Clement of Rome, Epistle to the Corinthians

கிளெமென்ட், கொரிந்தியருக்கு எழுதிய கடிதம்

1ம் அத்தியாயம் – எமது கெளரவம் உரித்தாகுக: கொரிந்தியர்களின் பிளவுக்கு முன்னர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கெளரவம்

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையால் ரோமில் குடிகொண்டிருக்கும் கடவுளின் திருச்சபை மற்றும் கொரிந்துவில் தங்கியிருக்கும் கடவுளின் தேவாலயம் கூறிக்கொள்வது என்னவென்றால்; தேவனின் அழைப்பினால் புனிதமாக்கப்பட்டவர்கள் அனைவருக்கும்: சர்வவல்லமையுள்ள தேவனிடமிருந்து நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஊடாக உங்களுக்கு அருளும், கிருபையும், சமாதானமும், பெருகக் கடவதாக.
அன்பார்ந்த சகோதரர்களே, எங்களுக்கு ஏற்பட்ட சடுதியான மற்றும் தொடர்ச்சியான இடர்களின் நிமித்தம், நீங்கள் எங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டியிருந்த விடயங்களுக்கு, எங்களால் எங்கள் கவனத்தை திருப்புவதில் நாங்கள் சற்றே சிரமத்தை எதிர்கொண்டதாக உணர்கிறோம். மற்றும் குறிப்பாக அந்த இழிவான மற்றும் வெறுக்கத்தக்க தேசத்துரோக செயல் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முற்றிலும் கண்டனத்துக்குரியது, இது ஒருசில வெறித்தனமான மற்றும் சுயநலம் கொண்ட நபர்கள் அத்தகைய வெறித்தனத்தை தூண்டிவிட்டது, உலகளவில் உங்களது மதிப்பு மற்றும் புகழ் போன்றவற்றுக்கு பாரியளவில் தாக்கத்தை உண்டுபண்ணிவிட்டது. உங்கள் மத்தியில் சில காலம் வாழ்ந்த எவரும், உங்கள் விசுவாசம் உறுதியாக நிலைநாட்டப்பட்டதைப் போலவே நல்லொழுக்கத்தின் பலனைக் காணவில்லையா? கிறிஸ்துவில் நீங்கள் கொண்டிருந்த வலுவான பக்தியின் நிதானத்தையும் மிதமான போக்கையும் பாராட்டாதவர் யாரேனும் உளரா? உங்கள் பழக்கவழக்கங்கள் மற்றும் விருந்தோம்பல் பண்புகளின் மகத்துவத்தை அறியாதவர் யார் உளர்? உங்கள் பரிபூரண மற்றும் ஆழமான அறிவைப் பார்த்து மகிழ்ச்சி அடையாதோர் யார் உளர்? ஏனென்றால், நீங்கள் மனிதர்களின் தேவைக்கேற்றவாறன்றி கடவுளின் கட்டளைகளின் படியே நடந்துகொண்டீர்கள், உங்கள்மீது அதிகாரம் செலுத்தியோர்களிடம் பணிந்து, உங்கள் மத்தியில் இருந்த திருச்சபை மூப்பர்களுக்கு உரிய அனைத்து மரியாதைகளையும் கொடுத்தீர்கள். இளைஞர்களை நிதானமான முறையிலும் மற்றும் ஆழமான சிந்தனையுடைய மனதுடனும் இருக்கும்படி நீங்கள் கட்டளையிட்டீர்கள், எல்லாவற்றையும் நேர்மையான, தூய்மையான மனசாட்சியுடன் செய்யும்படி அவர்களது மனைவியருக்கு நீங்கள் அறிவுறுத்தினீர்கள். தங்களது கணவர்மாரை நேசிப்பதும் அவரவர்களின் தலைமையான கடமைகளில் ஒன்று எனவும் நீங்கள் அறிவுறுத்தியிருந்தீர்கள். கீழ்ப்படிதலால் கட்டுண்டு அவர்கள் தங்கள் வீட்டு விவகாரங்களை நிர்வகிக்க வேண்டும், மேலும் அனைத்து விதத்திலும் அவர்கள் விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்று நீங்கள் அவர்களுக்குக் கற்பித்தீர்கள்.

2ம் அத்தியாயம் – தொடரும் கொரிந்தியர்களின் புகழ்

அதுமட்டுமன்றி, நீங்கள் அனைவரும் தாழ்மைக்குணங்களால் தன்னிகரற்றவராய் இருந்தீர்கள், எவ்விதத்திலும் பெருமிதம் கொள்ளாது இருந்தீர்கள். அடக்குமுறையை கையாள்வதை விட, கீழ்ப்படிதலைக் கொடுத்தீர்கள், பெறுவதைக் காட்டிலும் கொடுபதில் அதிக நாட்டம் கொண்டிருந்தீர்கள். அப்போஸ்தலர் பணிகள் 20:35 இல், கடவுள் உங்களுக்காக வழங்கிய ஏற்பாட்டின் உள்ளடக்கம் கூறுவது என்னவென்றால், அவருடைய வார்த்தைகளை கவனமாகக் கவனித்தால், நீங்கள் அவருடைய கோட்பாட்டால் உள்ளூற நிரப்பப்பட்டிருக்கிறீர்கள், அவருடைய துன்பங்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக நன்கு புலப்பட்டன. இவ்விதமாக, உங்கள் அனைவருக்கும் நிறைந்த மற்றும் முழுமையான சமாதானம் வழங்கப்பட்டது, மேலும் நன்மை செய்ய வேண்டும் என்ற தீராத ஆசை உங்களுக்கு இருந்தது, அதே நேரத்தில் பரிசுத்த ஆவியின் முழு வெளிப்பாடும் உங்கள் அனைவர் மத்தியிலும் இருந்தது. புனிதத்தன்மையால் உருவாக்கப்பட்ட நீங்கள், உண்மையான மனதுடனும், தெய்வீக நம்பிக்கையுடனும், சர்வவல்லமையுள்ள தேவனிடம் உங்கள் கரங்களை நீட்டி, நீங்கள் எதேச்சையாக ஏதேனும் பாவங்கள் செய்திருந்தால், உங்களிடம் இரக்கமுள்ளவராக இருக்கும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். அல்லும் பகலும் நீங்கள் அனைத்து சகோதரத்துவத்தின் மேல் ஆர்வமும் அக்கறையும் கொண்டு இருந்தீர்கள். 1 பேதுரு 2:17 கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கருணையுடனும் நல்ல மனசாட்சியுடனும் அரவணைக்கப்பட வேண்டும். நீங்கள் உண்மையுள்ளவராகவும், கபடம் அற்றவராகவும் இருந்தீர்கள், மற்றயோர்களால் ஏற்பட்ட காயங்களை மறந்து செயல்படுகிறீர்கள். உங்களைப் பொறுத்தளவில், அனைத்து விதமான பிரிவுகள் மற்றும் பிளவுகள் அருவறுக்கத்தக்கவைகளாகவே காணப்படுகின்றன. உங்கள் அயலவர்களின் பாவங்களுக்காக நீங்கள் துயரப்பட்டீர்கள். அவர்களின் குறைகளை நீங்கள் உங்கள் சொந்தக் குறைகளாகக் கருதினீர்கள். நற்கிரியைகளை செய்வதற்கு தயாராயிருந்த அதேவேளை, நீங்கள் காருண்யம் மிகுந்த செயல்களைப் பார்த்து வன்மத்தை வளர்த்துக்கொள்ள வில்லை. தீத்து 3: 1 முற்றிலும் நல்லொழுக்கமுள்ள மற்றும் இறை வாழ்க்கையால் முழுமையடைந்த நீங்கள் கடவுளுக்குப் பயந்து அனைத்தையும் செய்தீர்கள். கர்த்தர் அருளிய கட்டளைகளும் நீதி நெறிகளும் உங்கள் இதயத்தின் சுவர்களில் எழுதப்பட்டிருக்கின்றன. பழமொழிகள் 7: 3.

3ம் அத்தியாயம் – கொரிந்திய திருச்சபையின் அவல நிலை அங்கு இடம்பெற்ற துரோகச் செயல்களை அடுத்து பொறாமை மற்றும் போட்டி மனப்பான்மையினால் ஏற்பட்டது.

அனைத்து விதமான மரியாதையும் மகிழ்ச்சியும் உங்களுக்கு வழங்கப்பட்டது, அதன் மூலம் எழுதப்பட்டது நிறைவேறியது, உபாகமம் 32:15 இற்கு இணங்க, அன்புக்குரியவர்கள் உண்டு, குடித்து சரீர புஷ்டியை பெற்றபின்பு உதைக்கவும் செய்தனர். அதன் காரணமாகவே, போட்டினமப்பான்மை மற்றும் பொறாமை, சண்டை மற்றும் தேசத்துரோகம், துன்புறுத்தல் மற்றும் கோளாறு, போர் மற்றும் சிறைப்பிடிப்பு போன்ற ஏற்பட்டன. ஆகவே சாமானியர் கௌரவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக எழுந்தார்கள், புகழ் பெற்றவர்களுக்கு எதிரான முட்டாள்களும், இளையோர் தம்மைவிட வயதில் முதிர்ந்தவர்களுக்கு எதிராகவும் செயல்படத் தொடங்கினர். இதன் காரணமாக, நீதியும் சமாதானமும் இப்போது உங்களிடமிருந்து வெகு தொலைவுக்குப் போய்விட்டது, கடவுளின் மீது கொண்ட பயபக்தியில் இருந்து அநேகமானோர் விலகிச் செல்கிறார்கள். அவரை விசுவாசிப்பதில் அவர்கள் குருடரைப்போல் நடந்துகொள்கிறார்கள், அவருடைய நியமனத்தின் படி அமைந்த கட்டளைகளின் படி நடப்பதில்லை, ஒரு உண்மையான கிறிஸ்தவராக தம்மை மாற்றிக்கொள்வதில் அக்கறை இன்றி செயல்படுகிறார்கள். ஆனால் தான்தோன்றித்தனமான காம இச்சைகளின் பின் சென்று அநீதி மற்றும் தேவபக்தியற்ற, பொறாமையுடனான நடைமுறையை மீண்டும் பின்பற்ற முனைகிறார், இவ்வாறான செயல்களை ஊடாகவே மரணம் உலகிற்குள் நுழைந்தது; ஞானாகமம் 2:24.

4ம் அத்தியாயம் – பண்டைய காலங்களில் இவை மூலமாகவே பல தீமைகள் ஏற்கனவே உள்நோக்கி வந்திருந்தன

இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: சில நாட்களுக்குப் பிறகு, காயீன் பூமியில் விளைந்தவையை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தான்; ஆபேல் தன் ஆடுகளின் முதல் கொழுத்த குட்டிகளையும் கொண்டுவந்தான். தேவன் ஆபேலுக்கும் அவனுடைய பிரசாதங்கள் மீதும் பிரியம் கொண்டிருந்தார். ஆனால் காயீனையோ அவன் கொண்டு வந்த பிரசாதங்களையோ அவர் பொருட்படுத்தவில்லை. காயீன் மிகுந்த துக்கமடைந்தான், அவனுடைய முகம் வாட்டமடைந்தது. தேவன் காயீனை நோக்கி: “நீ ஏன் துக்கப்படுகிறாய், உன் முகம் ஏன் வாட்டமடைந்து காணப்படுகிறது? நீ ஒப்புக்கொடுத்தது சரியாக இருந்தாலும், நீ அதை சரியாகப் பிரிக்கவில்லை என்றால், நீ பாவம் செய்தவனல்லவா? சமாதானம் உண்டாகக்கடவதாக: உனது பிரசாதம் உன்னிடமே மீண்டும் திருப்பிக் கொடுக்கப்படும், நீ அதை மீண்டும் பெற்றுக்கொள்வாய்” என்றார். காயீன் தன் சகோதரனாகிய ஆபேலை நோக்கி: நாம் வயலுக்குப் போவோம். அவர்கள் வயலுக்கு சென்றதும், வயலில் வைத்து காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழுந்து அவனைக் கொலை செய்தான். சகோதரர்களே, ஒரு சகோதரனின் கொலைக்கு வன்மம் மற்றும் பொறாமை எவ்வாறு வழிவகுத்தன என்பதை நீங்கள் காண்கிறீர்கள். பொறாமை காரணமாகவே, எங்கள் தந்தை யாக்கோபும் தனது சகோதரரான ஏசாவிடமிருந்து தப்பி ஓடினார். பொறாமை தான் ஜோசப்பை மரணத் துன்புறுத்தலுக்குள் இட்டுச் சென்று, அதற்கு உடன் படவும் செய்தது. ஆதியாகமம் xxxvii இல் கூறப்பட்டிருப்பது போல், பொறாமை மோசேயை எகிப்தின் அரசனான பாராரோவின் பார்வையில் இருந்து தப்பி ஓட வைத்தது, இந்த வார்த்தைகளை சக நாட்டவரிடமிருந்து கேட்டபோது, உங்களை யார் எங்களுக்கு நீதிபதியாகவோ அல்லது ஆட்சியாளராகவோ ஆக்கியது? நேற்று நீங்கள் எகிப்தியரைக் கொன்றது போல் என்னைக் கொல்வீர்களா? யாத்திராகமம் 2:14. பொறாமை காரணமாக, ஆரோனும் மீரியமும் முகாம் எதுவும் இல்லாமல் தங்க வேண்டியிருந்தது. எண்ணாகமம் 12: 14-15. கடவுளின் ஊழியனாகிய மோசேக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட தேசத் துரோகத்தின் பின்னரும், வன்மம் தாதனையும் அபிராமையும் உயிருடன் ஹேடஸுக்குக் கொண்டு வந்தது: எண்ணாகமம் 16:33. பொறாமை காரணமாக, தாவீது வெளிநாட்டினரின் வெறுப்புக்கு உட்பட்டது மட்டுமல்லாமல், இஸ்ரவேலின் ராஜாவான சவுலாலும் துன்புறுத்தப்பட்டான்.

5ம் அத்தியாயம் – மிகச் சமீப காலங்களில் இவ்வாறன ஆதாரங்களில் இருந்து எழுந்த தீமைகள் குறைவாக இருக்க வில்லை. பேதுரு மற்றும் பவுலின் வேதசாட்சியம்

ஆதி கால உதாரணங்களை ஒருபக்கம் வைத்து, மிக சமீபத்திய ஆன்மீக வீரர்களைப்பற்றிப் பார்ப்போம். நாம் வாழுகின்ற தலைமுறையில் காணப்படும் உன்னத உதாரணங்களை சிலவற்றை எடுத்துக்கொள்வோம். பொறாமை மற்றும் வன்மம் காரணமாக, [திருச்சபையின்] பாரிய நீதியான தூண்களாகச் செயல்பட்டுவந்தவர்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர். பேறுபெற்ற அப்போஸ்தலர்களை சற்று நாம் நம் கண் முன்னே கொண்டு வருவோம். அப்போஸ்தலரான பேதுரு, அநீதி மற்றும் பொறாமை காரணமாக, ஒன்று இரண்டு அல்ல, பல இன்னல்களைச் சகித்தார்; அவர் அவரது தியாகத்தின் காரணமாக அவருக்கே உரித்தான மகிமையை நோக்கி சென்றார். பொறாமை காரணமாக, பவுல் சகிப்புத்தன்மையின் வெகுமதியையும் பெற்றார், ஏழு முறை சிறைபிடிக்கப்பட்டு, தப்பி ஓட நிர்பந்திக்கப்பட்டார், அவர் கல்லெறிதலுக்கும் உள்ளானார். கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு திசைகளிலும் பிரசங்கித்தபின், அவர் தனது விசுவாசத்தினால் உச்ச புகழ் மற்றும் நற்பெயரையும் பெற்றார். முழு உலகிற்கும் நீதியைக் கற்பித்து விட்டு, மேற்கின் தீவிர எல்லைக்கு வந்த பொது, கொடுரர்களின் அதிகாரத்தின் கீழ் வேதசாட்சியாய் தன்னை அர்ப்பணித்தார். இவ்வாறு அவர் உலகத்திலிருந்து அகற்றப்பட்டு பொறுமையின் சின்னமாய் தன்னை நிரூபித்துக் காட்டி புனித ஸ்தலத்திற்குள் சங்கமித்தார்.

6ம் அத்தியாயம் – தொடர்ச்சி; மேலும் பல தியாகிகள்

பரிசுத்த வழியில் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்த இவர்களோடு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஏராளமானோர் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும், அவர்கள் பொறாமை காரணமாக பல ஆக்கினைகளையும் சித்திரவதைகளையும் தாங்கி, எமக்கு மிகச் சிறந்த உதாரணங்களாகத் திகழ்ந்தனர். பொறாமை காரணமாக, அந்த பெண்கள், டானாய்ட்ஸ் மற்றும் டிர்கே (Danaids and Dircæ) ஆகியோர் துன்புறுத்தப்பட்டனர். அவர்கள் மிக மிலேச்சத்தனமான மற்றும் சொல்லமுடியாத வேதனைகளை அனுபவித்தபின், தங்கள் விசுவாசத்தின் போக்கை உறுதியுடன் கடைப்பிடித்தார்கள், உடல் பலவீனமாக இருந்தபோதிலும், ஒரு உன்னதமான வெகுமதியைப் பெற்றார்கள். பொறாமை மனைவிமாரை அவர்களது கணவர்மாரிடமிருந்து அந்நியப்படுத்தியது, மேலும் எம் தந்தை ஆதாமின் அந்த வார்த்தையின் பதத்தையே மாற்றியது. இது இப்போது என் எலும்புகளின் எலும்பு, என் சரீரத்தின் சதை: ஆதியாகமம் 2:23. பொறாமையும் கலவரமும் பெரிய நகரங்களையே நிர்மூலமாக்கின, வலிமைமிக்க நாடுகளை வேரோடு சாய்த்தன.

7ம் அத்தியாயம் – மனந்திரும்புதலுக்கான அறிவுரை

அன்புள்ளவர்களே, இந்த விடயங்களைப்பற்றி நாங்கள் உங்களுக்கு எழுதுவது, உங்கள் கடமையை பற்றி உங்களுக்கு அறிவுறுத்துவதற்காக மட்டுமல்ல, எம்மைப் பற்றி நினைவூட்டுவதற்காகவுமே. நாம் ஒரே அரங்கில் தான் எமது போராட்டத்தை நடத்துகிறோம். அது எங்கள் இருவருக்குமென்றே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகையால், வீண் மற்றும் பிரயோசனமற்ற விடயங்களை கைவிடுவோம், நம்முடைய புனித அழைப்பின் புகழ்பெற்ற மற்றும் மதிப்பிற்குரிய ஆட்சியை நோக்கி செல்வோம். நம்மை உருவாக்கியவருக்கு முன்பாக நன்மை, மகிழ்ச்சி போன்றவற்றை முன்னெடுத்து அதன் மூலம் அவரை மகிமைப்படுத்துவோம். எமது இரட்சணியத்துக்காக சிந்தப்பட்ட கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தத்தில் உறுதியுடன் இணைந்திடுவோம் அதன் மூலம் மனந்திரும்புதலின் கிருபையை உலகம் முழுவதற்கும் அறியச்செய்வோம். கடந்து வந்த ஒவ்வொரு யுகத்திற்கும் நாம் எமது கவனத்தை செலுத்துவோம் மேலும் தலைமுறை தலைமுறையாக, இறைவன் தன்னை ஏற்றுக்கொள்வதற்கான மனந்திரும்புதலை நமக்கு அருளியுள்ளார். . நோவா மனந்திரும்புதலைப் பற்றி பிரசங்கித்தார், அவருடைய பேச்சைக் கேட்ட பலர் இரட்சிக்கப்பட்டார்கள். யோனா நினிவேயர்களுக்கு அழிவை அறிவித்தான்; யோனா iii ஆனால் அவர்கள், தங்கள் பாவங்களிலிருந்து மனம் திரும்பினார்கள். அவர்கள் அந்நியர்களாக இருந்தபோதிலும், ஜெபத்தின் மூலம் கடவுளைப் பிரியப்படுத்தி, [உடன்படிக்கைக்கு அமைவாக] , இரட்சிப்பைப் பெற்றார்கள்.

