களை எவரும் அனுபவித்ததாக எந்தவித பதிவும் இருந்ததாகத் தெரியவில்லை. பக்தியுள்ள மனிதர்களிடையே, கடவுள் மீதான பக்தி எப்போதும் ஒரு வேத சாட்சியமாகவே கருதப்படுகிறது. ஆனால் கர்த்தர் கட்டளையிட்டபோது சிப்ரியனுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டது. இவ்வாறு, அவர் வாழ்ந்து, மிக உன்னதமான செயல்களைச் செய்த தனது சொந்த நகரத்தில், விண்ணக வாழ்வுக்கு அடையாளமாக, தனது மாசற்ற இரத்தத்தால் முதன் முதலாக வேதசாட்சியானார். இப்படியான சந்தர்ப்பத்தில் நான் என்ன செய்ய வேண்டும்? என் மனம் வெவ்வேறு திசைகளில் செல்கிறது. அவர் அனுபவித்த துன்பமும், அடஹித் தாங்கிக் கொண்டு இன்னும் இங்கே இருக்கிறேனே என்ற மனவருத்தமும் எனக்கு உண்டு. என் இதயம் இரண்டு விடயங்களை எடைபோட்டது. நான் அவரது நண்பன் அல்ல என்பதால் நான் சோகமாக இருக்க வேண்டுமா? அல்லது அவர் அடைந்த மகத்தான வெற்றி பெரிதாய்க் கொண்டாடப்பட வேண்டுமா? அப்படியானால், நான் அதை கொண்டாடத்தான் வேண்டுமா? அவரது சகாவாக இல்லாமல் போனமைக்காக நான் வருந்துகிறேன். அப்படியிருந்தும், இந்த மரண தண்டனையைப் பற்றிய எனது கருத்தை நீங்கள் ஏற்கனவே அறிந்த ஒன்றை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அவர் பெற்ற மகத்தான மகிமையில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அப்படியிருந்தும், நான் இன்னும் இங்கே இருப்பவன் என்பதால் நான் இன்னும் கவலையுடனேயே வாழ்ந்து வருகிறேன்.