8ம் அத்தியாயம் – மனந்திரும்புதலை மதித்தல் – தொடர்ச்சி

தேவனின் திருத்தொண்டர்கள் பரிசுத்த ஆவியின் மூலமாக மனந்திரும்புதலைப் பற்றி பேசியிருக்கிறார்கள். எல்லாம் வல்ல தேவன் இதைப் பற்றி உறுதி செய்துள்ளார். எனது வாழ்வின் போது, பாவியின் மரணத்தை நான் விரும்பவில்லை, மாறாக அவருடைய மனந்திரும்புதலையே விரும்புகிறேன்; எசேக்கியேல் 33:11. மேலும், இஸ்ரவேல் வம்சத்தாரே! உங்கள் அநீதியில் இருந்து மீண்டு மனந்திரும்புங்கள் எசேக்கியேல் 18:30. என் மக்களின் பிள்ளைகளிடம் சொல்லுங்கள்; உங்களுடைய பாவங்கள் பூமியிலிருந்து பரலோகத்தை அடைந்தாலும், அவை ஏசாயா 1:18 கருஞ்சிவப்பு நிறத்தை விட சிவப்பாக இருந்தாலும், சாக்குத் துணியை விட கறுப்பாகவும் இருந்தாலும், நீங்கள் பிதாவே! என்று முழு இதயத்தோடு என்னிடம் வந்து சொல்வீர்களானால், புனிதர்களுக்கு செவிசாய்த்தது போல நான் உங்களுக்குச் செவிசாய்ப்பேன். மற்றொரு இடத்தில் அவர் இவ்வாறு பேசுகிறார்: உங்களைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்; உங்களுடைய கேட்ட செய்கைகளை என் கண் முன்னே வீசியெறிந்து விடுங்கள்; உங்கள் தீய வழிகளில் இருந்து விலகி, நல்லது செய்ய கற்றுக்கொள்ளுங்கள்; தீர்ப்பைத் தேடியடையுங்கள், ஒடுக்கப்பட்டவர்களை விடுவிக்கவும், தந்தைமாரை இழந்தவர்களுக்கு நீதியைப் பெற்று கொடுங்கள், விதவைகளுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யுங்கள் வாருங்கள், நாம் ஒன்றாகவே இவற்றை செய்வோம். அவர் அறிவிப்பது போல், உங்கள் பாவங்கள் சிவப்பு நிறத்தைப் போல இருந்தாலும், நான் அவைகளை பனியைப் போல வெண்மையாக்குவேன்; அவை கருஞ்சிவப்பு நிறத்தில் இருந்தாலும், நான் அவற்றை வெண்கம்பளி போல வெண்மையாக்குவேன். நீங்கள் மனதார எனக்குக் கீழ்ப்படிந்தால், நீங்கள் பூமியின் நன்மையைச் சுவைப்பீர்கள்; ஆனால் நீங்கள் மறுத்து, எனக்கு கீழ்ப்படியாவிடின், வாள் உங்களை துவம்சம் செய்து விடும், ஏனென்றால் கர்த்தரின் வாயால் இதைச் சொல்லி அருளியுள்ளார். ஏசாயா 1: 16-20 இல். ஆகையால், அவரில் அன்பானவர்கள் அனைவரும் மனந்திரும்புதலில் பங்கெடுக்க வேண்டும் என்று அவர் விரும்புவதால், அவர் தனது சர்வவல்லமையுள்ள சித்தத்தினால் [இந்த உறுதிமொழிகளை] இவற்றை நிலைநாட்டியுள்ளார்.

9ம் அத்தியாயம் – புனிதர்களைப் பற்றிய உதாரணங்கள்

ஆகையால், அவருடைய சிறந்த மற்றும் மகிமைமிகு விருப்பத்திற்கு கீழ்ப்படிவோம்; அவருடைய கருணையையும் அன்பே உருவான தயவையும் வேண்டிக்கொள்வதன் மூலம், பலனற்ற தூபங்களையும் கஷ்டங்களையும், மரணத்திற்கு வழிவகுக்கும் பொறாமையையும் நாம் கைவிட்டு நாம் அவருடைய இரக்கத்தைப் பெற பாடுபடுவோம். அவருடைய மேலான மகிமைக்குச் சான்று பகர அயராது பாடுபட்டவர்களை என்றென்றும் நினைவுகூருவோம். கீழ்ப்படிதலில் நீதியுள்ளவராகக் காணப்பட்ட ஏனோக்கை அவர் அரவணைத்தார், மரணம் அவருக்கு ஒருபோதும் நேராது என்பதை அறிந்திருந்தார். நோவா உண்மையுள்ளவராகக் காணப்பட்டு, தனது ஊழியத்தின் மூலம் உலகுக்கு மீளுருவாக்கம் செய்யப் பாடுபட்டார். ஆகவே கர்த்தர் விலங்குகளுடனும் மற்றைய உயிரினங்களுடனும் சேர்த்து நோவாவை பேழையில் வைத்துக் காப்பாற்றினார்.

10ம் அத்தியாயம் – மேலே சொல்லப்பட்டவைகளின் தொடர்ச்சி

ஆபிரகாம், நண்பரின் பாணியில், கடவுளுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்ததைப் போலவே, உண்மையுள்ளவராகவும் காணப்பட்டார். அவர், கீழ்ப்படிதலில் மேலானவராய், தனது சொந்த நாட்டிலிருந்தும், அவரது உறவினர்களிடமிருந்தும், மற்றும் அவரது தந்தையின் வீட்டிலிருந்தும், ஒரு சிறிய பிரதேசத்தையும், பலவீனமான குடும்பத்தையும், சிறிய வீட்டையும் விட்டு வெளியேறி, கடவுளுக்களித்த வாக்குறுதியே தனது வாரிசாக எண்ணி சேவை செய்தார். தேவன் அவரை நோக்கி: உன் நாட்டிலிருந்தும், உன் குடும்பத்தினரிடமிருந்தும், உன் தகப்பனுடைய வீட்டிலிருந்தும் வெளியேறி, நான் உனக்குக் காட்டும் தேசத்தை நோக்கிப் போ. நான் உன்னை ஒரு பெரிய தேசத்தின் அதிபதியாக்குவேன், உன்னை ஆசீர்வதிப்பேன், உன் பெயரை மேலோங்கச் செய்வேன், நீ ஆசீர்வதிக்கப்படுவாய். உன்னை ஆசீர்வதிப்பவர்களை நான் ஆசீர்வதிப்பேன், உன்னை சபிப்பவர்களை சபிப்பேன்; உன் மூலமாக, பூமியில் உள்ள குடும்பங்கள் யாவும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். ஆதியாகமம் 12: 1-3. லோத் இடமிருந்து அவர் விடைபெற்ற பின்பு தேவன் அவரை நோக்கி: உனது கண்களை உயர்த்தி, நீ இப்போது இருக்கும் இடத்திலிருந்து வடக்கு, தெற்கு, கிழக்கு, மற்றும் மேற்கு நோக்கி பார். நீ காணும் தேசமெல்லாம் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றென்றும் தருவேன். நான் உன் சந்ததியை பூமியின் தூசியாக ஆக்குவேன், ஆகவே ஒரு மனிதனால் பூமியின் தூசியைக் கணக்கிட இயன்றால் உன் சந்ததியும் கணக்கிடப்படும்ஆதியாகமம் 13: 14-16. மறுபடியும் [வேதாகமம்] கூறுகிறது, தேவன் ஆபிரகாமை வெளியே கொண்டு வந்து, அவரிடம், “இப்பொழுது வானத்தைப் பார்த்து, அங்கே உள்ள நட்சத்திரங்களை எண்ண முடியுமானால் எண்ணு; உனது சன்னதியும் அவ்வாறே தான் இருக்கும். ஆபிரகாம் கடவுளை நம்பினார், அது அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது. அவரது நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதல் காரணமாக, வயதான காலத்திலும் அவருக்கு ஒரு மகனை கர்த்தர் கொடுத்தார்; கீழ்ப்படிதலில் மேன்மையானவராக அவர் இருந்தபடியால் அவருக்குக் காட்டிய படியே, மலைகள் ஒன்றின் மேல் தனது மகனை கடவுளுக்கு பலியாகக் ஒப்புக்கொடுத்தார்.

11ம் அத்தியாயம் – லோத் பற்றிய தொடர்ச்சி

அவரது கீழ்ப்படிதல் மற்றும் தெய்வபக்தி காரணமாக, நாடு முழுவதும் தீ மற்றும் கந்தக வெப்பம் மூலம் தண்டிக்கப்பட்டபோது லோத் சோதோமிலிருந்து காப்பாற்றப்பட்டார். தம்மை நம்புகிறவர்களை அவர் கைவிடவில்லை, மாறாக அவரிடமிருந்து விலகி தண்டனை மற்றும் சித்திரவதைக்கு ஆளாவதைப் பற்றி இறைவன் இவ்வாறு வெளிப்படுத்துகிறார். ஆதியாகமம் xix; ஒப்பிடுதல் 2 பேதுரு 2: 6-9. தன்னிலும் வேறுபட்ட மனநிலையுடனும், அவருடன் தொடர்ந்து உடன்படாமலும் இருந்த லோத்தின் மனைவி, (அவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டளையைப் பொறுத்தவரை), ஒரு தூணாக இருப்பதற்கு பதிலாக இற்றை வரை உப்பினால் ஆனா தூணாகவே காணப்பட்டாள். இரட்டை மனம் படைத்தவர்கள், கடவுளின் வல்லமை மீது அவநம்பிக்கை கொண்டவர்கள், தங்களுக்குத் தாங்களே தீர்ப்பிட்டுக்கொண்டு, அடுத்தடுத்த தலைமுறையினருக்கு உதாரணபுருஷர்களாக மாறுபவர்களைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்வதற்காக இது செய்யப்பட்டது.

12ம் அத்தியாயம் – நம்பிக்கை மற்றும் விருந்தோம்பலின் வெகுமதிகள். ராகாப்

தனது நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதல் காரணமாக, ரஹாப் என்ற விலைமாது காப்பாற்றப்பட்டாள். ஏனென்றால், நூனின் மகன் யோசுவா, எரிகோவிற்கு ஒற்றர்களை அனுப்பிய போது, நாட்டின் அரசன் அவர்கள் தங்கள் நாட்டை உளவு பார்க்க வந்திருப்பதைக் கண்டறிந்து, அவர்களைக் கைது செய்ய அவனது சேவகர்களை அனுப்பினான். ஆனால் விருந்தோம்பலில் சிறந்து விளங்கிய ரஹாப், அவர்களை வரவேற்று, அவளுடைய வீட்டின் கூரையில் சில ஆளி தண்டுகளின் வைக்கோலுக்கு அடியில் மறைத்து வைத்தாள். அரசனால் அனுப்பப்பட்ட சேவகர்கள் வந்து, “எங்கள் தேசத்தை உளவு பார்க்க வந்த மனிதர்கள் உன்னிடம் வந்தார்கள் என அரசர் சொல்கிறார்” என்றனர். அதற்கு அவள்: நீங்கள் தேடுகிற இருவரும் என்னிடம் வந்தார்கள், ஆனால் அவர்கள் உடனேயே புறப்பட்டுப் போய்விட்டார்கள், இதனால் உளவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்பொழுது அவள் அந்த சேவகர்களை நோக்கி: உங்கள் தேவனும் கர்த்தரும் இந்த நகரத்தை உங்களுக்குக்
கொடுத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும். உங்கள் மீது அவர்கள் கொண்டுள்ள பயமும் அதன் கொடூரமும் அதன் குடிமக்கள் மீது படர்ந்து விட்டன. எனவே, நீங்கள் அதை எடுத்துக் கொண்டால், என்னையும் என் தகப்பனுடைய வீட்டையும் பாதுகாப்பாக வைத்திருங்கள். அதற்கு அவர்கள்: நீயாக எங்களிடம் பேசியது போலல்லவா இருக்கிறது. ஆகையால், நாங்கள் இங்கே இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்து, உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் உங்கள் கூரையின் கீழ் கூடச்செய்து அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள், ஆனால் உங்கள் குடியிருப்புக்கு வெளியே காணப்படும் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும் என்றனர். அத்தோடு, அவள் வீட்டிற்கு முன்பாக கருஞ்சிவப்பு நிற நூல் ஒன்றை அடையாளமாகத் தொங்கவிட வேண்டும் என்று அவர்கள் அவளுக்கு கட்டளை இட்டார்கள். ஆகவே, மீட்பு என்பது இறைவனின் இரத்தத்தின் மூலம் அவரை நம்புகிற மற்றும் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். அன்புகொண்டோரே, நீங்கள் இந்த பெண்ணில் விசுவாசம் மட்டுமல்ல, தீர்க்கதரிசனமும் இருந்ததை காண்கிறீர்கள்.

13ம் அத்தியாயம் – பணிவைப்பற்றிய அறிவுரை

ஆகையால், சகோதரரே, தாழ்மையான சிந்தனையுடன் வாழ்வோம். பெருமை, அறிவீனம் கோப உணர்வுகள் போன்ற அனைத்தையும் ஒதுக்கி வைப்போம். எழுதப்பட்டவற்றின் படி செயல்படுவோம். (பரிசுத்த ஆவியானவர் கூறுகிறார், ஞானி தன் ஞானத்தில் பெருமைகொள்ளாதிருக்கட்டும், வலிமைமிக்கவன் தன் வல்லமையில் பெருமைகொள்ளாதிருக்கட்டும், செவ்வந்தன் தன் செல்வத்தில் செருக்கு கொள்ளாதிருக்கட்டும்; கர்த்தரை மகிமைப்படுத்துகிறவன் தொடர்ந்து அவரைத் தேடட்டும். அவரே தீர்ப்பையும் நீதியையும் மேற்கொள்கிறார்) கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை குறிப்பாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவர் எங்களுக்கு சாந்தத்தையும் பாடுகளையும் பற்றி கற்பித்தார். அவர் இவ்வாறு கூறினார்: நீங்கள் இரக்கத்தைப் பெற இரக்கம் காட்டுங்கள்; மன்னிக்கவும், அது உங்களுக்கு மன்னிக்கப்படும்; நீங்கள் என்ன செய்கிறீர்களோ அது போலவே,உங்களுக்கும் செய்யப்படும்; நியாயமாய்த் தீர்ப்பு கூறுங்கள், நீங்கள் நியாயமான தீர்ப்பைப் பெறுவீர்கள்; கருணை காட்டுங்கள், உங்களுக்குக் கருணை காட்டப்படும்; நீங்கள் எப்படி அளக்கிறீர்களோ அவ்வாறே உங்களுக்கும் அளக்கப்படும். தேவனது இந்த கட்டளைகளை செவிமடுத்தும், விதிகளுக்கு கீழ்ப்படிந்தும், அவருடைய பரிசுத்த வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நாம் மனத்தாழ்மையுடன் நடந்துகொள்வோம். பரிசுத்த வார்த்தையில் கூறியுள்ளது போல், “நான் யாரைப் பார்ப்பேன், ஆனால் சாந்தகுணமுள்ளவனாகவும், அமைதியானவனாகவும் இருப்பவனையா, அல்லது என் வார்த்தைகளைக் கேட்டு நடுங்குகிறவனையா? ஏசாயா 66: 2.

14ம் அத்தியாயம் – தேசத்துரோக செயற்பாட்டாளர்களை விட நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்

மக்களே, சகோதரரே, பெருமை மற்றும் தேசத்துரோகத்தின் மூலம், வெறுக்கத்தக்க, முன்மாதிரியின் தலைவர்கள் ஆனவர்களை பின்பற்றுவதை விட, கடவுளுக்குக் கீழ்ப்படிவது மேலானது, புனிதமானது. இதனால் எங்களுக்கு சிறிய காயம் அல்ல, மாறாக பெரிய ஆபத்தே காத்திருக்கிறது. உக்கிரமான சண்டைகள் மற்றும் கர்ஜனைகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட மனிதர்களின் விருப்பங்களுக்கு நாம் அடிபணிவோமானால், நல்லவற்றிலிருந்து நம்மை நாமே விலக்கிக்கொள்கிறோம். நம்மைப் படைத்தவரின் கனிவான கருணை மற்றும் தீங்கற்ற தன்மைகளைப் பார்த்து நாம் ஒருவருக்கொருவர் கருணை காட்டுவோம். ஏனெனில், எழுதியிருப்பதைப் போல், “இரக்கமுள்ளவர்கள் தேசத்தில் குடியிருப்பார்கள், குற்றமற்றவர்கள் அதன்மேல் விடப்படுவார்கள், ஆனால் மீறுபவர்கள் அழிக்கப்படுவார்கள் நீதிமொழிகள் 2: 21-22. மீண்டும் [வேதாகமம்] கூறுவது போல், நான் தேவபக்தியற்றவர்களை மிகவும் உயர்ந்தவனாகக் கண்டேன், லெபனானின் சிடார் போல உயர்த்தப்பட்டேன்: நான் கடந்து சென்றேன், இதோ, அவர் இல்லை; நான் அவன் இருக்கும் இடத்தை விடாமுயற்சியுடன் தேடினேன், எனினும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பாவித்தனத்தைக் காத்து, சமத்துவத்தைப் பாருங்கள்: ஏனென்றால் அமைதியை நேசிக்கும் மனிதனுக்கு எப்போதும் அது ஒரு அடையாளமாய் இருக்கும்.

15ம் அத்தியாயம் – சமாதானத்துக்கு வழிகோலுபவர்களை நாம் மதிக்க வேண்டும், அதை செய்வது போல் பாசாங்கு செய்பவர்களை அல்ல

ஆகையால், தெய்வபக்தியுடன் சமாதானத்தை வளர்த்துக் கொள்வோரோடு இணைந்திடுவோம்; அதை ஆதரிப்பதாக பாசாங்குத்தனமாகக் கூறுபவர்களுடன் அல்ல. [வேதாகமத்தில்] ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூறியுள்ளது போல், இந்த மக்கள் என்னை உதடுகளால் மாத்திரமே மதிக்கிறார்கள், ஆனால் அவர்களுடைய இதயம் என்னிடமிருந்து வெகு தொலைவில் உள்ளது. மீண்டும் கூறும் போது: அவர்கள் வாயால் மாத்திரமே ஆசீர்வதிக்கிறார்கள், ஆனால் தங்கள் இதயத்தால் சபிக்கிறார்கள். வேதாகமம் மறுபடியும் கூறுகிறது; அவர்கள் அவரை வாயால் நேசித்தார்கள், நாக்கால் அவரிடம் பொய் சொன்னார்கள்; அவர்களுடைய இதயம் அவரோடு ஒன்றித்து இருக்கவில்லை, அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையுள்ளவர்களாகவும் இருக்கவில்லை. வஞ்சக வார்த்தைகள் பேசும் உதடுகள் அமைதியாக இருக்கட்டும், [கர்த்தர் பொய் சொல்லும் உதடுகள் அனைத்தையும் அழிக்கக்கடவாராக], எங்கள் நாவை காப்போம் என்று கூறியவர்களின் பெருமைமிக்க நாவை அவர்கள் அடக்கியாளட்டும்: எங்கள் உதடுகள் எமது உள்ளத்தின் கதவுகளாக இருக்கட்டும். தேவன் நம்மை எவ்வாறு காக்கிறார்? ஏழைகளின் அடக்குமுறைகளிலும், ஏழைகளின் பெருமூச்சுக்காகவும், நான் எழுந்திருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்: நான் அவரைப் பாதுகாப்பாக வைப்பேன்; நான் அவருடன் விசுவாசமாகவும் நடந்து கொள்வேன்.

16ம் அத்தியாயம் – கிறீஸ்துவே தாழ்மையின் உதாரணம்

தாழ்மையான எண்ணம் கொண்டவர்களில் கிறிஸ்து வாழ்கிறார். அவருடைய மந்தையை விடாத தங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்வோரிடம் அல்ல. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தேவனுடைய கம்பீரம், செங்கோல், பெருமை அல்லது ஆணவத்தின் வடிவமாக வரவில்லை, அவர் அவ்வாறு செய்திருக்கலாம், ஆனால் ஒரு தாழ்ந்த நிலையில் தான் வருவார் என்று பரிசுத்த ஆவியானவர் அவரைப் பற்றி அறிவித்திருந்தார். அவர் கூறுகிறார், ஆண்டவரே, எங்கள் அறிக்கையை நம்பியவர், கர்த்தருடைய கரங்கள் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது? அவர் முன்னிலையில் [எங்கள் செய்தியை] அறிவித்துள்ளோம். அவர் ஒரு குழந்தை போன்று, காய்ந்த நிலத்தில் ஒரு வேர் போன்றவர்; அவருக்கு எந்த அழகிய தோற்றமும் இல்லை, ஆம், நாங்கள் அவரைக் கண்டோம், அவருக்கு எந்த வடிவமோ அழகோ இல்லை; ஆனால் அவருடைய வடிவம் புகழ்பெற்றது. ஒப்பிடுகையில் [சாதாரண] மனிதர்களின் இயல்பான வடிவத்துடனேயே காணப்பட்டார். அவர் சாதாரண துன்பக் கோடுகளுக்கு ஆளானவர், துன்பத்தின் சகிப்புத்தன்மையை அறிந்தவர். அவருடைய முகம் விலக்கப்பட்டதாக இருந்தது; அவர் வெறுக்கப்பட்டார், மதிக்கப்படவில்லை. அவர் நம்முடைய அக்கிரமங்களைத் சகித்துக்கொண்டு, எம் நிமித்தம் துக்கப்படுகிறார்; ஆயினும், [தாமாக முன்வந்து] அவர் பாடுகள் மற்றும் துன்பங்களுக்கு ஆளானார் என்று நாங்கள் கருதினோம். ஆனால், நம்முடைய பாவங்களுக்காக அவர் காயங்களை ஏற்றுக்கொண்டார், நம்மால் ஏற்பட்ட அக்கிரமங்களுக்காக அவர் நசுக்கப்பட்டார். எங்களுக்கு கிடைத்த சமாதானம் அவர் பெற்ற தண்டனையில் இருந்து கிடைத்தது, அவருடைய துன்பத்தின் கோடுகளால் நாங்கள் குணமடைந்தோம். நாம் அனைவரும் செம்மறிகளைப் போல் வழிதவறிவிட்டோம்; [ஒவ்வொரு] மனிதனும் தன் சுய தேவைகளுக்காக அலைந்து திரிந்தான். கர்த்தர் நம்முடைய பாவங்களுக்காக அவரையே ஒப்புக்கொடுத்தார், அவருடைய துன்பங்களுக்கு மத்தியில் அவர் வாய் திறக்கவில்லை. அவர் ஒரு பலிக்கடாவைபோல் கொண்டுவரப்பட்டார், வெட்டப்படுவதற்கு முன் செம்மறிப்பிருவை போல ஊமையாக இருந்தார், எனவே தான் அவர் வாய் திறக்கவில்லை. அவமானத்தின் பிடியில் அவருடைய தீர்ப்பு பறிக்கப்பட்டது; அவருடைய தலைமுறையை யார் அறிவிக்கக் கூடும்? பூமியிலிருந்து அவருடைய உயிர் எடுத்துக் கொள்ளப்பட்டது. என் மக்களின் பாவங்களுக்காக அவர் உயிர் துறந்தார். கொடூரனை அவருடைய கல்லறைக்காகவும், செல்வந்தர்களை அவருடைய மரணத்திற்காகவும் தருவேன், ஏனென்றால் அவர் அக்கிரமம் செய்யவில்லை, அவருடைய வாயில் வஞ்சகமும் காணப்படவில்லை. அடையாளங்களினால் அவரைத் தூய்மைப்படுதுவதில் இறைவன் மகிழ்ச்சியடைகிறார். நீங்கள் பாவத்திற்காக ஒரு ஒப்புக்கொடுத்தல் செய்தால், உங்கள் ஆத்மா நீண்ட காலம் வாழும் வித்துக்களைக் காணும். கர்த்தர் தம்முடைய ஆன்மாவின் துன்பத்திலிருந்து அவரை விடுவிப்பதற்கும், அவருக்கு ஒளியைக் காண்பிப்பதற்கும், புரிந்துகொள்ளுதலுடன் அவரை உருவாக்குவதற்கும், பலருக்கு நல்ல ஊழியம் செய்யும் நீதியுள்ளவரை நியாயப்படுத்துவத்திலும் மகிழ்ச்சியடைகிறார். அவரே அவர்களுடையபாவங்களின் நிமித்தம் பாடுகளைச் சுமந்தார். அந்த வகையில் அவர் பலரைத் தன்னகத்தே கொள்வார், பலமுள்ளவர்களின் கெட்ட செய்கைகளை பிரித்திடுவார். ஏனென்றால், அவருடைய ஆன்மா மரணத்திற்குள்ளாக்கப்பட்டது, பாவிகளிடையே அவர் கணக்கிடப்பட்டார், பலரின் பாவங்களை அவர் சுமந்தார், அவர்களுடைய பாவங்களுக்காக அவர் கையளிக்கப்பட்டார். மேலும் அவர் கூறுகையில், நான் ஒரு புழுவைபோன்றவன், மனிதன் இல்லை; மனிதர்களாலே இகழ் நிலையை அடைந்தவன். என்னைப் பார்க்கும் அனைத்தும் என்னை கேலி செய்தன. அவர்கள் உதடுகளால் பேசினார்கள்; தங்கள் தலைகளை அசைத்தார்கள்.(ஏதேனும் சொல்வதற்காக) அவர் தேவனை நம்பினார், அவர் அவரை விடுவிப்பார், அவர் அவரை மகிழ்விப்பதால் அவரை காப்பாற்றட்டும். அன்பர்களே, எங்களுக்கு வழங்கப்பட்ட உதாரணம் என்ன என்பதை நீங்கள் காண்கிறீர்கள்; கர்த்தர் இவ்வாறு தன்னைத் தாழ்த்திக் கொண்டார் என்று. அவருடைய கிருபையின் நுகத்தின் கீழ், அவர் மூலமாக வந்த நாம் என்ன செய்ய வேண்டும்?

17ம் அத்தியாயம் – புனிதர்கள் தாழ்மையின் உதாரணர்கள்

ஆடு மற்றும் செம்மறி தோல் போர்த்தியவர்களை பின்பற்றுபவர்களாகவும் இருப்போம் எபிரெயர் 11:37 கிறிஸ்துவின் வருகையைப் பறைசாற்றினார்கள் ; நான் தீர்க்கதரிசிகளான எலியா, எலிசா, எசேக்கியேல் ஆகியோரைக் குறிக்கிறேன், மற்றவர்களுடன் [வேதாகமத்தில் கூறியது போல்] இதே போன்ற சாட்சியம் அளிக்கப்படுகிறது. ஆபிரகாம் மிகவும் மரியாதைக்குரியவர், கடவுளின் நண்பர் என்று கூட அழைக்கப்பட்டார்; ஆகவே அவர் தேவனுடைய மகிமையைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடனும் , தாழ்மையுடனும் அறிவித்தார், ‘நான் தூசி மற்றும் சாம்பல் மட்டுமே’. ஆதியாகமம் 18:27. மேலும், இது யோபுவைப் பற்றி எழுதப்பட்டுள்ளது, யோபு ஒரு நீதியுள்ள மனிதர், குற்றமற்றவர், உண்மையுள்ளவர், கடவுளுக்குப் பயந்தவர், அனைத்துத் தீமைகளிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொண்டவர் யோபு 1: 1. ஆனால் தனக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவந்த அவர், “எந்த ஒரு மனிதனும் அவதூறிலிருந்து விடுபடவில்லை, அவனது வாழ்க்கை ஒரு நாளாக இருந்தாலும் கூட. யோபு 14: 4-5. கடவுளின் அனைத்து வாசத்தலங்களிலும் மோசே உண்மையுள்ளவர் என்று அழைக்கப்பட்டார்; கடவுள் தனது கருவியின் மூலம், எகிப்தை கொள்ளை நோய்கள் மற்றும் சித்திரவதைகள் மூலம் தண்டித்தார். ஆயினும்கூட, அவர் பெரிதும் கெளரவிக்கப்பட்டாலும், பெருமை மிகு வார்த்தைகளை உபயோகிக்கவில்லை, ஆனால், தெய்வீக அசிரீரி குரல் புதரிலிருந்து ஒலித்தபோது, நான் யார்? நீங்கள் என்னை ஏன் அனுப்பினீர்கள்? என்று கேட்டார் . நான் பலவீனமான குரலும் மென்மையான நாவும் கொண்ட மனிதன். மீண்டும் அவர், ‘நான் ஒரு பானையில் இருந்து கிளம்பும் புகை போல் இருக்கிறேன்.

18ம் அத்தியாயம் – தாழ்மையின் முன்மாதிரியான தாவீது

தாவீதைப் பற்றி நாம் என்ன சொல்ல வேண்டியிருக்கிறது? அத்தகைய சாட்சியம் என்பது அவரிடம் இருந்தே உதித்தது, தேவன் அவரைப்பற்றி சொல்கையில் நான் ஜெசேயின் குமாரனாகிய தாவீதை என் இதயத்திற்கு மிக அருகில் இருப்பவராகக் கண்டேன்; நித்திய இரக்கத்தில் நான் அவரை அபிஷேகம் செய்தேன். ஆனாலும் இதே மனிதர் கடவுளை நோக்கி: ஆண்டவரே, உம்முடைய கருணையால் என்மீது இரங்கும்; உமது இரக்கத்தின் மிகுதியால், என் பாவங்களை போக்கியருளும். எனது கொடுமைகளில் இருந்து என்னை இன்னும் நன்றாகக் சுத்திகரித்து, எனது பாவங்களில் இருந்து என்னைத் தூய்மைப்படுத்தும். எனது கொடிய செயல்களை நான் ஒப்புக்கொள்கிறேன், என் பாவம் எப்போதும் என் கண் முன் நிழலாடுகிறது. உமக்கு விரோதமாகவே நான் பாவம் செய்தேன், நீர் தீமை என்று எண்ணியதை நான் செய்தேன்; உங்கள் கூற்றுகளை நீங்கள் நியாயப்படுத்தலாம், நீங்கள் தீர்ப்பிடப்படும்போது அவற்றை வெல்லலாம், ஏனென்றால், நான் பாவங்களினால் கருவில் உருவானேன், பாவத்தின் மூலமே என் தாய் என்னைக் கருவில் உண்டாக்கி சுமந்தாள். இதோ, நீர் சத்தியத்தை நேசித்தீர்; ஞானத்தின் இரகசியத்தை மற்றும் மறைக்கப்பட்ட விஷயங்களை நீர் எனக்குக் காட்டியிருக்கிறீர். நீர் என்னை ஹீசோப்பால் தூவ வேண்டும், நான் சுத்திகரிக்கப்படுவேன்; நீர் என்னைக் கழுவ வேண்டும், நான் பனியை விட வெண்மையாக இருப்பேன். மகிழ்ச்சியையும் மகிழ்ச்சிப்படுத்தலையும் நீர் கேட்கச் செய்வீர்; தாழ்த்தப்பட்ட என் எலும்புகள் கூட மகிழ்ச்சி அடைகின்றன. என்னுடைய பாவங்களிலிருந்து உம்முடைய முகத்தை விலக்கி, என்னுடைய எல்லா கொடுஞ்செயல்களையும் என்னிடமிருந்து நீக்கியருளும். தேவனே, என்னுள் தூய்மையான இதயத்தை உருவாக்கி, அதனுள் இருக்கும் ஆன்மாவைப் புதுப்பித்தருளும். உம் முன்னிலையில் இருந்து என்னைத் தூக்கி எறியாதீர், உமது பரிசுத்த ஆவியானவரை என்னிடமிருந்து பிரித்து விடாதேயும். உமது இரட்சிப்பின் மகிழ்ச்சியை மீட்டெடுத்து, உம்முடைய ஜீவன் மூலம் என்னை நிலைப்படுத்தும். பாவம் செய்பவர்களுக்கு உமது வழிகளை நான் கற்பிப்பேன், தேவபக்தியற்றவர்கள் உம்மைத் தேடுபவர்களாக மனமாற்றம் அடைவார்கள். என் இரட்சிப்பின் தேவனாய் இருக்கிறவரே, இரத்த சம்பந்தமான குற்றங்களில் இருந்து என்னை விடுவிப்பீராக; என் நாவு உமது நீதியின் மேன்மையால் மகிழ்ச்சி அடைகிறது. கர்த்தாவே, நீர் என் வாயைத் திறப்பீராக, என் உதடுகள் உம்முடைய திருப்புகழை பாடக்கடவதாக. நீர் தியாகத்தை விரும்பியிருந்தால், நான் அதைக் கொடுத்திருப்பேன்; சர்வாங்க தகனபலிகளில் நீர் மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டீர். தேவனுக்கான [ஏற்றுக்கொள்ளக்கூடிய] தியாகம் ஒரு நொந்துபோன ஆன்மா; அவர் ஒரு தவறான மற்றும் நொறுங்கிய இதயத்தை வெறுக்க மாட்டார்.

19ம் அத்தியாயம் – மேற்கூறிய எடுத்துக்காட்டுகளைப் பின்பற்றி, அமைதியைத் தேடுவோம்

இவ்வாறு மிகச் சிறந்த, புகழ்பெற்ற மனிதர்களின் மனத்தாழ்மையும், தெய்வீக சமர்ப்பணமும் நம்மை மட்டுமல்ல, நமக்கு முன்னால் உள்ள எல்லா தலைமுறையினரையும் சிறப்பாக வழிநடத்தியுள்ளன; சாத்தியத்தினூடாகவும், அசரீரியின் ஊடாகவும் அவருடைய பிரசங்கங்க ளால் பலர் பயன் பெற்றனர். பல பெரிய மற்றும் புகழ்பெற்ற எடுத்துக்காட்டுகள் நம் முன் வைக்கப்பட்டுள்ளதால், ஆரம்பத்தில் இருந்தே நமக்கு முன்னால் அமைக்கப்பட்ட அடையாளமாக இருந்த அமைதியின் நடைமுறைக்கு மீண்டும் திரும்புவோம். பிரபஞ்சத்தைப் படைத்தவரும் பிதாவாகிய தேவனையும் இடைவிடாது நினைவுகூருவோம். அவருடைய வலிமைமிக்க மற்றும் மிக உயர்ந்த சன்மானங்களையும் சமாதானத்தின் நன்மைகளையும் பெற்றுக்கொள்ள இணைவோம். நம்முடைய புரிந்துகொள்ளல் ஊடாக அவரைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம், நம்முடைய ஆன்மாவின் கண்களால் அவருடைய நீண்டகால பாடுகளைக் கண்ணுறுவோம். அவர் படைத்த அனைத்திலும் இருந்து நோக்கும்போது, அவர் கோபத்திலிருந்து எவ்வளவு விடுபட்டிருக்கிறார் என்பதைப் பிரதிபலிப்போம்.

20ம் அத்தியாயம் – பிரபஞ்சத்தின் அமைதியும் நல்லிணக்கமும்

அவருடைய ஆட்சியின் கீழ் சுழலும் வானம், அவரிடம் அமைதியாக இருக்கும். இரவும் பகலும் அவரால் நியமிக்கப்பட்ட போக்கை கடைபிடிக்கின்றன, ஒருவருக்கொருவர் புத்திசாலித்தனத்துக்கு இடையூறு இன்றி இருக்கின்றனர். சூரியனும் சந்திரனும், நட்சத்திரங்களின் தொகுதியும் அவருடைய கட்டளைப்படி, அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள், எந்த விலகலும் இல்லாமல் இணக்கமாக பயணிக்கின்றன. அவருடைய சித்தத்தின்படி, இந்தப் பலன் தரும் பூமி, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும், அதன்மீது உள்ள அனைத்து உயிரினங்களுக்கும், சரியான பருவங்களில், சரியான முறையில் உணவைத் தருகிறது. அது ஒருபோதும் தயங்குவதில்லை, அவர் நிர்ணயித்த எந்தவொரு கட்டளையும் எப்போதும் மாற்றமில்லாமல் நடந்தேறுகின்றன. முனைகளைத் தேடிக் கண்டடைய முடியாத பாதாளங்களும், உலகின் நிலத்தின் கீழ் உள்ள விவரிக்க முடியாத அனைத்து ஏற்பாடுகளும் ஒரே சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. எல்லைகள் கடந்து பரந்து விரிந்து காணப்படும் கடல் அவர் செயலால் பல்வேறு படுகைகளில் ஒன்றுகூடியது, அதைச் சுற்றியுள்ள எல்லைகளுக்கு அப்பால் ஒருபோதும் கடந்து செல்வதில்லை, ஆனால் அவர் விதித்த கட்டளையிட்டபடியே அவை சுழல்கின்றன. அவர் கூறுகிறார்: இற்றை வரை நீங்கள் வரக்கூடும், நீங்கள் தாங்கி வரும் அலைகள் உங்களுக்குள் சிதைக்கப்படும் யோபு 38:11. கடல், மனிதனால் கடப்பதற்கு சாத்தியம் இல்லாதுள்ளது, உலகம் அதற்கு அப்பால் உள்ளது, இறைவனின் அதே சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம் ஆகியவை அமைதியாக ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்கின்றன. காற்று அதன் கடமையை சரியான நேரத்தில், தடையின்றி செவ்வனே ஆற்றி வருகிறது. என்றும் வழிந்தோடும் நீரூற்றுகள், மனிதனின் மகிழ்ச்சிக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளன, மானிடரின் வாழ்க்கைக்காக அவை தங்களை முழுமையாகவும் தவறவிடாமலும் வழங்குகின்றன. உயிரினங்களில் மிகச் சிறியவை கூட அமைதியிலும் பரஸ்பர உறவிலும் ஒன்றை ஒன்று சந்திக்கின்றன. இவை யாவும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் இருக்கும்படி எமது தலையாய படைப்பாளரான தேவன் நியமித்துள்ளார். அவர் அனைவருக்கும் நன்மை செய்யும் அதேவேளை, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் அவருடைய இரக்கங்களில் அடைக்கலம் பெறுவோம். அவருக்கு என்றென்றும் மகிமையும் மாட்சியும் உண்டாவதாக. ஆமென்.

21ம் அத்தியாயம் – கடவுளுக்குக் கீழ்ப்படிவோம், தேசத்துரோக செயற்பாட்டாளர்களுக்கு அல்ல

அன்பார்களே, கவனியுங்கள், நாம் அவருக்கு தகுதியுள்ளவர்களாக இல்லாவிட்டால், அவருடைய இரக்கம் எம் மீது இல்லாவிட்டால் அது எமது கண்டனத்திற்கு வழிவகுக்கும் [அது இவ்வாறே இருத்தல் வேண்டும்]. அவருடைய பார்வையில் நல்லது என்று படுவதை நீங்கள் ஒரே மனதுடன் செய்யுங்கள். [வேதாகமம்] ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூறுகிறது; கர்த்தருடைய வல்லமை வயிற்றின் ஆழமான பகுதிகளைத் தேடும் மெழுகுவர்த்தி போன்றது என்று. பழமொழிகள் 20:27. அவர் எமக்கு எவ்வளவு அருகில் இருக்கிறார் என்பதையும், நமது எண்ணங்கள் அல்லது நாம் ஈடுபடும் செயல்கள் எதுவும் அவரிடமிருந்து மறைக்கமுடியாது என்பதையும் நினைவில் கொள்வோம். ஆகையால், அவருடைய சித்தத்தால் நமக்கு அருளிய கடமைகளில் இருந்து நாம் விடுபடக்கூடாது என்பது முற்றிலும் சரியே. கடவுளை புண்படுத்துவதை விட, தங்கள் பேச்சில் பெருமையும் முட்டாள்தனமும், சிந்தனையற்ற, செருக்கு சிந்தனையுள்ள மனிதர்களை தண்டிப்பது மேலானதாகும். நமக்காக இரத்தம் சிந்திய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோம்; நம்மீது ஆட்சி செய்பவர்களை மதிப்போம்; நம்மிடையே உள்ள வயதானவர்களை மதிப்போம்; கடவுளுக்குப் பயந்து வாழ இளைஞர்களைப் பயிற்றுவிப்போம்; நம்முடைய மனைவிமாருக்கு நன்மைகளைப் போதித்து வழிநடத்துவோம். அவர்கள் தூய்மையான நேர்மையான பழக்கங்களை [அவர்களின் எல்லா நடத்தைகளிலும்] வெளிப்படுத்தட்டும்; அவர்கள் சாந்தகுணத்தின் நேர்மையான தன்மையை வெளிப்படுத்தட்டும்; அவர்களின் பேச்சின் தன்மை மூலம், அவர்கள் தங்கள் நாவிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளை வெளிப்படுத்தட்டும்; அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதன் மூலம் மட்டும் அல்ல, மாறாக கடவுளுக்கு பயந்த அனைவருக்கும் சமமான பாசத்தைக் காட்டுவதன் மூலம் அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தட்டும். உங்கள் பிள்ளைகள் உண்மையான கிறிஸ்தவ வாழ்வின் பங்காளிகளாக இருக்கட்டும்; தேவன் முன்னிலையில் தாழ்மை என்பது எவ்வளவு பெரியது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும் – தூய்மையான பாசத்தின் வல்லமை அவரிடம் மேலோங்கட்டும் – அவர் மேலுள்ள பயம் எவ்வளவு சிறப்பானது, பெரியது, தூய்மையான மனதுடன் அவரோடு நடப்பவர்கள் அனைவரையும் அது எவ்வாறு காப்பாற்றுகிறது என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ளட்டும். அவர் [இதயத்தின்] எண்ணங்களையும் அதன் ஆவல்களையும் தேடுபவர்: அவருடைய மூச்சு நம்மில் இருக்கிறது; அவர் விரும்பும்போது, அவர் அதை எடுத்துக்கொள்வார்.

22ம் அத்தியாயம் – மேற்குறிய அறிவுரைகள் கிறிஸ்தவ விசுவாசத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, இது பாவமான நடத்தையின் பிரதிபலனை எடுத்துரைக்கிறது

இப்போது கிறிஸ்துவில் உள்ள விசுவாசம் இந்த எல்லா அறிவுரைகளிலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியானவரில் அவரே இவ்வாறு நமக்கு உரையாற்றுகிறார்: பிள்ளைகளே, வாருங்கள், எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுவது என்றால் என்ன என்று நான் உங்களுக்குக் கற்பிப்பேன். மனிதன் வாழ்க்கையை விரும்புகிறான், ஆனால் நல்ல நாட்களைக் காண விரும்புகிறானா? உங்கள் நாவை தீமைகளில் இருந்தும், உங்கள் உதடுகளை ஏமாற்று வார்த்தைகளில் இருந்தும் காத்துக்கொள்ளுங்கள். தீமையிலிருந்து விலகி, நன்மை செய்யுங்கள்; சமாதானத்தைத் தேடுங்கள், அதைத் தொடருங்கள். கர்த்தருடைய கண்கள் நீதியுள்ளவர்களின் மேல் இருக்கின்றன, அவருடைய காதுகள் அவர்களுடைய செபங்களுக்காகத் திறந்திருக்கும். கர்த்தருடைய முகம் தீமையைச் செய்பவர்களுக்கு எதிரானது, பூமியில் அவர்களை நினைவுகூருவதைத் தவிர்க்கிறது. நீதியை மதிப்பவர்கள் உரத்துக் குரல் எழுப்பினர், கர்த்தர் அவர்கள் குரலைக் கேட்டு, அனைத்துக் கஷ்டங்களிலிருந்தும் அவர்களை விடுவித்தார். கொடூரர்களின் மேல் உள்ள அடையாளங்கள் (நியமித்தது போல) பல; ஆனால் கர்த்தரை நம்புகிறவர்களை கருணை சூழ்ந்திருக்கும்.

23ம் அத்தியாயம் – தாழ்மையைப் பின்பற்றுங்கள், கிறிஸ்து மீண்டும் வருவார் என்று நம்புங்கள்

இரக்கமும், நன்மையின் வடிவமுமான நமது பிதா தன் மீது விசுவாசமும் பயமும் கொண்டோர் மீது [இரக்கத்தின்] தாராளத்தைக் கொண்டிருக்கிறார், மேலும் எளிமையான மனதுடன் தன்னிடம் வருபவர்களுக்கு அன்பாகவும் அவருடைய தயவையும் பொழிகிறார். ஆகவே நாம் இரட்டை எண்ணம் கொண்டவர்களாக இருக்கக்கூடாது; அவருடைய மிகப் பெரிய, மகத்தான வெகுமதிகளைப் பெரும்பொருட்டு நாம் நமது ஆன்மாவை உயர்த்தக்கூடாது. எழுதியவை எங்களிடமிருந்து வெகு தொலைவில் இருக்கட்டும், இரட்டை மனம் கொண்டவர்களும் சந்தேகத்திற்குரிய இதயமும் உடையவர்களும் இழிவானவர்கள்; எங்கள் பிதாக்களின் காலத்தில்கூட இவர்கள் போன்றோரைப்பற்றி நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால், இப்போதோ, எங்களுக்கு வயதாகிவிட்டது, அப்படிப்பட்ட எதுவும் எங்களுக்கு நடக்கவில்லை. முட்டாள்களே! உங்களை ஒரு மரத்துடன் ஒப்பிடுங்கள்; [உதாரணமாக] ஒரு திராட்சைக் கொடியை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில், அது அதன் இலைகளை உதிர்க்கிறது, பின்னர் மொட்டுகள் மலர்கின்றன, பின்னர் இலைகளை உருவாகின்றன, பின்னர் பூக்கள் பூக்கின்றன; அதன் பிறகு புளிப்பு திராட்சை உருவாகி, பழுத்த பழத்தை தருகிறது. ஒரு சிறிது நேரத்தில், ஒரு மரத்தின் பழம் எவ்வாறு முதிர்ச்சியடைகிறது என்பதை நீங்கள் அறிந்துகொண்டுள்ளீர்கள். சத்திய வெளிப்பாடு என்னவெனில், விரைவில், அவருடைய சித்தம் நிறைவேறும், ஏனெனில் வேதாகமமும் அதையே சாட்சியாகக் கூறுகிறது, “அவர் விரைவில் வருவார், தாமதிக்கமாட்டார்; கர்த்தர் திடீரென்று அவருடைய ஆலயத்திற்கு வருவார், புனிதரோடும் கூட, நீங்கள் எதிர்பாத்ததைப்போல. மல்கியா 3: 1

24ம் அத்தியாயம் – உயிர்த்தெழுதல் இடம்பெறும் என்பதை தொடர்ந்து இயற்கை மூலம் கர்த்தர் நமக்குக் காட்டுகிறார்

அன்பார்களே, எதிர்காலத்தில் உயிர்த்தெழுதல் இருக்கும் என்று தேவன் தொடர்ந்து நமக்கு எவ்வாறு நிரூபிக்கிறார் என்பதைக் கருத்தில் கொள்வோம், அவற்றில் அவர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பியதன் மூலம் உயிர்த்தெழுதலின் முதல் கனிகளை எமக்கு காட்டியுள்ளார். அன்பார்களே, அனைத்து வேளைகளிலும் உயிர்த்தெழுதல் நடக்கும் என்பது பற்றி நாம் சிந்தனையில் கொள்வோம். இரவும் பகலும் உயிர்த்தெழுதல் என்று ஒன்று உண்டென எமக்கு அறிவிக்கின்றன. இரவு நேரம் தூக்கத்தில் மூழ்கி, பகல் வேளை உதிக்கிறது; பகல் [மீண்டும்] விடைபெற்று, இரவு வருகிறது. [பூமியில்] பழங்களைபெற, தானிய விதைகளை விதைப்பது எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பார்ப்போம். விதைப்பவர் லூக்கா 8: 5 போய் அதை தரையில் விசிறியெறிந்து, விதை சிதறடிக்கப்பட்டு, பூமியில் விழுந்தபோது, அவை உலர்ந்த மற்றும் வெறுமையாக இருந்தாலும், படிப்படியாக கரைந்து போகிறது. பின்னர், அது படிப்படியாகக் கரைந்த பின், கர்த்தருடைய உறுதிப்பாட்டின் வல்லமை அதை மீண்டும் முளைக்க வைக்கிறது, ஒரு விதையிலிருந்து பல செடிகள் மரங்கள் முளைத்து அவை கனிகளைக் கொண்டு வருகின்றன.

25ம் அத்தியாயம் – பீனிக்ஸ் (இறந்து சாம்பலானாலும் மீண்டும் உயித்தெழும் கற்பனை பறவை) எமக்கு உயிர்த்தெழுதலை நினைவூட்டுகிறது.

கீழைத்தேசங்களில், அதாவது அரேபியாவிலும், சுற்றியுள்ள நாடுகளிலும் நடக்கும் [உயிர்த்தெழுதலின்] அற்புதமான அடையாளத்தை நோக்குவோம். ஃபீனிக்ஸ் (இறந்து சாம்பலானாலும் மீண்டும் உயித்தெழும் கற்பனை பறவை) என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட பறவை பற்றி பேசப்படுகிறது. இது தனித்துவமானது. ஐநூறு ஆண்டுகள் வாழ்கிறது. அது அது இறக்கும் நேரம் நெருங்கும் போது, அது தன்னைச்சுற்றி நறுமணப் பொருட்கள், மற்றும் நறுமணப்புகை ஏற்படுத்தும் வாசனைத்திரவியங்களினால் கூடு கட்டிக் கொள்கிறது, அதன் இறுதி நேரம் வந்துவிட்டதும், அது கட்டிய கூட்டுக்குள் நுழைந்து இறந்து விடுகிறது. ஆனால் அதன் உடல் சிதைந்தவுடன், ஒரு குறிப்பிட்ட வகையான புழுக்கள் உருவாகின்றன. அவை இறந்த பறவையின் உடல் எச்சங்களால் வளர்ந்த பின் இறகுகள் முளைக்கின்றன. பின்னர், அது வலிமை பெற்றவுடன், அந்தக் கூட்டில் அதன் பெற்றோரின் எலும்புகளை சேர்த்து எடுத்துக்கொண்டு, அரேபியா தேசத்திலிருந்து எகிப்துக்கும், ஹெலியோபோலிஸ் என்ற நகரத்திற்கும் செல்கின்றன. மேலும், நிறைந்தே பகல் பொழுதொன்றில், எல்லா மனிதர்களின் பார்க்கக்கூடிய வகையில் பறந்து, அது அந்த எலும்புகளை சூரிய பலிபீடத்தின் மீது வைக்கிறது, இதை நிறைவேற்றியவுடன், மீண்டும் அப்பறவை அதன் முன்பு தங்கியிருந்த தனது இருப்பிடத்துக்கு உடனே திரும்புகிறது. குருமார் நாட்களின் பதிவுகளைப் பரிசோதித்து, ஐநூறாம் ஆண்டு நிறைவடைந்தவுடன் அது திரும்பி வந்ததை காண்கிறார்கள்.

26ம் அத்தியாயம் – வேதாகமம் சாட்சி பகர்வது போல, நாம் மீண்டும் எழுந்திருப்போம்

ஒரு நல்ல விசுவாசத்தின் உறுதிமொழி மூலம் அவருக்கு விசுவாசமாக சேவை செய்தவர்களை மீண்டும் உயிர்த்தெழச்செய்வது சகலவற்றையும் படைத்தவருக்கு பெரிய மற்றும் அற்புதமான காரியம் என நாம் கருதுகிறோமே. ஒரு பறவையின் உதாரணத்தின் ஊடாகக் கூட சத்தியத்தை நிறைவேற்றும் தனது வல்லமையை நமக்குக் காட்டுகிறார் அல்லவா? [வேதாகமம்] ஒரு குறிப்பிட்ட இடத்தில், நீர் என்னை எழுப்புவீர், நான் எனது குற்றங்களை உம்மிடம் ஒப்புவிப்பேன்; மீண்டும், நான் என்னை மீண்டும் தூங்கப்பண்ணுவேன்; மீண்டும் விழிப்பேன், ஏனென்றால் நீர் என்னுடன் இருக்கிறீர்; யோபு கூறியதைப்போல், இவை அனைத்தையும் அனுபவித்த என்னுடைய சரீரத்தை மீண்டும் எழுப்பச்செய்வீர். யோபு 19: 25-26 .

27ம் அத்தியாயம் – உயிர்த்தெழும் நம்பிக்கையில், நம் சர்வ வல்லமையுள்ள மற்றும் அனைத்தும் அறிந்த தேவனோடு இணைந்திடுவோம்.

இந்த நம்பிக்கையுடன், நம்முடைய ஆன்மாக்கள் அவருடைய வாக்குறுதிகளில் உண்மையுள்ளவர்களாகவும், அவருடைய தீர்ப்புகளுக்கும் கட்டுப்படட்டும். பொய் சொல்லக்கூடாது என்று நமக்குக் கட்டளையிட்டவர் , தான் என்றும் பொய் சொல்லமாட்டார்; கடவுள் முன்னிலையில் எதுவும் சாத்தியமில்லாமல் போகாது. பொய் சொல்வதைத் தவிர. ஆகவே, அவருடைய விசுவாசம் நமக்குள் மீண்டும் விருத்தியுறும், அனைத்தும் அவருக்கு அருகில் இருப்பதை நாம் கருத்தில் கொள்வோம். அவருடைய வல்லமையின் வார்த்தையால் அவர் அனைத்தையும் ஸ்தாபித்தார், ஆயினும் அவருடைய வார்த்தையால் அவற்றைத் தூக்கி எறியவும் முடியும். யார் அவரைப் பார்த்து: நீர் என்ன செய்தீர் என்று கேட்கக்கூடுமோ? அன்றி யாராலாவது அவருடைய வல்லமையின் சக்தியை எதிர்க்கக் கூடுமோ? அவர் எப்போது, எது வேண்டுமானாலும் செய்வார், அவரால் தீர்மானிக்கப்பட்ட காரியங்கள் யாவும் ஓயாது நடந்து கொண்டிருக்கும் மத்தேயு 24:35. அவருக்கு முன்பாக எல்லாமே திறந்திருக்கும், அவருடைய புத்திக்கூர்மையின் முன் எதையும் மறைக்க முடியாது. வானம் கடவுளின் மகிமையை அறிவிக்கிறது, மேலும் பரந்த ஆகாயம் அவருடைய எளிதான படைப்பை அறிவிக்கிறது. பகல் பகலோடு பேசுகிறது, இரவு இரவுக்கு அறிவைப் புகட்டுகிறது. மேலும் குரல்களால் சொல்லமுடியாதவைகள் வார்த்தைகளோ சம்பாஷணைகளோ அல்ல. சங்கீதம் 19: 1-4.

28ம் அத்தியாயம் – கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்: ஆகவே பாவம் செய்வதைத் தவிர்த்திடுவோம்

என்றென்றும், எல்லாவற்றையும் [கடவுளால்] காணவும், கேட்கவும் முடியும், நாம் அவருக்குப் பயந்து சீவிப்போம், தீய ஆசைகளிலிருந்து உருவாகும் பொல்லாத செயல்களைக் கைவிடுவோம்; அதன் மூலம் அவருடைய கருணையால், வரவிருக்கும் தீர்ப்புகளிலிருந்து நாம் எம்மைப் பாதுகாப்போம். அவருடைய வல்லமை மிகுந்த கரங்களில் இருந்து நம்மில் எவரேனும் தப்பி ஓட முடியுமா? அல்லது அவரிடமிருந்து ஓடிப் போனவர்களில் யாரை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளும்? வேதாகமம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சொல்கிறது; நான் எங்கு செல்வேன், உம் முன்னிலையில் நான் என்னை எப்படி மறைக்கக்கூடும்? நான் மோட்சத்துக்கு சென்றால், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பூமியின் எல்லைகளுக்கு அப்பால் சென்ன்றாலும், உமது வலது கரம் அங்கே இருக்கிறது; நான் படுகுழியில் என் படுக்கையை அமைத்தால், உம்முடைய வல்லமை அங்கே இருக்கிறது. அப்படியானால், யாரால் எங்கு செல்ல முடியும்? அல்லது எல்லாவற்றையும் புரிந்துகொண்டவரிடம் இருந்து அவர்கள் எப்படி தப்பிச்செல்வார்கள்?

29ம் அத்தியாயம் – இதய சுத்தியோடு நாம் இறைவனை அண்மிப்போம்

ஆகவே, தூய ஆவியிடமிருந்து பெற்றுக்கொண்ட புனிதத்தன்மையோடு அவரிடம் நெருங்கி வருவோம், தூய்மையான மற்றும் களங்கமற்ற கைகளை அவரை நோக்கி உயர்த்துவோம், கிருபையும் கருணையும் கொண்ட பிதாவை நேசிப்போம். ஆகவே எழுதியுள்ளபடி, உன்னதமானவர் தேசங்களின் எல்லைகளை வகுத்தபோது, ஆதாமின் குமாரர்கள் சிதறுண்டு போனபோது, தேவனுடைய தூதர்களின் எண்ணிக்கைக்கு அமைவாக அவர் தேசங்களின் எல்லைகளை நிர்ணயித்தார். யாக்கோபின் மக்கள் கர்த்தருடைய பகுதியாகவும், இஸ்ரவேலர் அவரது பரம்பரை வழித்தோன்றல்கள் ஆகவும் ஆனார்கள். உபாகமம் 32:8-9. இதோ, கர்த்தர் தேசங்களுக்கு மத்தியில் ஒரு தேசத்தை எடுத்துக்கொள்கிறார். ஒரு மனிதன் தனது உழைப்பின் முதல் கனிகளை எடுத்துக்கொள்வது போல; அந்த தேசத்திலிருந்து புனிதர்கள் வெளியே கிளம்புவார்கள்.

30ம் அத்தியாயம் – கடவுளைப் பிரியப்படுத்தும் காரியங்களைச் செய்வோம், அவரது ஆசீர்வாதங்களைப் பெற அவரால் வெறுக்கப்பட்டவர்களிடம் இருந்து நாம் தூர விலகி இருப்போம்

ஆகையால், பரிசுத்தமானவரின் பகுதியை நாம் காண்கிறோம், புனிதத் தண்மையைக் காத்திட அனைத்து நன்மைகளையும் செய்வோம், எல்லா தீய வார்த்தைகளையும் தவிர்த்து, அனைத்து அருவருப்பான மற்றும் தூய்மையற்ற சித்தாந்தங்களையும் ஒதுக்கி, மதுவுக்கு அடிமையாதல், மாற்றத்தைத் தேடுதல், காம இச்சைகளையும் விபச்சாரத்தையும் கைவிட்டு, இழிவான செயல்களில் மேலுள்ள மோகத்திலும் இருந்து எம்மைக் காத்துக்கொள்வோம். [வேதாகமம் கூறுவது போல்] கடவுளைப் பொறுத்தவரை, அகம்பாவம் கொண்டவர்களை அவர் தடுத்து விடுகிறார். அதேவேளை தாழ்மையானவர்களுக்கு அவரது அருளை பொழிகிறார். ஆகவே, இறை அருள் பெற்றவர்களுடன் நாம் இணைந்திருப்போம். நாம் ஒற்றுமை தாழ்ச்சி என்ற ஆடையை அணிந்துகொள்வோம், எப்போதும் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்போம், எல்லாவிதமான வீண்பேச்சுகளில் இருந்தும், தீயவர்களிடமிருந்தும் வெகு தொலைவில் இருப்போம், நம்முடைய செயல்களாலேயே நாம் நியாயப்படுத்தப்படுகிறோம், நமது வார்த்தைகளால் அல்ல. [வேதாகமம் கூறுவது போல்], அதிகம் பேசுபவன் அதிகமான பதிலையும் கேட்கக் கடவான். பேச்சில் வல்லவனாக இருப்பவன் தன்னை நேர்மையுள்ளவன் என்று கருதுகிறானா? பெண்ணிலிருந்து பிறந்தோர், குறுகிய காலம் வாழ்வோர் பாக்கியவான்கள்: அவர்களைப்பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. நம்மை நாம் புகழ்வதை விட்டு, இறைவனைப் புகழ்வோம்; தற்புகழ்ச்சியாளர்களை கடவுள் நேசிப்பதில்லை. நம்முடைய நீதியுள்ள முன்னோர்களின் நட்பண்புகளைப் பாராட்டுவதைப் போலவே, நம்முடைய நற்செயல்களுக்கும் சாட்சியங்களும் மற்றவர்களால் பாராட்டப்படக்கடவதாக. அகம்பாவம், ஆணவம், திமிர் போன்றவை கடவுளால் சபிக்கப்பட்டவர்களுக்கு உரியது; ஆனால் மென்மை, பணிவு, சாந்தகுணம் போன்றவை அவரால் ஆசீர்வதிக்கப்படுகின்றன.

31ம் அத்தியாயம் – தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெறுதல் என்பதன் அர்த்தம் என்ன என்று பார்ப்போம்

அவருடைய ஆசீர்வாதங்களோடு நாம் ஒன்றிணைந்திடுவோம், அதைத் தக்கவைப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதை ஆராய்வோம். ஆரம்பம் தொட்டு நடந்த விடயங்களைப் பற்றி சிந்திப்போம். எமது தந்தை ஆபிரகாம் எக்காரணத்திற்காக ஆசீர்வதிக்கப்பட்டார்? அவர் விசுவாசத்தின் மூலம் நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டியதால் அல்லவா? ஈசாக், யாக்கோபு 2:21 பரிபூரண நம்பிக்கையுடன், என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தவர் போல், மகிழ்ச்சியுடன் தன்னை ஒரு பலியாக கொடுத்தார். ஆதியாகமம் 22: 6-10 யாக்கோபு தன் சகோதரனால் ஏற்பட்ட விளைவால் தன் சொந்த தேசத்திலிருந்து தாழ்மையுடன் புறப்பட்டு, லாபானிடம் போய் அவனுக்கு சேவை செய்தான்; இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் செங்கோல் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

32ம் அத்தியாயம் – நாம் நியாயப்படுத்தப்படுவது நம்முடைய சொந்த கிரியைகளினால் அல்ல, நமது விசுவாசத்தினாலேயே ஆகும்.

ஒவ்வொன்றையும் நேர்மையாகக் கருதும் எவரும், அவர் கொடுத்த வெகுமதியின் மகத்துவத்தை போற்றுவார். அவரிடமிருந்தே ஆசாரியர்களையும் தேவனுடைய பலிபீடத்தில் ஊழியம் செய்யும் எல்லா லேவியர்களும் (குருமார் துணைவராகச் செயலாற்றிய யூத இன வகுப்பினர்) தோன்றினார்கள். அவரிடமிருந்தே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சரீரமாய் [இறங்கினார்]. உரோமையர் 9: 5. அவரிடமிருந்தே அரசர்கள், பிரபுக்கள், யூதா இனத்தின் ஆட்சியாளர்கள் தோன்றினார்கள். கடவுள் வாக்குறுதியளித்தபடியே அவருடைய மற்ற கோத்திரங்களும் சிறியளவு மகிமையைக்கூடப் பெறவில்லை, நீங்கள் விதைத்த விதைகள் வானத்தின் நட்சத்திரங்களைப் போல இருக்கும். ஆகையால், இவர்கள் அனைவரும் மிகவும் கௌரவிக்கப்பட்டார்கள், தங்கள் சொந்த நலனுக்காகவோ, தங்கள் சொந்த செயல்களுக்காகவோ அல்லது அவர்கள் செய்த நீதியான செயல்களுக்காக அல்ல, அவருடைய சித்தத்தின் நிமித்தமாகவே கௌரவிக்கப்பட்டார்கள். நாமும், கிறிஸ்து இயேசுவில் அவருடைய சித்தத்தினால் அழைக்கப்படுகிறோம், நம்முடைய செயல்களால் நியாயப்படுத்தப்படவில்லை, நம்முடைய ஞானம், புரிந்துகொள்ளும் தன்மை, தெய்வபக்தி, அல்லது மனத்தூய்மையால் நாம் செய்த செயல்களூடாகவும்; ஆடியில் இருந்தே சர்வவல்லமையுள்ள கடவுள் எல்லா மனிதர்களையும் நியாயப்படுத்திய அந்த விசுவாசத்தின் மூலம்; யாவருக்கும் என்றென்றைக்கும் மகிமை உண்டாகக்கடவதாக. ஆமென்.

33ம் அத்தியாயம் – எனவே நல்ல செயல்களையும் அன்பையும் கடைப்பிடிப்பதில் நாம் முன் நிற்போம். கடவுள் அவர் தாமே நற்செயல்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் விளங்குகிறார்

அப்படி என்றால், சகோதரர்களே, நாம் என்ன செய்ய வேண்டும்? நல்லதைச் செய்வதில் நாம் ஈடுபடாமல், அன்பின் நடைமுறையிலிருந்து விலகியிருக்கக்கூடுமா? அத்தகைய எந்தவொரு போக்கையும் நாம் பின்பற்ற கூடாதென்று என்று கடவுள் எம்மைத் தடுக்கிறார்! ஆகவே ஒவ்வொரு நற்காரியத்தையும் செய்ய நிறைந்த ஆற்றலுடனும், ஒருநிலைப்பாட்டுடனும் விரைந்து செல்வோம். அனைத்தையும் படைத்த இறைவனும், அவருடைய படைப்புகளின் நிமித்தம் மகிழ்ச்சியடைகிறார். அவருடைய தன்னிகரற்ற வல்லமையால், அவர் வானுலகை உண்டாக்கினார், அவருடைய அளவு கடந்த ஞானத்தால் அதை அலங்கரித்தார். அவர் பூமியை, அதனைச் சுற்றியுள்ள நீரிலிருந்து வேறுபடுத்தி, தனது சொந்த வல்லமையால் அசையாத அடித்தளத்தின் மீது அதை ஊன்றச்செய்தார். அதன்மீது வாழும் விலங்குகளுக்கும் அவர் தனது சொந்த வார்த்தையால் கட்டளையிட்டார். அவ்வாறே, அவர் கடலையும், அதிலுள்ள உயிரினங்களையும் உருவாக்கியபோது, அவர் தம்முடைய சொந்த வல்லமையால் அவற்றை [அவற்றின் சரியான எல்லைக்குள்] வாழச்செய்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய புனிதமான மற்றும் மாசில்லாத கைகளால் அவர் மனிதனை உருவாக்கினார், [அவருடைய படைப்புகளில்] மிகச் சிறந்ததுமான, மனிதத்தை – அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த புரிந்துகொள்ளல்களின் ஊடாக, தனது சொந்த உருவத்தின் சாயலாக – அவர் படைத்தார். கடவுள் இவ்வாறு கூறுகிறார்: எமக்குப்பிறகு மனிதனை நம் சாயலில் உருவாக்குவோம். ஆகவே கடவுள் மனிதனைப் படைத்தார்; ஆணாகவும் பெண்ணாகவும் அவர் அவர்களைப் படைத்தார். ஆதியாகமம் 1: 26-27. அனைத்தையும் படைத்து முடித்தபின், அவர் அவர்களை அங்கீகரித்து, ஆசீர்வதித்து, “பல்கிப் பெருகக்கடவதாக” என்றார் ஆதியாகமம் 1:28. ஆகவே தான், எல்லா நீதியுள்ள மனிதர்களும் எவ்வாறு நற்செயல்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும், கர்த்தர் தம்முடைய செயல்களால் தன்னை அலங்கரிப்பதில் மகிழ்ச்சியடைந்ததையும் நாம் காண்கிறோம். ஆகவே, இவ்வுதாரணத்தை பின்பற்றி, தாமதமின்றி அவருடைய சித்தத்திற்கு அமைய நடக்க உறுதிகொள்வோம். நீதி நேர்மையை நிலைநாட்ட நாம் நமது முழு சக்தியோடு பாடுபடுவோம்.

34ம் அத்தியாயம் – கடவுளுக்குள் நாம் செய்யும் நற்செயல்கள் நிறைந்த வெகுமதிகளை அளிக்கக்கூடியவை. அவை ஒற்றுமையால் இணையப்பெற்றவை. அவரிடமிருந்து கிடைத்த அந்த வெகுமதியைபற்றி ஆராய்வோம்

நல்ல சேவகன் தன் உழைப்புக்கான ஊதியத்தை நம்பிக்கையுடன் பெறுகிறான்; சோம்பேறி மற்றும் கையாலாகாதவன் தனது தொழில் தருனரின் முகத்தில் விழிக்க அஞ்சுகிறான். ஆகையால், நல்லதைச் செய்வதில் நாம் என்றும் பின் நிற்கக்கூடாது; அனைத்தும் அவரிடமிருந்து கிடைக்கக்கூடியது. இவ்வாறு அவர் நமக்கு முன்னறிவிக்கிறார்: இதோ, கர்த்தர் வருகிறார், ஒவ்வொருவரும் அவரவருடைய சம்பாவனைக்கு ஏற்ற பலன் அவருக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆகையால், எந்தவொரு நல்ல செயலிலும் ஈடுபட நாம் சோம்பேறிகளாகவோ மெத்தனமாகவோ இருக்கக்கூடாது என்பதற்காக அவர் எம்மை முழு இதயத்தோடு செயல்பட அறிவுறுத்துகிறார். எமது தற்பெருமை நம்பிக்கை அனைத்தும் அவர் பற்றியதாகவே இருக்கவேண்டும். அவருடைய சித்தத்திற்கு நாம் அடிபணிவோம். அவருடைய வானதூதர்களின் சேனை, அவருடைய சித்தத்தை நிறைவேற்ற எப்போதுமே தயாராக இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்வோம். வேதாகமம் கூறுகிறது; பத்தாயிரம் மடங்கானோர் அவரைச் சுற்றி நின்றனர், ஆயிரமாயிரமானோர் அவருக்கு ஊழியம் செய்கிறார்கள், தானியேல் 7:10, “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், சபாத்தின் ஆண்டவர்; அனைத்து படைப்புகளும் அவருடைய மகிமையால் நிறைந்துள்ளது. ஏசாயா 6:3. ஆகையால், மனசாட்சியுடனும், ஒற்றுமையுடனும் ஒன்றுகூடி, அவருடைய மகத்தான, மகிமையான வாக்குறுதிகளில் நாம் பங்காளிகளாக ஆவதற்கு, ஒரே குரலில் அவரிடம் மனப்பூர்வமாக இறைஞ்சுவோம். [வேதாகமம்] கூறுகிறது; அவருக்காகக் காத்திருப்பவர்களுக்கு அவர் தயார் செய்தவைகளை கண் காணவில்லை, காது கேட்கவில்லை, மனிதனுடைய இதயத்திற்குள் நுழையவில்லை 1 கொரிந்தியர் 2: 9.

35ம் அத்தியாயம் – இந்த வெகுமதி மகத்தானது. அதை நாம் எவ்வாறு அடைவோம்?

அன்பார்களே, கடவுள் எமக்கு கொடுத்த வெகுமதிகள் எவ்வளவு அற்புதமானவை! நித்தியா வாழ்வு, நீதியில் முழுமை, உண்மை நம்பிக்கையில் முழுமை, உறுதியான விசுவாசம், சுய கட்டுப்பாடுடான் கூடிய புனிதத் தன்மை! இவை அனைத்தும் [இப்போது] நம்முடைய புரிந்துகொள்ளல் மூலமாக பெற்றுக்கொண்ட தெளிவினால் எமக்கு கிடைத்த வெகுமதிகள். அவருக்காகக் காத்திருத்தல் போன்றவற்றுக்கு எம்மைத் தயார் செய்யக்கூடிய விடயங்கள் என்னவாக இருக்கும்? அனைத்துலகங்களையும் சிருஷ்டித்த பிதாவான அதி வல்லமையுள்ள சர்வேசுரன் மட்டுமே அவற்றின் மகத்துவமும் அழகும் பற்றி அறிவார். ஆகவே, அவரால் வாக்குறுதியளிக்கப்பட்ட வெகுமதிகளில் நாம் பங்கெடுப்பதற்காக, அவருக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் பங்கெடுக்க நாமும் ஆவலுடன் முயற்சிப்போம். அன்பார்களே, ஆனால் இது எவ்வாறு சாத்தியப்படும்? கடவுள் மீது நாம் கொண்டுள்ள உறுதிசெய்யப்பட்டால்; அவருக்குப் பிரியமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் விடயங்களை நாம் ஆவலுடன் நாடினால்; அவருடைய அப்பழுக்கற்ற சித்தத்திற்கு இசைவான நாம் நடந்து கொண்டால்; சத்தியத்தின் வழியை நாம் பின்பற்றினால், எல்லா அநீதியையும் அக்கிரமத்தையும், பேராசை, சச்சரவு, தீய நடைமுறைகள், வஞ்சகம், வீண்பேச்சு மற்றும் இழிவான பேச்சு ஆகிய தீய பழக்கவழக்கங்களில் இருந்து நாம் மீண்டால், கடவுள் மீதான வெறுப்பு, பெருமை மற்றும் அகந்தை, வீண் மகிமை மற்றும் லட்சியம் போன்றவற்றை விட்டொழித்தால் நாம் அந்த வெகுமதிகளுக்கு உரித்தாளர் ஆவோம். அத்தகைய செயல்களைச் செய்கிறவர்கள் கடவுளை வெறுக்கிறார்கள்; அவர்கள் அவற்றைச் செய்வது மட்டுமல்லாமல், அவற்றைச் செய்கிறவர்களைப் பார்த்து மகிழ்ச்சி அடையவும் செய்கிறார்கள். ரோமர் 1:32. வேதாகமம் சொல்வது என்னவென்றால், “நீங்கள் ஏன் என் சட்டங்களை அறிவிக்கிறீர்கள், என் உடன்படிக்கையை உங்களுடையதாய் எடுத்துக்கொள்கிறீர்கள், என் அறிவுறுத்தலை வெறுத்து, என் வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கிறீர்கள்? நீங்கள் ஒரு திருடனைக் கண்டதும், அவனுடைய திருட்டில் பங்கெடுக்க சம்மதித்து, கெட்டநடத்தையுள்ளவர்களோடு
பங்குபோட்டுக்கொண்டீர்கள். உங்கள் வாய் துன்மார்க்கத்தால் பெருகி, உங்கள் நாக்கு வஞ்சகத்தைத் தூண்டுகிறது. நீங்கள் உங்கள் சகோதரருக்கு எதிராகப் பேசுகிறீர்கள்; உங்கள் சொந்த தாயின் மகனை அவதூறு செய்கிறீர்கள். இவற்றை நீங்கள் செய்தபோது, நான் மௌனம் காத்தேன்; நானும் உங்களை போலவே இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள். ஆகவே நான் உங்களைக் கடிந்துகொள்வதோடு, உங்களை உங்களுக்கு முன்பாகவே நிறுத்துவேன். இதை நன்றாக மனதில் கொள்ளுங்கள்;கடவுளை மறந்துபோகிறவர்களை அவர் சிங்கம் போல துண்டு துண்டாகக் கிழித்துவிடுவார், விடுவிக்க யாரும் வரமாட்டார்கள். மாட்சிமையின் தியாகம் என்னை மகிமைப்படுத்தும், கடவுளின் இரட்சிப்பை பற்றி நான் அவருக்குக் காண்பிக்கும் வழி உள்ளது.

36ம் அத்தியாயம் – அனைத்து ஆசீர்வாதங்களும் கிறிஸ்துவின் மூலமாகவே நமக்கு வழங்கப்படுகின்றன

அன்பர்களே, நம்முடைய இரட்சகரான, நமக்கு கிடைத்த அனைத்து வரப்பிரசாதங்களுக்கும் காரணமான பிரதான ஆசாரியனாகிய இயேசு கிறிஸ்துவை பலவீனமுற்றிருக்கும் நாம் பாதுகாவலராகவும் உதவியாளராகவும் காண்கிறோம். அவரின் மூலமாகவே நாம் வானகத்தை நோக்கிப் பார்க்கிறோம். ஒரு கண்ணாடியில் தெரிவதைப் போலவே, அவரின் மாசற்ற தன்மையையும் உன்னதத்தை நாம் காண்கிறோம். நம் இதயங்களின் கண்கள் அவரால் திறக்கப்படுகின்றன. நம்முடைய முட்டாள்தனமான மற்றும் இருள் சூழ்ந்த புரிந்துகொள்ளல் அவருடைய அற்புதமான ஒளியை நோக்கி புதிதாக மலர்கிறது. அழியாத தெளிவை நாம் பெற வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார், அவருடைய மாட்சிமை பிரகாசமாக இருப்பதால், தேவதூதர்களை விட அவர் மிகப் பெரியவர், கிருபையின் மூலம் அவர்களைவிட மிகச் சிறந்த பெயரைப் பெற்றார். எபிரேயர் 1: 3-4. அவர் அவருடைய தூதர்களை ஆன்மாக்களாகவும், அவருடைய ஊழியர்களை ஒளிவிடும் தீச்சுடராகவும் ஆக்குகிறார் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவருடைய குமாரனைப் பற்றி, தேவன் இவ்வாறு கூறினார்: நீ என் குமாரன், இன்று நீ என்னுடைய ஒரே பொருளாக இருக்கிறாய். நீ என்னிடம் கேள் , உனக்காக வேற்றினத்தவரையும், உன்னால் ஆளப்படுவதற்காக பூமியின் அனைத்து பகுதிகளையும் தருவேன். மீண்டும், தேவன் அவரை நோக்கி: நான் உன் எதிரிகளை உன் காலடிக்கு வரச்செய்யும் வரை என் வலது புறத்தில் அமர்ந்திருப்பாயாக, என்று அருளினார். அவர் கூறிய அவருடைய எதிரிகள் யார்? அனைத்து நெறி தவறியவர்கள் மற்றும் கடவுளுடைய சித்தத்தை எதிர்ப்பதற்கு தங்களை உருவகித்துக் கொண்டவர்களுமே அவர் கூறிய எதிரிகள் எனப்படுவர்.

37ம் அத்தியாயம் – கிறிஸ்து நம்முடைய தலைவர், நாம் அவருடைய ஊழியர்கள்

ஆகவே, மக்களே, சகோதரர்களே, நாம் அவருடைய பரிசுத்த கட்டளைகளுக்கு இணங்க, எமது முழு சக்தியுடனும் அவரின் சேனையின் அங்கத்தினர்களாக எமது பங்கைச் செய்வோம். எங்கள் தளபதிகளின் கீழ் சேவை செய்பவர்களை, ஒழுங்கு, கீழ்ப்படிதல், மற்றும் கட்டளைகளுக்குக் கட்டுப்படுதல் என்பவற்றோடு, அவர்கள் கட்டளையிட்ட பணிகளையும் நிறைவேற்றுகிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்வோம். அனைவருமே தலைவர்கள் அல்ல, ஆயிரம், நூறு, ஐம்பது, சிப்பாய்களைக் கொண்ட சேனைகளை வழிநடத்துபவர்கள் அல்லர். ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் பதவியில் அரச தலைவர் மற்றும் தளபதிகள் இடும் கட்டளைகளை நிறைவேற்றுகிறார்கள். பெரியவர்களால் சிறியவர் இன்றியும் அதேவேளை சிறியவர் பெரியவர் இன்றியும் வாழ்வது கடினம். அனைத்திலுமே ஒரு வகையான கலவை காணப்படுகிறது, அங்கே பரஸ்பர நன்மை தோன்றுகிறது. நமது உடம்பையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். கால்கள் இல்லாவிட்டால் தலையில் பிரயோசனமில்லை.அவ்வாறே தலை இல்லாவிட்டால் கால்களுக்கு அங்கே வேலை இல்லை; ஆம், நமது உடம்பின் மிகச் சிறிய உறுப்பு கூட முழு உடம்பின் இயக்கத்துக்கு அவசியமானதும் பயனுள்ளதும் ஆகிறது. ஆனால் அனைத்துமே இணைந்து, ஒன்றிணைந்து செயல்படுகின்றன, மேலும் முழு உடம்பையும் பாதுகாப்பதற்கான ஒரு பொதுவான தொழிற்பாட்டின் கீழ் இயங்குகின்றன.

38ம் அத்தியாயம் – திருச்சபையின் உறுப்பினர்கள் தங்களது தாழ்மையை வெளிப்படுத்தட்டும்; தன்னைவிட யாரும் உயர்ந்தவர்கள் என்று எண்ணக்கூடாது.

அப்படியானால், நம்முடைய முழு சரீரமும் கிறிஸ்து இயேசுவில் பாதுகாக்கப்படட்டும்; ஒவ்வொருவரும் தனக்கு அளிக்கப்பட்ட சிறப்பு வெகுமதிக்கு அமைவாக, ஒவ்வொருவரும் தனது அயலவருடன் பகிர்ந்துகொள்ளட்டும். பலமுள்ளவர்கள் பலவீனர்களை வெறுக்கக்கூடாது, பலவீனர்கள் பலமுள்ளவர்களை மரியாதையுடன் நடத்தட்டும். ஏழைகளின் விருப்பங்களை செல்வந்தர்கள் பூர்த்தி செய்யட்டும்; ஏழை மனிதன் கடவுளுக்கு நன்றி செலுத்தக்கடவானாக. ஏனென்றால் அவனுடைய தேவையை பூர்த்தி செய்யக்கூடிய ஒன்றை அவனுக்குக் கொடுத்தபடியால். புத்திசாலி தன் ஞானத்தை [வெறும்] வார்த்தைகளால் அல்ல, நல்ல செயல்களால் வெளிப்படுத்தட்டும். தாழ்மையானவர்கள் தனக்குத்தானே சாட்சியம் அளிக்காமல், வேறொருவர் அவர்கள்பால் சாட்சி சொல்லக்கடவர். பழமொழிகள் 27: 2. தூய்மையான சரீரத்தை உடையவன் அதைப் பற்றி பெருமிதமோ தற்புகழ்ச்சியோ கொள்ளாதிருக்கட்டும், அது அவனுக்கு பிறிதொருவனால் கிடைக்கப்பெற்ற வெகுமதி என்பதை அறிந்து கொள்ளட்டும். சகோதரரே, நாம் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டோம் – யார், எந்த வகையான மனிதர்கள் வழியாக உலகிற்கு வந்தோம், அது ஒரு இருண்ட கல்லறையில் இருந்தோ அல்லது, காரிருளிலிருந்து வந்தவர்களாகவோ இருக்கலாம். நம்மைப் படைத்து, நம்மை வடிவமைத்தவர், நாம் பிறப்பதற்கு முன்பே அவருடைய அருட்கொடைகளை நமக்காகத் தயாரித்து, நம்மை அவர் உண்டாக்கிய உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். ஆகையால், இவை அனைத்தையும் நாம் அவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம் என்பதால், அனைத்துக்கும் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாகக்கடவதாக. ஆமென்.

39ம் அத்தியாயம் – சுய அகந்தைக்கு எவ்வித காரணங்களும் தேவையில்லை

மூட மற்றும் சிந்தனையற்ற மனிதர்கள், ஞானமோ அறிவோ இல்லாதவர்கள், எங்களை கேலி செய்கிறார்கள், ஏளனம் செய்கிறார்கள், தங்கள் மூட மற்றும் சிந்தனையற்ற மனிதர்கள், ஞானமோ அறிவோ இல்லாதவர்கள், எங்களை கேலி செய்கிறார்கள், ஏளனம் செய்கிறார்கள், தங்கள் அகந்தையால் தங்களை உயர்த்திக் கொள்ள ஆர்வமாக உள்ளனர். ஒரு மனிதனால் என்ன செய்ய முடியும், அல்லது தூசியில் இருந்து உண்டாக்கப்பட்ட ஒருவனுக்கு என்ன விதமான பலம் இருக்கிறது? “என் கண்களுக்கு முன்பாக நான் எந்த வடிவத்தையும் காண வில்லை, குரல் மூலம் எழுப்பிய சத்தத்தை மட்டுமே கேட்டேன்,” பிறகு என்ன? ஒரு மனிதன் கர்த்தருக்கு முன்பாக தூய்மையானவனாக இருக்கின்றானா? அல்லது அவர் தம்முடைய ஊழியர்களிடம் நம்பிக்கை வைக்காததையும், அவருடைய தூதர்களைக் கூட விபரீதமாகக் குற்றம் சாட்டியதையும் பார்த்து, அத்தகையவர் அவருடைய செயல்களில் குற்றமற்றவராகக் கருதப்படுவாரா? அவருடைய பார்வையில் வானம் தெளிவாக இல்லை: களிமண் வீடுகளில் வசிப்பவர்கள் மிகவும் குறைவு, நாமும் அவற்றில் இருந்து தானே படைக்கப்பட்டோம்! அவர் அவர்களை அந்துப்பூச்சிகளை அடிப்பது போல் அடித்தார்; காலையிலிருந்து மாலை வரை கூட அவர்களால் சகித்துக்கொள்ள முடியாததாலும், அவர்கள் தங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாததாலும், அவர்கள் அழிந்தார்கள். அவர் அவர்களுக்கு சுவாசம் கொடுத்தும் கூட, ஞானம் இல்லாததால் அவர்கள் அழிந்தார்கள். யாராவது உங்களுக்கு பதிலளிக்க கூடுமா, அல்லது நீங்கள் பரிசுத்த தேவதூதர்களில் யாரையாவது பார்த்தால் இப்போது அழையுங்கள்; கோபம் மூடர்களை அழிக்கிறது, பொறாமை தவறு செய்பவனைக் கொல்கிறது. மூடர்கள் வேரூன்றுவதை நான் கண்டிருக்கிறேன், ஆனால் அவர்களின் வசிப்பிடம் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவர்களின் மகன்கள் பாதுகாப்பிலிருந்து வெகு தொலைவில் இருக்கட்டும்; தங்களைவிடக் குறைவானவர்களின் வாயில் கதவுகளுக்கு முன்பாக அவர்கள் வெறுக்கப்படுவார்கள், விடுவிக்க ஒருவரும் இருக்க மாட்டார்கள். நீதியுள்ளவர்களுக்கு தயாரிக்கப்பட்டதை நீதியுள்ளவர்களே உண்பார்கள்; அவர்கள் தீமையிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள்.

40ம் அத்தியாயம் – கடவுளால் திருச்சபைக்கு நியமிக்கப்பட்ட ஒழுக்கத்தை பாதுகாப்போம்

ஆகவே இவை நமக்குத் தெளிவாகத் தெரிகின்றன, மேலும் தெய்வீக அறிவின் பரிமாணத்தை நாம் ஆராய்வதால், எல்லாவற்றையும் [அவற்றின் சரியான] முறையில் செய்ய வேண்டும், இதைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்யும்படி கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டுள்ளார். காணிக்கைகள் [அவருக்கு] செய்யப்படுவதில் அவர் அகமகிழ்ந்தார். மற்றும் சேவை செய்ய வேண்டும் [வழங்கப்பட வேண்டும்] என்றும் அவர் கட்டளையிட்டார், அவற்றை சிந்தனையின்றி அல்லது ஒழுங்கற்ற முறையில் அல்ல, நியமிக்கப்பட்ட நேரங்களிலும் காலங்களிலும் செய்வதற்கு பணிக்கப்பட்டுள்ளோம். இந்த காரியங்களை எங்கு, யாரால் செய்ய வேண்டுமென்பதை அவர் தம்முடைய உயர்ந்த விருப்பத்தினால் நிர்ணயித்துள்ளார், அந்த விட யங்களைச் செய்வதற்காக, அவர்மீது பக்தியுடன் செய்யப்படுவது அவருக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும். ஆகையால், நியமிக்கப்பட்ட நேரத்தில் தங்கள் காணிக்கைகளை முன்வைப்பவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். ஏனென்றால், யார் கர்த்தருடைய சட்டங்களைப் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் பாவத்தைக் கட்டிக்கொள்ள மாட்டார்கள். அவருடைய சொந்த, விசித்திரமான சேவைகள் பிரதான ஆசாரியருக்கு என்றே ஒதுக்கப்படுகின்றன, அதற்கான சரியான இடம் ஆசாரியர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் அவர்களுக்கு உரித்தான சொந்த சிறப்பு ஊழியங்கள் லேவியர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்க்கப்படுகின்றன. சாமான்யர்கள் சாதாரண சட்டங்களுக்குக் கட்டுப்படுகிறார்கள்.

41ம் அத்தியாயம் – அதே விடயத்தின் தொடர்ச்சி…

சகோதரரே, நீங்கள் எல்லோரும், உங்கள் சொந்த முறையில் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள், உண்மையான மனசாட்சியோடும், ஈர்ப்புடனும் , உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஊழியத்தின் கடப்பாடுக்கு அப்பால் செல்லாமல் உங்கள் ஊழியம் இருக்கட்டும். சகோதரரே, எல்லா இடங்களிலும் அல்ல, தினசரி பலிகள், அல்லது சமாதானத்துக்கான உங்கள் பங்களிப்புக்கள், அல்லது பாவ மன்னிப்புக்கான உங்கள் காணிக்கைகள், பாவங்களுக்கான உங்கள் பரிகாரங்கள், எருசலேமில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். அவை அவ்வாறான இடங்களில் ஒப்புக்கொடுக்கப்பட முடியாது போனால், ஆலயத்துக்கு முன்னால் உள்ள பலிபீடத்தில் மட்டுமே ஒப்புக்கொடுக்கலாம். அது முதலில் பிரதான ஆசாரியரும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள திருச்சபை ஊழியர்களாலும் கவனமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்ட பின்னரே ஒப்புக்கொடுக்கலாம். ஆகவே, அவருடைய சித்தத்திற்கு விரோதமாக எதையும் செய்பவர் மரண தண்டனைக்கு உள்ளாவர்.சகோதரரே, எங்களுக்கு வழங்கப்பட்ட அறிவு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அதே அளவு ஆபத்துக்கும் நாம் முகம் கொடுக்கிறோம்.சகோதரரே, எங்களுக்கு வழங்கப்பட்ட அறிவு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அதே அளவு ஆபத்துக்கும் நாம் முகம் கொடுக்கிறோம்.

42ம் அத்தியாயம் – திருச்சபையின் ஊழியர்களின் நடைமுறைப் பிரகாரம்

இயேசு கிறிஸ்து கடவுளிடமிருந்து சுவிசேஷத்தைப் போதித்தது போல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து அப்போஸ்தலர்கள் நமக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்திருக்கிறார்கள். ஆகையால் கிறிஸ்து தேவனாலும், அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவாலும் அனுப்பப்பட்டார்கள். இந்த இரண்டு நியமனங்களும் கடவுளின் விருப்பப்படி ஒழுங்கான முறையில் செய்யப்பட்டன. அவர்களுடைய கட்டளைகளைத் தாங்கி, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலம் முழுமையாக உறுதியளிக்கப்பட்டு, தேவனுடைய வார்த்தையில் ஸ்தாபிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் முழு அனுக்கிரகத்தோடு, அவர்கள் தேவனுடைய இராச்சியம் நெருங்கிவிட்டதாக அறிவித்தார்கள்.இவ்வாறு நாடுகள் மற்றும் நகரங்களில் பிரசங்கித்த அவர்கள், தங்கள் உழைப்பின் முதல் பலன்களை, ஆவியின் மூலமாக நிரூபித்தபின், ஆயர்களாகவும், பின்னர் கோனகத்தொண்டர்களாவும் நியமனம் பெற்றார்கள். இது புதிய விடயம் அல்ல. ஆயர்கள் மற்றும் கோனகத்தொடர்கள் பற்றி எழுதப்படுவதற்கு பல யுகங்களுக்கு முன்பே வேதாகமம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இவ்வாறு கூறுகிறது, “நான் அவர்களின் ஆயர்களை நீதியிலும், அவர்களுடைய கோனகத்தொண்டர்களை விசுவாசத்தோடும் நியமிப்பேன்”.

43ம் அத்தியாயம் – ஆதியில் மோயீசன் வேதபாதகரின் கண்ணியத்தைப் பற்றி கூறியது சர்ச்சையைக் கிளப்பியது

இதில் ஆச்சரியப்படக்கூடிய விடயம் என்னவென்றால்,கடவுளால் அத்தகைய கடமையை ஒப்படைத்த கிறிஸ்துவில் உள்ளவர்கள் அந்த ஊழியர்களை நியமித்திருந்தால் ஆசீர்வதிக்கப்பட்ட மோசேயும் அவருடைய வீட்டில் உண்மையுள்ள ஊழியராக இருந்தவர், புனித நூல்களில் உள்ள அனைத்து தடை உத்தரவுகளையும் பற்றி குறித்துக்கொண்டார். மற்ற தீர்க்கதரிசிகளும் அவரைப் பின்பற்றியபோது, அவர் நியமித்த கட்டளைகளுக்கு சம்மதத்துடன் சாட்சியம் அளித்தாரா? ஏனென்றால், குருத்துவத்தைப் பற்றி போட்டி எழுந்ததும், அவர்களில் யாரை அந்த புகழ்பெற்ற பட்டத்துக்கு அலங்கரிக்க வேண்டும் என்று பழங்குடியினர் தங்களுக்குள் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தபோது, பழங்குடியினரின் பன்னிரண்டு இளவரசர்களுக்கு தங்களது தண்டுகளை அவரிடம் கொண்டு வரும்படி கட்டளையிட்டார், ஒவ்வொன்றிலும் அவரவரின் கோத்திரத்தின் பெயர்கள் பொறிக்கப்பட்டன. அவர் அவர்களை சேர்த்து ஒன்றாகக் கட்டி, கோத்திரங்களின் பிரபுக்களின் வலயங்களால் மூடி, தேவனுடைய மேசையில் உள்ள கூடாரத்தில் வைத்தார். அவர் கூடாரத்தின் கதவுகளை மூடிவிட்டு முத்திரையிட்டு பின்பு, தண்டுகளை சரி செய்தபடியே அவர்களை நோக்கி: ஆண்களே, சகோதரரே, எந்தத் தட்டில் பூ மலருகிறதோ, அந்தக் கோத்திரம் குருத்துவத்தின் கடமையை நிறைவேற்றவும், ஊழியம் செய்யவும் கடவுள் தேர்ந்தெடுத்துள்ளார். காலை நேரமானதும், அவர் இஸ்ரவேலர் அனைவரையும், ஆறு லட்சம் பேரைக் கூட்டி, முத்திரைகளை கோத்திரங்களின் பிரபுக்களுக்குக் காட்டி, சாட்சிக் கூடாரத்தைத் திறந்து, தண்டுகளை வெளியே கொண்டு வந்தார். அத்தண்டுகள் மத்தியில், ஆரோனின் தண்டு மலர்ந்தது மட்டுமல்லாமல், அதன்மேல் கனியும் காணப்பட்டது. அன்பார்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது நடக்கும் என்று மோசேக்கு முன்பே தெரிந்திருக்காதா? சந்தேகத்திற்கு இடமின்றி அவர் இதை அறிந்திருந்தார்; ஆனால் இஸ்ரவேலில் தேசத்துரோகம் செய்யக்கூடாது என்பதற்காகவும், உண்மையான மற்றும் ஒரே கடவுளின் பெயர் மகிமைப்படுத்தப்படும்படியும் அவர் இவ்வாறு செயல்பட்டார்; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாகக்கடவதாக. ஆமென்.

44ம் அத்தியாயம் – அப்போஸ்தலர்களின் கட்டளைகள்; போதகரின் பதவியை மதிப்பது பற்றி எவ்விதமான கருத்துவேறுபாடுகளும் இருக்கக்கூடாது

மறைமாவட்ட முதல்வர் பதவி காரணமாக சச்சரவுகள் எழும் என்பதை நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகவும் நம்முடைய அப்போஸ்தலர்கள் அறிந்திருந்தனர். இந்த காரணத்திற்காக, அவர்கள் இதைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற்றதைப் போலவே, அவர்கள் அந்த ஊழியர்களை நியமித்தனர், பின்னர் அவர்கள் தூங்கும்போது, அங்கீகரிக்கப்பட்ட பிற ஆண்கள் தங்கள் ஊழியத்தில் முழுமை பெறவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். ஆகையால், அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள், அல்லது பிற புகழ்பெற்ற மனிதர்களால், முழு திருச்சபையின் சம்மதத்துடன், கிறிஸ்துவின் மந்தையை குற்றமற்ற முறையில், தாழ்மையான, அமைதியான, அக்கறையற்ற மனப்பான்மையுடன் நடத்தியவர்கள், நீண்ட காலமாக அனைவரின் நற்பெயரையும் பெற்றிருந்தமையால், நியாயமான முறையில் ஊழியத்திலிருந்து அவர்களை விலக்கி வைக்க முடியாது. குற்றமற்ற மற்றும் புனிதமான அதன் கடமைகளை நிறைவேற்றியவர்களை நாம் போதகரின் பதவி யிலிருந்து வெளியேற்றினால், நம்முடைய பாவம் சிறியதாக இருக்காது. இப்போதே தங்கள் போக்கை முடித்துவிட்டு, [இந்த உலகத்திலிருந்து] ஒரு பயனுள்ள மற்றும் சரியான முறையில் விடைபெற்ற அந்த சமயமூப்பர்கள் பாக்கியவான்கள்; ஏனென்றால், இப்போது நியமிக்கப்பட்ட இடத்தை யாரும் இழக்க மாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு எவ்வித பயமும் இருக்கவில்லை. ஆனால், சிறந்த நடத்தை உடைய சில மனிதர்களை நீங்கள் ஊழியத்திலிருந்து நீக்கியுள்ளதை நாங்கள் காண்கிறோம், அவர்கள் குற்றமற்றவர்களாகவும் மரியாதையுடனும் தங்கள் திருத்தொண்டை நிறைவேற்றினார்கள்.

45ம் அத்தியாயம் – நீதிமான்களை துன்புறுத்துவது துன்மார்க்கரின் இழிவான குணமாகும்

சகோதரரே, நீங்கள் சச்சரவை விரும்புகிறீர்கள், இரட்சிப்பு சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்ள நீங்கள் ஆர்வத்துடன் இருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியின் நிதர்சனமான வேதவாக்கியங்களை கவனமாக பாருங்கள். நீதிக்கு விரோதமான அல்லது போலித்தனமான வார்த்தைகள் எதுவும் அவற்றில் எழுதப்படவில்லை என்பதைக் கவனியுங்கள். நீதிவழுவாத பரிசுத்தர்களாக இருந்தவர்கள் அவர்களாலேயே தூக்கி எறியப்பட்டதைப் பற்றி அங்கே எதுவுமே சொல்லப்படவில்லை. ஆயினும், நீதிமான்கள் உண்மையில் துன்மார்க்கர்களால் மட்டுமே துன்புறுத்தப்பட்டார்கள். கொடூரர்களால் மட்டுமே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், அவர்கள் பாவிகளால் கல்லெறிதலுக்கு உள்ளானர். சபிக்கப்பட்டவர்களால் மட்டுமே அவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு எதிராக அநீதியான காய்மகாரத்தை உண்டாக்கினர். இத்தகைய துன்பங்களுக்கு ஆளாகியும், அவர்கள் அவற்றை மகிழ்ச்சியுடன் சகித்துக்கொண்டார்கள். சகோதரரே, இதையிட்டு நாம் என்ன சொல்ல வேண்டும்? கடவுளுக்குப் பயந்தவர்களால் டேனியல் தானியேல் 6:16 சிங்கங்களின் குகைக்குள் எறியப்பட்டாரா? அனானியாஸ், அஸாரியாஸ், மற்றும் மைக்கேல் ஆகியோர் உன்னதமானவரின் மகத்தான, புகழ்பெற்ற வழிபாட்டைக் கடைபிடித்தவர்களால் தானியேல் 3:20 தீச்சுவாலைக்குள் இட்டு துன்புறுத்தப்பட்டனரா? இப்படியான எண்ணங்கள் எமக்கு வெகு தொலைவில் இருக்கின்றன! அப்படியானால், அத்தகைய செயல்களைச் செய்தவர்கள் யார்? வெறுக்கத்தக்கவர்களும், தீய குணங்களால் நிறைந்தவர்களுமே, இதுபோன்ற ஆவேசத்தைத் தூண்டினர், அவர்கள் தேவனுக்கு புனிதமான மற்றும் குற்றமற்ற நோக்கத்துடன் [இதயத்தின்] சேவை செய்தவர்களை சித்திரவதை செய்தனர். அவரே மிக மகிமையுள்ளவர், பாதுகாவலர் மற்றும் எம்மைக் காப்பவர் என்பதை தூய்மையான மனசாட்சியுடன் ஏற்றுக்கொண்டு அவரை முழுமனதுடன் வழிபடுவோம். எல்லாம் வல்ல இறைவனான அவருக்கே என்றென்றைக்கும் புகழும், மகிமையும், மாட்சியும் உண்டாகக்கடவதாக; ஆமென். ஆனால் நம்பிக்கையுடன் [இவற்றை] சகித்துக்கொண்டவர்கள் இப்போது மகிமைக்கும் மரியாதைக்கும் வாரிசுகளாக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் என்றென்றும் எப்போதும் கடவுளால் உயர்த்தப்பட்டு சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். ஆமென்.

46ம் அத்தியாயம் – நீதிமான்களோடு இணைந்திடுவோம்: கலவரங்கள் ஆபத்தை விளைவிக்கும்

சகோதரரே, “பரிசுத்தவான்களுடன் இணைந்துகொள்ளுங்கள்” என்று எழுதப்பட்டிருப்பதால், இதுபோன்ற எடுத்துக்காட்டுகளை , நாம் பின்பற்ற வேண்டியது முறையே. அவர்களோடு இணைந்திருப்பவர்களை அப்புனிதர்கள் [தங்களை] பரிசுத்தமாக்குவார்கள். மீண்டும், (வேதாகமம்) வேறொரு இடத்தில் இப்படிக் கூறுகிறது; ஒரு தீங்கற்ற மனிதனுடன் நீங்கள் உங்களை தீங்கற்றவர் என்று நிரூபியுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதனுடன் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட்டவர்களாக இருங்கள். மேலும் ஒரு விபரீத நோக்கமுள்ள மனிதனிடம் நீங்களும் அவ்வாறான மனிதன் என்பதை காட்டுங்கள். ஆகவே, அவர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால் அப்பாவிகள் மற்றும் நீதிமான்களுடன் இணைந்திருப்போம். உங்களிடையே கலவரங்கள், சலசலப்புகள், பிளவுகள், மற்றும் போர்கள் ஏன் உண்டாகின்றன? நமக்கு [அனைவருக்கும்] ஒரே கடவுளும் ஒரே கிறிஸ்துவும் இல்லையா? கிருபையின் க்கூடிய பரிசுத்த ஆவி நம்மீது அவரது அருளைப் பொழிய வில்லையா? நாம் கிறிஸ்துவில் ஒன்றிணைந்த்திருக்கவில்லையா? எபேசியர் 4: 4-6. கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நாம் ஏன் பிரிவினையை ஏற்படுத்தி தவிக்கிறோம்? நம்முடைய சரீரத்துக்கு எதிராக சச்சரவுகளை உண்டுபண்ணுகிறோம்? நாம் ஒருவரோடொருவர் ஒன்றிணைந்து இருப்பதை மறந்துவிடக்கூடிய அளவுக்கு எமது மனம் பேதலிப்பை அடைந்து விட்டதா? ரோமர் 12: 5. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள். அந்த [தீமைகளை ஊக்குவிக்கும்] மனிதனுக்கு ஐயோ கேடு! என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு முன்பாக அவன் தடுமாறறுவதை விட, அவன் ஒருபோதும் பிறக்காமல் இருப்பதே மேல். ஆம், என் சிறு குழந்தைகளில் ஒன்றுக்கு முன்பாக அவன் தடுமாற்றத்தை ஏற்படுத்துவதை விட, [அவனது கழுத்தில்] ஒரு பாறாங்கல்லை கட்டி அவனை கடலின் ஆழத்தில் மூழ்கடித்தல் மேலானது. உங்களது அபிப்பிராய பேதத்தால் ஏற்படும் பிரிவினை பலரின் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது, பலரை சந்தேகப்படும் படி செய்துவிட்டது, நம் அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் உங்கள் துரோகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

47ம் அத்தியாயம் – உங்கள் சமீபத்திய கருத்து வேறுபாடுகள் பவுலின் காலங்களில் இடம்பெற்றதை விட மோசமானது

அப்போஸ்தலரான புனித பவுலின் நிருபத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சுவிசேஷத்தை முதன்முதலில் பிரசங்கிக்கத் தொடங்கிய காலத்தில் அவர் உங்களுக்கு என்ன எழுதினார்? உண்மையிலேயே, அவர் பரிசுத்த ஆவியின் அனுக்கிரகத்தால், தன்னைப் பற்றியும், செபாஸ் மற்றும் அப்பல்லோஸ் பற்றியும் உங்களுக்கு எழுதினார், ஏனென்றால் அப்போதும் கூட உங்களுக்குள்ளே பேதங்கள் உருவாகியிருந்தன. ஆனால் ஒருவருக்கொருவர் மேல் உள்ள அந்த இணக்கம் உங்கள் மேலுள்ள குற்றங்களை குறைத்தது, நீங்கள் காட்டிய வேறுபாடுகள் அப்போஸ்தலர்களிடமும், ஏற்கனவே உயர்ந்த புகழ் பெற்றவர்களிடமும், அவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட ஒரு மனிதரிடமும் காட்டப்பட்டன. ஆனால் உங்களைத் திசைதிருப்பியவர்கள், உங்களது நெருங்கிய சகோதர அன்பின் புகழை இழிவுபடுத்தியோர் யார் என்பது இப்போது வெளிப்படையாய் தெரிகிறது. அன்பர்களே! இது அவமானம் மிகுந்த செயல். ஆம், மிகவும் அவமானமானது! உங்கள் கிறிஸ்தவ வாழ்வுக்கு இது தகுதியற்றது. ஓரிரண்டு மனிதர்களால் திருச்சபை மூப்பர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துரோகச்செயல் போலவே கொரிந்தியர்களின் மிகவும் உறுதியான மற்றும் பண்டைய திருச்சபைக்கு நடந்தது. இந்த வதந்தி எங்களை மட்டுமல்ல, எங்களுடன் தொடர்பில்லாதவர்களையும் சென்றடைந்துள்ளது; ஆகவே, உங்கள் மோகத்தின் மூலம், கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறார்கள், அதே சமயம் உங்கள் மீதும் ஆபத்தை வரவழைத்துக் கொள்கிறீர்கள்.

48ம் அத்தியாயம் – சகோதர அன்பின் பழக்க வழக்கங்களுக்கு மீண்டும் செல்வோம்

ஆகையால், இவ்வகையானவற்றுக்கு [நிலைக்கு] முற்றுப்புள்ளி வைப்போம்; கர்த்தருக்கு முன்பாக தெண்டனிட்டு வணங்கி, அவர் நம்மில் இரக்கமாய் இருக்கும்படி கண்ணீர் சிந்தி வேண்டிக்கொள்வோம், மேலும் சகோதர அன்பின் முந்தைய மற்றும் புனிதமான நடைமுறைக்கு எம்மை மீண்டும் இட்டுச் செல்வோம். [இத்தகைய நன்நடத்தை] நீதியின் வாயிலாகும், இது வாழ்க்கையை அடைவதற்கு திறக்கப்பட்டுள்ளது, எழுதப்பட்டிருப்பது போல், நீதியின் வாயில்களை எனக்குத் திற; நான் அதற்கு உள்ளே சென்று கர்த்தரைத் துதிப்பேன்: இது கர்த்தருடைய வாசல்; நீதிமான்களே அதில் நுழைவார்கள். பல வாயில்கள் திறக்கப்பட்டிருந்தாலும், இந்த நீதியின் வாயில் கிறிஸ்துவின் வாயிலாகும், இதன் மூலம் அவர்கள் உள்ளே நுழைந்து பரிசுத்தத்திலும் நீதியிலும் ஏனையோரை வழிநடத்தியவர்கள், அனைத்தையும் எந்தக் கோளாறுகளும் இன்றி இதைச் செய்கிறார்கள். ஒரு மனிதன் உண்மையுள்ளவனாக இருப்பானாக: அறிவை வெளிப்படுத்துவதில் அவன் சக்திவாய்ந்தவனாக இருப்பானாக; அவனது நேர்மையான வார்த்தைகளில் ஞானம் இருக்கக்கடவதாக; அவன் தன் எல்லா செயல்களிலும் தூய்மையானவனாக இருக்கக்கடவானாக; ஆதலால் அவன் மற்றவர்களை விட உயர்ந்தவராகத் தோன்றுகிறான் [இந்த விட யங்களில்], அவன் மிகவும் தாழ்மையான எண்ணம் கொண்டவனாக இருத்தல் வேண்டும், மேலும் அனைவருக்கும் பொதுவான நன்மையைத் தேட வேண்டும், வெறுமனே தனது சொந்த நன்மைக்காக அல்ல.

49ம் அத்தியாயம் – அன்பைப் போற்றுதல்

கிறிஸ்துவில் அன்பு கொண்ட எவரும் கிறிஸ்துவின் கட்டளைகளைக் கடைபிடிக்கக்கடவாராக. கடவுளின் அன்பின் [புனிதமான] பிணைப்பை யாரால் விவரிக்க முடியும்? எந்த மனிதனால் அந்த அழகின் சிறப்பைப் பற்றி சொல்ல முடியும்; அதை சொல்லவும் வேண்டுமா? அன்பு எந்த உயரத்தை எட்டும் என்பது பற்றி விபரிக்க முடியாது. அன்பு நம்மை கடவுளோடு ஐக்கியப்படுத்துகிறது. அன்பு ஏராளமான பாவங்களை ஒதுக்குகிறது. அன்பு எல்லாவற்றையும் தாங்குகிறது, எல்லா நீண்ட துன்பங்களிலும் கூட அது எம்மை விட்டு அகல்வதில்லை. அன்புக்கு அடிப்படையோ ஆணவமோ கிடையாது. அன்பு எந்தவிதமான பிளவுகளையும் ஏற்றுக்கொள்வதில்லை: அன்பு எந்த துரோகத்தையும் ஏற்படுத்துவதில்லை: அன்பு எல்லாவற்றையும் ஒற்றுமையுடன் கொண்டு செல்கிறது. அன்பினால், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் பரிபூரணர்களாகிவிட்டார்கள்; அன்பு அன்றி கடவுளுக்குப் பிரியமானது வேறொன்றுமில்லை. அன்பின் மூலமாகவே கர்த்தர் நம்மை அவரிடம் அழைக்கிறார். அவர் நம்மில் கொண்ட ஆழமான அன்பின் காரணமாக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தேவனுடைய சித்தத்தினால் அவருடைய இரத்தத்தை நமக்காகக் கொடுத்தார்; நம்முடைய சரீரத்துக்காக அவருடைய சரீரத்தையும், நம்முடைய ஆன்மாவுக்காக அவருடைய ஆன்மாவையும் தந்தருளினார்.

50ம் அத்தியாயம் – அன்புகூறுதலைப் பற்றி செபிப்போம்

அன்பர்களே, ஒரு விடயத்தைப் பாருங்கள், அன்பு என்பது எவ்வளவு பெரிய மற்றும் அற்புதமானது என்று!, அதன் முழுமையைப் பற்றி பிரஸ்தாபிக்க முடியாதவாறு அத்தனை உன்னதமானது. கடவுள் அதைக் உண்டாக்க உறுதிபூண்டிருந்தார். ஆனால், அதற்கு தகுதியானவர் யார்? ஆகையால், நாம் ஒருவருக்கொருவர் ஒரவஞ்சனைகளில் இருந்து விடுபட்டு, அன்பில் குற்றமற்றவர்களாக வாழச் செபிப்போம், அவருடைய கருணையை வேண்டிக்கொள்வோம். ஆதாமின் காலம் தொட்டு இன்றுவரை அனைத்துத் தலைமுறையினரும் மரணித்துவிட்டார்கள்; ஆனால், தேவனுடைய கிருபையினால், அன்பில் பரிபூரணமாக்கப்பட்டவர்கள், இப்போது பக்தர்களிடையே ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் இராச்சியம் வெளிப்படும் பொது அவர்களும் வெளிப்படுவார்கள். எழுதப்பட்டிருப்பதற்கு இணங்க, என் கோபமும் சீற்றமும் அடங்கும் வரை உங்கள் ரகசிய அரங்குகளுக்குள் சிறிது நேரம் இருங்கள்; நான் ஒரு நல்ல நாளில் உங்களை நினைப்பேன். உன் கல்லறைகளில் இருந்து உன்னை எழுப்புவேன். ஏசாயா 26:20. அன்பர்களே, கடவுளின் கட்டளைகளை அன்பின் பிணைப்போடு வைத்திருந்தால், நாங்கள் ஆசீர்வதிக்கப்படுவோம்; அன்பின் மூலம் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும். ஏனென்றால், பாவங்கள் மன்னிக்கப்பட்டு, பாவங்களில் இருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் மேல் பாவம் சுமத்தப்படுவதை கர்த்தர் என்றும் அனுமதியார். ஏனெனில் அவர்களுடைய வாய்களில் வஞ்சம் இல்லாதபடியால். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்த ஆசீர்வாதம் கிடைக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாகக்கடவதாக. ஆமென்.

51ம் அத்தியாயம் – கலவரங்களில் பங்கெடுப்பவர்கள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்ளட்டும்

ஆகவே, நாம் எமது விரோதிகளுக்கு எதிராக செய்த [ஆலோசனையின் மூலமும்] எல்லா பாவங்களுக்கும் மன்னிப்புக் கோருவோமாக. துரோகம் மற்றும் கருத்து வேறுபாடு போன்றவற்றின் காரண கர்த்தாக்களாக இருந்த இவர்கள் பொதுவான நம்பிக்கையை மதிக்க வேண்டும். அச்சத்துடனும் அன்புடனும் வாழும் வாழ்க்கை என்பதன் பொருள், தங்கள் அண்டை வீட்டாரை விட தாங்களே துன்பத்தில் உழள்கிறார்கள் என்பதாகும். மேலும், நம்மிடம் முறையாகவும் பக்தியுடனும் ஒப்படைக்கப்பட்ட இசைவானது பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, அவர்கள் பழியை தாங்களே சுமக்க விரும்புகிறார்கள். தேவனுடைய ஊழியனாகிய மோசேக்கு விரோதமாக தேசத் துரோகத்தைத் தூண்டியவர்களின் இதயங்கள் கடினமாக்கப்பட்டதைப் போல, ஒருவன் தன் இதயத்தை கடினப்படுத்துவதை விட, தான் செய்த பாவங்களை ஒப்புக்கொள்வது மேலானது. அவர்கள் உயிருடனே ஹேடீசுக்குச் சென்றார்கள், மரணம் அவர்களை தழுவிக்கொண்டது. பார்வோன் தனது படையினருடனும், எகிப்தின் எல்லா இளவரசர்களுடனும், அவர்கள் சவாரி செய்த ரதங்களுடனும் செங்கடலின் ஆழத்தில் மூழ்கடிக்கப்பட்டு, அழிந்துபோனார்கள்; யாத்திராகமம் XIV. இதைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் அல்ல, கடவுளின் ஊழியரான மோசேயால் எகிப்து தேசத்தில் பல அடையாளங்களும் அதிசயங்களும் செய்தபின்னரும், அவர்களின் முட்டாள்தனமான இதயங்கள் கடினப்படுத்தப்பட்டன.

52ம் அத்தியாயம் – அத்தகைய பாவத்தை ஒப்புக்கொள்ளும் தன்மை கடவுளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது

சகோதரரே, கர்த்தர் எதையும் எதிர்பார்ப்பதில்லை. செய்த பாவங்களை ஒப்புக்கொள்வோரைத் தவிர வேறு எதையும் அவர் விரும்புவதில்லை. தெரிந்துகொள்ளப்பட்ட தாவீது கூறுகிறார், நான் கர்த்தரிடம் ஒப்புக்கொள்வேன்; அது ஒரு இளம் காளை தனது கொம்புகள் மற்றும் குளம்புகளைக் கண்டு அவற்றின் மேல் ஆனந்தம் கொள்வது போல் அது அவரைப் பிரியப்படுத்தும். ஏழைகள் அதைப் பார்த்து மகிழ்வார்கள். மறுபடியும் அவர் கூறுகிறார், கடவுளுக்குப் புகழோடு பலியை ஒப்புக் கொடுங்கள், உங்கள் வாக்குறுதிகளை உன்னதமானவருக்கு செலுத்துங்கள். நீங்கள் துன்பப்படும் நேரங்களில் என்னை அழையுங்கள்: நான் உங்களை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். கடவுளுக்கு பலியிடுவது, என்பது தொலைந்த ஆன்மாவைப் போன்றது.

53ம் அத்தியாயம் – தம் மக்களை நோக்கிய மோசேயின் அன்பு

அன்பர்களே, நீங்கள் புரிந்துகொள்ளுங்கள், புனித நூல்களை நன்கு அறிந்து வைத்துள்ளேர்கள், மேலும் கடவுளின் அசரீரிப் பிரசங்கங்களை நீங்கள் மிகவும் ஆர்வத்துடன் கேட்டும் உள்ளீர்கள். இவற்றை உங்கள் நினைவுக்கு கொண்டு வாருங்கள். மோசே மலைக்குச் சென்று, அங்கே உபவாசம் இருந்தார். அவர் மிகத் தாழ்மையுடன் நாற்பது பகலும் நாற்பது இரவுகளும் தங்கியிருந்தபோது, கர்த்தர் அவரை நோக்கி: மோசே, மோசே, நீ இங்கிருந்து விரைவாக இறங்கிப்ப போ; எகிப்து தேசத்திலிருந்து நீ அழைத்து வந்த உன் மக்கள் அநியாயமான காரியமொன்றை செய்கிறார்கள், என்று ஒரு அசரீரி குரல் ஒலித்தது. நான் அவர்களுக்குக் இட்ட கட்டளையிலிருந்து அவர்கள் விரைவாகப் வெளியேறி, உருக்கப்பட்ட உலோக உருவங்களை தங்களுக்குத் தாமே உருவாக்கிக் கொண்டனர். கர்த்தர் அவரை நோக்கி: நான் இந்த மக்களை நான் கண்டேன், இதோ, இவர்கள் கடினமான இறுமாப்பு கொண்ட மக்கள்; நான் அவர்களை அழித்து, அவர்களின் பெயரை வானகத்துக்குக் கீழேயும் இருந்து எடுத்து விடுவேன்; நான் உன்னை ஒரு பெரிய, அற்புதமான தேசமாக ஆக்குவேன், அது இதைவிட மிகப் பிரமாண்டமானதாக இருக்கும். அதற்கு மோசே வானகத்தை நோக்கி, கர்த்தாவே, உம்மிடமிருந்து இவர்கள் தொலைவில் இருக்கட்டும்: இந்த மக்களின் பாவத்தை மன்னியும்; இல்லையென்றால் என்னை வாழ்வு தரும் எட்டிலிருந்து வெளியேற்றும். யாத்திராகமம் 32:32. அற்புதமான அன்பு! அது அப்பழுக்கற்றது! சேவகன் தன் இறைவனிடம் சுதந்திரமாகப் பேசுகிறான், மக்களிடம் மன்னிப்பு கேட்கிறான், அல்லது அவர்களுடன் சேர்த்து தன்னையும் அழித்துவிடும்படி கெஞ்சுகிறான்.

54ம் அத்தியாயம் – அன்பு நிறைந்தவரே அனைத்து இழப்புகளையும் சந்திப்பார், திருச்சபையின் மேல் சமாதானம் நிலைநிறுத்தப்படட்டும்

உங்களில் யார் உன்னதமான எண்ணம் கொண்டவர்? இரக்கமுள்ளவர்…? அன்பு நிறைந்தவர்…? அப்படிப்பட்டவர் அறிவிக்கட்டும், என் பெயரில் தேசத் துரோகமும், கருத்து வேறுபாடும், பிளவுகளும் எழுந்திருந்தால், நான் கிளம்பிப் போகிறேன், நீங்கள் எங்கு போகச்சொல்கிறீர்களோ, அங்கு போகிறேன். பெரும்பான்மையானோர் இட்ட கட்டளைகளை நான் நிறைவேற்றுகிறேன். கிறிஸ்துவை மேய்ப்பராகக் கொண்ட மந்தை, திருச்சபை மூப்பேர்களோடு சமாதானத்தோடு வாழக்கடவதாக. இவ்வாறு செயல்படுபவர் கர்த்தரிடத்தில் மகிமை பெறுவார்; அவர் செல்லும் எல்லா இடங்களிலும் அவர் வரவேற்கப்படுவார். பூமியும் அதனைச் சார்ந்த அனைத்தும் கர்த்தருக்கே உரித்தானது. பரிசுத்த வாழ்க்கை வாழ்பவர்களும் பாவங்களில் இருந்து மனம் திரும்பாதவர்களும் இவற்றையே செய்திருக்கிறார்கள். அவற்றை எப்போதும் செய்யக்கூடியவர்கள்.

55ம் அத்தியாயம் – அத்தகைய அன்பின் எடுத்துக்காட்டுகள்

பிற சமயத்தவர் மத்தியில் காணப்படும் சில எடுத்துக்காட்டுகளை இங்கே முன்வைக்கக் காணலாம்: பல அரசர்களும் இளவரசர்களும், கொள்ளை நோய் பரவியிருந்த காலங்களில், ஒரு அசரீரியின் மூலம் எச்சரிக்கப்பட்ட அவர்கல், தங்களைத் தாங்களே மரணத்திற்குக் அர்ப்பணித்துவிட்டார்கள். தங்கள் சிந்திய இரத்தத்தினூடாக அவர்கள் சக குடிமக்களை [அழிவிலிருந்து] மீட்டார்கள். தேசத்துரோகம் என்பது தங்களுக்குப் பிறகு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற முடிவோடு, பலர் தங்கள் சொந்த நகரங்களிலிருந்து வெளியேறினார்கள். எமக்குள்ளே கூட அநேகம் பேர் மற்றவர்களை மீட்கும் பொருட்டு, தங்களுடைய பந்தங்களை விட்டுக் கொடுத்ததை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பலர் தங்களையே விலையாய் நிர்ணயித்து அடிமைகளாக சரணடைந்தனர். மற்றவர்ளுக்கு உணவளிக்க வேண்டும் என்ற ஒரே உயர்ந்த நோக்கத்துடனே அதனைச் செய்தனர். பல பெண்கள் கூட தேவ கிருபையால் சக்திமயப்படுத்தப்பட்டு, ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய செயல்களை கூட செய்துள்ளனர். புனித ஜூடித், அவள் வாழ்ந்த நகரம் முற்றுகையிடப்பட்டபோது, அந்நியர்களின் முகாமுக்குச் செல்ல பெரியவர்களிடம் அனுமதி கேட்டார்; மேலும், தான் ஆபத்தைச் சந்திக்கப்போகிறோம் என்று தெரிந்து கொண்டு, அவள் தன் நாட்டின் மேல் உள்ள அன்பினாலும், முற்றுகைக்கு உள்ளான மக்களுக்காகவுமே இதனைச் செய்தாள். தேவன் ஹோலோஃபெர்னெஸை (Holofernes) ஒரு பெண்ணிடம் கையளித்தார் ஜூடித் 8:30. இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வரவிருந்த அழிவிலிருந்து விடுவிப்பதற்காக, விசுவாசத்தில் பரிபூரணராக இருந்த எஸ்தர் தான் ஆபத்துகளுக்கு முகம் கொடுத்தார். உபவாசத்துடனும் எளிமையுடனும், அவள் எல்லாவற்றையும் அறிந்த நித்திய இறைவனிடம் மன்றாடினாள்; அவளுடைய ஆன்மாவின் தாழ்மையை உணர்ந்த அவர், அவள் எதிர்கொண்ட ஆபத்தைப் பார்த்து அவளது மக்களைக் காப்பாற்றினார்.

56ம் அத்தியாயம் – ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுவதன் ஊடாக அனைவரும் திருந்தக்கடவராக

ஆகவே, எவரேனும் பாவத்தில் விழுந்திருந்தால் அவர்களுக்காக செபிப்போம். மேலும் சாந்தமும் தாழ்மையும் அவர்களுக்கு அளிக்கப்படட்டும். இதனால் அவர்கள் நமக்கு அல்ல, கடவுளுடைய சித்தத்திற்கு அடிபணிவார்கள். இவ்விதமாக அவர்கள் எம்மிடமிருந்து ஒரு பயனுள்ள மற்றும் பரிபூரண நினைவு கூறுதலைப் பெறுவார்கள், அவர்களுக்காக அனுதாபத்துடன், கடவுளிடம் நாம் செபிப்பதோடு, புனிதர்களிடமும் நாம் இறைஞ்சுகிறோம். அன்பர்களே, எவரும் அதிருப்தி அடையக்கூடாது என்பதற்காக நாம் நம்மையே திருத்திக்கொள்வோம். நாம் ஒருவருக்கொருவர் கூறும் அந்த அறிவுரைகள் இரண்டும் [தங்களுக்குள்] நன்மையும் அதிக பலனும் தரக்கூடியனவே, ஏனென்றால் அவை நம்மை கடவுளுடைய சித்தத்திற்குள் ஒன்றிணைக்க முனைகின்றன. பரிசுத்த வசனம் இவ்வாறு கூறுகிறது: கர்த்தர் என்னைக் கடுமையாகத் தண்டித்திருக்கிறார், ஆனால் என்னை மரணத்துக்கு இட்டுச் செல்லவில்லை. தேவன் அவரை நேசிபோரை தண்டிக்கிறார், அவர் பெறும் ஒவ்வொரு மகனையும் தண்டிக்கிறார். நீதிமான்கள், கருணையுடன் என்னைத் தண்டிப்பார்கள், என்னைக் கடிந்துகொள்வார்கள்; ஆனால் பாவிகளின் ஆதரவு எமக்குள் தலைகனத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. மறுபடியும் அவர் கூறுகிறார், தேவனால் கண்டிக்கப்படும் மனிதர் பாக்கியவான்கள், சர்வவல்லவரின் எச்சரிக்கையை ஒருபோதும் நிராகரிக்க வேண்டாம். அவர் துக்கத்தை கொடுப்பார், ஆனால் மீண்டும் [மகிழ்ச்சியை] ஏற்படுத்துவார்; அவர் காயப்படுத்துவார், ஆனால் அவரது கைகளே நம்மை முழுமையாக்குகின்றன. அவர் ஆறு விதமான கஷ்டங்களில் இருந்து உங்களை விடுவிப்பார், ஆகவே ஏழாவது இடத்தில் உள்ள எந்த தீமையும் உங்களை அணுகாது. பஞ்ச காலத்தில், அவர் உங்களை மரணத்திலிருந்து மீட்பார், போரில் அவர் உங்களை வாளின் கொடுமையில் இருந்து விடுவிப்பார். நாவின் கொடுஞ்சொற்களில் இருந்து அவர் உங்களை காப்பார், ஆகவே தீமை வரும்போது நீங்கள் அஞ்சாதிருப்பீர்கள். அநியாயக்காரர்களையும் துஷ்டர்களையும் பார்த்து நீங்கள் சிரிப்பீர்கள். கொடிய மிருகங்களுக்கும் நீங்கள் பயப்பட மாட்டீர்கள். கொடிய மிருகங்கள் உங்களுடன் நேசமுடன் பழகும்: உங்கள் இல்லம் அமைதியாய் இருப்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள், உங்கள் வசிப்பிடமான கூடாரம் என்றும் வீழ்ச்சியடையாது. நீங்கள் விதைத்த விதை நிறைந்த பலன் கொடுக்கும் என்பதையும், உங்கள் பிள்ளைகள் நீங்கள் விதைத்த நிலத்தில் உள்ள புற்களைப் போன்றவர்கள் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் நன்கு விளைந்த தானியங்களைப் போல கல்லறைக்கு வருவீர்கள், அல்லது அதன் பருவத்தில் அறுவடை செய்யப்பட்டவைகள் போல் ஆவீர்கள். அல்லது சரியான நேரத்தில் ஒன்றுகூடும் கதிரின் குவியலைப் போல ஆவீர்கள். யோபு 5: 17-26. தேவனால் தண்டிக்கப்படுபவர்களுக்கு அந்த பாதுகாப்பு வழங்கப்படுவதை நீங்கள் காண்கிறீர்கள்; கடவுள் நல்லவர் என்பதால், அவருடைய பரிசுத்தமான தண்டனையால் நாம் திருந்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அவர் நம்மைத் திருத்துகிறார்.

57ம் அத்தியாயம் – துரோகத்துக்கு துணைபோகும் காரணகர்த்தாக்கள் தங்களை கையளிக்கட்டும்

ஆகையால், நீங்கள் இந்த துரோக நடவடிக்கையின் அடித்தளத்தை அமைத்து, உங்களை திருச்சபை மூப்பர்களிடம் ஒப்புவித்து, மனந்திரும்புங்கள், உங்கள் இதயங்களின் தாழ்மையில் இருந்து இவை செய்யப்பட வேண்டும். கிறிஸ்துவை மேய்ப்பராகக் கொண்ட மந்தையில் நீங்கள் ஒரு தாழ்மையான ஆனால் கௌரவமான இடத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்பதே சிறந்தது. அதைவிட, மிக உயர்ந்தவராக இருக்க விழைந்தால், அவருடைய மக்களின் நம்பிக்கையிலிருந்து நீங்கள் தூக்கியெறியப்படுவீர்கள். இவ்வாறு எல்லா நற்பண்புகளையும் பற்றி இங்கே சொல்லப்படுகிறது: இதோ, நான் என் ஆவியின் வார்த்தைகளை உங்களிடம் கொண்டு வருவேன், என் வார்த்தைகளை உங்களுக்குக் கற்பிப்பேன். நான் அழைத்தேன், நீங்கள் கேட்கவில்லை; நான் என் வார்த்தைகளை முன்வைத்தேன், நீங்கள் அவற்றைக் கருத்தில் கொள்ள வில்லை. என் ஆலோசனைகள் மூலம் நீங்கள் பயன்பெற வில்லை. என் கண்டனங்களுக்கு அடிபணியவில்லை; ஆகையால் நானும் உங்கள் அழிவைக் கண்டு சிரிப்பேன். ஆம், உங்கள் மீது அழிவு வரும்போது நான் மகிழ்ச்சியடைவேன், திடீர் கலவரம் உங்களைத் தாக்கும் போதும், சூறாவளி உங்களைக் கவிழ்க்கும்போதும், அல்லது உபத்திரவமும் அடக்குமுறையும் உங்கள் மீது விழும்போதும் நாம் மகிழ்வேன். நீங்கள் என்னை அழைக்கும்போது, நான் உங்கள் பேச்சைக் கேட்கமாட்டேன்; கொடூரர்கள் என்னைத் தேடுவார்கள், ஆனால் அவர்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் ஞானத்தை வெறுத்தார்கள், தேவன் மேலுள்ள பயத்தைப் பற்றி அவர்கள் அசட்டையாய் இருந்தார்கள்; அவர்கள் என் ஆலோசனையை கேட்க மாட்டார்கள், நான் செய்த கண்டனங்களை அவர்கள் இகழ்ந்தார்கள். ஆகையால், அவர்கள் தங்கள் தேடிக்கொண்ட பலனை அவர்களாகவே அனுபவித்தார்கள். அவர்கள் தங்கள் பாவகரத்தால் நிரப்பப்படுவார்கள். நீதிமொழிகள் 1: 22-33. அவர்கள் குழந்தைகள் மீது செய்த தவறுகளுக்கு தண்டனையாக, அவர்கள் கொல்லப்படுவார்கள், தேவபக்தியற்றவர்களுக்கு தண்டனை மரணமாக இருக்கும்; ஆனால் எனக்கு செவிசாய்ப்பவன் நம்பிக்கையோடு இளைப்பாறுவான், தீமைகளைக்கண்டு அவன் பயப்படுவான்.

58ம் அத்தியாயம் – இரட்சிப்பின் முன்னோடியின் சமர்ப்பணம்

ஆகையால், கீழ்ப்படியாதோர் மீது ஞானத்தின் பெயரால் விடுக்கப்படும் எச்சரிக்கை அச்சுறுத்தல்களிலிருந்து தப்பி ஓடுவோம். அவரின் பரிசுத்தமான, புகழ்பெற்ற நற்பெயருக்கு பணிந்திடுங்கள். அவருடைய மகத்துவநான, மிகவும் புனிதமான பெயரில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். எமது ஆலோசனையின் படி நடவுங்கள், அப்போது நீங்கள் மனந்திரும்பாமல் இருக்க மாட்டீர்கள். இறைவன் என்றென்றும் வாழ்பவர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியும் நித்திய வாழ்வை உடையவர்கள் – அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் நம்பிக்கையாகத் திகழ்பவர்கள். தாழ்மையுடன், மென்மையுடனும், மனந்திரும்புதலினூடாக கடவுள் கொடுத்த கட்டளைகளையும் நியமனங்களையும் அவதானித்தவர் அவர். இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் இது ஒரு இடத்தையும் பெயரையும் பெறும். அவர் வழியாகவே அவருக்கு என்றென்றைக்கும் மகிமையும் மாட்சியும் உண்டாகக்கடவதாக. ஆமென்.

59. Warning against disobedience. Prayer.

If, however, any shall disobey the words spoken by Him through us, let them know that they will involve themselves in transgression and serious danger; but we shall be innocent of this sin, and, instant in prayer and supplication, shall desire that the Creator of all preserve unbroken the computed number of His elect in the whole world through His beloved Son Jesus Christ, through whom He called us from darkness to light, from ignorance to knowledge of the glory of His name, our hope resting on Your name which is primal cause of every creature — having opened the eyes of our heart to the knowledge of You, who alone rests highest among the highest, holy among the holy, Isaiah 57:15 who layest low the insolence of the haughty, Isaiah 13:11 who destroyest the calculations of the heathen, who settest the low on high and bringest low the exalted; who makest rich and makest poor, 1 Samuel 2:7 who killest and makest to live, Deuteronomy 32:39 only Benefactor of spirits and God of all flesh, who beholdest the depths, the eye-witness of human works, the help of those in danger, the Saviour of those in despair, the Creator and Guardian of every spirit, who multipliest nations upon earth, and from all made choice of those who love You through Jesus Christ, Your beloved Son, through whom You instructed, sanctify, honour us. We would have You, Lord, to prove our help and succour. Those of us in affliction save, on the lowly take pity; the fallen raise; upon those in need arise; the sick heal; the wandering ones of Your people turn; fill the hungry; redeem those of us in bonds; raise up those that are weak; comfort the faint-hearted; let all the nations know that You are God alone and Jesus Christ Your Son, and we are Your people and the sheep of Your pasture.

60ம் அத்தியாயம் – மன்றாட்டின் தொடர்ச்சி

உமது திருக்கரங்களால் உலகின் எல்லாவற்றையும் தாங்கக்கூடிய நெசவை நெய்தீர். ஆண்டவரே, நாங்கள் வாழும் பூமியை நீர் படைத்தீர் – அனைத்துத் தலைமுறைகளுக்கும் உண்மையுள்ளவாராய், தீர்ப்பிடுவதில் நீதியுள்ளவராய், மகிமையிலும் மாட்சிமையிலும் அற்புதமானவாராய், ஞானத்தை கொடுப்பதன் மூலமும், புரிந்துகொள்ளப்பட்ட விஷயங்களை சரிசெய்வதன் மூலமும், இரட்சிக்கப்படுபவர்களிடையே நல்லவர்களாகவும், உம்மை நம்புகிறவர்களிடையே உண்மையுள்ளவர்களாகவும் படைத்தீர். ஓ..இரக்கமும் கருணையுமுள்ளவரே, நாங்கள் செய்கின்ற அநீதியான செயல்களையும், குற்றங்களையும், பாவங்களையும், தப்பிதங்களையும் தயவுடன் மன்னித்தருளும். உமது அடியார்கள் மற்றும் பணிப்பெண்கள் செய்த எல்லாவித பாவங்களையும் பாராமல், உம்முடைய சத்தியத்தின் வலிமையால் எம்மைத் தூய்மைப்படுத்தும்; நாங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நீர் இருந்து எம்மை வழிநடத்தும், நாம் இதயசுத்தியோடு, உமக்கும் எமது ஆட்சியாளர்களுக்கும் அமைவாக வாழ எம்மை வழிநடத்தியருளும். ஆம், எம் ஆண்டவரே! உம்முடைய திருமுகத்தை பிரகாசத்தை எம்மீது வரச் செய்யும். உம்முடைய வலிமைமிக்க கரங்களினால் பாதுகாக்கப்படுவதற்கும், உயர்த்தப்பட்ட உமது கரங்களே கேடயமாக இருந்து எம்மைப் பாதுகாத்து, உயர்த்தப்பட்ட உமது கரத்தால் அனைத்து பாவங்களில் இருந்தும் எமக்கு விடுதலை அளித்து, எம்மை தவறாக எண்ணி வெறுப்பவர்களிடமிருந்து எம்மைக் காத்து இரட்சித்து எம்மை வழிநடத்தியருள்வீராக. எம் மத்தியிலும் மற்றும் பூமியில் வாழும் அனைவர் மத்தியிலும் ஒத்துழைப்பையும் சமாதானத்தையும் ஏற்படுத்தியருளும். எங்கள் பிதாக்கள் விசுவாசத்தோடும் சத்தியத்தோடும் உங்களை அழைத்தபோது, நீர் அவர்களுக்கு கொடுத்தது போல, நாமும் உம்முடைய சர்வவல்லமையுள்ள மற்றும் புனிதமான நாமத்திற்கு கீழ்ப்படிந்தோம்.

61ம் அத்தியாயம் – தொடரும் மன்றாட்டு – நிறைவாக, ஆட்சியாளர்கள் மற்றும் ஆளுனர்களுக்காக

பூமியிலுள்ள எங்கள் ஆட்சியாளர்களுக்கும் ஆளுனர்களுக்கும் – ஆண்டவரே, உமக்கு வழங்கப்பட்ட மகிமையையும் கௌரவத்தையும் நாங்கள் அறிந்துகொள்வதற்கும், அவர்களுக்குக் கீழ்ப்படிவதற்கும், உம்முடைய மகிமைமிக்க மற்றும் வர்ணிக்கமுடியாத, அளவற்ற சக்தியால் இராச்சியத்தின் ஆளுகையை அவர்களுக்குக் கொடுத்தீர். உமது விருப்பத்துக்கு அங்கு ஒருவரும் எதிர்ப்பை வெளியிடுவதில்லை. ஆண்டவரே, அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை அவர்கள் குறையின்றி பயன்படுத்த அவர்களுக்கு வேண்டிய ஆரோக்கியம், அமைதி, ஒத்தாசை மற்றும் ஸ்திரத்தன்மையை கொடுத்தருளும். பரலோக தேவனே, நித்திய அரசரே, பூமியிலுள்ள அனைத்து புதல்வர்களுக்கும், பூமியிலுள்ள மற்றைய அனைத்தையும் விட, அதிக மகிமையையும் கௌரவத்தையும் ஏற்படுத்தியருளும். கர்த்தாவே, அவர்களுடைய ஆலோசனைகள் நல்லதாகவும், உம்மை மகிழ்ச்சிப்படுத்துவதாகவும் இருக்கப் பண்ணியருளும். அவர்களுக்கு நீர் கொடுத்த அதிகாரத்தின் வழியாக அவர்கள் பக்தியில் உயர்ந்தவர்களாகவும், சாந்தமுடனும், வாழ்ந்து நீர் மன்னிக்கக்கூடியவராய் இருப்பதைக் காண்பார்களாக. இவற்றைச் செய்ய உமக்கு இருக்கும் முழு அதிகாரத்தின் ஊடாக, எமக்கு ஏராளமான நன்மைகளை செய்கிறீர். எங்கள் ஆன்மாக்களின் பிரதான குருவும் பாதுகாவலருமான இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம், இதன் மூலம் இருவருக்கும் இப்பொழுதும், எப்பொழுதும் தலைமுறை தலைமுறைக்கும் என்றென்றும் ஆராதனையும் மகிமையும் உண்டாகட் கடவதாக. ஆமென்.

62ம் அத்தியாயம் – சுருக்கம் மற்றும் முடிவுரை – தெய்வபக்தி பற்றியது

மக்களே, சகோதரரே, தெய்வீக மற்றும் நீதியான போக்கைப் பின்பற்றுவோருக்கு நன்மை பயக்கும் வாழ்க்கைக்கு மிகவும் இலகுவான எங்கள் மத அனுஷ்டானங்கள் தொடர்பான விடயங்களைப் பற்றி நாங்கள் உங்களுக்கு தெளிவாகவும், அதிகமாகவும் எழுதியுள்ளோம். விசுவாசம், மனந்திரும்புதல் மற்றும் உண்மையான அன்பு, தன்னடக்கம் நிதானம் மற்றும் பொறுமை ஆகியவற்றைப் பொறுத்தவரை, நாங்கள் ஒவ்வொரு நடைமுறையையும் தொட்டுள்ளோம், நீங்கள் நீதியிலும் சத்தியத்திலும் நீண்ட கால சகிப்புத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரே மனதுடையவர்களாய் இருங்கள் – தீமையை நினைவில் கொள்ளாது இருங்கள். அன்பு மற்றும் சமாதானத்தில் உடனடி மென்போக்குடன், நம்முடைய ஆதிப்பிதாக்கள் முன்னறிவித்ததைப் போலவே, பிதா, கடவுள், படைத்தவர் மற்றும் அனைத்து மனிதகுலங்களுக்கும் அவர்கள் கொண்டிருந்த தாழ்மையான எண்ணங்களால் தயவு கிடைத்தது. விசுவாசமுள்ளவர்களாகவும், மிக உயர்ந்த மரியாதைக்குரியவர்களாகவும், கடவுளின் போதனையின் சொற்பொழிவுகளில் சரியானவற்றையும், இணையானவற்றையும் கடவுளின் கட்டளையால் பிறப்பிக்கப்பட்ட அசரீரியின் மூலமாகவும் கேட்டவர்கள் என்ற ரீதியில் நன்றாக அறிந்து இந்த விடயங்களை நாங்கள் அதிக மகிழ்ச்சியுடன் உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.

63ம் அத்தியாயம் – அறிவுறுத்த்தல்கள் பற்றி சிறப்பு தூதர்கள் அனுப்பிய கடிதம்

ஆகவே, பல நல்ல மற்றும் பல உதாரணங்கள் மூலம், கழுத்தைக் கொடுத்தேனும் கீழ்ப்படிதளை நிறைவேற்றுவது சரியானது, வீணான துரோகத்தால் தடையின்றி, சத்தியத்தில் நம்முன் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நாம் முழுமையாக அடையமுடியாது. இந்த கடிதத்தில் அமைதி மற்றும் ஒற்றுமைக்காக நாங்கள் செய்த பரிந்துரையின் படி, எங்களால் எழுதப்பட்ட வார்த்தைகளுக்கும் பரிசுத்த ஆவியில் நீங்கள் கீழ்ப்படிந்து, உங்கள் பொறாமையினால் எழும் கோபத்தை வேரறுக்கிறீர்கள். அந்த மகிழ்ச்சி உங்களுக்கு இந்தக் கடிதத்தின் ஊடாக வெளிப்படும். நாங்கள் விசுவாசமும் விவேகமும் உள்ளவர்களை அனுப்பியுள்ளோம், அவர்கள் இளையோர் மற்றும் முதியோரிடம் மேற்கொள்ளும் உரையாடல் நம்மிடையே எவ்வித குறைகளும் அற்றதாகவே பார்க்கப்பட்டது – இது உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் சாட்சி பகரக்கூடியவைகளாக இருக்கும். நாங்கள் இதைச் செய்த காரணம், அது உங்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும். எங்கள் முழு அக்கறை என்னவென்றால், உங்களுக்கு உடனடியாக சமாதானத்தை கிட்ட வேண்டும், அந்த சமாதானம் உங்களோடு எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே.

64ம் அத்தியாயம் – தேவனைத் தேடும் அனைவருக்கும் ஆசீர்வாதம் வேண்டப்பட்டது

அனைத்தையும் அறிந்த தேவன், எல்லா ஆன்மாக்களின் அதிபதியும், எல்லா சரீரங்களுக்கும் ஆண்டவருமானவர் – நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அவர் மூலமாக நம்மையும் விசித்திரமான மக்களாகத் (தீத்து 2:14) தேர்ந்தெடுத்தார். அவருடைய மகிமையான மற்றும் மாட்சிமை மிக்க நாமம், நம்பிக்கை, தேவபயம், அமைதி, பொறுமை, நீண்ட சகிப்புத்தன்மை, சுய கட்டுப்பாடு, தூய்மை, நிதானம் ஆகியவற்றைக் கேட்கும் ஒவ்வொரு ஆன்மாவிற்கும், அவருடைய பிரதான ஆசாரியரும் பாதுகாவலரின் மூலம் அவருடைய திருநாமத்தை மகிழ்விக்க வேண்டும். எல்லாம் வல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மகிமையும், வல்லமையும், மாட்சியும், கௌரவமும், இன்றும் இனி என்றென்றைக்கும் உண்டாகக்கடவதாக. ஆமென்.
65ம் அத்தியாயம் – ஆசீர்வாதங்கள்: சமாதானம் நிலைநிறுத்தப்பட்டதான செய்தியை உடனடியாக அறிவிக்க கொரிந்தியர் அறிவுறுத்தப்படுகிறார்கள்
சமாதானத்துடனும் மகிழ்ச்சியுடனும் இந்த தூதர்களை உங்களிடம் விரைவாக திருப்பி அனுப்புகிறோம். ஃபோர்ச்சுநேனடஸுடன், கிளாடியஸ், எஃபேஸ், மற்றும் வலேரியஸ் பிட்டோ; [உங்களிடையே] நாங்கள் மிகவும் ஆவலுடன் விரும்பும், மற்றும் எதிர்பார்க்கும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் அவர்கள் விரைவில் எங்களுக்கு அறிவிக்கட்டும், உங்களிடையே மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நல்ல ஒழுங்கையிட்டு நாங்கள் அதீத மகிழ்ச்சியடைகிறோம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களிடமும், அவர் மூலமாக கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கட்டும். அவருக்கே எல்லாவற்றுக்கும் மேலான மகிமையும், மாட்சியும், வல்லமையும், இன்றைக்கும் இனி என்றென்றைக்கும், ஆதி முதல் அந்தம் வரை உண்டாகக்கடவதாக. ஆமென்.